Friday, March 2, 2018

மதச்சார்பற்ற சிரியாவிற்குள் இத்தனை தீவிரவாதக் குழுக்கள் எப்படி ....


Safeena Salam
குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்ற “டார்வி” னின் கோட்பாடு பொய் என சிரியாவில் நிரூபிக்கப்பட் டுள்ளது...!
இன்று வரை எந்த குரங்கும் இன்னொரு குரங்கை கொன்று வாழவில்லை.. கூட்டமாகத்தான் வாழ்கிறது..
வரலாற்றுக்களில் “ஷாம்” நகரம் என பெருமை யோடும் சுமேரிய நாகரீகத்தின் தொட்டிலாய் செல்வச் செழிப்போடு விளங்கிய சிரியா இன்று சுடுகாடு...!

இஸ்லாத்தில் சாதியில்லை, பிரிவு இல்லை என சொல்லிக் கொண்டு இத்தனை மக்களை கொன்று குவிக்கக் காரணம் என்ன ? என மற்ற சமய மக்கள் கேட்கும் போது பதில் சொல்ல திராணி இல்லாமல் தலை குனிந்து நிற்க வேண்டிய துர்பாக்கிய அவல நிலையில் இன்று சிரியா..!
Save Syria…..! Pray Syria..! RIP Syria..! இப்படி சொல்லி விட்டால் மட்டும் சிரியாவை காப்பாற்றுவது யார் ?
மதச்சார்பற்ற சிரியாவிற்குள் இத்தனை தீவிரவாதக் குழுக்கள் எப்படி நுழைந்தன? யார் காரணம் ? சிந்திப்போம்..!!
மத்திய கிழக்காசியாவின் சிரிய மக்கள் தொகை சுமார் 2கோடி.. .இதில் 74% சன்னி,16% சியா(அலாவிஸ்,குர்திஸ்,)10% கிறிஸ்தவர்கள்...
சிரிய அதிபர் அஸாத் பாலஸ்தீன ஹமாஸ், லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்திற்கு ஆதரவு கொடுத்த கால கட்டத்தில் சலசலக்க ஆரம்பித்த பிரச்சனை 2011 மார்ச் 15ல் மாணவர்கள் ரூபத்தில் போராட்டமாக தொடங்கிய கிளர்ச்சி இறுதியில் ஷியா, சன்னி மோதலாக முற்றியது...!
அப்பொழுது தோன்றிய கிளர்ச்சியாளர்களின் அமைப்புதான் FSA..
( FREE SYRIAN ARMY)
அசாத்தும், அவர் அரசாங்கமும் சிறுபாண்மையான சியாவின் உட்பிரிவான அலாவிஸ்..(Alawites)
அசாத்தின் ராணுவத்திலிருந்து விலகிய சன்னி முஸ்லிம்கள் FSA ல் இணைய அசாத்தை கவிழ்க்க அமெரிக்கா இதை நெய் ஊற்றி வளர்க்க ஆரம்பித்தது.
இதைப் பார்த்தப்பின் ஒவ்வொரு தீவிரவாதக் குழுக்களாய் சிரியா உள்ளே நுழையத் தொடங்கின...
சிரியாவின் பெரிய பிராஞ்சான அல்கொய்தாவின் “ஜபாத் அல் நுஸ்ரா” FSA வுடன் இணைந்து சன்னிகளுக்காகத் தீவிரமாக போராட ஆரம்பித்த நிலையில் சிரியாவின் ஆசாத் தன்னைக் காப்பாற்ற ரஷ்யாவை நாடவும் போர் உக்கிரமடைந்தது...!
இப்போது சன்னிகளுக்கு ஆதரவென்ற பெயரில் ISIS பகிரங்கமாக FSA வுடன் இணையவும் சனியன் கையில் சிரியாவின் குடுமி...!
ஈரான், ஈராக், சிரியாவில் சன்னி முஸ்லிம் ஆட்சியை நிறுவ சவுதி அரேபியா ஃபைனான்ஸ் பண்ண அமெரிக்கா வெப்பன்ஸ் கொடுத்து அல்பக்தாதி தலைமையில் வளர்ந்த அமைப்புதான் ISIS…!
ஈரானின் கொமேனியை பயமுறுத்தி காலி செய்ய ஈராக்கின் சதாமுக்கு எப்படி ஆரம்பத்தில் அமெரிக்கா உதவியதோ அதே லாஜிக்...அதைக் கொண்டு சதாம் ஷியாக்களை கொன்று குவிக்கும் வேளையில் தன் மடத்தனத்தை புரிந்து சதாம் நிறுத்த பின் ஈராக் அணு ஆயுதம் வைத்திருப்பதாக சொல்லி அதன் எண்ணெய் வளத்திற்காக ஈராக்கை நாசம் பண்ணி அமெரிக்கா கையாலேயே சதாமின் விதி முடிந்தது நாம் கண்ணால் பார்த்த காட்சி...!
பின் ஈராக்கில் அமெரிக்கா வால் இறக்கப்பட்டதுதான் ISIS..(Islamic State of Iraq and Syria)
பின் ISIS ன் தன்னிச்சையான வெறியாட்டம் அமெரிக் கா விற்கு தலைவலியை கொடுக்க அதை ஒழித்துக் கட்டப் போவதாக அறிவித்தது...!
ISIS நோக்கம் சிரியாவையும்,ஈராக்கையும் தன் பிடிக்குள் கொண்டு வருவதுதான்...!
DISCLAIMER :- விசயத்தை தெளிவாக சொல்ல வேண்டும் என்பதாலும் எல்லார் கவனத்திற்கும் போகணும் என்பதால் பெரிய பதிவான இதை இரண்டாக பிரித்திருக்கிறேன்...அடுத்த பதிவில் மீதி..!

Safeena Salam

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails