Tuesday, April 1, 2014

அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் யுவகிருஷ்ணா

யுவகிருஷ்ணா  திராவிட அரசியலின் பலன்களை அனுபவித்த ஒரு தலைமுறையை சேர்ந்தவர்.  எனவே திராவிட இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்கிறார் . யுவகிருஷ்ணாவின் அப்பா நா .இலட்சுமிபதி திமுகவில் ஒன்றியப் பிரதிநிதியாக இருந்தார். யுவகிருஷ்ணா சிறுவயதில் கழகக்கொடி, கழக செயல்வீரர்கள் மத்தியில் வளர்ந்தவர். அதனாலேயே திராவிடப்பாசம் அவருக்கு உண்டு.

யுவகிருஷ்ணாவின்  தந்தை பெயர் :நா .இலட்சுமிபதி
யுவகிருஷ்ணாவின் தாயார் பெயர் : இல.சுசிலா

யுவகிருஷ்ணா புதிய தலைமுறையில் துணை ஆசிரியரராக சிறப்பாக பலர் போற்ற பணி செய்கின்றார் (கடந்த சில மாதங்களாக அவரது  பணி தினகரனில் தொடர்கின்றது )
முகநூலில்Yuva Krishna அவரது ஸ்டேடஸ் மற்றும் அவரது கட்டுரைகளை பலரும்  மிகவும் விரும்பி லைக் செய்வதுடன்  அனைவரும் படிப்பதோடு அதனை மற்றவருக்கும் அதனை  அனுப்பி (ஷேர் செய்து ) மகிழ்கின்றனர் . அவரது கருத்துரைகளும் மிகவும் சிறப்பாக இருக்கும் .அவர் நகைசுவையோடு எழுதும் ஆற்றல் பெற்றவர் .உண்மைகளை துணிவோடு எழுதுவது அவரது சிறப்பான இயல்பு . அவர் ஆளப்பிறந்தவராதலால் ஆத்திரப்பட மாட்டார்! பழகுவதர்க்கு அருமையான நண்பராக எப்பொழுதும் இருப்பவர்.மற்றவர்களை உற்சாகப் படுத்தும் குணம் இவரின் சிறப்பு .  மற்றவர்களை உற்சாகப் படுத்தி எழுதி அவர்களுக்கும் உந்து சக்தியை தந்துள்ளார்.
பொருத்தமான கட்டுரைகளை பொருத்தமான நேரத்தில் கொடுப்பதில் யுவகிருஷ்ணா மிகவும்  திறமை மிக்கவர்.அவரது அரசியல் ஆய்வுக் கட்டுரைகள் மிகவும் சக்தி பெற்றவை.

திரு. யுவகிருஷ்ணா அவர்கள்  இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார்.

உங்களில்  உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை  மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை  செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் நன்மையும் பயனும் அடைகின்றனர்.

இந்த வழியில் திரு. யுவகிருஷ்ணா அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.

திரு. யுவகிருஷ்ணா அவர்கள் சேவை மனம் கொண்டவர் . அவர்  தனக்கு கிடைத்த அறிவை மற்றவருக்கும் பகிர்ந்தளிப்பதில் மகிழ்வடைபவர்
அதற்கு அவர் நடத்தும்  யுவகிருஷ்ணா என்ற இணையத்தளம்  அதற்கு ஒரு சான்றாக உள்ளது
Website   http://www.luckylookonline.com/ கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் யுவகிருஷ்ணா

அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்

நம்மைப்பற்றி நாம் அறிவோம்
நம்மை வாழ்வித்தவர்களை
நமக்கு கல்வி  கொடுப்பவகளை
நம் உறவுகளை
நம் நண்பர்களை
நன்கு அறிந்து கொள்வதில்
நமக்கு மிகவும் மகிழ்வும் ,பலனும் .பலமும் ,உந்துதல் சக்தியும் கிடைக்கும்

நாம் திரு. யுவகிருஷ்ணா அவர்களைப் பற்றி அறிந்து  அவர் தரும் சிறப்பான கட்டுரைகளை படித்து ஊக்கத்தைப் பெறுவோம்இவரது கட்டுரைகள் நமது

NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்

மற்றும்  seasons nidur (wordpress) இவைகளிலும் பார்க்கலாம்

அவைகள் அனைத்தும் யுவகிருஷ்ணா அனுமதி பெற்று பிரசுரிக்கப் பட்டவைகள் . அதற்கு யுவகிருஷ்ணா அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதில் பெரு மகிழ்வடைகின்றேன் .

அன்புடன் முகம்மது அலி ஜின்னா

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails