Sunday, April 6, 2014

உடை சார்ந்த ஒரு உரையாடல்....!!

இனக் கவர்ச்சி என்பது பாலினங்களுக்கிடையிலான ஆதி மனோபாவமாக உள்ளது,எதிரெதிர் துருவங்கள்
ஒன்றையொன்று ஈர்க்கும். இந்நிலையில் பாலியல் சார்ந்த புரிதல்கள்,பெண்ணுடல் சார்ந்த சரியான பார்வை இவை ஒழுங்குபடுத்தப்பட வேண்டும் என்பது நிதர்சன உண்மை.

ஆனால் அதற்குப் பெரும் தடையாக அச்சு/காட்சி ஊடகங்களும்,திரைப்படங்களும் உள்ளன.திரைப்பட மோகத்தில் மூழ்கியிருக்கும் நம்மவர்கள் அந்தக் காட்சிகள் உருவாக்கும் போலித்தனமான மயக்கத்தில் கிறங்கி,அந்த கதாநாயகனின் பாவனைகளை அடியொற்றி நடக்க முயல்கையில்தான் பிறழ்வுகள் தொடர்கதையாகின்றன.

ஆக,எல்லா இளம் தலைமுறையினரிடமும் ஆரோக்கியமான பார்வையை உருவாக்க வேண்டும் என்பதுதான் நிரந்தரத் தீர்வாக இருக்கமுடியும்,ஆனால் அதை முன்னிருத்த நம்மிடம் குறைந்த பட்ச உழைப்புகூட இல்லை,மேலும் பொது ஊடகங்களின் மனோபாவத்தையும் நாம் எதிர்க்கக் காணோம்,உள்ளூர ரசிக்கிறோம் என்றே அவர்கள் புரிந்து கொள்கின்றனர்.
இந்நிலையில் பொது இடங்களில் பெண்கள் தமது உடைகளை கண்ணியமாக உடுத்திக் கொள்வது நல்ல மாற்றமாக அமையக்கூடும்.

தண்டனைகளை கடுமையாக்கித்தான் ஆகவேண்டுமென்பதில்லை;இருக்கும் தண்டனைகளை முறையாக நடைமுறைப் படுத்தினாலே போதுமானது.
அதேசமயம் கிளுகிளுப்பான,பார்வையாளனின்/வாசகனின் மனப்பாலுறுப்புகளைத் தூண்டுவிட்டு காசு பார்க்கும் விபச்சார மனோநிலையை மாற்ற முயலாமல் இது சாத்தியமாகாது என்பதும் சத்தியமான உண்மை.

#‎அப்படித்தான்‬ உடுத்துவோம்,நீங்க ஏன் இதைப் பாக்கறீங்க என்று சொல்வது நிச்சயம் எதிர்மறையான விளைவுகளையே தோற்றுவிக்கும்...!!

                                                -நிஷா மன்சூர் Nisha Mansur


வாழ்த்துகள் to நிஷா மன்சூர் from mohamed ali on Vimeo.

No comments: