Tuesday, March 27, 2018

தித்திக்கும் திருமறை /அப்துல் வஹ்ஹாப், சாஹிப் எம். ஏ பி டிஹெச்


தித்திக்கும் திருமறை
ஆ. மௌலானா அப்துல் வஹ்ஹாப்,  சாஹிப் எம். ஏ பி டிஹெச்

கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம்
“உலகத்தோடும், அதைப் படைத்த இறைவனோடும் மனிதன் கொண்டுள்ள பல்வேறு விதமான தொடர்புகளின் தன்மை பற்றிய உள்ளுணர்வுகளை எழுப்புவதே திருமறையின் நோக்கம்.  “குர்ஆனின் போதனைகள் வெற்றியடையாமல் இருப்பதில்லை.  நம் திட்டங்கள் அனைத்தும் இப்போதனைகளைத் தாண்ழச் செல்லா (இவற்றிற்குக் கட்டுப்பட்டே இருக்கும்)” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று கெத்தே என்னும் ஜெர்மானியப் பேரறிஞர் கூறியதும் இதே கருத்தைக் கொண்டுதான்” என்று அல்லாமா முஹம்மது இக்பால் (ரஹ்) கூறியிருக்கிறார்.
முனிதனின் உள்ளத்திலும், அவனைச் சுற்றிலும் உள்ள எல்லா சக்திகளையும் பக்குவப்படுத்தித் தனக்குப் பணி டிசய்ய அவற்றை அமைத்துக் கொள்ள மனிதனுக்குக் குர்ஆன் பூரண உரிமை தருகிறது.  இதற்கு முதற்படியாக மனிதன் கல்வியைத் தேட வேண்டும்;: அறிவைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.  நல்லறிவு பெறாத மனிதனின் சக்தி விரயமாகிவிடும். ஆகவேதான், “இறiவா எனக்கு அறிவை வளப்படுத்து,” என்று மனிதன் பிரார்த்திக்குமாறு திருமறை பணிக்கிறது.
திருமறையின் பெருவிளக்கமாக வாழ்ந்து காட்டிய நபி பெருமானாரும் கல்வியின் அவசியத்தைப் பன்முறை வற்புறுத்தியிருக்கிறார்கள்.
“கல்வியைத் தேடுங்கள்: ஏனென்றால் இறைவனின் நல்லருளோடு அதைத் தேடுபவன் தூய செயல் செய்பவனாவான்;: கல்வியைப் பற்றிப் பேசுபவன் இறைவனைப் புகழ்பவனாவான்: அதை நாடிச் செல்பவன் இறைவனைத் தியானம் செய்தவனாவான்: அதைக் கற்றுக் கொடுப்பவன் தர்மம் செய்தவனாவான்: தகுதியுடையவர்களிடையே அதைச் செம்மையாகப் பரத்துபவன் இறைவனுக்கு வணக்கம் செலுத்தியவனாவான்.”
மேலும்: “கல்வி அதை அடைந்தவனுக்கு, ஏவப்பட்டதையும், விலக்கப்பட்டதையும் பகுத்துக் காண்பிக்கிறது:  சுவர்க்கத்தின் பாதைக்கு அது ஓர் விளக்காக இருப்பவனுக்கு அது கூட்டாளி: நட்பின்றி இருப்பவனுக்கு அது நல்ல தோழன்;: இன்பத்துக்கு அது வழி காட்டுகிறது: துன்பம் வந்துற்ற காலை அதனைப் பொறுத்துக் கொள்ளும் சக்தியைத் தருகிறது: அன்பர்கள் கூட்டத்திலே அது நமக்கு ஓர் ஆபரணம்: பகைவர்களின் கூட்டத்திலே அது நமக்கு ஒரு கேடயம்.”
“அறிவின் துணையால், இறைவனின் அடியான் நன்மையின் உச்சத்தை அடைகிறான்: உயர் இடங்களைப் பெறுகிறான்: அதன் துணையால் அவன்; இவ்வுலகிலே மாமன்னரின் தோர்மையையும் பெறுவான்: மறுவுலகிலே பேரின்ப வாழ்வையும் அடைவான்” என்று நாயகப் பெருந்தகை விளக்கமாகக் கூறியிருக்கிறார்கள்.
“அறிஞன் ஒருவனின் பேனாவிலுள்ள ஒரு துளி மை, வீரமரணம் எய்தியவனின்; இரத்தத்தை விடத் தூய்மையானது.”
“ஒரு நாழிகை நேரம் நல்லறிஞர்களின் போதனையைக் கேட்டு; கொண்டிருப்பது, வீர மரணம் எய்திய ஆயிரம் பேரின் ஜனாஸயாத் தொழுகையில் கலந்து கொள்வதைவிட மேலானது.”
குல்வியைத் தேழ நல்லறிவு பெறச் செல்பவனுக்கு, பேரின்ப மாளிகையில் உயர்வான இடம் ஒன்றை அமைத்துத் தருவான் இறைவன்: கல்வியை நாடி அவன் எடுத்து வைக்கும் ஒவ்வோர் ஒரு நற்கருமத்தின் பயனாகும்.”
இத்தகைய பல்வேறு அருளுரைகளால் கல்வியின் உயர்வையும், அறிவுத் தோட்டத்தின் அவசியத்தையும் வலியுறுத்தி வந்திருக்கின்றார்கள் நாயகம் (ஸல்) அவர்கள்.
“கல்வி, நபிமார்களின் உரிமைப் பொருள்;;: செல்வம் பிர்அவ்ன்களின் உரிமைப் பொருள்,” என்று நபிமணியின் தோழர் முதல் கலீபா ஹல்ரத் அபூபக்ரு ஸித்தீக் (ரலி) அவர்கள் மொழந்திருக்கிறார்கள்.  “கல்வி செல்வத்தை விடச் சிறந்தது:  ஏனென்றால் கல்வி உங்களுக்குப் பாதுகாவல் தருகிறது: செல்வத்தை நீங்கள் பாதுகாக்க வேண்டும்” என்று ஹல்ரத் அலீ (ரலி) கூறியிருக்கிறார்கள்.
கல்வியின் அவசியத்தை வற்புறுத்தாத இடமே இஸ்லாமிய இலக்கியத்தில்; இ;ல்லையெனலாம்.  அதோடு,
“நிச்சயமாக அல்லாஹ் எந்த சமுதாயத்தின் நிலையையும் மாற்றுவதில்லை – தங்களைத் தாங்களே அவர்கள் மாற்றிக்கொள்ளாத வரை – அல்லாஹ் ஒரு கூட்டத்தினருக்குத் தீங்கை நாடினால், அதனைத் தடுப்பவர் எவருமில்லை: அவர்களுக்கு அவனையன்றி எந்த உதவியாளருமில்லை.” (13:11)
நல்லறிவு பெற்று மனிதன் நல்லவனாக வாழும் போதுதான், அவன் இறைவனின் பிரதிநிதியாகும் தகுதியைப் பெறுகிறான்.  அம்மனிதனுக்கு இறைவன் நல்கிய பெரும் அருட்கொடை யாது? இறைவனே தன் திருமறையில் இதனைக் குறிக்கிறான்.
“(நபியே) ஓதுவீராக! ஊம்முடைய ரப்பு தயாளமானவன் - அவன் எத்தகையோனென்றால் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான்.  மனிதனுக்கு அவன் அறியாதவற்றை (யெல்லாம்) அவன் கற்றுக் கொடுத்தான்.” (96:3,4.5)
இத்திருவாக்கியங்கள் “ஸ_ரத்துல் அலக்” (இரத்தக்கட்டி) எனும் அத்தியாயத்தில் வருகின்றன. இந்த அத்தியாயத்துக்கு விளக்கம் தரும் ஜாருல்லாஹ் அஸ்ஸமக்~ரீ தங்களுடைய ‘க~;~hப்’ என்னும் விரிவுரையில்:
“மனிதன் அறியாதவற்றையெல்லாம் இறைவன் அவனுக்குக் கற்றுக் கொடுக்கிறான்: இதுவே அவன் பேரருளுக்கு ஒரு சான்றாகும்… மனிதன் அறியாமலிருந்த பொருள்களின் உண்மையெல்லாம் அவனுக்கு இறைவன் வெளிப்படுத்துகிறான்.  அறியாமையென்னும் இருளிலிருந்து நல்லறிவென்னும் பிரகாசத்துக்கு மனிதனை இறைவன் கொண்டு வருகிறான்.  (எழுதுகோலால் கற்றுக் கொடுத்த) இறைவன், எழுத்தறிவின் அருள் தன்மையை மனிதனுக்கு உணர்த்தியிருக்கிறான்.  இதிலிருந்து எத்தகைய நன்மை மனித குலத்துக்குக் கிடைக்கிறது என்பது இறைவனுக்கு மட்டுமே தெரியும்.  எழுத்தறிவில்லாமல் வேறெந்த அறிவும் பெற முடியாது: எந்த நுண்ணறிவும் மனிதனுக்குக் கிட்டாது.  முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் மனிதனுக்குக் கிட்டாது.  முன்னோரின் வரலாற்றையும், அவர்கள் தம் நல்லுரைகளையும் எழுதுகோல் என்னும் பெருங்கொடையின்றி வரைய முடியாது: இறைவன் இறக்கிய வேதங்களையும் குறித்திருக்க முடியாது.  அந்த எழுத்தறிவில்லாமல் தீனின் (மத) வி~யங்களையும், துன்யாவின் (உலக) வி~யங்களையும் ஒழுங்குபடுத்த முடியாது” என்று விளக்கியிருக்கிறார்கள்.
“அவன் தான் எழுதுகோல் கொண்டு கற்றுக்கொடுத்தான்” (96:4) என்ற ஒரு சிறு வாக்கியத்தின் விளக்கமாக மேற்கண்ட கருத்துகளைத் தந்திருக்கிறார்கள் அஸ்;ஸமக்~ரீ.  இப்படி ஒவ்வொரு வாக்கியத்துக்கும் மனித அறிவின் எல்லைக்கோடுவரை சென்று விரிவுரைகளும், விளக்க உரைகளும் தேடியிருக்கிறார்கள் பேரறிஞர்கள்.
நல்லறிவை நாடிச் செல்வதைக் கடமையாக்கிற்று இஸ்லாம்: அதோடு நல்லறிவை நாடி வருபவர்களையும் வெறுதொதுக்காது, அவர்களுக்கு அறிவு புகட்டுவதைக் கடமையாக்கினார்கள் இஸ்லாமிய அறிஞர்கள்.  ஐயத்தெளிவுகளுக்காக நம்மிடம் ஐயங்களைப் போக்கி, அகத் தெளிவை ஏற்படுத்துவது ஆலிம்களின் கடமை என்று திருமறையின் ஆதாரங்கொண்டு முடிவு கண்டிருக்கிறார்கள் அறிஞர் பெருமக்கள்.
சான்றாக, திருமறையில் (அல்லுஹா) “வைகறை” – அதிகாலை என்னும் அத்தியாயத்தில், “வ அம்மஸ்ஸாஇலஃப லா தன்ஹர்” என்னும் ஒரு வாக்கியம் வருகிறது: “இன்னும், பொருள்.  ஆனால் இங்கு ‘யாசிப்பவன்’ என்னும் சொல் உணவை, உடையை, பணத்தை யாசித்து வருபவனை மட்டும் குறிக்கவில்லை: கல்வியைத் தேழ வருபவனையும், நல்லறிவை நாடி வருபவனையும் இது குறிக்கிறது என்று கற்றறிந்த சான்றோர் பொருள் கொண்டுள்ளனர்.
நல்லறிவைப் பரப்புவது, மக்களின் இருண்ட இதயங்களை ஒளியால் நிரப்புவது, தூய வழியில் மனிதனைச் சிந்திக்கத் தூண்டுவது - இதுவே இறைவன் திருத்தூதரின் முக்கிய கடமை.  ஆகவே “நபியே (நல்லறிவு தேடி) யாசித்து வருபவனை வெறுக்காதீர்” என்று இறைவன் கட்டளையிட்டிருக்கிறான்.  “ஸாஇல்” என்னும் அரபிச் சொல்லுக்கு இரப்பவன், கேள்வி “ஸாஇல்” என்னும் அரபிச் சொல்லுக்கு “மன் யஸ்அலுல் இல்ம” – நல்லறிவு பற்றிக் கேட்பவன் என்பதே மறைபொருள் என இமாம் பக்ருத்தீன் ராஸீ போன்ற விரிவுரையாளர்கள் விளக்கம் தந்திருக்கின்றனர்.
இதற்கு ஆதாரமாக திருக்குர்ஆனின் எண்பதாம் அத்தியாயமும் எடுத்துக் காண்பிக்கப்படுவதுண்டு.
நூயகப் பெருந்தகை செல்வாக்குள்ள உபை இப்னு கலப் என்பவரிடம் இஸ்லாமியத் தத்துவங்களை விளக்கிக் கொண்டிருந்தார்கள்.  ஆற்றலும், அதிகாரமும் மிக்க அந்த குறை~pத் தலைவர் இஸ்லாமிய அறிவு பெற்றால், அறநெறி பரவுவதற்குப் பெருத்த ஆதரவு கிடைக்கும் என்று எண்ணினார்கள்  நபி பெருமானார்.  இவ்வேளையில் இப்னு உம்மி மக்தூம் என்னும் அந்தகர் அல்லாஹ்வின் தூதரை அணுகி இறைவன், நாயகத்துக்கு அருளிய நல்வேதத்தில் சில சந்தேகங்களைக் கேட்டார்.
பெருமானார் யாரிடமும் கடுமையாகப் பேச மாட்டார்கள்.  வறியவர்களை வரவேற்றுப் பேசும் வள்ளல் நபி, அநாதைகளை அன்போடு நடத்தும் அண்ணல் நபி, அன்று அக்குருடர் டிசயலினைக் கண்டு சிறிது ஆத்திரம் கொண்டார்கள்.  தாம் முக்கியமான பணியிலே ஈடுபட்டிருக்கும்போது, இவர் வேறு இடைமறித்துக் கேள்விகள்; கேட்டுக் கொண்டிருக்கிறாரே என்று சிறிது கோபமடைந்தார்கள்.  அந்த ஆத்திரத்திலும், அக்குருடரைக் கடிந்து பேசி விடவுமில்லை: சினந்து அவரைத் தாக்கிப் பேசிவிடவுமில்லை: அவர் கேள்வியினைப் புறக்கணித்துவிட்டு அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக்கொண்டு, அந்த குறை~pத் தலைவரிடம் உரையாடிக் கொண்டிருந்தார்கள்.
இந்தச் சம்பவத்தை அடுத்து இறைவன் தன்னுடைய தூய நபிக்குப் போதிக்கிறான்:
“(நபியாகிய) அவர் கடுகடுத்தார்: முகத்தையும் திருப்பிக் கொண்டார் - பார்வையற்ற ஒருவர் அவரிடம் வந்ததற்காக – (நபியே) அவர் பரிசத்தமடைந்து விடக்கூடும் (என்பது பற்றி) உமக்கென்ன தெரியும்? அல்லது உபதேசத்தை அவர் நினைவு கூரலாம் - அப்போது அவ்வுபதேசம் அவருக்குப் பலனளிக்கலாம் (என்பது பற்றி உமக்கென்ன தெரியும்?): எவர் (தீனின் பக்கம்) தேவையற்றவராக இருக்கின்றாரோ – நீர் அவரையே முன்னோக்குகிறீர்.  அவர் பரிசத்தம் ஆகாததினால் உம்மீது குற்றம் (ஏற்படப் போவது) இல்லை.  (எனினும்) எவர் உம்மிடம் விரைவாக வந்தாரோ – அவர் (அல்லாஹ்வை) அஞ்சிய நிலையில் - அவரை விட்டும் நீர் பராமுகமாகி விடுகின்றீர்…” (80:1-10)
அறிவு தேடிவந்த அந்தகரை அலட்சியம் செய்ததற்காக, இறைவன் தன் தூதரைக் கடிந்து கொள்கிறான்.  அந்தகர் இப்னு உம்மி மக்தூம், இஸ்லாமிய வரலாற்றிலே அப்துல்லாஹ் இப்னு உம்மி மக்தூம், இஸ்லாமிய வரலாற்றிலே அப்துல்லாஹ் இப்னு ~_ரைஹ் என்ற பெயராலும் குறிக்கப்படுகிறார்கள்.  பெருமானார் ஒரு தடைவ அவரிடமிருந்து தம் முகத்தைத் திருப்பிக் கொண்டார்கள் என்னும் காரணத்தாலேயே அன்னார் பெயரும் பிரசித்தமடைந்து விட்டது.  இந்தச் சம்பவத்துக்குப் பின்னர் அவர் எப்பொழுது நாயகத்திடம் சென்றாலும், எம்பெருமானார் அவருக்கு முகமன் கூறி, அவரை உபசரித்து, இரு கண்களும் இழந்த அந்தகத் தோழர் அமர்வதற்காகத் தங்கள் மேலாடையையும் விரித்து விடுவார்கள்.
கண்ணிழந்த இப்னு உம்மி மக்தூமைக் காணும் போடிதல்லாம், “எவருக்காக என்னை என் நாயன் எச்சரித்தானோ, அத்தகைய உமக்குச் சுபசோபனம்” என்றும் நாயகப் பெருந்தகை கூறுவார்கள்.  தாம் மதீனாவை விட்டு வெளியே செல்ல வேண்டிய சிற்சில சந்தர்ப்பங்களில் தம் பிரதிநிதியாகவும் அவரை நியமித்துச் சென்றிருக்கிறார்கள் நபிகள் பெருமானார்.
அறிவு விளக்கம் தேழவந்த அந்தகரைப் புறக்கணித்தார்கள் என்ற காரணத்துக்காகத் தன் தூய திருநபியை எச்சரித்தான் இறைவன்.  “ஆலிம்கள் நபிமார்களின் வாரிசுகள்” (அல்உலமாவு வரதத்துல் அன்பியாஇ) என்று நாயகம் நவின்றுள்ளார்கள்.  ஆகவே ஐயத் தெளிவுக்காக வரும் மக்களிடம் கடுகடுத்துப் பேசாமல், அவர்களை மார்க்க அறிவற்றவர்கள் என்று எள்ளி நகையாடாது, அவர்களுக்கு நல்லறிவு புகட்ட வேண்டியது இஸ்லாமிய அறிஞர்களின் கடமையாகும்.  இதற்கு புறக் கண்ணிழந்து, அகக்கண் ஒளியோடு நாயகத்தின் நல்லறத் தோழராக விளங்கிய அந்தப் பெரியாரின் வரலாறு ஒரு முன்மாதிரியாக அமைந்துள்ளது.
“கண்ணகல் ஞாலத்தில்” கல்விக்குள்ள பெரும் சிறப்பபை; பற்றிச் சிறதளவு அறிந்தோம்.  ஞானம் என்பது அறிவு, தன்னறிவு, புலனறிவு, மெய்யறிவு (மஃரிபா) போன்ற பல பகுதிகளுடையது.  ஆனால் அறிவையே இரண்டு பிரிவுகளாகப் பிரித்து, “எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்.” – கணிதமும், எழுத்தாலாகும் கட்டுரைகள், கவிதைகள், காப்பியங்கள், நவீனங்கள், அறிவு நூற்கள் ஆகியவும் இரு கண்களைப் போன்றவை என ஆன்றோர் கூறியுள்ளனர்.  ஏண்ணைப் பற்றியும் திருக்குர் ஆனில் வரும் சில ரசமான சேதிகளைத் தெரிந்து கொள்ளலாமே!  திருமறையை ஆராய்ச்சி செய்த – செய்துவரும் அறிஞர்கள் அதன் எழுத்திலும், எண்ணிலும் எவ்வளவு கவனம் செலுத்துகிறார்கள் என்பதை அறிவதற்கு இது உதவியாக இருக்கும்.
ஏழு என்னும் எண் மகத்துவமிக்கது என்பது சரித்திர நூல்களிலும், சமய வரலாறுகளிலும் இருந்து எளிதில் புலனாகும்.  ஏழு வானங்கள் என்று திருமறை அடிக்கடி குறிப்பிடுகிறது.  அப்துல்லாஹ் இப்னு உபை என்னும் நயவஞ்சகன், நாயகத்துக்குப் பெரிதும் தொல்லை கொடுத்து வந்தவன்.  ஆனால் அவன் இறந்ததும், அவனுடைய மகன் வந்து தம் தந்தை ஈடேற்றம் அடைய பெருமானாரின் சட்டையைக் கொடுத்துதவ வேண்டுமென்றும்,  அதைத் தம் தந்தையின் பிரேதத்தைச் சுற்றும் (கபன்) துணியாக அணிவிக்கப் போவதாகவும், அத்துடன் தம் தந்தையின் பிரேத அடக்கத்தை உடனிருந்து நடத்தித் தரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.  பெருமானார் அவர்கள் தம் சட்டையைக் கொடுத்ததோடல்லாது, பிரேத அடக்கத்தின்போது அப்துல்லாஹ் இப்னு உபைக்காக பிரார்த்தனை டிசய்வதற்கும் உடன்பட்டு எழுந்தார்கள்.  அப்பொழுது ஹல்ரத் உமறுப்னுல் கத்தாபு அவர்கள் நாயகத்தின் மேலாடையைப் பிழத்துக் கொண்டு “யாரஸ_லல்லாஹ்! இறைவன் தன் வேதத்தில்,
(நபியே!) அவர்களுக்காக நீர் பிழை பொறுக்கத் தேடும்;;;; அல்லது பிழை பொறுக்கத் தேடாமலிரும்;  அவர்களுக்காக எழுபது தடைவ நீர் பிழை பொறுக்கமாட்டான்; ஏனென்றால் அது: அவர்கள் நிச்சயமாக அல்லாஹ்வையும், அவன் ரஸ_லையும் நிராகரித்தார்கள் என்பதினாலாகும் - அல்லாஹ் பாவிகளின் கூட்டத்தை நேர்வழியில் செலுத்தமாட்டான்” (9:80) என்று டிசால்லவில்லையா? இந்த நயவஞ்சகனுக்காக நீ’;கள் துஆச் செய்யலாமா? ஏன்று கேட்டார்கள்.
அப்பொழுது கருணைக் கடலான நபிகள் நாயகம், “இறைவன், எழுபது தடைவ மன்னிப்புக் கேட்டாலும் கூட மன்னிக்க மாட்டேன் என்று சொல்லியிருக்கிறானல்லவா? நான் எழுபது தடவைக்கும் அதிகமாக அவன் சார்பில் மன்னிப்புக் கேட்கிறேன்,” என்று பதிலிறுத்தார்களாம்.  ஆனால் இதன் பின்னர் (இப்னு உபை போன்ற) நயவஞ்சகர்களின் சமாதியருகில் நிற்கவோ, அவர்களுக்காக துஆச் செய்யவோ வேண்டாம் என்று ஆண்டவன் அறிவித்து விட்டான்.
இந்த திருவாக்கியத்துக்கு உரையெழுதப் புகுந்த இமாம் பைலாவீ அவர்கள் “ஏழு, எழுபது… போன்ற எண்கள் பல என்ற பொருளில் அரபஜகளால் உபயாகிக்கப்படுவதுண்டு” என்று கூறினார்கள்.  பிரசித்தி பெற்ற லிஸானுல் அரபி என்னும் பொருள் களஞ்சியம் “ஏழு, எழுபது, எழுநூறு போன்ற எண்களைக் குறிக்கும் அரபிச் சொற்கள் குர்ஆனிலும், ஹதீதிலும், அரபிகளின் பேச்சு வழக்கிலும் ‘பல’ என்ற பொருளில் உபயோகிக்கப்படுகிறது” என்று குறிப்பிடுகிறது.
“கூட்டத்திற்கு எவ்வளவு பேர் வந்திருக்கிறார்கள்?” என்று ஒருவர் கேட்கிறார்.  பத்து, ஆயிரம் பேர் வந்திருப்பார்கள் என்று மற்றொருவர் பதிலளிக்கும்போது வந்திருந்த நபர்களின் தொகை பத்துமல்ல, ஆயிரமுமல்ல.  நிறையப் பேர் வந்திருந்தார்கள் என்றுதானே பொருள்?
இதே மாதிரியாகப் பொருள் கொண்ட இமாம் பக்ருத்தீன் ராஸி யவர்கள், “இன் தஸ்தக்பிர் லஹீம் ஸப்ஈன மர்ரதன்” (நீர் அவர்களுக்காக எழுபது முறை மன்னிப்புக் கோரினாலும் எத்தனை முறை மன்னிப்புக் கோரினாலும்…” என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்றும், ஆகவே இப்னு உபை ஜனாஸாத் தொழுகையில் பெருமானார் கலந்து கொண்டதாகக் கூறுவது கற்பனையாகவே இருக்கும் என்று தங்களின் சீரிய திருமறை விளக்கமான “தப்ஸீரிகபீரி”ல் வரைந்திருக்கிறார்கள்.
ஓர் எண் எவ்வளவு ஆராய்ச்சிக்கு இடம் கொடுத்திருக்கிறது என்பதை நாம் காணும்போது ஆச்சரியத்தால் திகைப்போம்.  ஆரபி வழக்கில் “ஒரு ஏழு பேர் வந்திருப்பார்கள்” என்று சொன்னால் பலர் வந்திருப்பார்கள்: அதாவது ஏழுக்கு அதிகமானவர்கள் வந்திருப் பார்கள் என்று பொருள் கொள்ள முடியும்.  அப்படியானால் ‘ஸப்அ, ஸமாhத்தின்’ என்ற திருமறையின் சொற்றொடரை ஏழு வானங்கள் என்றுதான் பொருள் கொள்ள வேண்டும் என்பதில்லை: எத்தனையோ வானங்களைப் படைத்த இறைவன் இந்தப் படைப்பு களுக்கெல்லாம் ஆட்சியாளனாக இருக்கும் மனிதனுக்குத் தன் இறுதித் திருமறையை எப்படி அருள் செய்கிறான் என்று பார்ப்போம்.
==========================================================
வாழ்க்கையும் வாணிபமும்
அகண்ட உலகையும், விரிந்த வானையும் மனிதனுக்கு வசப்படுத்தி, அவற்றிலிருந்து பெறப்படும் பயன்களைக் கொண்டு செம்மையான ஒரு வாழ்வை மனிதன் உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்று உயர்மறை ஓதுகிறது.
இந்தப் பரந்த, விரிந்த அடிப்படையில் தான் இஸ்லாமியப் பொருளாதாரமே அமைந்திருக்கிறது.  இவ்வளவு வளமான சம்பத்துகளை வைத்துக் கொண்டு, படைப்பஜகளில் சிறந்தவனான மனிதன், சுதந்தரமான, ஆண்மையுள்ள, நல்வாழ்வு வாழ வேண்டும் என்றுதான் திருமறை அறிவுறுத்துகிறது.
தனி மனிதன் ஒவ்வொருவனுடைய உழைப்பின் குதியையும், மிகுதியையும் வைத்துத்தான் சமுதாய் வளமும், நாட்டின் நலமும் கணக்கிடப்படும்.  சோம்பியிருக்கவோ, பிறர் உழைப்பின் மூலம் உல்லாச வாழ்வு நடத்தவோ, தன் உயர்வையும், ஆண்மையையும் மறந்து மனிதன் கையேந்தி வயிறு வளர்க்கவோ இஸ்லாம் அனுமதிக்கவில்லை.
ஆனால் தன் உiர்ப்பின் மூலம் பிறருக்கு உதவி செய்வதை இஸ்லாம் போற்றுகிறது.  பொதுநலத்துக்காப் பொருள் கேட்ட பெருமானாரிடம் தம் உடைமைகள். அனைத்தையும் கொண்டு இருப்போர்க்கு என்ன வைத்திருக்கிறீர்கள்?” என்று நாயகம் (ஸல்) அபூபக்ரு (ரலி) அவர்களிடம் வினவிய போது, “இறைவனின் அருளையும், அவன் திருத்தூதரின் அன்பையும் வீட்டிலிருப்போருக் காக வைத்திருக்கின்றேன்” என்று பதிலளித்தார்கள் அந்த தியாகச் செல்வர்.  இந்தத் தன்னல மறுப்பை பெரிதும் பாராட்டினார்கள் நாயகம் (ஸல்).  ஆனால் எல்லோரிடத்திலும் இருந்து இத்தகைய தியாகத்தை எம்பெருமானார் எதிர்பார்க்கவும் இல்லை; ஏற்றுக் கொள்ளவும் இல்லை.  
ஒரு தடவை நாயகத்தின் நல்லறத் தோழர்களில் ஒருவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தார்; அவரைக் காணச் சென்றிருந்தார்கள் நபி பெருமானார்.
“இறைவனின் திருத்தூதே! என்னிடம் செல்வம் நிறைந்திருக்கிறது.  இது அனைத்தையும் ஏழைகள் நலனுக்காகக் கொடுத்துவிடப் போகிறேன்,” என்று அத்தோழர் சொன்னார்.
“முதலில் உங்கள் செல்வத்திலிருந்து உங்களுடைய உறவினர்கள் சுதந்திரமாக வாழ்க்கை நடத்துவதற்கு வழி செய்வது, அவர்கள் பிறர் தயவில் வாழ்க்கை நடத்தவும், இரந்து உண்ணவுமான நிலைக்கு வருவதை விடச் சிறந்தது” என்று கூறினார்கள் நபி பெருமானார்.
மேற்கண்ட நிகழ்ச்சியில் ஒரு சீரிய உண்மை புலப்படும்.  அதாவது பிறர்தயவிலோ, உழைப்பிலோ ஒரு மனிதன் வாழ்வதை இஸ்லாம் வெறுக்கிறது.  பிறர் தயவில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் ஆண்மையில்லை, பிறர் உழைப்பில் வாழ்வதில் மனிதத் தன்மையில்லை.  எனவே ஒவ்வொரு மனிதனும் உழைத்தே ஆக வேண்டும்.  பாடுபட்டே தீர வேண்டும்.  இது இஸ்லாம் கண்ட பொருளாதாரத்தின் அடிப்படை, மனிதகுலத்தின் பொருளாதார வாழ்வுக்கு இதைவிடச் சிறந்த அடிப்படை அமையுமா? எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்த அடிப்படை மாற முடியுமா?
பரம்பரைச் சொத்தாக ஒரு மனிதனுக்கு ஏராளமான பொருள் கிடைத்திருக்கிறது என்று வைத்துக் கொள்ளுவோம்.  அம்மனிதன் அந்தச் சொத்தைப் பணமாக்கி, அந்த பணத்தை மற்ற மனிதர்களுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கிறான்.  எவ்வளவோ சட்டங்கள் இயற்றப்பட்டும், இப்பொழுதும் அநியாய வட்டிக்குக் கடன் கொடுக்கும் பழக்கம் இந்நாட்டில் அகலவில்லை.  தான் பெறும் அநியாய வட்டியின் மூலம் பரம்பரைச் சொத்தையடைந்த மனிதன் உல்லாசமாக வாழ்கிறான்.  ஆனால் இதற்காக அவன் முன்னோர்கள் உழைத்தார்கள்;; அவர்களும் முறையாகச் சமயமும், சமுதாயமும், சர்க்காரும் விதிக்கும் தர்மங்களையும், ஊர்க் கட்டணங்களையும், வரிகளையும் ஒழுங்காகக் கொடுத்து வந்திருந்தால் தேவைக்கதிகமான சொத்துக்கூட வைத்துச் சென்றிருக்க முடியாது!
ஏதோ பணம் வந்துவிட்டது ; வட்டிக்குக் கொடுக்கிறான்.  தொழில் செய்யப் பணமில்லாமல் திண்டாடித் தவிக்கும் ஏழை மக்கள் இவன் பணத்தைக் கடன் வாங்குகிறார்கள் முதல் முழுவதும் திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் வட்டியாக கொடுத்து வருகிறார்கள்.  உடலை ஓடாக்கி உழைத்து, உழைத்து இந்த உலுத்தனின் உல்லாச வாழ்வுக்காக அவர்கள் வட்டிப் பணம் கட்டுகிறார்கள்.
இன்றைய சமுதாயங்களுக்கு இது கொடிய அநீதியாகத் தெரியலாம்;   ஆனால் ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமுதாயங்கள் இதைப்பற்றி அக்கறை கொள்ளவில்லை.  ஒரு மனிதன் உழைத்து உழைத்து மடிகிறானா? அது அவனவன் விதிவசம் ; இன்னொருவன் அந்த உழைப்பிலே உல்லாசமாக வாழ்கிறானா? ‘அவன் கொடுத்து வைத்தவன்’ என்ற ரீதியில் வேதாந்தம் பேசி அன்றையச் சமயங்களும், சமுதாயங்களும் தங்கள் காலத்தைக் கடத்தி வந்தன.
அப்பொழுது தான் இறைமறை முழங்கிற்று:
“எவர்கள் வட்டியைத் தின்கிறார்களோ அத்தகையோர் (கியாமத்துநாளில் கப்ருகளிலிருந்து) ஷைத்தான் அவனை அறைந்து பைத்தியம் பிடித்து எழுந்திருப்பவன் போலல்லாமல் (வேறு விதமாக) எழுந்திருக்க மாட்டார்கள்; ; ஏனெனில் அ(ந்த நிலையான)து “வியாபாரமெல்லாம் வட்டியைப் போன்றுதான்” என்று நிச்சயமாக அவர்கள் கூறியதின் காரணத்தினலாகும்; ; (ஆனால்) அல்லாஹ் வியாபாரத்தை ஹலாலாக்கியும், வட்டியை ஹாரமாக்கியும் வைத்துள்ளான்…
அல்லாஹ் வட்டியை (பரக்கத்தில்லாமல்) அழித்து, தருமங்களை வளரச் செய்கிறான்..” (2:275-6)
பண்டையச் சமுதாயங்கள் தாம் வட்டியால் ஏழை மக்கள் கசக்கிப் பிழியப்படுவது பற்றிப் பராமுகமாக இருந்தன: ஆனால் ஆன்றோர்கள் சிலர் இக்கொடிய பழக்கத்தை அவ்வப்பொழுது கண்டித்து வந்திருக்கின்றனர்.
“ஒரு நாணயத்தைக் கொண்டு பிறிகொரு நாணயம் உற்பத்தி செய்வதை (அதாவது வட்டியை) ஆதரிக்கலாகாது,” என்று அரிஸ்டாட்டில் என்னும் கிரேக்க ஞானி தம் மக்களிடம் எடுத்துக் கூறினார்.  மக்களுக்குத் தேவைப்படும் பொருள்களை உண்டாக்குவதற்குப் பதிலாக வட்டிக்காகக் கொடுக்கப்படும் பணம் முட்டையிடாத ஒரு மலட்டுக் கோழியைப் போன்றது” என்றும் அவர் வர்ணித்தார்.
ஆனால் இந்த ஒரு சிலரின் கண்டங்கள் கவனிக்கப்படவில்லை! வட்டியைப் பற்றி ஆழ்ந்த கருத்துகளைத் தூர நோக்குடன் வெளியிட்ட இஸ்லாம் தான் உலகப் பொருள் துறையையே மாற்றியமைத்தது.  வட்டியும், பொருள் துறையும் பற்றி பேரறிஞர்களை தபரீ, குர்துபீ, ஸமக்ஷரீ, ஸ{யூதி, பைலாவீ, இமாம் ராஸீ முதலியோர் சிந்தித்துத் தம் “திருமறை விளக்கவுரைகளில்,” எழுதியிருக்கின்றனர்.
வட்டி வாங்கி வயிறு கழுவுவது நேர்மையான பிழைப்பல்ல ; அதோடு பணத்தைத் தேக்கி வைத்துக் கொண்டு அதனை வாணிபத்துக்கும், பொருள் உற்பத்திக்கும் பயன்படுத்தாமல், அப்பணத்திலிருந்தே வாழ்க்கையை நடத்துவதும் நற்பண்பல்ல என்று இஸ்லாம் போதிக்கிறது.
“(பொருளையே குறியாக வைத்து அதனைச்) சேமித்து வைத்திருப்பவனையும்… (நரக இருப்பு) அழைத்துக் கொள்ளும்.” (70:18)
“… எவர்கள் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அதனை அல்லாஹ்வுடைய பாதையில் செலவு செய்யவில்லையோ அவர்களுக்கு நோவினை தரும் வேதனையைக் கொண்டு (நபியே!) நீர் நன்மாராயம் கூறுவீராக!”(9:34).
என்று பொருளைப் புதையலாக வைத்துக் கொண்டு அதனை பூதம் போல் காத்து நிற்கும் “கேடுகெட்ட மானிடரை” திருக்குர்ஆன் எச்சரிக்கிறது.
ஆனால் உள்ள பொருளைக் கொண்டு உண்மையான, நேர்மையான வாணிபம் செய்வது அல்லாஹ்வுக்கு விருப்பமான வழியேயாகும்.
எம்பெருமானாரின் வழித்தோன்றல்களான எண்ணற்ற பெரியோர்கள் வணிகர்களாகவேதாம் இந்நாட்டுக்கு வந்து, தங்களுடைய நேர்மையான வாணிபத்தாலும், ஒழுங்கான தொழில் முறைகளாலும் இஸ்லாமிய நெறியைப் பரப்பினர் என்பதற்கு இன்றும் வரலாறு விளக்கம் தருகிறது.
அதிலும் சிறப்பாக தென்னகத்தில் இஸ்லாமிய வாணிபர்கள் தாம் திருமறையின் பிரச்சாரகர்களாக விளங்கினார்கள்.  பண்டை நாளிலிருந்தே தமிழ் மக்களும் வாணிபத்தில் ஈடுபட்டிருந்தவர்கள்:
“நீரில் வந்த நிமிர்பரிப் புரவியும்
காலில் வந்த கருங்கறி மூடையும்
வடமலைப் பிறந்த மணியும், பொன்னும்
குடமலைப் பிறந்த ஆரமும், அகிலும்
தென்கடல் முத்தும், குணகுடல் துகிரும்
கங்கை வாரியும், காவிரிப் பயனும்
ஈழத்துணவும், காழகத்(து) ஆக்கமும்.
. . . . . . . . . ”
என்று சோழர் துறையாகிய காவிரிப்பூம்பட்டினத்தில் பல்வேறு பண்டங்கள் வந்த குவிவதைப் பத்துப் பாட்டிலுள்ள பட்டினப்பாலை வர்ணிக்கிறது.
அரபுக் குதிரைகளும், மணியும், பொன்னும், அகிலும், சந்தனமும், முத்தும், பவளமும் (துகிரும்), ஈர்த்திருநாட்டின் நற்பொருள்களும், பர்மிய (காழகத்தின்) பொருள்கள் பலவும் அத்துறைமுகத்தில் வந்து நிறைந்தனவாம்.
இத்தகைய வாணிபத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் நேர்மையும், நல்லொழுக்கமும் கொண்டு திருமறையைக் கையிலேந்தி வந்த அரபு நாட்டு இஸ்லாமிய வர்த்தகர்களை நேசித்ததில் வியப்பேது?

 ================================================================

                                வரலாறும் வாணிபமும்
கவிஞர் பெருமகனார் அல்லாமா முஹம்மது இக்பால் பாலே ஜிப்ரில் (ஜிப்ரீலின் இறக்கைகள்) என்ற தம் கவிதைத் தொகுதியில், ‘லெனின்’ என்ற ஒரு சுவையான கவிதையையும் சேர்ந்திருக்கின்றார்.
இந்த நூற்றாண்டில் நடந்த பயங்கரமான ரத்தப் புரட்சிகளில் தலையானது ரஷ்யப் புரட்சி.  இதற்கு முக்கிய காரணகர்த்தர்களில் ஒருவர் ‘லெனின்’.  அவர் இறந்ததும், அவரை இறைவன் சன்னி தானத்திலே கொண்டு வந்து நிறுத்துகிறார் அமரகவி இக்பால்.  இறையின் முன்னே லெனின் தம் கட்சியை எடுத்துச் சொல்லி சில சந்தேகங்களையும் எழுப்புகிறார்.  இறையுணர்வோடு – தெய்வ நம்பிக்கையோடு இந்த லெனின் செயலாற்றியிருந்தால், இப்படிப் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியிருக்க வேண்டியதில்லையே என்ற இக்பாலின் மனத்தாங்கலையும் இக்கவிதையிலே காண்கிறோம்.
“நீ எங்கும், என்றும் இருப்பவன் என்பதை இன்று உணர்கிறேன்.  ஆனால் அன்று…
நீ வணங்கப்படுவது எந்த மனிதனால்…? ஏனெனில் கீழ் நாட்டான்மேனாட்டு வெள்ளையனைத் தெய்வமாக மதிக்கிறான் ; ஆனால் அவை பேசுவதோ சமத்துவம்…” என்று லெனின் அடுக்கிக் கொண்டே போகிறார்.
குடைசியாக இன்றைய வாணிபத்தின் நிலையைப் பற்றி லெனின் வர்ணிக்கிறாராம்! “ஸாஹிர் மே திஜாரத் ஹை, ஹகீகத் மேஜுவா ஹை”- இன்றைய வாணிபம் உண்மையிலேயே ஒரு சூதாட்டமே யாகும் என்று வணிகர்கள் மீதும் ஒரு பெரும் குற்றச்சாட்டை அவர் சுமத்துகிறார்.  பாலே ‘ஜிப்ரீலில்’ அடுத்துவரும் கவிதைகள் லெனின் கூற்றுக்களுக்கு மறுமொழியளிப்பவனாக அமைந்துள்ளன.
ஆனால் இங்கு நாம் ஆராய வேண்டியது – “ஸாஹிர்மே திஜாரத் ஹை, ஹகீகத் மே ஜுவா ஹை” - “இன்றைய வாணிபம் உண்மையிலே ஒரு சூதாட்டமேயாகும்” என்பதைத்தான்.
பருத்திப் பேரம், பஞ்சுப் பேரம், இஞ்சிப் பேரம் என்று இன்று பலவிதமான பேரங்கள் சூதாட்டத்தின் சாயலிலே தான் உலவுகின்றன.  குறைந்த விலையில் பொருள்களை வாங்கிப் பதுக்கி வைத்துக் கொண்டு, அவற்றின் விலையேறும் வரை காத்திருந்து, பின்னர் அவற்றைக் கொள்ளை இலாபம் வைத்து மார்க்கட்டில் தள்ளுவது சூதாடியின் செயல்தான்.
இவ்வாணிபச் சூதாட்டம் இன்றைய உலகில் பரந்து, விரிந்து, வளர்ந்து இருக்கலாம்.  குறுக்கு வழிகளில், சுருக்காகப் புதுப் பணக்காரர்களாகும் பலர் இச்சூதாட்டமுறையைத் தான் இன்று கையாள்கிறார்கள் என்பதுவும் உண்மை.  ஆனால் இந்தச் சூதாட்ட வாணிபம் இந்த நூற்றாண்டில் புதுமையாகத் தோன்றியதல்ல என்பதை வரலாறு கூறுகிறது.
நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரும், இத்தகைய வாணிப முறை நிலவி இருப்பதையும் ; கள்ள மரக்காலும், பொய்த் தராசும் வைத்து அளவையிலும், நிறுவையிலும் மக்களை ஏமாற்றி, பொருள் திரட்டி உல்லாச வாழ்வு வாழ்ந்த மத்யன் நகர மக்களையும், அவர்களை எச்சரித்து நேர்வழியிலாக்கத் தம் உயிரையும் திரணமாக மதித்துத் தொடர்ந்து பிரச்சாரம் செய்த ஹல்ரத் ஷ{ஐபு (அலை) அவர்களைப் பற்றியும் நாம் படிக்கும் போது ‘இவ்வாணிப நோய்’ புதுமையான வொன்றல்ல என்பது நமக்குப் புலனாகும்.
மத்யன் நாட்டு மன்னன் அபூஜாதும் அந்த வாணிபச் சூதாடிகளுக்கு ஆதரவு கொடுத்தான் - அவனுக்கு வருமானம் பெருக வேண்டுமல்லவா?
“மணிக் கோதுமை, தொலிக் கோதுமை போன்ற தானியங்களை மத்யன் வணிகர்கள் வாங்கி வந்து களஞ்சியங்களிலே கொட்டி வைத்துக் கொண்டு விலையேறுவதை எதிர்பார்த்தவர்களாக இருப்பார்கள்.  வாங்குவதற்கும், விற்பதற்குமாகத் தனித்தனியே மரக்காலும். தராசும் அவர்கள் வைத்திருப்பார்கள்” என்று அக்கால மத்யன் மக்களின் வாணிப ஒழுங்கை வரலாறு வர்ணிக்கிறுது.
இம்மக்களின் வாணிப ஒழுக்கத்தைச் சீர்படுத்துவதற்காகத்தான் நாலாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் அல்லாஹ் ஷ{ஐபு (அலை) அவர்களைத் தன் திருத்தூதராக அனுப்பி வைத்தான்.
ஷ{ஐபு (அலை) தம் மக்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
“என்னுடைய சமூகத்தினரே! அல்லாஹ்வை(யே) நீங்கள் வணங்குங்கள்;; ; அவனைத்தவிர உங்களுக்கு எந்த நாயனும் இல்லை ; அளவையும், நிறுவையையும் நீங்கள் குறைக்காதீர்கள் ;  (இப்போது) நிச்சயமாக நான் உங்களை நல்ல நிலைமையில் இருந்து வலக் காணுகின்றேன் ; (அவ்வாறிருக்க அளவிலும், நிறுவையிலும் நீங்கள் மோசம் செய்து அதன் மூலம் உங்களைச்) சூழந்து கொள்ளும் ஒரு நாளின் வேதனை உங்களின் மீது ஏற்படுவதை நிச்சயமாக நான் பயப்படுகிறேன்” என்று அவர்கள் எச்சரித்தார்கள். (11:84)
இறையருள் மீது நம்பிக்கை கொண்டு நேர்மையான வாணிபம் செய்தால் அவனே மக்களுக்குப் போதுமான செல்வத்தைக் கொடுப்பான் என்றும் நல்வாக்குக் கூறினார்கள்.
“நீங்கள் முஃமின்களாக இருந்தால், (அளவிலும், நிலுவையில் நீதமாக நடந்து கொண்ட பின்னர் உங்களுக்கு) அல்லாஹ் மீதப்படுத்துவதே உங்களுக்கு நன்மையுடையதாகும்; ; நான் உங்களைக் கண்காணிப்பவனும் அல்லன்” (11:86)
என்றும் நபியுல்லாஹ் ஷ{ஐபு (அலை) அவர்கள் போதித்தார்கள்.
“ஷீஐபே! எங்கள் மூதாதையர் வணங்கியதை நாங்கள் விட்டு விடுமாறும், எங்களுடைய பொருட்களில் நாங்கள் விரும்பியபடி (செலவு) செய்வதை விட்டு விடுமாறும், உம்முடைய தொழுகையா உம்மை ஏவுகிறது? நிச்சயமாக நீர் மிக்க சாந்தமுள்ளவராகவும் நேர்மையாளராகவும் இருக்கிறீர்!” (11:87)
என்று பரிகாசமாகக் கூறினர் மத்யன் நகரமக்கள்.
குறுக்கு வழியிலே பணம் திரட்டிப் பழக்கப்பட்டுப் போன மத்யன் மக்கள் ஷ{ஐபு நபியவர்களின் சீரிய போதனையைக் கேட்டுச்சிந்திக்கவா செய்தார்கள்?
சிறுமதி படைத்த அக்குறுக்கு வழிச் செல்வர்கள் சிரித்தார்கள்.

''தித்திக்கும் திருமறை'' கல்விக்கு உயிர் ஊட்டும் காவியம் - மாஹின் வெளியீடு

http://nidur.info/

No comments: