Friday, March 2, 2018

யாருக்காக உங்கள் கொள்கைகளை நிலை நாட்டப் போகிறீர்கள்?

Safeena Salam
சன்னி ,ஷியா ,குர்திஸ் இதில் யாருக்கு சிரியா ?

----------------------------------------------------------------------



FSA வுடன் அல்நுஸ்ரா, ISIS அமைப்புகள் ஜாய்ண்ட் பண்ணியதை போன பதிவில் பார்த்தோம்...இந்த மூன்றும் அமெரிக்காவின் செல்லப்பிள்ளைகள்..!
ரைட்...! இப்ப மெயின் சப்ஜெக்ட்டுக்கு வருவோம்..!
அமெரிக்காவால் வலுப்பெற்ற FSA, ISIS உடன் கை கோர்க்கவும் அமெரிக்கா பின் வாங்க ஆரம்பித்தது... ISIS ஐ ஒழிப்பதாக கூறிவிட்டு தான் அந்த இடத்தில் இருந்தால் உலகம் தன்னை காறித் துப்புமே? என்ற உஷார்த்தனம்...!
அமெரிக்கா பின் வாங்கியதைப் பார்த்து அதன் மீது FSA காண்டாகி இருந்த நேரத்தில் அதைத் தனக்கு சாதகமாய் பயன்படுத்தி இப்ப FSA க்கு சப்போர்ட் என துருக்கி உள்ளே நுழைகிறது...!
துருக்கிக்கு இங்கு என்ன வேலை ?

குர்து மக்கள் அதிகம் வாழும் துருக்கியின் கிழக்குப் பகுதியில் அவர்கள் தனி நாடு கேட்டு துருக்கிக்கு எதிராக இருப்பதால் சிரியாவிலுள்ள குர்திஸ் மீதும் துருக்கிக்கு எரிச்சல்..! குர்திஸ்கள் துருக்கியின் கிழக்கு, சிரியா மற்றும்,ஈராக், ஈரானின் வடக்கு, வடமேற்கு பகுதிகளைக் கொண்டு தங்களுக்கு குர்திஸ்தான் என்ற தனி நாடு கொடுங்கள் என கேட்கின்றனர்...
எப்படி அசாத் சன்னியின் ஷரியாவை ஏற்க மறுப்பதால் அவரை முஸ்லிமாக சன்னிகள் ஏற்கவில்லையோ அதேப் போல் குர்திஸ்களுக்கும், சன்னிகளுக்கும் ஜென்ம பகை...!
ஓரளவு ஷியாக்களுடன் ஒத்துப் போகும் இவர்கள் ஆரம்பத்தில் அசாத்தோடு இணக்கமாய்தான் இருந்தார்கள்..பின் சிரியா உள்நாட்டுப் போர் தொடங்கிய காலத்தில் பாதி சிரியா உனக்கு பாதி சன்னிகளுக்கு என அமெரிக்கா ஆசை காட்டவும் உடனே அசாத்தை எதிர்க்க அமெரிக்கா பக்கம் சாய்ந்து விட்டார்கள்... சிரியாவில் குர்திஸ்களுக்காக போராட YPG (People protection units) மக்கள் பாதுகாப்பு குழுக்களுக்கு அமெரிக்கா ராணுவமும்,வெப்பன்சும் கொடுக்கிறது..! குர்திஸ்கள் அமெரிக்காவுடன் இணைய இன்னொரு முக்கிய காரணம் அவர்கள் ISIS எதிர்ப்பதும்தான்..!
ஆச்சா ? தான் வளர்த்த FSA வை துருக்கியிடம் தாரை வார்த்து விட்டு தான் வெளியேறுவதை எப்படி தடுப்பது ? என பொறுக்காமல் இருந்த அமெரிக்கா இப்பொழுது தன் தத்துப்பிள்ளை குர்திஸ்களுக்கு ஆதரவாக மறுபடி உள்ளே நுழைந்து நிலமையை தன் கையின் கட்டுக்குள் கொண்டு வருகிறது..
இதில் வேடிக்கை துருக்கியில் இதே குர்து இன மக்களை அழிக்க துருக்கிக்கு ஆயுதம் கொடுப்பதும் இந்த அ(பே)மெரிக்காதான்...(குள்ள நரி)
FSA &YPG (குர்திஸ் போராளிகள்) சிரியாவை சிதறடிக்க இதில் ரஷ்யா ISIS ஐ ஒழிப்பதாக நினைத்துக்கொண்டு FSA & குர்திஸ் போராளிகளை தாக்குகிறது. அமெரிக்கா நானும் ISIS ஐதான் அழிக்கிறேன் என்ற பெயரில் அசாத்தின் சிரிய ராணுவத்தை ஒழித்துக் கட்ட ஊடாக புகுந்த துருக்கி சிரியாவை வீழ்த்த FSA க்கு உதவுவதாக கூறி குர்திஸ் மக்களை கொல்கிறது...!
ஆக ஷியாக்களை காப்பாற்ற ரஷ்யா, ஈரான், லெபனான் (ஹிஸ்புல்லா இயக்கம்) துணை நிற்க, சன்னிகள் கொண்ட சிரியாவை சவுதிக்கு அடிமையாக்க அமெரிக்கா துணை நிற்கிறது... இறுதியில் துருக்கியிடமிருந்து தங்களை யார் காப்பாற்றுவார்கள் ? என்று குர்திஸ் மக்கள் குழம்பி பலியாகிக் கொண்டு இருக்கிறார்கள்...இப்பொழுது அமெரிக்கா பேச்சைக் கேட்டு நடுத்தெருவில் நிற்கிறார்கள்...!!
உலகிலேயே இதுவரை நடந்த உள்நாட்டுப் போரில் கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் பலியானது சிரியாவில்தான்...(அதில் 50,000 குழந்தைகள்) .
உலகில் அதிக அகதிகளை உருவாக்கியதும் சிரிய உள்நாட்டுப்போர்தான்..
சுமார் 90 லட்சம்பேர் ஐ,நா கணக்குப்படி அகதிகளாக நாட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார்கள்...நாட்டில் உள்ள முக்கிய தொழிற்சாலைகள் மூடப்பட்டு கணக்கிட முடியாத லட்சோப லட்ச மக்கள் பட்டினியால் வாடிக்கொண்டிருக்கிறார்கள்...! சிரிய அகதிகளுக்கு உதவிக்கரம் நீட்டுவது ஃபிரான்ஸ், கனடா,லண்டன் போன்ற ஐரோப்பிய மேற்கத்திய நாடுகள்தான்.!
எதற்கு மதத்தின் பெயரால் இத்தனை கொலைவெறி ? எல்லாரையும் கொன்றுவிட்டு யாருக்காக உங்கள் கொள்கைகளை நிலை நாட்டப் போகிறீர்கள்? நிதானமாக சிந்திப்போம்...!!
வல்லரசு நாடுகளின் பனிப்போரில் சிக்கி சிரியா சின்னாபின்னமானது போதும்...!
இறைவா..! மனம் வெம்பி மன்றாடி இறைஞ்சுகிறோம்.
இனி எங்கும் வேண்டாம் இன்னொரு சின்னாபின்னமான சிரியா...!! ஆமீன்..!!!

Safeena Salam

No comments: