Thursday, April 17, 2014

திட்டங்கள் சொன்னவர்கள் பற்றி ஆய்வு செய்தால் வாக்கு போட விருப்பம் வராது

படித்தததில் பிடித்ததை மனதில் நிறுத்தி வைக்க மனமில்லை
படித்ததில் பிடித்ததை மற்றவரிடம் சொல்லி வைக்க மனமுண்டு
படித்ததில் பிடித்தது அறச் செயல்களின் அறிவுரை
படித்ததில் பிடித்த அறவுரையை அடுத்தவரிடம் சொல்வதில் மனபாரம் குறைந்துவிடும்
படித்ததில் பிடித்த அறவுரையை நான் கடைப்பிடிப்பது கடினம்
படித்ததில் பிடித்த அறவுரையை அடுத்தவரிடம் சொல்லியதால் மனபாரம் குறைந்தது

நமக்கு உபயோகமில்லாத நல்ல பொருளை அடுத்தவரிடம் கொடுத்து விடுவதில் நிம்மதிதான்
நமக்கு கிடைக்கும் நல்ல பொருளை நாமே வைத்துக் கொள்வது நல்லதல்ல

நல்ல கருத்தை சொன்னவர்களைப் பற்றி ஆய்வு செய்தால் அந்த கருத்தே பிடிக்காமல் போய்விடும்
நல்ல கருத்தை சொன்னவர்களை உயர்வாக நினைத்துக் கொண்டு நல்ல கருத்தை எடுத்து நட

தேர்தலில் நல்ல திட்டங்கள் சொல்வார்கள் அது பிடித்திருந்தால் வாக்கை போட்டு விடு
தேர்தலில் நல்ல திட்டங்கள் சொன்னவர்கள் பற்றி ஆய்வு செய்தால் வாக்கு போட விருப்பம் வராது

சொல்வது எளிது
செயல்படுத்துவது கடினம்
ஆயிரம் பேர் சொல்லிய வசனம்
ஆயிரம் தடவை நாமும் கேட்டிருகின்றோம்

நல்லதை கேட்டு விட்டு செயல்படுத்தாமல் போனால் மற்றவர் நம்மை தாழ்வாக நினைப்பர்
நல்லதை கேட்டு விட்டோம் செயல்படுத்த முயல்வோம் சொன்னவரைப் பற்றி சிந்திக்காமல்

நாட்டை ஆள்பவர்
நம்மை திருத்த முயல்பவர்
நல்லதை செய்ய விரும்புபவர்
நமக்காகவே செய்கின்றார்
அவரது போக்கு தனி போக்கு
அவரது போக்கை அவரிடம் வீடு விடு
ஆதி மூலம் பற்றி ஆராயாதே
நதி மூலமும் ரிஷி மூலமும் ஆராயாதே

No comments: