Saturday, March 3, 2018

வாழ்க்கையில் பயமா.!?

பயம்..மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் சாதாரணமாக மனதில் தோன்றும் நிகழ்வு..
இது பல வகைப்படும்.
வாழபயம்,எதிர்கால பயம்,மரண பயம்,கணவன் பயம்,மனைவி பயம்,வேலை பயம்
இப்படி பல பல..
எதனால் இது ஏற்படுகிறது. பிரச்சினைகள் மனிதனை தாக்கும் போது பயம் ஏற்படுகிறது.

இந்த பயம் பிரச்சினைகளின் வீரியத்தை பொறுத்து மாறுபடும்.
எனக்கு எந்த பயமும் கிடையாது என்று யாரும் சொல்ல முடியாது..
அப்படி வெளியில் சொன்னாலும் உள் மனதில் பயவோட்டங்கள் இருக்கும்..
இதை விலக்குவது எளிதான ஒன்று தான்.மனமே மருந்து..
நண்பர் ஒருவரிடம் பேசும் போது அவர் சொன்னது "நாளை என்ன நடக்க போகுது என்பது
நம் கையில் இல்லை.அதனால் எதிர்காலம் குறித்த பயம் இல்லை.இறைவனிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுகிறேன்"..
எத்தனை உண்மை இது.ஒரு உயிர் போக போகிறது அதை தடுத்து நிறுத்தும் ஆற்றல் நம்மிடம் இருக்கிறதா.!?
பின் ஏன் கவலை கொள்ள வேண்டும்.அது போகும் போது போகட்டும்.
உயிர் போய் விடும் என்று தினமும் கவலை பட்டுக் கொண்டிருந்தால் வாழவே முடியாதே..!
நாளை என்பதை மறந்து விடுவோம். இன்று சிறப்பாக செய்வோம்..
நம்மை படைத்த இறைவனுக்கு தெரியும் நம்மை வாழ வைக்க.
பாறைக்குள் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பவன் இறைவன்.
அந்த இறைவனோடு நம் முறையீடுகள் எப்படி அமைய வேண்டும் தெரியுமா..!?
அவனிடம் கேட்கும் பிரார்த்தனையில் நம்பிக்கை இருக்க வேண்டும்..
அவன் திருமறையில்
பல இடங்களில் "நம்பிக்கையாளர்களே" என்று நம்மை அழைக்கிறான்..
நம் மீது நம்பிக்கை வைக்கும் இறைவன் மேல் நாம் நம்பிக்கை வைக்க வேண்டுமா இல்லையா..!?
அப்படி இல்லாமல் "கேட்டால் தருவானோ மாட்டானோ,நம் கஷ்டங்களை போக்குவானோ மாட்டானோ" என்ற சந்தேகத்திலேயே நம் பிரார்த்தனை நாட்களை கடத்தும் போது அவனுக்கும் நம் மீது ஆர்வம் குறைந்து விடுகிறது..
சந்தேகம் வாழ்க்கையில் வரலாம்.வாழ்க்கையே சந்தேகமாகி விடக் கூடாது.
உறுதி கலந்த நம்பிக்கை தேவை..நம்பிக்கை எப்போதும் நம்மை வழிநடத்தும்.
எண்ணங்களை பொறுத்தே செயல்கள் அமைகிறது..நபிமொழி.
நம் எண்ணங்களை எதிர்மறையாக கொள்ளாமல் நேர்மறையாகயாகவே எடுத்துக் கொள்வது
நலம் பயக்கும்.அதுவே வெற்றிக்கு வழி வகுக்கும்.
அதுமட்டுமல்ல நாம் செய்யும் நல்ல செயல்கள் எல்லாமே இறைவனின் நாட்டத்தில் தானே நடக்கிறது என்பதையும் மனதில் கொண்டு அதில் உள்ள தீங்கை விட்டும்
அவனிடம் பாதுகாவல் தேடிக் கொள்ள வேண்டும்.
நாம் எடுக்கும் செயல்களில் உறுதியும் நேர்மையும் விடா முயற்ச்சியும்,
இறையச்சமும் நம் நாட்டங்களை நலவாக்கி வைக்கும்..நம் பயங்களை தூரமாக்கி வாழ்வை ஜொலிக்க வைக்கும்..
#இன்ஷா அல்லாஹ்.

Saif Saif

No comments: