Sunday, April 6, 2014

Convict - 2 "இது ரொம்ப ரிஸ்கான கேஸு "

"அதிகபட்சம் ஏழு வருஷம் குடுப்பாங்கடா. நாலஞ்சு வருஷத்துல விட வெச்சிடறேன். அண்ணனப் பத்தி உனக்குத் தெரியாதாடா? நாம இன்னைக்கு நேத்தா பழகுறோம். போன எலெக்ஷன் கேஸ்ல உன்னைய மூணே மாசத்துல வெளிய கொண்டு வரல?"

"இல்லண்ணே அதுலயே நாப்பதாயிரம் குடுக்கலன்னு கெழவி ரொம்பப் பொலம்பினா. ஏழு வருஷமெல்லாம் உள்ள போனா அவளத் தூக்கிப் போடக் கூட நாதியிருக்காதுண்ணே"

"உன்னைய அப்டி விட்ருவோமா ..உன் பேர் டக்னு வர மாட்டேங்கு பாரு.."
"அருள்"
"ஆ அருளு.. சமயத்துல என் புள்ள பேரக் கூட மறந்துருவேன். நீயும் என் புள்ள மாதிரிதான். இல்ல இல்ல.. நீதான் என் புள்ள.. அந்த நாய் பண்ணின காரியத்தாலதான் நான் இப்டி அல்லல்பட்டுகிட்டு இருக்கேன்... கெழவிய நானே என்னப் பெத்த தாய் போல பாத்துக்கறேன். அது பேர்லயே ஒரு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணி அஞ்சு லட்ச ரூபாய் நாளைக்கே போட்டுடறேன். நீ அதுக்கப்புறம் சரண்டர் ஆனாப் போதும்.. நீ என்னைக்கு வெளில வர்றியோ அன்னில இருந்து நீதான் என் ஒரே புள்ள"

"அண்ணே இது ரொம்ப ரிஸ்கான கேஸுன்னு.............................."
"......"
"......."
".........."
"............."
(தொடரும்)
ஆக்கம் : ஸிசிஃபஸ் அயோலஸ் Sisyphus Aeolus
நன்றி  ஸிசிஃபஸ் அயோலஸ் அவர்களுக்கு

No comments: