ஹாருன் யஹ்யா
மனித உடலிலுள்ள அனைத்து தொழிற்பாடுகளும் முறையாக ஒழுங்குபடுத்தப்பட்ட விதத்தில் ஒன்று சேர ஒரே நோக்கதிற்காக செயல்படுகின்றது. அதாவது உடலை உயிரோடு வைப்பதற்காக. நாம் தினமும் செய்யும் சிறு அசைவுகளும் உதாரணமாக சுவாசிப்பது அல்லது சிரிப்பதாக இருந்தாலும் அனைத்துமே உடலின் சீரான ஒத்துழைப்பின் வெளிப்பாN;யாகும்.
எமது உடலுக்கு உள்ளே அதிசயமான, சிக்கலான, முழுமையான அசாதாரண ஒத்துழைப்பை கொண்ட அமைப்பு முடிவின்றி தொழிற்பட்டு கொண்டிருக்கிறது . இதன் நோக்கம் வாழ்வை தொடர்வதாகும். இந்த ஒத்துழைப்பை உடலின் செயல்பாடுகளை தெளிவாக அறிந்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு சிறு அசைவானாலும் எழும்பு அமைப்பும், தசை அமைப்பும், நரம்பு மண்டலமும் சரியான அளவில் ஒன்று சேர தொழிற்பட வேண்டும்.
ஒரு செயல் நடைபெறும் போது இந்த அங்கங்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையான தொடர்பை அறிந்து கொள்ளலாம். இந்த தகவல் கண்ணிலிருந்து அதேவேளை உள்காது தசைகள், மூட்டுகள் மற்றும் தோலிருந்தும் வருகிறது. ஒவ்வொரு நொடியும் பல பில்லியின் கணக்கான தகவல்கள் பரிசீலிக்கப்பட்டு அதற்கு ஏற்ப புதிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன . மனிதன் அவனது உடலில் கண் இமைக்கும் நேரத்தில் நடைபெறும் தொழிற்பாடுகளை பற்றி அறியாதவனாக இருக்கிறான். அவன் சிரிக்கிறான், அழுகிறான், ஓடுகிறான், சாப்பிடுகிறான், சிந்திக்கிறான். அவன் இந்த செயல்களை செய்ய எந்த முயற்சியும் எடுப்பதில்லை. ஒரு சாதாரண புன்முறுவல் பூக்க பதினேழு தசைகள் ஒரே நேரத்தில் தொழிற்பட வேண்டியுள்ளது. நடப்தென்றால் காலிலுள்ள இடையிலுள்ள மற்றும் பின்புறமுள்ள ஜம்பத்தி நான்கு வௌ;வேறு தசைகள் ஒரே நேரத்தில் செயல்பட வேண்டியுள்ளது.
மனித உடலிலுள்ள அவையங்கள் தொழிற்படும் அதிசயமான நிகழ்வை பின்வரும் உதாரணம் மூலம் நன்கு தெரிந்து கொள்ளலாம். கையை சற்று உயர்த்த வேண்டுமானால், தோல்பட்டை சற்று வளைய வேண்டும.; முன்னங்கை தசைகள் சற்று தளர வேண்டும். முழங்கை மற்றும் மணிக்கட்டுக்கு இடையிலான தசைகள் மணிக்கட்டை இழுக்கவேண்டும். ஒவ்வொரு செயலுக்கும் தசையிலுள்ள பல மில்லியன் கணக்கான உணர்வுகள் மைய நரம்பு தொகுதிக்கு தசையின் இருப்பிடம் சம்பந்தமாக தகவல்களை உடனே அனுப்ப வேண்டும். அதற்கு பதிலளிக்கும் முகமாக மைய நரம்பு தொகுதி அடுத்த நகர்வு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பதில் அளிக்கிறது. நிச்சயமாக பலருக்கு இந்த தொழிற்பாடுகளை பற்றி தெரியவில்லை. ஆனால் கையை உயர்த்த நினைத்து விட்டால் உடனே உயர்த்தி விடுகிறோம்.
இந்த ஒத்துழைப்பில் குழப்பம் ஏற்பட்டால்? நாம் சிரிக்க வேண்டும் என்று நினைக்கும் போது வேறு வகையான முகபாவங்கள் ஏற்படும் அல்லது நாம் நினைக்கும் பொழுது நடக்கவோ பேசவோ முடியாது. இருப்பினும் நாம் நினைக்கும் பொழுது எம்மால் சிரிக்க, பேச, நடக்க முடிகிறது. ஏனென்றால் இங்கு பட்டியலிடப்பட்ட அனைத்தும் நுண்ணறிவாலும் பெரும் சக்தியாலும் படைக்கப்பட்டதன் காரணமாக இவை சீராக நடைபெறுகிறது.
இதன் காரணமாக மனிதன் அவனுக்க வழங்கப்பட்ட வாழ்கை உயிர் ஆகியவற்றிற்காக அவனை படைத்த இறைவனுக்கு கடமை பட்டிருக்கிறான் என்பதை மனதில் வைத்து கொள்ளவேண்டும். மனிதனுக்கு பெருமையடிக்கவோ அல்லது கர்வமடையவோ எந்த ஒன்றும் இல்லை. அவனது ஆரோக்கியம், அழகு, சக்தி அனைத்தும் அவனக்கு சொந்தமில்லை. அவை அனைத்தும் அவனுக்கு நிரந்தரமாக கொடுக்கப்பட்டவையும் அல்ல. அவன் நிச்சயமாக வயோதிப்பத்தை அடைந்து அவனது ஆரோக்கியத்தையும் அழகையும் நிச்சயமாக இழப்பான். இதை பற்றி குர்ஆன் இவ்வாறு கூறுகிறது.
மேலும், உங்களுக்கு கொடுக்கப் பட்டிருப்பவையெல்லாம் (அற்பமாகிய) இவ்வுலக வாழ்க்கையின் சுகமும், அதனுடைய அலங்காரமும் தான்¢ ஆனால் அல்லாஹ்விடத்தில் இருப்பவை மிகவும் மேலானவையாகவும் நிலையானவையாகவும் இருக்கின்றன¢ (இதை) நீங்கள் அறிந்து கொள்ள மாட்டீர்களா?" (ஸ_றா அல்-கஸஸ் :60)
source : http://www.harunyahya.com/other/tamil/
நன்றி
No comments:
Post a Comment