Sunday, March 18, 2018

வாழ்வியல் தத்துவங்கள் ....! ( பாகம் 4 )

*
முயன்று பார் 
முடியாதது இல்லை 
செய்துப்பார் 
செம்மையாகாதது இல்லை 
*
இன்பத்தில் இறுமாப்புக்  கொண்டுவிடாதே 
துன்பங்கண்டு துவண்டுவிடாதே 
எதுவுமே நிரந்தரமில்லை 
மாறிமாறி வருவதே வாழ்க்கை 
*
வாய்ப்புகளை தேடு
வருத்தத்தில் வாதிடாதே
வருவதை எதிர்கொண்டு
இருப்பதை இனிதாக்கிக்கொள் 

*
இல்லாதோருக்கு கொடுத்துப்பார் 
இருப்பதெல்லாம் இனிக்கும் 
பெறுபவர் வாழ்வார்
கொடுத்தவர் வாழ்வாங்கு வாழ்வார் 
*

நட்பு கொள் ஒருமித்த கருத்து கொண்டோரோடு
அதிக நெருக்கம் கொள்ளாதே.
எதிர்ப்பு கொள் கருத்து வேறுபாடு கொண்டோரோடு
எதிரியாக்கிக் கொள்ளாதே.
*
உன்னை நம்பு
ஊரோடு ஒத்துவாழ் 
ஒற்றுமை ஓங்கும் 
சகோதரம் நிலைக்கும் 
*
மனதை தன்வசப்படுத்து 
செயலை நேர்வழிப்படுத்து 
வளர்ச்சி தானேவரும்
உலகம் உனதாகும் 
*
மனஇருளை விரட்டு
அகம் ஒளிரட்டும் 
கோபத்தை அகற்று
குணம் மிளிரட்டும் 
*
சகமனிதனுக்கு உதவு 
தன்னலம் விலகும் 
இறையருள் பெருகும்  
ஈருலகும் இனிதாகும் 
*
அன்பை விதை
அறிவை வளர்
அஞ்ஞானம் அகலும்
மெஞ்ஞானம் மிஞ்சும்  

******

from: Abdul Kader Sangam <sangamsak@gmail.com>

No comments: