Friday, March 23, 2018

படியுங்கள் என்று ஒரு நாளும் சொன்னதில்லை

என் மகளையும் மகனையும் படியுங்கள் என்று ஒரு நாளும் சொன்னதில்லை. இத்தனைக்கும் என் பணி ஆசிரியப் பணி. ஒரு சில குறிப்பிட்ட மாணவர்களைக் கூட படி படி என்று கட்டாயப்படுத்தியதில்லை. மதிப்பெண்ணேதான் வாழ்க்கை என்று பதிய வைத்ததில்லை. ஆங்கில ஆசிரியராகவும், என் வகுப்பில் அவர்கள் மகிழ்ச்சியாக, அதே சமயம் முழுமையாக கற்றலுமே என் பணி.
நான் செய்ததெல்லாம் ஒரு சாதாரண பெற்றோரின் கடமையாக படிப்புக்கு தேவையானவற்றை செய்து கொடுத்ததுதான்.

இன்றைக்கு இருவரும் அவரவர்க்கு பிடித்த துறையில் தான் (Son in Animation, daughter in Teaching) இருக்கிறார்களே தவிர நான் இந்த துறைதான் என்று எதுவும் சொன்னதில்லை. அந்தத் துறையில் அவர்கள் வெற்றி பெறும் போது, அந்த வெற்றி அவர்களுக்கு மேலும் சிறப்படைய உத்வேகம் கொடுக்கும். தோல்வி எனில் நிச்சயம் துவண்டு போக மாட்டார்கள். மீண்டு வருவார்கள். காரணம் அது அவர்களே தேர்ந்தெடுத்த துறை. நான் செய்த ஒன்று, என்னை அறிந்தோ அறியாமலோ, அவர்களாகவே அவர்களுக்கென ஒரு முடிவெடுக்கும் ஒரு திறனை அவர்களுக்குள் உருவாக்கி வைத்திருக்கிறேன் என நினைக்கிறேன். விபரம் தெரிந்ததில் இருந்து அவர்கள் முடிவில் தலையிட்டது கிடையாது because they know they are making a right choice, and eventually, it naturally becomes the only choice which I might have wanted them to make.
ஒன்றுமில்லை....... தங்கள் குழந்தைகள், நடந்து வரும் பொதுத்தேர்வு எழுதுவது பற்றிய சில நண்பர்களின் பதிவைப் படித்தேன். அப்போது இதெல்லாம் தோன்றியது.
So, I wanted to share. Then, how will you know unless I tell you?
இன்னொன்று தெரியுமா?
இன்று வரை அவர்கள், குறிப்பாக என் மகன், மகள் (being a govt servant, I could guess my daughter's) மொத்தமாக என்ன சம்பளம் வாங்குகிறார்கள் என்று எனக்குத் தெரியாது.
நான் இதுவரை கேட்டதில்லை. அதனால் அவர்களும் சொன்னதில்லை.
நான் கேட்காததாலேயே அவர்கள் சொல்லவில்லை.
என்றும் நான் கேட்கப்போவதில்லை. அதனால் அவர்கள் சொல்லவும் தேவையில்லை.
வாழ்தல் இனிது.
(ஒரே வருத்தம்......இருவருமே என்னிடம் English ல் அவர்கள் படிக்கும் காலத்திலும் கூட சந்தேகம் கேட்டதில்லை. இத்தனைக்கும் நான் ஒரு நல்ல English Teacher என்று பெயர் எடுத்தவன், தெரியுமா? 😑😑😑)

Gnanasekaran Veeriahraju

No comments: