Tuesday, June 12, 2012

இசை கேட்டால் அவன் இஸ்லாமியன் இல்லையா - 2

தாஜுதீன்: இசைக்கான வரைவிலக்கணத்தை தெளிவான விரிவான தாருங்கள்…. எதுவெல்லாம் இசை, எதுவெல்லாம் இசை இல்லை. நான் இங்கு கூடாது என்று குறிப்பிட்டிருப்பது, இசைக்கருவிகளுடன் கூடிய இசையை.

இசை மற்ற கலைகளைப்போலவே வரவிலக்கண எல்லைகளைக் கடந்தது. காலங்கள் தோறும் வளர்ந்து வருவது. ஏன் நம் கருத்தாடலை இப்படி திசை திருப்பம் வண்ணமாய் ஒரு கேள்வியைக் கேட்டிருக்கிறீர்கள் என்று தெரியவில்லை.

இசைக்கருவி என்பதற்கு உங்கள் வரைவிலக்கணம் என்ன? ஏன் தடுக்கிறீர்கள்? அதனால் மதத்திற்கு என்ன கேடு என்பதைத் தெளிவாகக் கூறுங்கள்.

எந்த வாத்தியக் கருவிகளும் இல்லாமல், வெறும் மனித வாயை வைத்துக்கொண்டு பல ஓசைகளை எழுப்பி இசையாய்த் தருகிறார்களே அதை எப்படி நீங்கள் கொள்வீர்கள்? எந்த வாத்தியக் கருவியும் இல்லாமல் வெறும் வாயால் இனிய குரலால் ராகத்தோடு “கல்யாணம்தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா” என்று பாடினால், அதை ஏற்றுக்கொள்ளுமா இஸ்லாம்?

அதிகாலையில் எழும் ஓசைகளை பல இசைக்கருவிகளைக் கொண்டு பேக்ரவுண்ட் இசையாக அப்படியே அருவிபோலக் கொட்டச்செய்து உள்ளத்துக்குப் புத்துணர்ச்சி ஊட்டுகிறார்களே அது இசையா? அதை மறுக்குமா இஸ்லாம்? இசையைக்கொண்டு இசைத்தராப்பி மூலம் நோய்களைக் குணப்படுத்தும் எல்லை வரை சென்றிருக்கிறார்கள்? அதைத் தடுக்கின்றீர்களா? ஏன்? எதை இசை என்கிறீர்கள். எதைத் தடுக்கிறீர்கள். ஏன் தடுக்கிறீர்கள் என்று மறுப்பவர்தானே கூறவேண்டும்?



இசை இசைக்கருவிகளில் அவை பயன்படுத்தும் முறையில் ஹலால் ஹராம் நிர்ணயமாகும். இஸ்லாம் அடிப்படையை அழகாகச் சொல்லிவிட்டது இனி அறிவுடையோராய் இருந்து நல்ல இஸ்லாமியராய் இருப்பது இஸ்லாமியனின் கடமையல்லவா?

ஓர் இசை உங்களைக் கெட்ட வழியில் இட்டுச் சென்றால் அது ஹராமான இசை. அது பாடலாக இருந்தால் என்ன? எந்த இசைக்கருவி வழி வந்தால் என்ன? கவிதையாய் இருந்தால் என்ன? கட்டுரையாய் இருந்தால் என்ன? துண்டுப் பிரசுரமாய் இருந்தால் என்ன, சுவரொட்டியாய் இருந்தால் என்ன? நபிகள் எதை வலியுறுத்தினார்கள்? எதைத் தடுத்தார்கள்? எதை பரவாயில்லை என்றார்கள்? குரான் எதைச் சொல்கிறது, ஹதீஸ் எதைச் சொல்கிறது?

நல்லதை எடு கெட்டதை விடு.

இதுதான் அடிநாதம். இதைப் புரிந்துகொள்ள வேண்டியது ஒவ்வொரு இஸ்லாமியனின் கடமை. இதைப் புரிந்துகொள்ளாதவனை இஸ்லாமியன் என்று எப்படித்தான் கூறுவது?

துன்பக்கடலை நீந்தும் போது தோணியாவதுமாகவும் அன்புக் குரலில் அமுதம் கலந்தே அருந்தத் தருவதுமாகவும் இருந்தால், அந்த இசை கூடாதென்று அறிவுடைய மார்க்கம் எப்படிச் சொல்லும் என்று சிந்தித்துப் பார்த்தீர்களா?

Source : http://anbudanbuhari.blogspot.

2 comments:

அதிரை சித்திக் said...

முடிவுறாத ..நீண்ட போருக்கு பின் கிடைத்த

வெற்றியை கொண்டாடும் பொது இசைக்கப்பட்ட

இசையை அங்கீகரித்த இறை தூதர் ...தபஸ் முழக்கம்

யாரும் குறை கூறவில்லை ..ஆனால் தற்போதைய

கால கட்டத்தில் .அன்றாட அலுவல்களுகிடையே

ஐவேளை தொழவே நேரமில்லை இஸ்லாத்தின் நம்பிக்கையின்

முதமையான மறுமை பயம் நம்மை கவ்வ வேண்டும் என்பதற்கு

ஏற்ற சூழ்நிலை குறைவாக இருக்கும் இந்த சூழலில் இசை

தேவை யா இஸ்லாத்திற்கு எங்கு பார்த்தாலும் சோதனை இழி

சொற்கள் நாம் பலவகையிலும் தோல்வியை தழுவும் இந்நேரத்தில்

வெற்றி வாகை சூடி மகிந்த இசை இக்கால முஸ்லீம்களுக்கு

கண்ணீருடன் கூடிய து ஆ தேவையா ..கேளிக்கை யின்

அடையாளமான இசை தேவையா ..இறை தூதர் செயல் வடிவு

சுன்னத் ..சிலவற்றை தடுக்காமல் அங்கீகரித்தது ..பாவமில்லை

ஆனால் தற்காலிக இசை வடிவு ..எப்படி உள்ளது என சிந்தித்து

பாருங்கள் ..அந்த காலத்தில் பதிவு செய்து பாடவக்கும்

டேப் ரிக்கர்டர்கள் கிடையாது ..பாட கூடிய தருணம்

தொழுகைக்கு இடையூறான நேரமாக இருக்க வாய்ப்பில்லை

இறைதூதர் கண்கான்மிப்பு அவ்வபோது தவறுகள் களையப்பட்டன

இன்று ஒருவர் தவறு என்றால் மூன்று பேர் சரி என்கிறார்கள்

தயவு செய்து தற்போதைய சூழ்நிலையில் இசை கேட்கும்

சூழல் உள்ளதா இஸ்லாமிய இசை என்று எத்தனை பேர்

கேட்கிறார்கள் ,,ஆக்கமும் ,,அழிவும் நம் கையில் தான் உள்ளது

எகிப்து நாட்டில் நாகரீகம் அதிகம் அங்கு தான் அரேபியா நாட்டிற்கு

சினிமா எடுக்க படுகிறது அதுவும் இஸ்லாத்தில் தடுக்க படுகிறதா

இல்லையா பதிவாளர் பதில் தருவீர்கள் என நம்புகிறேன்

mohamedali jinnah said...

2906. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
என் முன்னால் (அன்சாரிச்) சிறுமிகள் இருவர் புஆஸ் போரைப் பற்றிய பாடலைப் பாடிக் காட்டிக் கொண்டிருந்தபோது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். படுக்கையில் சாய்ந்து தம் முகத்தை (வேறு திசையில்) திருப்பினார்கள். (பாட வேண்டாம் என்று அவர்களைத் தடுக்கவில்லை.) அப்போது, (என் தந்தை) அபூ பக்ர்(ரலி) வந்து என்னை அதட்டி, 'அல்லாஹ்வின் தூதருக்கு முன்பாக ஷைத்தானின் இசைச் கருவியா?' என்று கடிந்தார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அபூ பக்ர்(ரலி) அவர்களை நோக்கி, 'அவர்களை (பாட) விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் கவனம் திசை திரும்பிவிட்டபோது, நான் அவ்விரு சிறுமிகளுக்கும் கண்ணால் சாடை செய்தேன். உடனே, அவர்கள் வெளியேறிவிட்டார்கள்
Source : http://www.tamililquran.com/bukharisearch.php?q=%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88&B2=%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95