Saturday, March 17, 2018

முஸ்லீம் இளைஞர்கள் இன்னும் முன்னோக்கி நகரணும்..

J Banu Haroon
வயதானவர்களுக்கு ,சென்னை போன்ற நகரத்து வாழ்க்கை , வெளிநாட்டு வாழ்க்கையைவிட ....வடகரை போன்ற கிராமத்து வாழ்க்கையில்தான் அருமையான ,அமைதியான சூழல் கிடைக்கிறது ....
இளைஞர்களுக்கு நிறைவான ஊதியம் ,வசதியான வாழ்க்கை ,பிள்ளைகளின் தரமான கல்வி எனும்போது குடும்பத்தை பிரிந்து ஊரை விட்டு போய்த்தான் தீர வேண்டியிருக்கிறது..... இயந்திரத்தனமாக உழைக்க வேண்டியிருக்கிறது ...தவறில்லை .
முஸ்லீம்களின் கல்வித்தரமும் ,வாழ்க்கைத்தரமும் இன்னமும் மேம்பட வேண்டியிருக்கிறது ....சரியான கல்வி இல்லாமல் வெளிநாடுகளிலும் இனி வேலை இல்லை என்கிற புரிதலுடன் முஸ்லீம் இளைஞர்கள் வழி நடத்தப்பட வேண்டும் ...

படிப்பும் ,கொஞ்சம் அதிக திறமையுமில்லாத ஒரு இளைஞர் வெறும் பத்தாயிரம் ரூபாய் சம்பளத்தில் வெளிநாட்டில் வேலை பார்த்துக்கொண்டிருந்தவரை திடுமென அழைத்து வானூர்தியில் ஏற்றி அனுப்பி வைத்து விட்டார்கள் என்று கண்ணீர் மல்க கூறினார் .உடைகளை எடுத்துக்கொள்ளக்கூட தனக்கு அனுமதி தரப்படவில்லை என்கிறார் ...இங்கே யார் இந்த சம்பளத்துக்கு எனக்கெல்லாம் வேலை தருவார் என்கிறார் .குழந்தைகள் ,மனைவி ,அம்மாவின் உடல்நலம் பற்றி கவலைப்படுகிறார் ...இப்போது தெரிந்த டைலரிடம் வேலைக்கு தினக்கூலிக்கு செல்வதாக கூறினார் ....சடாரெனத் தூக்கி எறியப்பட்ட பிரமிப்பிலிருந்து இன்னமும் அந்தப்பையன் மீண்டிருக்கவில்லை ...தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு தமிழகத்தில் வேலை கிடைக்கிறதா என்ன ....
ஒரு தெரிந்தவர் குடும்பத்திலிருந்து இன்னொரு தெரிந்தவர் வீட்டு பிள்ளையை மாப்பிள்ளை பார்த்துவிட்டு ...போனவர்கள்,சொன்ன காரணமோ ''.பிள்ளைக்கு அத்தனை படிப்பில்லை என்பது பெரிய குறையில்லை அவர்களுக்கு .வெளிநாட்டு பாஸ்போர்ட் இல்லையாம் ....வெளிநாட்டில் சொந்தமாக பிசினெஸ் இல்லையாம் .''என்பதே ...
..மகனை பெற்றவர்கள் .பெண் தேடும்போதே தங்களைவிட அந்தஸ்தில் கொஞ்சம் இறங்கினவர்களை தேடியிருக்கலாம் . ...நிறைய பொய் வாக்குறுதிகளைக் கூற வேண்டியிருக்காது .
மாப்பிள்ளைகள் ,
மிக ,மிக .நல்ல ஆண்மகனாகவும் ( ஐவேளை தொழுகையாளி ,மது ,போதை ,மாதுகளை தீண்டாத உத்தம புத்திரர்களாகவும் ) பெரிய படிப்பாளியாகவும் ,உழைப்பாளியாகவும் ,செல்வந்தராகவும் , சொந்த வீடு உள்ளவராகவும் ...ஒருசேர கிடைக்க வேண்டுமென்பதே படிப்புடன் கூடிய பல முஸ்லீம் பெண் வீட்டினரின் தவிப்பாகவும் ,எதிர்பார்ப்பாகவும் இருக்கிறது ....பலர் கூடிப் போகும் வயதை பற்றி கவலைப்படாமல் நல்ல இடங்கள் அமைய காத்திருக்கிறார்கள் ...
முஸ்லீம் சமூகத்து ஆண்பிள்ளைகளுக்கு எக்கச்சக்க பொறுப்புகள் கூடிப்போயிருக்கின்றன .
-------------------------
J Banu Haroon

No comments: