பிறந்து
ஐம்பத்துநாலு தினங்களே ஆன
பெண் குழந்தையைத்
தந்தையே கற்பழித்துக்
கொன்றானாம்
அது செய்தியில்லையாம்
அவன் ஒரு கிருத்தவனாம்
அதுதான் செய்தியாம்
யார் வெறியன்?
மகன் தன் தாயோடு
தகாத உறவு வைத்திருந்தானாம்
அது செய்தியில்லையாம்
அவன் ஒரு இந்துவாம்
அதுதான் செய்தியாம்
யார் வெறியன்?
தந்தை தன் மகளை
அடித்தே கொன்றானாம்
அது செய்தியில்லையாம்
அவன் ஒரு முஸ்லிமாம்
அதுதான் செய்தியாம்
யார் வெறியன்?
thanks to :அன்புடன் புகாரி தொகுப்பு: அறிதலில்லா அறிதல்
Source:http://anbudanbuhari.blogspot.com/2008/02/blog-post_6373.html

No comments:
Post a Comment