Tuesday, March 27, 2018

நெஞ்சில் நிறைந்த நீடுர் சயீது


நெஞ்சில் நிறைந்த நீடுர் சயீது
வாழ்க்கை வரலாறு

அ.மா. சாமி

வாழ்க்கை என்னும் செழயிலிருந்து மலர்கள் உதிர்ந்து கொண்டே இருக்கின்றன.  ஓவ்வொரு மணித்;துளியும் வாழ்நாள் குறைந்த கொண்டே போகிறது.  இத்தகைய வாழ்க்கையில் என் வணக்கங்கள், சமூக நலப்பணிகள், ஒழுக்க நெறிகள், இன்னோன்ன பல செயல்பாடுகள், இறைவனிடத்தில் அங்கீகாரம் பெற்றிருக்கின்றனவா என்பதை இந்தப்பாவியால் அறியமுழயவில்லை.  ஏனென்றால் ஒரு மனிதன் தன்னை அறிந்து கொள்வதே கடினமான செயலாக இருக்கிறது.
ஒரு அறிஞன் சொல்வது போல, வாழ்க்கை  என்பது இன்பமும் அல்லஈ துன்பமும் அல்ல  என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.  அது ஒரு பொறுப்புமிக்க பணி, சுயநலமில்லா உற்சாகத்துடனும், அச்சமின்றியும் அதை இயக்க வேண்டும்.

எதையோ எழுத எண்ணி, எங்கெங்கோ போய்க் கொண்டிருக்கிறேன்.  முதுமை, முதுமை தட்டுவதன் அறிகுறியாக இருக்குமா என்று தெரியவில்லை.
வாழும் போதே வரலாறு ஆனவர்
மனிதன் எப்படி வாழ வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (சல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.
“இரு விசயங்களை உங்களுக்கு நான் விட்டுச் செல்லுகிறேன். ஓன்று, திருமறை, மற்றொன்று, என் வாழ்க்கை முறை.  இந்த இரண்டையும் பின்பற்றும் வரை நீங்கள் வழி தவற மாட்டீர்கள்”  என்பது, நாயகம் (சல்) அவர்களின் நல்வாக்கு.
மனிதன் திருமறை காட்டிய வழியில் நடக்க வேண்டும்.  அதற்கு முன் மாதிரியாக இரசூல் (சல்) அவர்களை எடுத்துக் கொள்ள வேண்டும்.  இதுவே வாழும் வழி.  இவ்வழியில் செல்லுகிறவர்கள் வழி தவற மாட்டார்கள்.  இவர்களின் வாழ்க்கைப் பயணளம் வழுக்கல் இல்லாமல் வளமாக இருக்கும்.
“சிந்தனைச் சித்தர்” என்று சிறப்பாகப் போற்றப்பட்ட நீடூர் சயீது தொகுத்த சிந்தனைத் துளிகள்” என்ற நூலில், இரசூல் (சல்) அவர்கள் கூறிய இந்தத் தேன் துளியும் இடம் பெற்றிருக்கிறது.
சொல்லுவது எவருக்கும் எளிது ; ஆனால், சொல்லுவது போல நடப்பது அரிது என்று கூறுவார்கள்.  ஆனால், நபிகள் திலகம் (சல்) அவர்களின் நன்மொழியைப் பொன்மொழியாக சயீது எடுத்துக் காட்டியது மட்டுமல்ல ; அதற்கு எடுத்துக்காட்டாகவும் வாழ்ந்து காட்டினார்.
திருக்குரான் தான் அவரது வாழ்க்கை வழி.  திருநபி (சல்) அவர்கள் தான் அவருக்கு வழிகாட்டும் ஒளி.  பெருமானார் (சல்) அவர்களைப் பற்றி அவர்களின் வாழ்க்தை; துணைவி ஆயிஷா (ரலி) கூறும் போது, “அவர்கள் திருக்குரானாகவே வாழ்ந்தார்கள்” என்று சொன்னார்கள்.  சயீதின் வாழ்க்கையும் அப்படிப்பட்டதுதான்.

உதவி
“தேவையானவர்களுக்கு உதவி செய்யுங்கள்” என்று திருக்குரான் பல இடங்களில் அழுத்தமாகச் சொல்லுகிறது.
நூயகம் அவர்களும் யாருக்கும் உதவி செய்யத் தயங்குவதும் இல்லை ; தவறுவதும் இல்லை.  வீட்டுக்கு சாமான்கள் வாங்கக் கடைக்குப் போகும் போது கூட, “உங்களுக்கு ஏதாவது வேண்டுமா?” என்று அக்கம் பக்கத்து வீட்டுக்காரர்களைக் கேட்டு, அவர்களுக்கு வேண்டியதையும் வாங்கி வந்து கொடுப்பார்கள்.
சயீதின் வாழ்க்கையில் பெரும் பகுதி உதவி செய்வதில் தான் கழிந்தது.  அவருக்கு தொழில் எதுவுமில்லை. என்றாலும், பகல் முழுவதும் மயிலாடுதுறையில் தனது அலுவலகத்தில் தங்கியிருப்பார்.  காலையில் வீட்டிலிருந்து வந்தால், மாலை வரை அலுவலகத்தில் இருப்பார்.  எதற்காக? அவரைத் தேடி, அவரது உதவியை நாடிப் பல பேர் வருவார்கள்.  அவர்களுக்கு உதவி செய்ய!
குடும்ப தகராறு, பாகப்பிரிவினை என்று எத்தனையோ பிரச்சினைகளுடன் வருவார்கள்.  அவர்களுக்கு நல்ல யோசனைகள் கூறுவார்.  அதற்கு சல்லிக்காசு கூடக் கூலி வாங்கமாட்டார்.
படிக்க உதவி கேட்டு வருவார்கள்.  உடல் நலம் இல்லை என்று வருவார்கள்.  தொழில் தொடங்க உதவி கேட்பார்கள்.  சயீதிடம் செல்வம் கிடையாது ; செல்வாக்கு உண்டு. ;இன்னாரைப் போய்ப் பாருங்கள்’ என்று நல்வழி காட்டுவார்.  தேவையானால், கடிதமும் எழுதித் தருவார்.  தொலைபேசியிலும் பேசுவார்.

அ.மா.சாமி அனுபவம்
அ.மா. சாமியே சயீதிடம் பலமுறை உதவி பெற்றிருக்கிறார்.
“தமிழ் இஸ்லாமிய இதழ்கள்” என்ற நூல் எழுதிய போது “அண்ணே உங்களிடம் உள்ள இதழ்களைப் பார்க்க வேண்டுமே” என்று அ.மா.சாமி நெருங்கினார்.  பல ஆண்டுகளாகத் தான் சேர்த்து வைத்திருந்த, காணக் கிடைக்காதப் பழைய இதழ்களை அள்ளிக் கொண்டு வந்து போட்டார்.
“உங்களுக்கு வேண்டியதை எடுத்துப் போங்கள்” என்றார்.  ஆம், 40-50 ஆண்டுகளாகப் பாதுகாத்து வைத்திருந்த கருவூலங்களை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.  யார் தருவார் இந்த சிம்மாசனம்!
இஸ்லாமிய இதழ்களைத் தேடி காரைக்கால், நாகூர், நாகப்பட்டினம் என்று அ.மா.சாமி சென்றார்.  அப்போது சயீதும் உடன் வந்து, உதவினார்.  அது ஒரு முழுநாள் கார்ப் பயணம்.  சயீது உற்சாகத்துடன் கலந்து கொண்டார்.
இஸ்லாமியப் பெரியார் தாவூத்ஷாவின் எழுத்துக்களைத் தேடிய போதும், அ.மா.சாமி சயீதை சந்தித்தார்.  அவரிடம் “நாயகத்தின் நற்குணங்கள்” என்ற அரிய நூல் இருந்தது.  1946இல் வெளிவந்தது.  அறுபது ஆண்டு காலமாக அவர் பாதுகாத்து வைத்திருந்த நூல், அது.  “நீங்கள் கொண்டு போங்கள், சகோதரரே!” என்று கொடுத்து விட்டார்.  தமிழ்நாட்டில் வேறு யாரிடமும் இல்லாதநூல், அது!
அவ்வளவு ஏன்? அவரது வரலாற்றை எழுத அவரைச் சந்தித்துப் பேச அ.மா.சாமி போனார்.  மதிய சாப்பாட்டு நேரமாகி விட்டது.  அது நோன்பு நேரம்.  “மற்ற நேரமென்றால், வீட்டிலிருந்து உங்களுக்கும் சேர்த்து சாப்பாடு கொண்டு வந்திருப்பேன்” என்று சயீத் சொன்னார்.  “பரவாயில்லை, அண்ணே.  பக்கத்தில் நிறைய ஓட்டல்கள் உள்ளன” என்று அ.மா.சாமி கூறினார். “அர்ச்சனாவில் சாப்பிடுங்கள்.  தயிர்ச் சோறு நல்லது.  குடலுக்கோ உடலுக்கோ இடையூறு செய்யாது” என்று சயீது சொல்லி அனுப்பினார்.

சின்ன விசயந்தான்.  ஆனால், காலத்தினால் செய்த உதவி சிறிதெனினும் ஞாலத்தின் மானப் பெரிது அல்லவா?

உண்மை
ஒழுக்கத்தின் ஆணிவேராக உண்மை இருக்கிறது என்று ஓர் அறிஞன் சொன்னான்.
பேச்சிலும், செயலிலும் உண்மை வேண்டும் என்று திருக்குரான் வற்புறுத்துகிறது ; நாயகம் (சல்) அவர்களும் அப்படியே வாழ்ந்தார்கள்.
சயீதும் உண்மையின் உறைவிடமாக வாழ்ந்தார்.  “யாருக்காகவும் அஞ்சி உண்மையை மறைத்து விடாதீர்கள்” என்று நாயகம் (சல்) அவர்கள் சொன்னார்கள்.  இஸ்லாமை தனது சமயமாக மட்டுமல்ல, தனது வாழ்க்கைப் பாதையகாவும் கொண்ட சயீதும் அப்படியே வாழ்ந்தார்.  அவர் விளையாட்டுக்குக் கூடப் பொய் சொல்லுவதில்லை.  யாருக்கும் எதற்கும் அஞ்சாமல் அரிச்சந்திரனாக வாழ்ந்தார்.  இதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டை உரைக்கலாம்.” நான் சொல்லுவதெல்லாம் உண்மை. உண்மை தவிர வேறு அல்ல” என்று நீதிமன்றங்களில் சத்தியம் செய்வதுடன் சரி ; ஆனால், நீதிமன்றங்களில் நடப்பது என்ன? கொலைகாரர்கள் கூட விடுதலையாவது எப்படி?
இஸ்லாமிய வழியில் - இணையில்லா நாயகம் (சல்) அவர்களின் ஒளியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட சயீதுக்கு இது பிடிக்கவில்லை.  உண்மை தெரிந்தும் பொய் சொல்ல அவர் அஞ்சினார்.  அவரது நெஞ்சம் கூசியது.  ஆதனால் தான் கறுப்புக் கோட்டைக் கழற்றிப் பரணில் வைத்துவிட்டு, வழக்கறிஞர் தொழிலை மூட்டைக் கட்டிவிட்டு, நீதிமன்றங்களுக்குப் போவதை நிறுத்திக் கொண்டார்!
உழைப்பாளி
சயீது கடுமையான உழைப்பாளி.  ஆதிகாலை மூன்றரை மணிக்கே எழுந்து விடுவார்.  யார், எங்கே அழைத்தாலும் உதவி செய்யக் கிளம்பி விடுவார்.  முதுமையைக் கூடப் பொருட்படுத்த மாட்டார்.
உதவி, உண்மை, உழைப்பு என்று உயர்ந்த இஸ்லாமிய வாழ்க்கையை அவர் அமைத்துக் கொண்டார்.  ஐவேளைத் தொழுகை தவறுவதில்லை ; நோன்புகளை விடாமல் கடைப்பிடித்தார்.  பயணங்களில் அவருக்கு விருப்பம் அதிகம்.  இதுவும் நாயகம் (சல்) அவர்கள் காட்டிய வழிதான்.
ஆடம்பரம் கிடையாது ; ஆர்ப்பாட்டம் இல்லை! ஆரவாரம் பிடிக்காது.  அடக்கமானவர்.  உடையிலும் நடையிலும் எளிமையான கூட்டங்கள், விழாக்களுக்கு அழைத்தல், தவறாமல் போவார். வழி செலவுக்கோ, பேசுவதற்கோ பணம் வாங்கமாட்டார்.

உயர்ந்த மணிதர்
எளிமையும். ஆடக்கமும், தன்னலமற்ற சமுதாய சமயத் தொண்டு சயீதை உயர்ந்த மனிதன் ஆக்கின.  ஆவர் பிறவியிலேயெ உயர்ந்த மனிதன்தான்-ஆறடி ஒரு அங்குலம்.  வாழ்க்கையிலும் அவர் உயர்ந்த மனிதர் ஆகிவிட்டார்.
“தோன்றில் புகழொடு தோன்றுக” என்று திருவள்ளுவர் கூறினார்.  அதற்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர், சயீது.  வாழும்போவே வரலாறு ஆனவர், அவர்.  அவரது வரலாறு மற்றவர்களுக்கு வழிகாட்டியும் கூட அவரது வரலாற்றுப் பக்கங்களைப் புரட்டுவோமா?

முத்துச்சிப்பி
ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு. “பிறக்கும் போதே வாயில் வெள்ளிக்கரண்டியுடன் பிறந்தவர்” என்பது, அது.  இதையே, கர்ணன் காதில் குண்டலத்துடன் பிறந்தான் என்பார்கள்.
அதையே “கருவிலே திருவுடையார்” என்று தமிழில் சொல்லுவார்கள்.
சயீதும் கருவிலே திருவுடையார்.  சேல்வமும் செல்வாக்கும் செழித்த குடும்பத்தில் பிறந்தவர், அவர். “மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை எந்நோற்றான் கொல் எனும் சொல்” என்றபடி குடும்பத்தின் புகழை, குன்று போல உயர்த்தவும் செய்தார். சயீது.



ஊருக்குப் பெருமை
1933ஆம் ஆண்டு அக்டோபர் 9ந் தேதி (ஹிஜிரி 1352 ஜமாதுல் ஆஹிர் பிறை 18) நீடூரில் சயீது பிறந்தார்.  அன்று திங்கட்கிழமை திங்கள் - செவ்வாயக்கு இடைப்பட்ட நள்ளிரவு 2 மணிக்கு குவாகுவா குரல் கேட்டது.
தான் பிறந்த நீடூரை சயீது மறக்கவேயில்லை.  தனது பெயருடன் சேர்த்துக்கொண்டு, ஊருக்குப் பெருமை தேடிக் கொடுத்தார்.
“சீர்காழி கோவிந்தராசன் சீர்காழியில் வசிக்கவில்லை.  மதுரை மணி அய்யர் மதுரையில் வாழவில்லை.  நாகூர் அனிபா மட்டுமே நாகூரில் இருக்கிறார்” என்று சயீது சொல்லுவார்.  இவரும் பிறந்தது முதல் கடைசி காலம் வரை நீடூpலேயே வசித்தார்.

பெருமை மிக்கப் பெற்றோர்
இவருடைய தந்தை அல்ஹாஜ் சி.அ. அப்துல்காதர் தாயார் அல்ஹஜா உம்மு சல்மா பீவி.
பெற்றோர்கள் தங்கள் மகனுக்கு “முகம்மது சயீது” என்று பெயர் சூட்டினார்கள்.  தந்தையின் பெயரையும் சேர்த்து “அப்துல் காதர் முகம்மது சயீது” என்ற பெயர்தான்” அ.மு.சயீது” என்று வழங்கியது.

புகழ் நிறைந்த தந்தை
தந்தை அப்துல் காதர் மயிலாடுதுறையில் பாத்திரக்கடை வைத்திருந்தார்.  நல்ல வியாபாரம்.  திருமணச் சீர் செய்கிறவர்கள் பட்டியலைக் கொண்டு வந்து கடையில் கொடுத்து விட்டுப் போய் விடுவார்கள்.  பாத்திரங்கள் மாட்டு வண்டியில் போய்த் திருமண வீட்டில் இறங்கிவிடும்.  அவ்வளவு நம்பிக்கை.

ஊரில் நல்ல செல்வாக்குடன் இருந்தார். “அவர் கடை வீதியில் வரும் போது மற்றக் கடைக்காரர்கள் எழுந்து நின்று கைகூப்புவார்கள்” என்று, நீடூர் பெரியார் அப்துல் மஜீது தெரிவித்தார்.  அவ்வளவு மதிப்பு, மரியாதை!

ஊரில் என்ன பிரச்சினை என்றாலும், இவரிடம் வந்து முறையிடுவார்கள்.  இவர் விசாரித்துத் தீர்ப்புக் கூறுவார்.  இரு தரப்பாரும் ஏற்றுக் கொள்ளுவார்கள்.  அவ்வளவு நியமயமாக இருக்கும்.  நடுநிலை தவறாத ஒரு நீதிபதிகயாக ஊரில் அவர் விளங்கினார்.

மணிக்கூண்டு
மயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்றுமு; அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது.  இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது.  அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
அது என்ன டுனீசிய வெற்றி? ஆப்துல் மஜீது அவர்களிடம் கேட்டேன். “உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது.  போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார் என்று அவர் தெரிவித்;தார். (வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).

ரெயில் நிலையம்
நீடூர் மக்கள் ரெயில் ஏற 3 கி.மீ. தொலைவிலுள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்குப் போக Nவுண்டியிருந்தது இறங்குகிறவர்களும் அங்கு இறங்கித்தான் நீடூருக்கு வரவேண்டும்.
நீடூர் மக்களின் வசதிக்காக நீடூரில் ஒரு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்துல் காதர் அரசுக்கு மனு அனுப்பினார்.  நீடூரில் ரெயில் நிலையம் கட்ட ரெயில்வேயிடம் நிலமில்லை என்று பதில் வந்தது.  உடனே, “எனது நிலத்தைத் தருகிறேன்” என்று அப்துல் காதர் அரசுக்கு எழுதினார்.  அரசு அதை ஏற்றுக் கொண்டது.
ரெயில் பாதையை ஒட்டியிருந்த தனது நிலத்தை அப்துல் காதர் அரசுக்கு இனமாகக் கொடுத்தார்.  அந்த இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது.  அங்கு ரெயில்கள் நின்று சென்றன. நீடூரிலேயே ரெயில் ஏற, இறங்க மக்களுக்கு வசதி கிடைத்தது.

வீடு கட்ட நிலம்

நீடூர் பெயருக்கு ஏற்ப நீண்டு விரிந்து கொண்டே போயிற்று.  புதிய வீடுகள் கட்ட நிலமில்லை.  அப்துல் காதர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டு மனைகள் போட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தார்.
நீடூரை அடுத்த திருவாளப்புதூரில் வீடு இல்லாமல் மரத்தடிகளில் பல குடும்பத்தினர் வசித்தார்கள்.  அப்துல் காதர் மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) மூலமாக அவர்களுக்கு 24 வீடுகள் கட்டிக்கொடுத்தார்.  அப்போது அவர் மாவட்டக்கழக உறுப்பினராக இருந்தார்.
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராக இருமுறை அப்துல் காதர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இது காட்டுகிறது.

பள்ளிவாசல்
கொள்ளிடத்தை அடுத்து துளசேந்திரபுரத்தில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள்.  அவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி அப்துல் காதரிடம் முறையிட்டார்கள்.  அவர் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன், அவர்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் கட்டிக் கொடுத்தார்.  அவர்களின் பிள்ளைகள்  படிக்க ஒரு ‘மதரசா’வும் (அரபிப் பள்ளிக்கூடம்) நிறுவினார்.
மயிலாடுதுறைக் கடை வீதியில் ஏராளமான முஸ்லிம்கள் கடை வைத்திருந்தார்கள்.  அவர்கள் தொழுவதற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இல்லை.  அப்துல் காதர் கடை வீதியை அடுத்து ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்.
(ஒரு கொசுறு செய்தி : இந்தப் பள்ளி வாசலின் வாசல் குறுகியதாக இருந்தது.  இப்போது கூட்டமோ அதிகமாகி விட்டது.  தொழுது விட்டுக் கூட்டமாக வெளியில் வர சிரமப்பட்டார்கள்.  முனைவர் அ. அய்யூப் சமீபத்தில் வாசலை அகலப்படுத்திக் கட்டிக் கொடுத்தார்.)

அரபிக் கல்லூரி
நீடூரில் உள்ள அரபிப் பள்ளிக் கூடத்தின் நிர்வாகத் தலைவராகவும் அப்துல் காதர் இருந்தார்.  அப்போது 5 அறைகள் புதிதாகக் கட்டிக் கொடுத்து, அதைக் கல்லூரியகாவும் ஆக்கினார்.  1948இல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினார்.  1953இல் நடத்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்கவும் செய்தார்.
நீடூரில் பெண்களுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றையும், மாணவர்களுக்கு உயர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
நீடூரில் இஸ்லாமிய நூல் நிலையம் (அஞ்சுமன்) ஒன்றையும் அமைத்தார்.  அது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள்” என்று திருக்குரான் சொல்லுகிறது.  குரான் வழியில் வாழ்ந்த அப்துல் காதர் தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஊர்ப்பணிகள் செய்தார்.  அதன் காரணமாக வாழும் போதே வரலாற்றில் இடம் பெற்றார்.  ஏம்.ஆர்.எம். அப்துல் ரகீமின் அரிய படைப்பான “இஸ்லாமியக் கலைக்களஞ்சிய”த்தில் அப்துல் காதரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது.  அவரது வாழ்வும் பணியும் சொல்லப்பட்டுள்ளன.

உடன் பிறப்புகள்

ஊருக்கு உபகாரியாக வாழ்ந்த அப்துல் காதர் என்ற சிப்பியில் பிறந்த முத்து தான், நம்முடைய சயீது.
அப்துல் காதர் தம்பதிகளுக்கு மொத்தம் 9 குழ்ந்தைகள் பிறந்தார்கள் 7 ஆண்கள், 2 பெண்கள்.
சயீதின் உடன் பிறப்புகள் : ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது அலிஜின்னா.  இரு சகோதரர்கள் அப்துல் அமீது, ஜக்கரியா இளம் வயதில் இறந்து விட்டார்கள்.  சபீர் அகமது அப்துல் லத்தீப் ஆகியோரும் இப்போது இல்லை.
உடன் பிறந்த சகோதரிகள் சகமத் உன்னிசா, பாத்திமாஜின்னா.
“சிந்தனைக் களஞ்சியம்” என்ற தனது முதல் நூலை, தந்தை அப்துல் ஹாஜியார், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.
“எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.
“தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்” என்று திருக்குரான் கூறுகிறது.
நீடூரில் தான் வசித்த வீட்டுக்கு “சல்மா இல்லம்” என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார், சயீது தந்தைக்கும் நன்றி செலுத்தினார்.  எப்படி?
சிந்திசைக்கும் சிற்றருவிக்கருகில் மஞ்சை,
தேன்பிலிற்றும் பூக்காட்டில் தோகைகாட்டி,
அந்தியினில் அழகாக ஆடல் கண்டேன்
ஆயினும்என் கண் இமைக்குள் ஆடும் பாவாய்!
விந்தையிதே உன் நடனம் விறலி! ஏந்தன்
விந்தையில்லா ஓவியமே! உன்னைக்காண
வந்தேன் இங்கு ஓடோடி, வண்ணப்பூவே!
மறைந்ததுமேன் உன்தோற்றம் மாயை தானோ!
தேர்வென்று புத்தகத்தைத் திறந்து பார்த்தால்
தேரிகின்றது உன்னுருவம் வரிகள் தோறும்,
பார்க்கின்றேன் உன் நடனம், பாவாய்! இந்தப்
பால் நிலவில்உன் சிலம்பின் ஒலியைக் கேட்டு
ஊர்மக்கள் உறங்குங்கால் ஓடிவந்தேன்
ஒண்தொடியே! ஐபந்தமிழே! உயிரே! உன்னைச்
சேர்ந்திடுங்கால் ஏன் மறைந்தாய்? அமுதே! என்றன்
சேல் விழியே! உன் தோற்றம் கனவுதானோ!

வாங்க மச்சான்
மச்சான்! ஏன் உள்ளத்தில் பொங்கும் ஆசை
அத்தனையும் உள்ளடக்கிக் கூறுகின்றேன்
தித்திக்கும் ஒரு செய்தி! நீங்கள் தந்த
தெவிட்டாத இன்பத்தின் விளைவே! ஆமாம்;;
முத்துக்கும் ஒளியில்லை என்னு மாறு
மொய் விழிகள்! சிறிய நெற்றி! இன்ப வெள்ளம்!
ஒத்திருக்கும் உங்கள் உரு, ஆமாம் மச்சான்!
உணர்ந்தீரோ யாரென்றே? நம்மின் செல்வம்
போங்க மச்சான்! உங்கட்கு புரியவில்லை!
பிறந்து விட்டான் உங்கள் மகன்! அவனைக்காண
வாங்க மச்சான்! வார்த்தெடுத்த தங்கப்பாவை!
வைத்தகண் வாங்காமல் எனைபார்ப்பீரே
நீங்கள்தான் விடுவீரா?  அதுபோல் என்னை
நீலவிழி எடுக்காமல் நோக்குகின்றான்!
ஏங்க மச்சான்! அசையாமல் இருக்கின்றீர்கள்?
எடுத்தடியை வையுங்கள்! இருப்பீர் இங்கே!
பூத்திருக்கும் அழகுமலர் தன்மேல் மொய்க்கும்,
புதுவிழிகள்! எனக்காக, மச்சான் நீங்கள்
காத்திருக்கும் வகைபோலக் கோவை வாயைக்
காட்டியவாறு எப்போதும் துடித்து நிற்பான்!
ஆர்த்திருக்கும் இருகையும், காலும் வாயும்
அப்படியே உங்களைத்தான் ஒத்திருக்கும்!
பார்த்திருக்கும் போதெல்லாம் உங்கள் எண்ணம்,
பறந்துவிடும்! ஆனாலும் அண்டும் மீண்டும்!
நீண்டகால நண்பரான மருத்துவர் அமானுல்லாவுக்கு 10.12.2007 அன்று, அதாவது தனது மரணத்துக்கு இரண்டு நாள் முன் சயீது ஒரு கடிதம் எழுதினார்.  அதில்-
“முதுமை வந்து கூன் விழுமோ
மூன்றுகால் நடை வாய்த்திடுமோ
புதுமை உலகம் கேலி செய்யுமொ
என்று வரும் எனக்கு அழைப்பு – அங்கு
சென்று விடத்தான் நினைப்பு”
என்ற கவிதை வரிகளை எழுதியிருக்கிறார், சயீது!

எனக்கு வழிகாட்டி உ.த.ப.க.தலைவர் அ. இரபியுதீன்
உலகத் தமிழ்ப் பண்பாட்டுக் கழகத் தலைவர் முனைவர் அ. இரபியுதீன் உலக முழுக்கச் சுற்றுகிறார்.  தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொண்டு புரிகிறார்.  அவர் சொல்லுகிறார்.
“சயீது அண்ணன் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும் என்னை அழைப்பார்.  அவரது நிகழ்ச்சிகளில் கலந்து கலந்து, பொதுத் தொண்டு என்றால் என்ன என்பதை நான் கற்றுக்கொண்டேன்.  மக்கள் தொண்டு செய்ய அவர்தான் எனக்கு வழிகாட்டி.
அவர் எந்த மேடையிலும் என்னை ஏற்றி விடுவார்.  ‘தைரியமாகப் பேசு’ என்பார்.  அப்படிப் பேசிப்பேசி, இன்று மேடைப் பேச்சாளராக ஆகி விட்டேன்.  என்னைப் பேச்சாளர் ஆக்கியதும் சயீது அண்ணன்தான்.
நான் எப்போது ஊருக்குப் போனாலும் சயீது அண்ணனை சந்திப்பேன் என்ன நிகழ்ச்சி நடத்தினாலும் அவரை அழைப்பேன்.  சென்ற ஆண்டு பேங்காக்கில் நடந்த ‘இசைமுரசு நாகூர் அனிபா’ நூல் பரமக்குடியில் நடந்த இஸ்லாமியத் தமிழ் இலக்கியக்கழக மாநாட்டில் அமைச்சர் மைதீன்கான் நீடூர் சயிதுக்கு பொன்னாடை போர்த்தி நினைவுப் பரிசு வழங்கினார்.  அருகில் முனைவர் அ. இரபியுதீன், சட்டமன்ற உறுப்பினர் அசன் அலி நிற்கிறார்கள்.
வெளியீட்டு விழாவுக்குக் கூட அவரை அழைத்திருந்தேன்.
அவருடன் பழகியதால் அப்துல் சமது, நாகூர் அனிபா, வகாப், சுலைமான சேட், மூப்பனார், ஆரூண், அப்துல் லத்தீப், காதர் முகைதீன் போன்ற அரசியல் தலைவர்களின் தொடர்பு எனக்குக் கிடைத்தது.  மார்க்க அறிஞர்கள், ஆன்மீகப் பணியாளர்கள், சம்சுல்ஹ{தா ஹஜரத், சுபைர் மாமா போன்ற பெரியவர்களி;ன் நட்பும் கிடைத்தது.
நீடூரில் எல்லோரையும் பட்டதாரிகள் ஆக்கிவிட வேண்டும் என்பது அவரது ஆசை.  அதற்காக நீடூரில் ஒரு கல்லூரி வேண்டும் என்றும் ஆசைப்பட்டார்.  அந்த முயற்சியில் நான் இறங்கினேன்.  நீடூரில் நான் கட்ட இருக்கும் கல்லூரிக்குக் கால்கோல் விழாவுக்கும் அவரை அழைத்திருந்தேன்.  வந்து, ‘துவா’ செய்தார்.  கல்லூரித் திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் போய் விட்டாரே என்று மிகவும் வருந்துகிறேன்.
நீடூர் தனது தலைமகனை இழந்து விட்டது” என்றார், முனைவர் இரபியுதீன்.

No comments: