Sunday, March 18, 2018

சென்னையில் “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்” காப்பியம் வெளியீட்டு விழா மற்றும் விருது வழங்கும் விழா



சென்னை : வெள்ளம்ஜி ஜமால் தாவூது பதிப்பகத்தாரின் வெளியீடாக, டாக்டர் ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களால் ஆக்கப்பட்ட, “அன்னை கதீஜாவும், அண்ணலார் குடும்பமும்” காப்பியம், சென்னை எக்மோர் வெஸ்டின் பார்க் ஓட்டல் அரங்கில் 17/03/2018 சனிக்கிழமை மாலை இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் வெளியிடப்பட்டது.

விழாவுக்கு இஸ்லாமிய இலக்கிய கழகத்தின் தலைவர் முனைவர் சே.மு.மு. முஹம்மதலி தலைமை தாங்க, துபை தொழில் அதிபர் எம்.ஜே.எம். இக்பால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம். காதர் முஹைதீன் காப்பியத்தை வெளியிட, மூதறிஞர் சிலம்பொலி செல்லப்பனார், டாக்டர் உமர் ஹாஷிம், சென்னை பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் சாதிக் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்..

விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், காப்பிய சிறப்பு, அன்னை கதீஜா அவர்களின் மாண்புகள், நபிகள் நாயகத்திற்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைப் பற்றி குறிப்பிட்டு, மக்கள் அனைவரும் மனிதநேயம் பேணி வாழ வேண்டும் என கூறினார்.

கே.எம். காதர் முஹைதீன் அவர்கள் புரவலர் எம்.ஜே.எம். இக்பால் அவர்களுக்கு, இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் “சமுதாய
​பேரொளி” விருதும், ஜின்னாஹ் ஷர்புதீன் அவர்களுக்கு “பெருங்காப்பியக்கோ” விருதும் வழங்கி பாராட்டி பேசினார்.

விழாவில் கவிஞர் ஈரோடு தமிழன்பன், சன் டிவி வீரபாண்டின், பேராசிரியர் திருநாவுக்கரசு, ஜமாதுல் உலமா தலைமை நிலைய நிர்வாகி பேராசிரியர் தேங்கை ஷர்புதீன், வி.ஜெ.டி. டிரஸ்ட் நிர்வாகி எம்.ஜே. அப்துல் ரவூப், கவிஞர் ஜா. முஹையதீன் பாட்சா, பேராசிரியர் டாக்டர் சதீதுத்தீன் பாகவி, டாக்டர் அஹமது மரைக்காயர், ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், பேரா. மு. சாயபு மரைக்காயர், கவிஞர் ஏம்பல் தஜம்முல் முஹம்மது, டாக்டர் கார்ல் மார்க்ஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். மேலும், இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள், கவிஞர்கள், அரசியல் பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

from: Muduvai Hidayath <muduvaihidayath@gmail.com>

No comments: