Showing posts with label ஊர். Show all posts
Showing posts with label ஊர். Show all posts

Monday, April 21, 2014

நான் நானாக இருக்க முடியாத எல்லா இடங்களையும் நான் வெறுக்கிறேன்.

தோழிகள் சபிதா சபி, தமிழ்நதி இருவரின் ’வீடு’பற்றிய பதிவை படித்ததும் எனக்கும் எழுத வேண்டுமெனத் தோன்றியது.

எத்தனையோ ஊர்களில், எத்தனையோ வீடுகளில் இதுவரை வாழ்ந்திருக்கிறேன். ஆனால் கடந்த கால சம்பவங்களை யோசிக்கும்போது எந்த சம்பவத்தையும் என்னால் வீட்டுடன் தொடர்புபடுத்த முடிந்ததே இல்லை. பால்யத்தின் முதல் வீட்டை நினைவுபடுத்தினால் வீட்டின் முன் நிற்கும் வளைந்த தென்னை மரம் தான் நினைவிற்கு வரும். அப்புறமான எல்லா வீடுகளையும் அருகில் வாழ்ந்த மனிதர்களின் நினைவுகளோடு தான் தொடர்புபடுத்த முடிகிறது.

Tuesday, April 1, 2014

“தெரியாத ஊருக்குப் போதல்!”

ஒரு எஜமானரிடம், வேலைக்காரன் ஒருவன் இருந்தான். எதைச் சொன்னாலும் எதிர்க்கேள்வி கேட்காமல் அதைச் செய்ய மாட்டான். இல்லாத சந்தேகங்களை எழுப்புவான்.

ஒரு நபரைப் பார்த்துவிட்டு வா என்றால், “அவர் இல்லாவிட்டால் என்ன செய்வது? வெளியூர் சென்றிருந்தால் அவர் வருகிற வரை இருந்து பார்த்துவிட்டு வருவதா? எத்தனை நாள் தங்குவது?" என்று கேள்வி மேல் கேள்வி கேட்டுக் குழப்புவான்.

“இவனோடு பெரும் தொல்லையாக இருக்கிறதே!" என்று கூட நினைப்பதுண்டு. பல வருடங்களாக வேலை செய்பவன். நேர்மையானவன் என்பதால் அவனைச் சகித்துக் கொண்டார்.

எப்படியும் அவனைத் திருத்த வேண்டும் என்ற எண்ணம் கொண்ட எஜமானர். அவன் கழுத்தில் "நான் ஒரு முட்டாள்" என்று தகட்டில் எழுதி மாட்டிவிட்டார்.

Monday, March 11, 2013

உங்களைத்தான் கேட்கிறார்கள்! விளக்கம் கொடுங்களேன்! மக்கள் அறியட்டுமே!

1. ஊருக்காக  புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் உங்களுக்கு...

2.  விழாக்களுக்கு கட் அவுட், பேனர்கள் வைத்து கொண்டாடும் உங்களுக்கு...

3. ஆடம்பர செலவு செய்து மேடை போட்டு கூட்டம் கூட்டும் உங்களுக்கு...

4.  தெருத் தெருவா போஸ்டர் ஓட்டும் உங்களுக்கு...

5.  கூட்டம் போட்டு திட்டம் போடும்  உங்களுக்கு...

6. இறைவனது இல்லத்தில்  சிலர் தவறான வார்த்தைகள் பேச வழி விட்டு அதனை தடுக்க முடியாத  உங்களுக்கு...

 (குத்பா நடத்தும் பள்ளிவாசல்களில் வெள்ளிக் கிழமை உலமாவின் பிரசங்கம் நடைபெற்ற பின்பு பள்ளிவாசலுக்கு சிலர் வருகிறார்கள்.
சிலர் உலமாவின் பிரசங்கம் பிடிக்காமல் முஅல்லாவின் பள்ளியை விடுத்து வேறு பள்ளிக்கு செல்கின்றார்கள்.

அரசியல் மேடையாக மற்றும் தனி மனிதரைப் பற்றிய விமர்சனமாகவும் ,சொல்லக் கூடாத வார்த்தைகளை உயர்வான இறைவனது இல்லத்தில் பிரசங்கம் செய்வது தற்போது சில ஊர்களில் மாறி வருவது வருந்தத் தக்கதாக உள்ளது .

தொழுகை நடத்துவதற்கு முன் செய்யப்படும் பிரசங்கம் மார்க்க அறிவைத் தருவதோடு தொழுகையில் ஒன்ற வைக்கக் கூடியதாக அமைய வேண்டும் . குர்ஆன், நபிமொழி மற்றும் அதற்கான விளக்கங்கள் தந்தாலே போதுமானது . இவைகளில் காணக் கிடைப்பதே ஏராளம்.)


7.  வசூல் செய்து விழா நடத்தும்  உங்களுக்கு...

8. தேவையற்றவைகளுக்கு  செலவு செய்யும் உங்களுக்கு...

9. ஒதுங்கி நிற்கும் மக்களை உசுப்பி விடும்  உங்களுக்கு...

10.  பதவிகளுக்காக போட்டி போட்டுக்கொண்டு ஒருவருக்கொருவோர் விரோதம் பாராட்டி உறவுகளை முறிக்கும் உங்களுக்கு...


உள்ளூர் மக்களின் அத்தியாவசிய பிரச்சனைகளாகிய...

1. சமூக நலன் முன்னிறுத்தி ஊரை ஒற்றுமைப் படுத்த முயற்சி

2. பல பள்ளிவாசளிருந்து அனைத்து பள்ளிவாசலுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம்

3. வேலைவாய்ப்புகள் பற்றி ஒரு விழுப்புணர்ச்சி உண்டாக்குதல்

4. விளையாடுமிடம் இருந்தும் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து உற்சாகப் படுத்துவது

5. அறிவிக்கப்படாத மின்சாரத் துண்டிப்பு

6. சமூக குற்றங்கள் ஒழிப்பு

7. கல்வி மேம்பாடு

8.  தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் நிறுவுவது

9. சுகாதார விழிப்புணர்வு

10. தேவையான பள்ளிவாசல்கள் உண்டு தொழ மக்கள் வராமலிருப்பது பற்றி சிந்திப்பது

11. நிறைந்த மாணவர்களிருந்தும் தேவையான பள்ளிக் கூடங்கள் .கல்லூரிகள் உருவாக்குவது

12. முதியோர் நலன்

13. இலவச மருத்துவ முகாம்

14.  கற்பவர்களுக்கு தேவையான பணத்தை உதவியாகவோ அல்லது வட்டி இல்லாத கடனாகவோ கொடுக்க முயற்சி செய்வது

15. நலத்திட்ட உதவி

16. உடலுக்கு இதயம் எவ்வளவு முக்கியமோ அதுபோல் ஊருக்கு ஒற்றுமை முக்கியம்
என்பதை முன்னிறுத்தி முயற்சி செய்வது

17. அறிவு வளர்ந்த காலத்தில் கருத்து வேறுபாடுகள் கொண்டால் கண்டிக்காமல் அன்புக்கு முக்கியம் கொடுத்து நேசன் பாராட்டுவது

என இது போன்ற உள்ளூர் பிரச்சனைகளைக் கையில் எடுத்து செயல்பட்டு  உள்ளூர் பொதுமக்கள் பயன்பெற ஏற்பாடுச் செய்ய முயற்சிக்க வேண்டாமா ?

இறைவனது அருள் அனைவருக்கும் கிடைக்க முயல்வோம் .

 உறவை முறித்து வாழ்பவன் சொர்கத்தில் நுழைய மாட்டான்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் இப்னு முத்யிம்(ரலி)
நூல்: புகாரி 5984



குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை. வாழு வாழ விடு . நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க

Thursday, July 5, 2012

என் ஊர்

                                                                         என் ஊர்
by நாகூர் ரூமி
  
தான் பிறந்து வளர்ந்த ஊரான நாகூரைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார் எழுத்தாளர் நாகூர் ரூமி.

ஆன்மிகம், இலக்கியம் இரண்டும் நாகூரின் இரு கண்கள் என்றால் மிகையல்ல. நாகூரில் தடுக்கி விழுந்தால் ஒரு புலவர் அல்லது பாடகரின் மேல் விழவேண்டும் என்றும் கூறுவார்கள். கிட்டத்தட்ட முப்பதுக்கும் மேற்பட்ட ராட்சச இலக்கிய ஆளுமைகள் 19-ம் நூற்றாண்டிலேயே வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களில் குறிப்பிட்டே ஆகவேண்டியவர் குலாம் காதிர் நாவலர். நான்காம் தமிழ்ச்சங்கத்தின் நக்கீரர் என்றும் இவர் குறிப்பிடப்பட்டவர்.”வித்தியா விசாரிணி”, ”ஞானாசிரியன்” ஆகிய பத்திரிக்கைகளை 1888ல் நடத்தியவர்.

தமிழில் நாவல் எழுதிய முஸ்லிம் பெண்மணி மூன்றாவதுக்கு மேல் படிக்காத சித்தி ஜுனைதா பேகம். இவரது ”காதலா கடமையா” என்ற நாவல் 1938-ம் ஆண்டு உவேசா முன்னுரை, புதுமைப்பித்தன் வாழ்த்துரையுடன் வெளிவந்தது  கமலப்பித்தன், ஹத்தீப் சாஹிப், அப்துல் கய்யூம், ஆபிதீன், சாருநிவேதிதா போன்ற படைப்பாளிகள் அனைவரும் நாகூர்க்காரர்கள்.

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், கம்பராமாயண அறிஞருமான எம்.எம். இஸ்மாயீல், புலவர் ஆபிதீன் காக்கா, மூவாயிரம் பாடல்களுக்கு மேல் எழுதி, ஐம்பதுக்கும் மேற்பட்ட இஸ்லாமியப் பாடகர்களை உருவாக்கிய கவிஞர் கலைமாமணி சலீம், கவிஞர், பேச்சாளர் இஜட் ஜபருல்லா, கவிஞர் இதயதாசன், நாகூர் இஸ்மாயீல் என்று இலக்கியம், கவிதை, நீதித்துறை, திரைத்துறை என பல பரிமாணங்களைக் கொண்ட படைப்பாளிகளின் பட்டியல் நீள்கிறது.

Sunday, May 13, 2012

நீடூர் & நீடூர் நெய்வாசல் பெயர் எப்படி வந்தது!

 எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நெய்வாசல் பெயர் எப்படி வந்தது
நெய்த வாசல் என்பது நெய்வாசல் ஆக வந்தது . ஆடைக்கு வேண்டிய நூல்கள் இங்கும் அருகிலுள்ள கூறைநாட்டிலும் நூல்கள் நெய்து வந்தார்கள், நெய்வாசல் கீழத் தெருவில் உள்ள ஒரு வீட்டிற்கு பட்டுக்காரர் வீடு என்று இன்றும் சொல்வார்கள், அவர்கள் தெருவில் பட்டு நெய்ததை வைத்து அந்த பெயர் அடைமொழியாக வந்து விட்டது

Tuesday, April 3, 2012

ஊர் போய் வரலாம் வாங்க! - இதுவல்லவோ ஊர்!



  உலகமெல்லாம் ஓடிப் பறந்தாலும் நம் ஊரைப்போல் ஆகுமா என்பதோடு 'எங்கள் ஊர்' வந்தாலே மன நிறைவு வந்து விடும் ஏன்று சொல்பது நம் இயல்பு,அது உள்ளத்தில் மகிழ்வைத் தருகின்றது என்பது உள்ளத்திலிருந்து வரும் உண்மை வெளிச்சங்கள் . அமரிக்காவுக்கு போனால் இந்தியர் இருக்கும் இடம் தேடி பின்பு தமிழ்நாட்டுக்காரரை நாடி அதன்பின் தன் மாவட்டம் ,பின்பு வட்டம் கடைசியில்  நம் ஊர் நண்பரைக் காண பேரின்பம் .இதற்குத்தான் மண் வாசனை நம்மோடு ஒட்டியுள்ளது போலும் . ஒவ்வொரு ஊரைப் பற்றி அந்த ஊர் நண்பர்கள் எழுதியுள்ளதனை தொடர்ந்து (பகுதியாக )அறிவோம்

1.எங்கள் ஊர்

எங்கள் ஊரில்
குறைந்த பட்ச வசதிகளுக்கே
குறை!
ஆனாலும்
இயற்கை அன்னை
கொடுத்திருக்கிறாள்
அதிகபட்ச அங்கீகாரம்.
மத நல்லிணக்கத்தின்
இதமான காற்று
எங்கள் வீதிகள் தோறும்
வீசிக் கொண்டே இருக்கிறது
இன்றும்.

எங்கள் ஊர்
இன்னும் இருக்கிறது
அதன்
அழுத்தமான அடையாளங்களை
அவிழ்த்தெறியாமல்.
திரு சேவியர் ( கவிதையாக சில வரிகள் மட்டும் )

எங்கள் ஊர் « கவிதைச் சாலை

----------------------------------------
2.எது என் ஊர்
கருவாய்ப் பிறப்பு தந்து
உருவாய் வளர்த்தெடுத்த
தாயின் கர்ப்பப்பையோ எனது ஊர்

பிறந்த பொழுது முதல் இறந்து புதைந்தும்கூட
மீண்டும் புக முடியா ஓர் ஊர்
எப்படி என் ஊராகும்

பிறந்ததும் விழுந்தேனே
பிரிதொரு வாசமுள்ள பெரும்பை
அதுவோ என் ஊர்

எனில்
அவ்வூரெனக்குச் சந்தோசச்
சங்கதியாகவல்லவா இருக்க வேண்டும்
காண்பதற்கே அழுதேனே
என்னிரு கண்ணிறுக்கிக் கதறி
எப்படி அது என் ஊராகும்

தாலாட்டிய மடி
பாலூட்டிய முலை
தவழ்ந்த தரை
சுற்றிய வெளி
பணிசெய்த இருக்கை
படுத்துறங்கிய மெத்தை
நட்பு நெஞ்சங்கள்
வெப்ப இதழ்கள்
பரிதவித்த பருவம்
பண்படுத்திய பெண்மை
விழிதட்டும் கனவு
உயிர்நிறைக்கும் நினைவு

எது
எது
எது என் ஊர்?

திட்டுத் திட்டாய் அங்கெங்கும்
துளித் துளியாய் இங்கெங்கும்
பரவிக் கிடந்திருக்கிறேன்
உருண்டு புரண்டு நான் வாழ்ந்து வந்திருக்கிறேன்

ஒவ்வோர் துகளையும்
என் சொந்தமென்றே கொண்ட
இவை யாவும்தான் என் ஊரெனில்
என் ஊரென்று தனியே ஏதுமில்லை
என்பதல்லவா நிஜம்

என் ஊரை என்னைத் தவிர வேறு
யாரறிவார் என்று கர்வம் கொள்ளச் செய்யும்
அந்த என் ஊர் எது

நீண்டு விரிந்து படர்ந்து கிடந்தாலும்
என்னைப் பெற்றவளும் அறியா
என் பிரத்தியேக ரகசியங்களின்
பள்ளத்தாக்குகள் அடர்ந்த அந்த ஊர் எது

எத்தனை முறை கை நழுவிப் போனாலும்
ஓடி ஓடிவந்து என்னிடமே ஒட்டிக்கொண்டுவிடும்
அந்த ஊர்தான் எது

எது என் ஊரென்று
அறிந்துகொண்ட ஆனந்தத்தில்
நிரம்பி வழிகிறது என் ஊர் இன்று!


Saturday, October 29, 2011

ஊர் பெருமை…!

டிசம்பர் 2010 முஸ்லிம் முரசு
சமீபத்தில் ஒருநாள் தொலைக்காட்சி இரவுக் காட்சியில் ஒரு ஊரின் பெருமையை வழக்கம் போலவே பேசியது அச்சேனல். எந்த ஊருக்குச் சென்றாலும் அந்த ஊரைப் பெருமைப்படுத்தி பேசுவது அதன் கொள்கை. அப்படிப் பேசிய ஒரு ஊர் வரலாற்றில் அதன் நிறைகுறைகள் அலசப்படாமல் ஒரு பக்கப் பார்வையோடு காட்சிகள் ஓடியதை காண நேர்ந்தது. டி.விக்கு ஊதுகுழலாக சிலர் வந்து அதிகப்படியாக தம்மூர் பெருமைகளை அளந்தனர்.
பெருமை பேசியோரிடம் தமிழக மக்கள் முன்வைக்கும் சில கருத்துக்கள். ‘‘உலகத்திலேயே தங்கள் ஊர் சிறந்த ஊர்’’ என்கிறீர்கள். மகிழ்ச்சி. அவ்வூரை விட்டு எதற்காகவும் வெளியேறாதீர்கள்.

Tuesday, June 28, 2011

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு)

எங்க ஊரு நல்ல ஊரு (இது தொடர் பதிவு): "
எங்க ஊரு நல்ல ஊரு” என்ற தலைப்பில் இருபத்தைந்து பதிவர்களை தேர்வு செய்து தொடர் பதிவெழுத அழைப்பு விடுத்து அதில் என்னையும் அன்பு சகோதரி ஸாதிகா அவர்களுக்கு முதலில் நன்றி கூறிக் கொள்கிறேன்.

தொடர் பதிவு எப்படி எதை எழுதவேண்டும் என்பதை இதோ ஸாதிகா கூறுகிறார்கள்

“பதிவர்கள் அவரவர்கள் சொந்த ஊர்,புகுந்த ஊர்,வாழ்ந்த ஊர்,புலம் பெயர்ந்த ஊர் மற்றும் நாடுகளில் உள்ள நிறைவான,குறைவான,போற்றத்தக்க,வெறுக்கத்தக்க,சுவாரஸ்யமான,சிறப்பான குணாதிசயங்களை எழுதிப்பகிர்ந்தால் அவ்வூர்களைப்பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை அனைவரும் அறிந்து கொள்ளலாமே.”

இது நல்ல முயற்சி பல பதிவர்களிடமிருந்து பல ஊர்களைப் பற்றிய விபரங்கள் கிடைக்கும்.

,இதில் எனது ஊரைப்பற்றிய செய்திகளை நீங்களும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
Please click here : http://www.masjids.in/masjid/kiliyanur-jamia-masjid/
* கிளியனூர் எங்கு இருக்கிறது? எந்த கிளியனூர்? என்ற கேள்விகள் பலருக்கு தோன்றலாம். ஆம் இதே பெயரில் மூன்று கிளியனூர் இருக்கிறது. ஒன்று விழுப்புரம் பக்கமும், இன்னொன்று நன்னிலம் பக்கமும் இருக்கிறது. நான் பிறந்த கிளியனூர் தஞ்சை மாவட்டத்தின் கிழக்குப் பகுதி தற்போது நாகை மாவட்டத்திற்குள் ஐக்கியமாகி, மயிலாடுதுறையிலிருந்து (12 கீ.மீ) திருவாரூர் செல்லும் சாலை வழியாக சுந்தரப்பன் சாவடியிலிருந்து 4 கீ.மீ தூரம் உள்ளே சென்றால் பசுமைப் போர்வையை போர்த்தியதுபோல, சுற்றிலும் வயலும், தோப்புகளும் சூழ்ந்து அழகிய மாதிரி கிராமமாக பல ஆண்டுகளுக்கு முன்னே பெயர் பெற்றது கிளியனூர் வரலாறு.


* 1955 ஆம் ஆண்டிலேயே சுய தேவை பூர்த்தியில் தன்னிறைவு அடைந்த இந்திய கிராமங்களின் வரிசையில் தஞ்சை மாவட்டத்தில் முதலிடம் பெற்ற கிராமமாக “மாதிரி கிராமம்” என்ற சிறப்பை பெற்று அன்றைய முதல்வர் கர்மவீரர் காமராஜ் அவர்களின் கரங்களால் நேருவிருது வாங்கிய பெருமை எங்கள் கிளியனூருக்கு உண்டு.

* கிளியனூர் என்றாலே கொடைவள்ளல் S.A.அப்துல் மஜீதை (சீனா அனா) அவர்களை யாருமே மறக்க மாட்டார்கள். கிளியனூருக்கு மட்டுமல்ல தமிழகத்தில் பல ஊர்களுக்கு கல்வியிலும், பொருளாதாரத்திலும் வள்ளலாக திகழ்ந்தவர்கள். இன்று புகழ் பெற்ற டாக்டர் முஹம்மது ரிலா அவர்கள் இவருடைய பேரர் ஆவார்.

பிறந்து ஏழு நாட்களே ஆன குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவைசிகிச்சை செய்து இந்த உலகத்தையே வியக்க வைத்தவர் டாக்டர் ரிலா.

தகவல் ஒலிபரப்பு முன்னாள் அமைச்சர் பிரமோத் மகாஜன் குண்டடிப்பட்டு கல்லீரல் பழுதுப்பட்டிருந்த போது சிகிச்சையளிக்க லண்டனிலிருந்து தனி விமானத்தில் மும்பை வந்தவர் டாக்டர் முஹம்மது ரிலா.
முன்னால் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல்கலாம் சந்திக்க விரும்பிய நபர் டாக்டர் முஹம்மது ரிலா. இவருடைய பரம்பரை எங்கள் ஊரைச் சார்ந்தவர்கள் என்பதில் எங்களுக்கு பெருமை.

பள்ளிவாசல் மினாராவிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படம்


* நாகூர் ஹனிபா அவர்கள் பாடிய - “இறைவனிடம் கையேந்துங்கள் அவன் இல்லை என்று சொல்லுவதில்லை” - என்ற இந்தப்பாடலை கேட்காத காதுகள் தமிழகத்தில் இருந்திருக்க முடியாது மதங்களை கடந்து இரசித்த இந்தப் பாடலை எழுதியவர் எங்கள் ஊரைச்சார்ந்த மரியாதைக்குரிய காலம் சென்ற கவிஞர் அப்துல்சலாம் அவர்கள் என்று குறிப்பிடுவதில் நான் பெருமைக் கொள்கிறேன்.