Saturday, March 31, 2018

உங்களை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்ன செய்வது ?.


‬: قُلْ يٰعِبَادِىَ الَّذِيْنَ اَسْرَفُوْا عَلٰٓى اَنْفُسِهِمْ لَا تَقْنَطُوْا مِنْ رَّحْمَةِ اللّٰهِ‌  اِنَّ اللّٰهَ يَغْفِرُ الذُّنُوْبَ جَمِيْعًا‌  اِنَّهٗ هُوَ الْغَفُوْرُ الرَّحِيْمُ‏ 
(நபியே!) நீங்கள் கூறுங்கள்: "எனது அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்டபோதிலும், அல்லாஹ்வின் அருளைப் பற்றி நீங்கள் நம்பிக்கை இழந்துவிட வேண்டாம். (நீங்கள் பாவத்திலிருந்து விலகி, மனம் வருந்தி மன்னிப்பைக் கோரினால்) நிச்சயமாக அல்லாஹ் (உங்களுடைய) பாவங்கள் அனைத்தையும் மன்னித்துவிடுவான். ஏனென்றால், நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவனும், கிருபை உடையவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 39:53)

ஒருவர் அவரை  அறியாமல் அல்லது தெரிந்தே  சன்னசன்னமாக அல்லது ஒரேயடியாக அழித்துக் கொள்வது, அவர் பாரம்பரிய செல்வங்களை அல்லது அவர்  கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை ஊதாரித்தனமாக செலவுசெய்து அதனால் வறுமை, மது பழங்களுக்கு அடிமையாகி உடல் நலம், கண்ணியம், குடும்பம் உறவுகள் மற்றும் தன்நிலை மறந்து தனது வாழ்க்கையை அழித்துக் கொள்வது. ஆண் பெண் தவறான உறவால் செல்வம் தொழில் முடக்கம். தவறானவர்களின் நட்பால் வாழ்க்கையை சீரழித்துக் கொள்ளல். இப்படி இவைபோன்ற வற்றால் வறுமை, நோய், செல்வங்களை இழப்பு, உறவுகளின் வேறுப்பு கடைசியில் மனம் உடைந்து தவறான முடிவு எடுத்துக் கொள்ளும் நிலைவுடையவர்களைப் பார்த்து இறைவன் மேலேயுள்ள இறைவசத்தின் மூலம் இறைவனின் கருணையிலிருந்து நீங்கள் நிராசையாகி விடாதீர்கள் என்று இறைவன் கூறுகிறான்.

சரி இந்த நிலையில் உள்ளவர்கள் உங்கள் தவறான வாழ்க்கை அதன் மூலம் ஏற்பட்ட அந்நிலையிருந்தும், வறுமையிலிருந்து வெளியே வரவேண்டும் என்றால், உங்களை இறை சக்தியுடன் இணைந்து உங்களிடம் உள்ள தீய சக்திகள் அதாவது உங்களை ஆட்டிப்படைக்கும் தீய சக்திகளை விரட்ட வேண்டும் என்ன செய்வது ?.

முதலில் நீங்கள் இரவில் பத்து மணிக்குள் படுக்க வேண்டும், அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து அந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் அதாவது தஹஜ்ஜத் நேரத்தில் நீங்கள் இரண்டு அல்லது நான்கு ரக்காத் தஹஜ்ஜத் தொழ வேண்டும்; பிறகு சுபுஹு தொழ வேண்டும் இமாம் ஜமாஅத் உடன் பிறகு கிழக்கு நோக்கி இருந்து சூரியன் உதயமாகி ஒரு மணி நேரம் வரை தனிமையில் ஆழ்ந்த மௌனத்தின் இருந்து இந்த திக்ரை ஆயிரம் முறை ஓத வேண்டும்  ""لا اله الا انت سبحانك انى كنت من الظالمين""

""வாயிலாக இல்லா  அந்த சுப்ஹானக்க இன்னீ குந்து மினழ் ழாலிமீன்""

இந்த திக்ரை ஓதுவதற்கு முன்பும் பின்பும் 11 முறை சலவாத் ஓதவேண்டும்.

அதனுடன் நீங்கள் உறுதி செய்ய வேண்டும்
இனிமேல் நான் இப்படியொரு பாவம் செய்ய மாட்டேன்,

நீங்கள் உங்கள் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று முடிவு செய்துவிட்டீர்கள் என்றால் இறைவன் உங்கள் வாழ்வை மாற்றுவதற்கு முன் நிற்கிறான்.

         மௌலவி கலீfபா
  அஹமது மீரான் சாஹிப்
        உஸ்மானி ஆலிம்
கலீபத்துல் காதிரி வஷத்தாரி
              (தல்ஸமாத்)
         மேலப்பாளையம்
            திருநெல்வேலி

No comments: