Tuesday, July 31, 2012
கையூட்டை கலைவது கைக்கூடுமா!
மனைவி கணவனை கடையில் சென்று பெரிய வெங்காயம் வாங்கிவரச் சொல்லி ஆணையிடுகின்றாள் ( இப்பொழுதெல்லாம வேண்டுவதில்லை) கணவன் கண்களில் நீர் சுரக்கின்ன்றது. 'வெங்காயம் உரிக்கும்போது எனககுத்தான் கண்களில் நீர் வழியும் நீங்கள் ஏன் கடைக்கு போகச் சொன்னால் அழுது மாய்கின்றீர்கள். பின் நான் எப்படி உங்களுக்கு வெங்காய சட்டினி வைப்பது ' என கனத்த குரல் கொடுக்க கணவன் அதற்கு ' வெங்காயம் விலையை நினைத்தாலே பயத்தில் கண்களில் நீர் வழிகின்றது' என தன்னிலை விளக்கம் தருகிறார். இதுதான் இன்றைய விலை ஏற்றத்தின் நிலை இந்த நிலை வருவதற்கு கையூட்டு முறை ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.
கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம்
நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . ஆரம்பம் பற்றி கவலை இல்லை . வந்த வழியைப் பற்றி யார் பேசுவார். எப்படியோ வந்துவிட்டது அதற்கு பாராட்டும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. கோயாபல்சின் தத்துவம் கையாளப்படுகின்றது. திரும்ப திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாக காட்சியாக மாறுவது போன்ற நிலை.
சிறு குழந்தை அழுகை நிறுத்த சாக்லேட் கொடுத்த பழக்கம் குழந்தை வளர்ந்த பின் கையூட்டு கேட்கிறது . சாக்லேட் கொடுத்தவர் கையூட்டு கொடுக்கிறார். இது தொடரும் பழக்கமாக மாறிவிட்டது. ஒருகாலத்தில் இது மறைவாக நடைபெற்றது . சந்தையில் மாடு வாங்கும் போது கையில் துணி போட்டு விரலை வைத்து விலை பேசுவதுபோல் .இப்பொழுது அச்சம் நீங்கி நேராகவும் மறைமுகமாகவும் நடைபெறுகின்றது. ஊடகங்கள் படம் எடுத்து போட்டு அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தாலும் அச்சமும், கூச்சமும், வெட்கமும் கிடையாது.
யாசகம் கேட்பதைவிட கையூட்டு கேட்பது கேவலமானது. இதன் மறுபெயர் லஞ்சம். தான் நினைத்ததை சாதிக்கும் நோக்குடன் ஏதாவது ஒன்றை கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு முறையாகும். கையூட்டு கேட்பது அல்லது லஞ்சம் கொடுப்பது தெற்காசியாவில் அதிகமாக காணப்படுகின்றது என்கின்றனர். நம்நாடும் அதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனை தடுக்க பல போராட்டங்கள் நிகழ்கின்றன .அதற்காக பல சட்டங்கள் போடப்படுகின்றன. அதற்காக போடப்படும் சட்டத்திலும் ஒரு ஓட்டை(no rule without exception)அந்த ஓட்டையை வைத்து தப்பிக்க பாதுகாப்புக்கு அரசியல் தலைவர்கள் , அதற்காகவே புகழ்வாய்ந்த வக்கீல்கள் மற்றும் ஆடிட்டர்கள் இருக்கிறார்கள்
ஒரு காலமும் சட்டத்தின் வழியே இந்த கையூட்டு அல்லது லஞ்சம் கொடுப்பதனை தடுக்க முடியாது.
சம்பளத்தினை அரசு ஊழியர்கள் போராடி பெற்றுக் கொள்கின்றார்கள் . அவர்களுக்கு வாங்கும் திறன் கிடைத்து விடுகின்றது . மற்ற உழியர் நிலையும் நடுத்தர மற்றும் கீழ தர மக்கள் நிலையும் திண்டாட்டம்தான்
அதற்கு ஒரே வழி வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான்.
(இனாம் கொடுப்பதல்ல) .
உண்மையான இறை பக்தியும் இதற்கு ஆணிவேராக இருந்து உதவும்
Sunday, July 29, 2012
ஃபேஸ்புக் நண்பருக்கு அன்பு மடல்
அன்பு நண்பா,
தங்களுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துகள். பேஸ்புக் நமக்காக நல்ல மனதோடு ஓர் இடம் தந்துள்ளது (ஃபேஸ்புக் பணம் ஈட்டுவது அதன் தொழில்) அந்த இடத்தை நேரம் கிடக்கும்போதேல்லாம் உள்ளத்தின் உணர்வுகள் உந்தப்பட்டு மனதில் உள்ளதைக் கொட்டி இதய பாரத்தைக் குறைக்க முற்படுகின்றோம்.நேரில் பேசும்போது வாக்குவாதம் வந்துவிடும் அதனால் ஃபேஸ்புக்கில் பேசலாமென்றால் இங்கும் எனக்காக உள்ள இடத்தில் நீ மனதை புண்படுத்தும் படியாக எதாவது உன் மனம் போன போக்கில் எழுதி வைத்து உனது கருத்தை வெளிப்படுத்துகின்றாய். நண்பன் என்றால் உதவிக் கரம் கொடுப்பவர்,உற்சாகப்படுத்துபவராக இருக்க வேண்டும். நான் எழுதுவது உன் கருத்துக்கு உடன்பாடாக இருக்க வேண்டிய அவசியமில்லை. விரும்பினால் ஒரு 'லைக்' போடு அல்லது மனம் புண்படாமல் உன் கருத்தை எழுதிவிடுவதுதான் சிறப்பு, அதை விடுத்து என் மனதை நோகச் செய்ய முற்படாதே! உன் இடத்தில போய் நீ விரும்பியதை எழுதிவிட்டுப் போக உனக்கு அனைத்து உரிமையும் உனக்கு உண்டு. உன் உரிமை என் உரிமையை பாதிக்காமல் பார்த்துக்கொள். உனக்கு குடை பிடித்துப் போக உரிமையுண்டு ஆனால் அது என் மூக்கில் குத்தாமல் பார்த்துக் கொள்வது உன் கடமை . நட்புக் கரம் நீ நீட்டும்போது உன்னை நான் நண்பனாக ஏற்று கொண்டேன் . நட்பை மறுப்பது கூடாது என்பதுதான் அடிப்படைக் காரணம் . உன்னை எந்த விதத்திலும் தனிப்பட்ட முறையில் நான் எதையும் எழுதுவதில்லை என்பதனை நீ அறிவாய் . மற்ற எனது கருத்துகள் உனது கருத்தோடு ஒன்றிப்போக வேண்டிய அவசியமும் இல்லை அதனை நீ அவ்விதம் எதிர்பார்ப்பதும் முறையல்ல என்பதனை நீ அறிய வேண்டும்.
நாளாகும் நட்பை வளர்க்க நிமிடம் போதும் நறுக்க.
என்றும் உன் நலம் நாடும் நண்பன்,
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً

"Allah will reward you [with] goodness."
Saturday, July 28, 2012
Wednesday, July 25, 2012
இரவே இல்லாத ஊர்களில் எப்படி நோன்பு நோற்பது?

டென்மார்க்கில் முஸ்லிம்கள் இந்த ஆண்டு (2012) 21 மணிநேர நோன்பை கடைப்பிடிக்கின்றனர். ஆனால் அர்ஜெண்டினாவில் 9 மணிநேரமே நோன்பு நோற்கிறார்கள்.
ரஷ்யாவின் வடக்கு பகுதியில் உள்ள மார்மான்ஸ்க் நகரத்தில் 24 மணிநேரமும் பகல் ஆகும். ஒரு நிமிடம் கூட அங்கு இருள் பரவாது. ஆகவே அங்குள்ள முஸ்லிம்கள் நோன்பு நோற்பதும், நோன்பு திறப்பதும் சூரிய வெளிச்சத்திலேயேதான் நடக்க முடியும்.
இரவு அதிகமாக வரும் சில காலங்களில் சில இடங்களில் வெறும் 2 மணிநேரம் மட்டுமே நோன்பு நோற்பதாக அமையும். சில இடங்களில் முழு நாளும் இரவாகவே அமையக்கூடும். அவர்கள் இரவிலேயேதான் நோன்பு நோற்கவும் திறக்கவும் முடியும்.
இதன் அடிப்படையில் பார்த்தால், நோன்பு நோற்கும் கால அளவை உலக முஸ்லிம்கள் வரையறுத்துக்கொள்ளுதல் அவசியம் என்று ஆகிறது.
இறைவன் நமக்கான நன்மை தீமைகளை வரையறுத்துக்கொடுத்து, நல்ல அறிவையும் ஊட்டி, வாழும் வழியை அவன் திசையில் வகுத்துக்கொள்ள தேவையான அனைத்தையும் அவனே வழங்கியும் இருக்கிறான்.
உங்களில் எவர் ரமளான் மாதத்தை அடைகிறாரோ,
அவர் அம்மாதம் நோன்பு நோற்க வேண்டும்;
எனினும் எவர் நோயாளியாகவோ
அல்லது பயணத்தில் இருக்கிறாரோ
அவர் பின்வரும் நாட்களில் நோற்க வேண்டும்;
இறைவன் உங்களுக்கு இலகுவானதை நாடுகிறானே தவிர,
உங்களுக்கு சிரமமானதை அவன் நாடவில்லை;
குர்-ஆன் 2:185 (ஒரு பகுதி)

Monday, July 23, 2012
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் நாகூர் ரூமி
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நாகூர் ரூமி பிறந்து வளர்ந்த ஊர் நாகூர்
நாகூரைச் சேர்ந்த படைப்பாளிகளில் கவிஞர் நாகூர் சலீம், வசனகர்த்தா தூயவன் ஆகியோர் நாகூர் ரூமியின் தாய் மாமாக்கள். சித்தி ஜுனைதா பேகம் ரூமியின் பெரியம்மா!
இப்போது ஆம்பூர் மஜ்ஹருல் உலூம் கல்லூரியில் ஆங்கிலத் துறைத் தலைவராகப் பணியாற்றும் நாகூர் ரூமி, கம்பன் கவிதைகள் மற்றும் மில்டன் கவிதைகள் குறித்து பிஹெச்டி ஆய்வினை மேற்கொண்டவர்!
ஆங்கிலத்தில் ஐந்து, தமிழில் 27, மொழிபெயர்ப்பு ஆறு என இதுவரை 38 நூல்களை எழுதி இருக்கிறார் நாகூர் ரூமி!
இவர் எழுதிய இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் நூலுக்கு திருப்பூர் தமிழ்ச்சங்கம் விருது கொடுத்து கௌரவித்து உள்ளது. இவருடைய ஹோமரின் இலியட் காவியத் தமிழ் மொழிபெயர்ப்புக்காக திசையெட்டும் தமிழாக்க விருது பெற்றுள்ளார்
Sunday, July 22, 2012
Is Ramadhan Taraweeh 8 or 20 Rakat by Dr Zakir Naik
Dear brothers and sisters just to clarify, if you choose to pray 8 rakat taraweeh this refers to the whole parayer and not just 8 out of 20.
Saturday, July 21, 2012
டாக்டர் அயூப் பேச்சு நீடூர் - நஸ்ருல் முஸ்லீம் பள்ளிகூடத்தில்
நீடூர் - நஸ்ருல் முஸ்லீம் மேல்நிலை பள்ளியின் புதிய கட்டிடம் திறப்பு விழாவில் டாக்டர் அயூப் அவர்கள் கல்வியின் முக்கியத்தினைப் பற்றி பேசினார்
Insha Allah-இன்ஷா அல்லாஹ்
"இன்ஷா அல்லாஹ்" (இறைவன் "அல்லாஹ்" நாடினால்" )
அவர்களில் நடுநிலையுள்ள ஒருவர் "நீங்கள் தஸ்பீஹு(இன்ஷா அல்லாஹ் ) செய்திருக்க வேண்டும் என்று நான் உங்களுக்கு கூறவில்லையா?" என்று கூறினார்.68:28அல்-குர்ஆன்
ஒருவர் ஒரு வாக்குறுதியை அது எத்துணை சிறியதாயினும், பெரிய தாயினும், அதனை அளிக்கு முன் ” இன்ஷா அல்லாஹ்” என்று கூறின், அவர் அவ்வாக்குறுதியை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கடமைப் பட்டவராகிறார். மேலும் அல்லாஹ், அவருடைய வாக்குறுதியை நிறைவேற்றப் போது மானவன்.
எனவே ஒருவர் மற்றவருக்கு வாக்குறுதி வழங்குமுன் “இன்ஷா அல்லாஹ்” எனக்கூறி வாக்குறுதி அளித்தல் வேண்டும்.
உலகில் அனைத்துச் செயலகளும்,இயக்கங்களும், அல்லாஹ்வின் நாட்டப்படியே நிகழ்கின்றன.மனித வாழ்வின் அனைத்துப் போக்கு களும் இறைக் கட்டளைப்படியே நடந்தேறுகின்றன. எனவே இறைவன் நாடினால் மட்டுமே எதுவும் நிகழ்வுற முடியும்
இந்த உணர்வை முழுமையாகப் பிரதிபலிப்பதே ” இன்ஷா அல்லாஹ்”
நம்பிக்கையை மட்டும் இழக்காதே. ஏனெனில் உன் அருகாமையில் அல்லாஹ் இருக்கின்றான்.
நாகூர் ஹனிபாவின் வாரிசு யார்?
நாகூர் ஹனிபாவின் வாரிசு
பள்ளிக்கூடம் தொடங்கி கல்லூரிவரை – ஐந்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு முடிக்கும்வரை -ஒன்றாகவே வளர்ந்து, ஒன்றாகவே படித்து இன்று நான்யாரோ, அவன் யாரோ என்று, தகவல் பரிமாற்றம் கூட இன்றி பிரிந்து வாழும் என் நண்பன் E.M.நெளசாத் அலி பற்றி தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்த பேட்டியை என் வலைப்பதிவில் வெளியிடாமல் போனால் உண்மையில் நான் ஒரு நட்புக்கு துரோகம் செய்தவானாகி விடுவேன்.
இதற்கு ஒரு பிளாஷ்பேக் தேவைப்படுகிறது.
எல்லா பெற்றோர்களைப்போல் தன் பிள்ளையும் “டாஸ்… பூஸ்” என்று இங்கிலீசில் பேச வேண்டும் என்ற ஆங்கில மோகத்தில் என்னையும் நாகை பீச் ரோட்டில் இருந்த “Little Flower Kinder Garten” ஸ்கூலில் LKG வகுப்பில் சேர்த்தார்கள். படகு போன்ற ஸ்டுடி பெக்கர் வண்டி என்னையும் என் தம்பி தங்கைகளையும் சுமந்துச் செல்லும். “Born with Siver spoon in mouth” என்பார்களே – அது ஒரு நிலாக்காலம்.
LKGயும் படிச்சு, UKGயும் படிச்சு ரைம்ஸ் எல்லாம் தலை கீழாக மனப்பாடம் பண்ணியாச்சு. அப்புறம்….. மகன் மேலும் இங்கிலீசில் பிச்சு உதற வேண்டுமே..!
நாகூருக்கு அக்கம் பக்கத்து ஊரில் அப்போது கான்வென்ட் எதுவும் இல்லை. தஞ்சாவூரில் இருக்கும் Sacred Heart Convent-ல் கொண்டு போய் தள்ளி விட்டார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஹாஸ்டல் வாழ்க்கை. உப்புமாவில் புழு நெளியும். பூரிக்கு தொட்டுக்கொள்ள ரசம். (அது என்ன காம்பினேஷனோ தெரியாது). கோ-எஜுகேஷன் வேறு. கிறுஸ்துமஸ் தினத்தன்று பாலே டான்ஸுக்கு ஆங்கிலோ இந்திய ‘பம்பளிமாஸ்’ Joanna-தான் எனக்கு ஜோடி. அவளுடைய இடுப்பை பிடித்துக்கொண்டு நான்தான் ஆட வேண்டுமாம் மேரி சிஸ்டர் சொன்னார்கள்.

Friday, July 20, 2012
நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம் !
ரமலான் பிறை பார்க்க சிரம் தூக்கி ஆகாயத்தினைப் பார்க்க பிறை தெரிந்தாலும்
பிறை வடிவ புருவம் பிறைபோல் இருப்பதனைப் பார்க்க முகம் பார்க்கும் கண்ணாடி
தேவைப்படுகின்றது. நம்மில் ஒளிந்திருக்கும் அற்புதத்தினை அறிய நாம் இறைவனை
அறிய வழி பிறக்கும்.
அல்லாஹ்வை(இறைவனை) அறிய குர்ஆனை பொருள் அறிந்து ஓதுதல் உதவும். ஞானம் வர வழி வகுக்கும்.
நம்மை அறிந்தால் இறைவனை அறியலாம் இறைவனை அறிந்தும் அவன் மகிமையை புரிந்தும் அவனை தொழாமல் இருப்பது அறிந்தும் அறியா மூடர் அல்ல நாம் ,கற்றும் அறிவுக் கண் இழந்தவர் அல்ல நாம், நன்றி பாராட்டாதவர் நன்றி பாராட்டப்படுவதற்கு உரியவராக மாட்டார்

Wednesday, July 18, 2012
ரமலான்.. புனித ரமலான்... அமலால் நிறையும் ரமலான்
பசித்திருந்து தனித்திருந்து விழித்திருக்கும் மாதம்
படைத்தவனின் அருளதிகம் பொழிகின்ற மாதம்
கசிந்துருகித் துதித்திட்டால் ஈடேற்றும் மாதம்
கறையான பாவங்கள் கரைந்தோடும் மாதம்
பசித்தவரின் பட்டினியை யுணர்த்தவ்ரும் மாதம்
பயபக்தி யாதென்றுச் சோதிக்கும் மாதம்
வசிக்கின்ற ஷைத்தானை விலங்கிலிடும் மாதம்
வறியவர்க்கு ஈந்திடவே “ஃபித்ராவின்” மாதம்
குடலுக்கு மோய்வாக்கி குரானோதும் ரமலான்
குற்றங்கள் தடுத்துவிடும் கேடயமாம் ரமலான்
*திடலுக்கு வருவதற்குச் சேமிக்கும் ரமலான்*
திண்ணமுடன் சுவனத்தைப் பெற்றிடத்தான் ரமலான்
உடலுக்கும் பயிற்சியாக்கும் நெறிமுறைகள் ரமலான்
உயிர்க்குள்ளே உணவானச் சுடராகும் ரமலான்
கடலுக்குள் மீன்போல கல்புக்குள் ரமலான்
கர்த்தனவ னறியுமிர கசியம்தான் ரமலான்
--
ஷைத்தான் = இறைவனால் சபிக்கப்பட்டு நம் இரத்த நாளங்களில் ஓடிக்கொண்டிருக்கும் நம்மை வழிகெடுக்கும் ஒரு தீயசக்தி.
ஃபித்ரா = நோன்பில் ஏற்பட்டத் தவறுகட்குப் பரிகாரமாகவும் ஏழைகளின் உணவுத் தேவைக்கு நோன்புப் பெருநாளைக்கு முன்னதாகக் கொடுக்கப்பட வேண்டிய தர்மம்
குர்-ஆன் = இறைவன் வழங்கிய இறுதி வேதம்
கல்பு = ஹ்ருதயம்; உள்ளம்
ரமலான் = இஸ்லாமிய ஐந்து கடமைகளில் ஒன்றான (வைகறை முதல் அஸ்தமனம் வரை) நோன்பிருக்கும் மாதம்
*திடலுக்கு = மஹ்ஷர் என்னும் judgement day ground
”கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்
நோன்பு வரும் பின்னே - பிறைக்குழப்பம் வரும் முன்னே!
கேள்வி: பிறை பார்க்கும் பிரச்னையால் பல குழப்பங்கள் சமுதாயத்தில் உருவாகின்றன. அண்ணன் ஒருநாள் பெருநாள் கொண்டாடுகிறார்; தம்பி ஒருநாள் கொண்டாடுகிறார். பெருநாள் என்றாலே மகிழ்ச்சி சந்தோஷம்தான். அது இன்று இல்லாமல் போய்விட்டது. இதற்கு நிரந்தரத்தீர்வு என்ன? எல்லாரும் பழையபடி மகிழ்ச்சியாக, ஒற்றுமையாகப் பெருநாள் கொண்டாடக்கூடிய நாள் எப்போது வரும்?
பதில்: நம் சகோதரர் என்ன கேட்கிறார் எனில், நோன்பு மாதத்தில் பிறை தொடர்பாக ஒரே சண்டைகளும் சச்சரவுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. ஓர் ஊரில் பல பெருநாட்கள்; ஒரு குடும்பத்தில் பல பெருநாட்கள். மகிழ்ச்சியாகப் பெருநாளைக் கொண்டாட முடியவில்லை. இந்தப் பிரச்னை தீர என்ன வழி என்று கேட்கிறார். இது மிகவும் கவலைக்குரிய விஷயம்தான்.
'நோன்பு வரும் பின்னே பிறைக் குழப்பம் வரும் முன்னே' என்று சொல்கிற அளவுக்கு இன்று சமுதாயத்தில் இதை ஒரு பிரச்னையாக ஆக்கி வைத்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் எழுதினார்கள், மூன் சைட்டிங்கா, மூன் ஃபைட்டிங்கா - பிறையைப் பார்ப்பதா, பிறைக்காகச் சண்டை போடுவதா எனும் ஒரு நிலை உருவாக்கப் பட்டிருக்கிறது.

மரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்!
மரியாதை என்ற பெயரில் ஒருவரை தன்வசம் ஆக்கிக்கொள்ளும் நோக்கம்தான் முதன்மையாக இருக்கும் காலமாக இருப்பதனை இப்பொழுது நாம் பார்க்கின்றோம். தலைவர் என்று ஒருவரை நாம் தேர்ந்தெடுப்பதே சுயநலப் போக்காகவே உள்ளது. அது அந்த தலைவனின் காலில் விழும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வது ஒரு வேடிக்கையான நிகழ்வாக நடந்து வருகின்றது. இறைவன் ஒருவனுக்கு மட்டும்தாம் நாம் சிரம் தாழ்த்தி வழிபட வேண்டும். ஒரு தனிப்பட்ட தனி மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக அதிகாரமும், மரியாதையையும் கொடுக்கும் என்ற எண்ணத்தில் தன்னை தாழ்த்திக்கொள்ள ஈடுபடும்போது அவர் சர்வாதிகாரியாக மாறும் நிலை ஏற்பட்டு நாம் நமது சுய மரியாதையை இழந்து விடுகின்றோம். வேண்டாம் இந்த அவல நிலை. நாம் நமது கவுரவத்துடன் இருந்து மற்றவருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுப்போம்.
Tuesday, July 17, 2012
அறியப்பட வேண்டியவர்கள் வரிசையில் கலைமகள் ஹிதாயா றிஸ்வி
சாதனைகள் பெண்களுக்கும் தடையில்லை. ஹிதாயா றிஸ்வி அவர்களும் ஒரு முஸ்லிம் பெண்ணாக இருந்தாலும் ஹிதாயா றிஸ்வி அவர்கள் இறைவன் அருளால் தன்னால் முடிந்த அளவு தான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றார். உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே உயர்ந்தோர் ஆவர். அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர். இந்த வழியில் ஹிதாயா றிஸ்வி அவர்களும் நன்மையடைந்து மற்றவர்களும் பயன் அடைகின்றாகள்.
அவர்கள் "(இறைவா!) நீயே தூயவன். நீ எங்களுக்குக் கற்றுக்கொடுத்தவை தவிர எதைப்பற்றியும் எங்களுக்கு அறிவு இல்லை. நிச்சயமாக நீயே பேரறிவாளன்; விவேகமிக்கோன்" எனக் கூறினார்கள்.(குர்ஆன் 2:32)
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
தயவு செய்து அவசியம் கீழ் உள்ள லிங்க்குகளை சொடுக்கிப்(கிளிக் செய்து) பாருங்கள்( படியுங்கள்)
கலைகளாய் கவிகளை
அள்ளித்தரும் கவியரசி

ஹிதாயா றிஸ்வி அவர்கள் வலைப்பூக்கள்:(Blogs
- இஸ்லாமியப்பூங்கா...
- கலைமகள் ஹிதாயா றிஸ்வியின் சிறுகதைகள்..
- ஹிதாயாவும் மருத்துவமும்.
- வலிகொண்ட மெளனங்கள்.....
- விரியும் பூக்கள்...
- தடாகம் கலை இலக்கிய வட்டம்
- வசந்த காலம்...
- கலைமகள் ஹிதாயா றிஸ்வி
விக்கிப்பீடியாவில் ஹிதாயா றிஸ்வி
சொடுக்கி கிளிக் செய்து படியுங்கள் http://ta.wikipedia.org/wiki
திறமைக்கு மரியாதை -2012 கலை கல்வி கலாசார சமூக அபிவிருத்தி அமையத்தினால் ,கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரியில் ஜூலை 08ம் திகதி நடைபெற்ற குறும்பட வெளியீட்டு விழா மற்றும் திறமைக்கு மரியாதை கௌரவிப்பு விழாவில் கவிதை இலக்கியம் ஆகிய துறைகளுக்காக கலைமகள் ஹிதாயா றிஸ்விக்கு விருதும் இலங்கையில் முதல் முதலில் பாவரசி பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது
Monday, July 16, 2012
யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா !?
யார் வேலைக்கு போவது கணவனா! மனைவியா?
ரயிலில் குளிர் சாதன பெட்டியில் சென்னைக்கு சென்றுக் கொண்டிருந்தபோது .என்னுடன் ஒரு நல்ல குடும்பமும் உடன் பிரயாணத்தில் .கணவன் மனைவி இருவரும் கணினி பொறியாளர்கள் .அவர்கள் இறை நேசமும் .மனித நேயமும் கொண்டவர்கள் .இருவரும் கணினி பொறியாளர்கள்
பகல் நேர உணவு நேரத்தில் நான் உணவு சாப்பிட அவர்கள் தங்கள் உணவையும் அன்பாக பகிர்ந்தார்கள்
அவர்கள் தங்களைப் பற்றி சொன்னார்கள்
இங்கு நிகழ்வில் நான் என்று குறிப்பிடுவது அந்த குடும்பத் தலைவர் பற்றித்தான்
-------------------------------------------------------
நானும் எனது மனைவியும் படித்தவர்கள். எங்கள் இருவருக்கும் வேலை கிடைத்தது . சில காலம் இருவரும் வேலைக்கு சென்றோம் . அரசாங்க வேலை அதனால் சம்பளத்திற்கு குறைவில்லை அதனால் 'கிம்பளம்' வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனாலும் எனக்கு கீழ வேலை பார்பவர்களும் மேல் வேலை பார்க்கும் எனது அதிகாரிகளும் எங்களை பல வகையில் 'கிம்பளம்' வாங்கும் நிலைக்கு தள்ளப் பார்கின்றனர் .அவர்களுக்கு உடன்படவில்லையென்றால் நமக்கு ஏதாவது தொல்லை வரும் நிலைக்கு தள்ளப்பட்டோம். நாங்கள் ஒரளவுக்கு வசதி படைத்தவர்கள் அதனால் வேலைக்குப் போய்தான் பொருள் ஈட்டவேண்டும் என்ற அவசியமில்லை. படித்துவிட்டு மக்களுக்கு சேவை செய்யலாம் என்ற நோக்கில்தான் வேலைக்குப் போனோம். இந்த தொந்தரவுக்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டுமென்று இருவரும் யோசனையில் ஈடுபட்டோம். அதன் முடிவின்படி நான் மட்டும் வேலைக்குப் போனேன். ஒரு வருடம் கழித்து வேறு ஒரு நல்ல வேலையில் சேர்ந்தேன். வேலைப் பளுவின் காரணமாக உடல்நிலை சிறிது பாதிக்கப்பட்டது. அதனால் நான் சிறிது காலம் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியமானது. அதனால் நான் வீட்டில் இருந்துக் கொண்டு குழந்தைகளைக் கவணிப்பது மனைவி வேலைக்கு போவது என்ற முடிவுக்கு வந்தோம். அது வேடிக்கையாக இருக்கலாம். எங்கள் நிலையில் அதுதான் சரியாகப்பட்டது.
இனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு!
இனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு!
இனாமாக ஓர் இடமென்றால் அவசரம் ஏன்! இனாம் உறுதியாக இருக்கும் நிலையில் அவசரம் தேவையில்லை.
நான் இனாமாக வாங்க மாட்டேன் என்று ஆணவத்துடன் இருந்தாலும் இருந்து விட்டுப் போ! பணம் கொடுத்து வாங்கிய இடத்தில ஓர் கட்டிடம் கட்டி மற்றவர்களை மடையர்களாக்கி உன்னை வந்து துதிபாட அதனுள் அடங்கிக் கொள்! உன்னை அரித்த பின்பும் நீ அங்கே குடிகொண்டிருக்கிறாய் என்ற நினைப்போ! உனக்கு அத்தனை சொத்து இருந்தாலும் உறுதியாக உனக்கு ஓர் இடம் கொடுப்பதற்கு யாரும் மறுக்கமாட்டார்கள். நீ அந்த நிலையில் இருக்க உன்னை மற்றவர் வைத்துக்கொண்டு அவதிப்படுவதா!
எட்டாத உயரத்தில் (ஈபில் டவரிலிருந்து) நின்றுக் கொண்டு கீழ் பார்த்தால் கோபுரமும் கொசுவாகத்தான் தெரியும் .உண்மைநிலை அறிய ஒன்றிவிடு. வா! கீழ் வந்துதானே ஆகவேண்டும். உனக்கு இனாமாக கிடைக்கும் ஆறடி (அல்லது உனக்கு தேவையான இடம்) தரைக்குக் கீழ்தான். இது உறுதி. உயர உயரப் போவதற்கு எத்தனை ஆசை. தடுக்கும் நிலை,தடுமாறும் நிலை வரத்தான் போகின்றது. பார்த்த காட்சிகள் , களித்த கேளிக்கைகள் அனைத்தும் உன் நினைவிலிருந்து மறைத்த பின்புதான் அந்த தரையும் உனக்கு இடம் தரும். ஆனால் நீ வாழும் முறையால் செய்த சேவையால் உனக்கென்று ஓர் இடம் நீயே கற்பனையிலும் காணாத இடம் உனக்கு நிலையாக கொடுக்கப்படும் அவன் (இறைவன்) நினைத்தால். விழித்துக் கொள். இத்தருணமே மாறு.இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் உனக்கு உதவும். தூக்கம் யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள். - தேரிழந்தூர் தாஜுதீன்

Sunday, July 15, 2012
நன்மையை தேடும் ரமலான்.(துபாய் வாழ் தமிழ் முஸ்லிம்களிடம் பேட்டி -ஆங்கில வீடியோ இணைப்பு )
இறைவனால் இஸ்லாமியர்களுக்கு தரப்பட்ட சிறப்பான மாதங்களில் ரமலான் மாதமும் ஒன்று.இறைவனது அருளால் அருளப்பட்ட குர்ஆனின் முதல் வரிகள் ரமலான் மாதத்தில் கிடைத்தாலும் ரமலான் சிறப்புடையாதாக இருக்கின்றது. இஸ்லாமிய ஐந்து முக்கிய கடமைகளில் ரமலானும் இருக்கின்றது. நன்மையை தேடுவதற்கும் பாவங்களைப் போக்கிக் கொள்வதற்கும் சிறப்பான மாதமாகவும் இருக்கின்றது . ரமலான் மாதத்தினை முஸ்லிம் மக்கள் மிகவும் ஆர்வமாக வரவேற்று அம்மாதம் முழுவதும் சிறப்பு மிக்க நோன்பினை கடைப்பிடித்து மகிழ்கின்றனர். மைந்தனின் ஆரோகியதிற்கும் மகிழ்வுக்கும் வழி காட்டும் ரமலானை வரவேற்போம் மற்றும் அதற்குரிய சிறப்பினையும் மரியாதையும் கொடுப்போம். நோன்பு நோற்றுவிட்டு அதனை திறக்கும்போது ஏற்படும் மகிழ்வே சிறப்பானது. உலகில் பல்வேறு நாட்டில் உள்ள முஸ்லிம்கள் பல்வேறு முறையில் நோன்பு திறக்கும் ஆகாரத்தினை அருந்தியும் உண்டும் மகிழ்கின்றார்கள். முதலில் ஒரு இனிப்பு அதுவும் பேரித்தம் பழம் சாப்பிடுகின்றனர். இது நபிவழியாக மட்டுமில்லாமல் உடலுக்கு உடன் சத்து தரக் கூடியதாக உள்ளது. தமிழ்நாட்டில் சிறப்பாக தயாரிக்கப் பட்ட நோன்புக் கஞ்சி அருந்தி நோன்பு திறக்கின்றனர். நோன்பு நேரத்தில் சோர்வு வந்தாலும் நோன்பு கஞ்சி அருந்தி நோன்பு திறக்கும் போது அது அனைத்து சக்தியையும் தந்து விடுகின்றது.
தமிழ்நாட்டு முஸ்லிம் மக்கள் மற்ற நாடுகளில் வாழ்ந்தாலும் நோன்பு கஞ்சி தாங்களாகவே தங்கள் வீட்டில் தயாரித்தாவது அதனைக் கொண்டு நோன்பு திறக்கின்றனர். நோன்பின் அருமையை அறிந்து தற்பொழுது மற்ற மார்க்க சகோதரர்களும் இதனை நம் முஸ்லிம்கள் போல் நோன்பு வைக்க விரும்பி செயல்பட விரும்புகின்றனர். ஆனால் நம் மார்க்கத்தில் உள்ள ஒரு சிலர் மட்டும் அதன் அருமையை அறியாமலும் அந்த ரமலான் மாதத்திற்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுக்காமல் இருப்பது மிகவும் வருந்த வேண்டியதாக உள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு நல்வழிக் காட்ட நாம் இறைவனிடம் வேண்டுவோம்.
Ramadan in Dubai is a unique and different experience due to the fact that people from different parts of the world live and bring their own cultural heritage to this cosmopolitan city.
Saturday, July 14, 2012
நாங்கள்தான் குழம்பிவிட்டோம்
நாங்கள்தான் குழம்பிவிட்டோம்
நிகழ்ச்சி ஒன்று:
நான் சவுதி அரேபியாவில் பணியாற்றிக்கொண்டிருந்தேன். அப்போது உத்திரப்பிரதேசத்திலிருந்து ஒருவன் என்னுடன் பணிபுரிந்தான். வெர்பு, டர்னிங், இஸ்கூல் (Verb, Turning, School) என்று சொல்லுவான். எப்படிச் சொன்னாலும் தான் சொல்வதுதான் சரி என்று சண்டைக்கு வருவான். எங்களை எல்லாம் ( நாங்கள் ஆறுபேர் இருந்தோம்) மதராசி உங்களுக்கு என்ன தெரியும் என்று சொல்லிச் சிரிப்பான்.
ஆங்கிலத்தில் உயிர் எழுத்துக்குப்பின் வரும் ஆர் எழுத்துக்கு உச்சரிப்பு குறைந்து ஒலிக்கும் என்று உச்சரிப்பு விதியைச் சொன்னால், பிறகு ஏன் ஆர் இருக்கிறது. கண்ணு தெரியலியா உனக்கு? வெறுமனே ஆர் இட வெள்ளைக்காரன் என்ன முட்டாளா என்று கேட்பான்.
அப்போது ஒரு வெள்ளைக்காரர் எங்கள் அலுவலகம் வந்தார். அவரிடம் கேட்கலாமா என்று கேட்டதற்கு சரி என்று ஒப்புக்கொண்டான். அட பரவாயில்லையே தவறைத் திருத்திக்கொள்ள இடம் தருகிறானே என்று மகிழ்ந்தோம்,
Verb என்று எழுதி வாசிக்கச் சொன்னோம். வெள்ளைக்காரன் ஆர் எழுத்தை அழுத்தம் குறைத்து சரியாக எங்களைப்போலவே உச்சரித்தார். அது முக்கியமில்லை, ஆனால் அவர் சொன்ன முடிவுதான் மிக முக்கியம்.
அந்த உத்திரப்பிரதேச நண்பனை அழைத்து இவன் மீது தவறு இல்லை. இவனுக்குச் சொல்லிக்கொடுத்த ஆசிரியரின் தவறு என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டார்.
அதைவிட சுவாரசியம் என்னவென்றால், வெள்ளைக்காரர் சென்றபின் உபி நண்பன் மீண்டும் வெர்பு, டர்னிங், இஸ்கூலு என்றுதான் ஆங்கில வார்த்தைகளை உச்சரித்தான்.
கேட்டதற்கு, நான் சரியாகத்தானே உச்சரிப்பதாய் வெள்ளைக்காரனும் ஒப்புக்கொண்டான். வாத்தியார்தானே தப்பு என்று வெள்ளைக்காரன் சொன்னான் என்றான்.
சொல்லிவிட்டு அவன் தெளிவாகத்தான் இருந்தான், நாங்கள் எல்லோரும்தான் குழம்பிப் போய்விட்டோம்!

யாருக்கும் வராத குழப்பம்! இமாமுக்கும் வராதா!
ஒரு பெண் என்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினாள். எனது சம்மதத்தைக்
கேட்டாள்.உடனேயே ஒப்புதல் கொடுத்தேன் .ஆனால் திருமண செலவுக்கு வசதி
கிடையாது என்றும் தெரிவித்தேன், நீங்கள் ஒரு செலவும் செய்ய வேண்டாம்
நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று அன்போடு அப்பெண் கூறினாள். அவள்
படித்த நல்ல ஒழுக்கமுள்ள அழகான பெண்தான். அவள் விருப்பப்பட்டபடி திருமணம்
அவர்கள் செலவிலேயே பலரை அழைத்து விருந்துக் கொடுக்கப்பட்டது,
திருமண மேடையில் திருமணம் செய்து வைக்கும் இமாம் மணப்பெண்ணுக்கு மகர் தொகை ( மணமகளுக்கு மணமகன் கொடுக்கும் மகர் தொகை அப்பெண்ணுக்கு வாழ்நாள் காப்புத்தொகையாக திருமணத்தின் போதே அளிக்க வேண்டும் ) 'எவ்வளவு கொடுக்கிறீர்கள்' என்று கேட்டார். நான் உடனே 'அது எனக்குத் தெரியாது. பெண்ணிடமே கேளுங்கள் என்றேன்'. உடனே அந்த இமாம் 'இஸ்லாமிய சட்டப்படி மாப்பிள்ளைதான் மகர் தொகை கொடுக்க வேண்டுமென்றார்'. நான் சொன்னேன் 'நான் வாக்கு மாற மாட்டேன். பெண்ணே சொல்லிவிட்டாள் 'நீங்கள் ஒரு செலவும் செய்ய வேண்டாம்' என்று அந்த வாக்குறிதியை நான் மாறினால் அது நான் அந்த பெண்ணை இப்பொழுதே அவமதிப்பதாகிவிடும்' என்றேன். இமாமுக்கே குழப்பம் உண்டாகிவிட்டது .
திருமண் வாக்குறுதியை , ஒப்பந்தத்தை எனக்கு சொல்லிக் கொடுக்க ஆறம்பிதார் 'அப்துல் கரீமுடைய மகள் நிசாவை ஹலீல் அண்ணன் சாட்சியாக மற்றும் ரஹீம் அண்ணன் சாட்சியாக நான் திருமணம் செய்துக் கொள்கின்றேன்' என்றார். 'நிறுத்துங்கள் . நான் திருமண செய்ய இருக்கின்றேன் நான் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள். என்னையா அல்லது உங்களையா? ஹலீல் மற்றும் ரஹீம் அவர்கள் தானே சாட்சிகள் அவர்கள் அண்ணனை சாட்சியாக அழைக்கிறீர்களே ஏன்' என்றேன் . உடனே அந்த இமாமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானே மைக்கை பிடித்து திருமண ஒப்பந்தத்தை ' பெண் கொடுத்த தொகையை பெண்ணுக்கே மகராக கொடுப்பதாகவும் ஹலீல் மற்றும் ரஹீம் ஆகியவர்கள் சாட்சியாக திறுமணம் செய்துக் கொள்கின்றேன்' என்று சொல்லிவிட்டேன்.அதற்கு கையழுத்தும் திருமண ஒப்பந்த ஓலையில் போட்டுவிட்டேன் . பெண்ணிடம் முன்பே கையெழுத்து வாங்கி விட்டார்கள். அப்புறம்மென்ன விருந்து சாப்பிட வேண்டியதுதான்.
( பின்புதான் தெரிய வந்தது மரியாதைக்கு சாட்சிகளின் பெயரோடு அண்ணன் என்று இமாம் சேர்த்துக் கொண்டாராம் .இருப்பினும் அப்படி சொல்வது சரியல்லதான்)

Friday, July 13, 2012
ஆளுமை சக்திக்கு ஆசைப்படாதோர் யார் !
ஆளுமைசக்தி பெற ஆசைபடுவதில் தவறில்லை அதன் மீது ஆசை இருபாலார்க்கும்
இருப்பது இயற்க்கை, அதிலும் இப்பொழுது பெண்களுக்கு அதிகமாகவே
இருக்கின்றது. பல்லாண்டு காலமாக அடக்கிவைக்கப்பட்ட பெண் மகள் புரட்சி
மனப்பான்மையோடு வெகுண்டு வந்து தங்கள் ஆளுமையை வெளிபடுத்த
முன்வந்துள்ளார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அந்த ஆளுமை சக்தி எவ்வாறு
இருக்க வேண்டும் எந்த அளவுக்கு அது கையாளப்பட வேண்டும் மற்றும் அந்த
சக்தியைப் பெறுவதற்கு அவர்கள் கையாண்ட முறை நல்வழியின் உந்துதளால் வந்த
விளைவா! என்பதனை சிறிது சிந்திக்க வேண்டிய அவசியமாகின்றது.ஆளுமை உள்ளத்தின்
வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.
சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும் சக்தி.அறிவின் அடித்தளம்.
இத்தனையும் சேர முயற்சி என்ற உந்தும் சக்தி தேவை.ஆளுமை சக்தி அடைய பல்வேறு முயற்சிகளை கையாண்டு வெற்றி பெற வேண்டிய நிலை. அது தவறான முறையில் வந்தால் முடிவும் தவறாகவே முடியும்.
நான் மிகவும் தகுதியுடைய ஆண் அல்லது பெண் அதனால் நான் அடந்கிப்போக வேண்டிய அவசியமில்லை என்ற ஆணவம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள வழிவகுக்கின்றது. ஹிட்லர் பெறாத ஆளுமையா! அவனது கொடுங்கோல் ஆட்சியின் முடிவு அவனோடு பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை வைத்து இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவனிடம் இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி மடிந்தவர் பலர் .

Wednesday, July 11, 2012
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.
தமது குடும்பம் விரியடையவே தம்மால் விரிவாக்கப்பட்ட நீடூர் ஜின்னா தெருவில் வீடு ஒன்றைக் கட்டி ஹாஜிமஹால் என அதற்குப் பெயர் சூட்டி அதில் வாழ்ந்து வரலானார்கள். வளமார் விரிந்த நெஞ்சோடு, விஞ்சு புகழ் வள்ளற்றன்மையோடு நிறைந்த மக்கட் செல்வத்தையும் பெற்றிருந்தார்கள். ஷபீர் அஹ்மத், அப்துல் ஹமீத், முகம்மது ஜக்கரியா, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது சயீத், முகம்மது அலி ஜின்னா என்ற ஆண் மக்களும்.
ரஹ்மததுன்னிசா, பாதிமாஜின்னா என்ற பெண் மக்களும் பிறந்தனர்.
நியாயம் வழங்குதல் :
ஹாஜியார் அவர்கள் தஞ்சை மாவட்டம் முழுதும், அதைத் தாண்டியும் அறிமுகம் ஆனவர்கள். சொல்லாலும் வாக்காலும், இறைவழி நின்று செயலால் அதைக் கட்டிக்காத்த அந்த பெருமகனின் சேவை மக்களிடையே ஏற்பட்ட எண்ணிறந்த பிணக்குகளை மனமுறிவுகளை நேர்படுத்தியிருக்கின்றன. எத்தனையோ சச்சரவுகள், சண்டைகள்,
வழக்கு மன்றம் செல்லாமலே ஹாஜியார் அவர்களின் பஞ்சாயத்தால் சுமூகமாக தீர்க்கப்பட்டிருக்கின்றன.
Tuesday, July 10, 2012
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி
மதரஸா மிஸ்பாஹுல் ஹுதா, ஹாஜியார் அவர்களின் (இக்கட்டுரையில் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) அரவணைப்பில் சீரிய கவனம் பெறத்தலைப்பட்டது. அதனைப் பெருக்கி வலுவும், விரிவும் அடையச் செய்வதை ஒரு சவாலாகவே ஏற்றுக் கொண்டார்கள். மதரஸாவின் நாஜிராக விளங்கி புகழ் பெற்ற அல்ஹாஜ் மௌலானா மௌலவி நா.ப. முஹம்மது இபுராஹீம் சாஹிப் அவர்கள், ஒவ்வொரு துறையிலும் மதரஸாவின் வளர்ச்சிக்கு ஹாஜியார் அவர்களுடனே தோள் கொடுத்து நின்றார்கள். மதரஸாவின் சேவையும்,வளர்ச்சியும் விண்முட்டுவதைக் காண்பதே தமது இலட்சியமாகக் கொண்டு உழைத்தார்கள். ஹாஜியார் அவர்கள் கல்விக் கூடத்தின் வளர்ச்சிக்காக யார் என்ன நல யோசனைகள் சொன்னாலும் கவனமுடன் கேட்பார்கள். பல பெரியோர்களின் யோசனைகளையும் நாடிச் செல்வார்கள். நீடூர்பிரபா வர்த்தகர் அல்ஹாஜ் T.S. ராஜா முகம்மது அவர்களும் அவ்வொப்போது நல்கருத்துகள் சொல்லியும் கலந்துரையாடியும் ஊக்குவித்தார்கள். ஹாஜியார் அவர்கள் ஒவ்வொரு நாள் காலையிலும் சுப்ஹூ தொழுகைக்குப்பின் நீண்ட நேரம் நண்பர்களுடன், மதரஸாவின் நேசர்களுடனும் அதனுடைய அபிவிருத்திக்காகவும் அழகிய வளர்ச்சிக்காகவும் கலந்தோலோசிப்பார்கள். பின் மதரஸா மாணவர்கள் திருக் குர்ஆன் ஓதும் தேன்மழையில் நனைந்து உள்ளமும் உணர்ச்சியும் சிலிர்க்க மெய் மறந்திருப்பார்கள். அதன் பிறகே தன் சொந்த அலுவல்களை கவனிக்கச் செல்வார்கள். திட்டமும் ,திண்ணிய எண்ணங்களும் செயல்படத் துவங்கின. பக்கத்து நாடான சிலோனில் வாழும் முஸ்லீம்கள் மார்க்கப் பட்றையும் இஸ்லாமியக் கல்வியின் இன்றியமையாதத் தன்மையையும் நன்குணர்ந்தவர்கள். அவைகளை செயல்படுத்த துணியும் செந்நேறியாளர்களை இருகரங்கள் நீட்டி வரவேற்க துடித்துக் கொண்டிருந்தார்கள்.மனிதகுல தந்தையான ஹஸ்ரத் ஆதம் (அலை)அவர்கள் தோன்றிய திருத்தலத்தை கொண்ட நாடல்லவா மார்க்கப் பற்று பீரிட்டெழுவதில் ஆச்சரியமில்லை. அவ்வுணர்வு அவர்களோடு ஊனோடும், உணர்வோடும் கலந்தது. நாடிப்பிடித்தறியும் சமுதாயத்தின் நல்வைத்தியரான ஹாஜியார் அவர்கள் நன்குணர்ந்தவர்கள். மதரஸாவின் வளர்ச்சியையே முழு மூச்சைக் கொண்ட தலைவர் அவர்கள் நாஜிர் அவர்களை சிலோனுக்கு அனுப்பினார்கள். செயலாற்றலும், சுவையான சொல்வளமும் கொண்ட நாஜிர் நா.ப. அவர்கள் சிலோன் சென்றார்கள் அவர்கள் சுமந்து சென்ற நன்னோக்கையும் தலைவர் அவர்கள் வேண்டுகோளையும் கேட்ட அந்நாட்டுப் பெருமக்கள் உளமார வரவேற்று உபசரித்தார்கள். எடுத்த எடுப்பிலே புரவலர் சிலர் ரூபாய் இருபத்து ஏழாயிரதுக்கு மேல் தந்து மதரஸாவிற்கு நிலம் வாங்கி வைக்க முன் வந்தனர்.
Monday, July 9, 2012
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்
மாயூரம் மணிக்கூண்டு
(இக்கட்டுரையில் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்)மாயூர நகருக்கு தனி அழகைக் கொடுத்துக் கொண்டு உயர்ந்து நிற்கும் மணிக்கூண்டு ஹாஜியார் அவர்களின் அரச்செயலை,தொண்டுள்ளத்தை இன்னும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டு அணிகள், உலகையே கிடுகிடுக்க வாய்த்த எதிரிகளை, டுனிஷ்யாவில் புறமுதுகிடச் செய்த பெரு வெற்றியைக் கொண்டாட நினைத்த ஹாஜியார் அவர்களின் உள்ளத்தில் பாமர மக்களின் நலனும் பளிச்சிட்டது. அதன் விளைவுதான் 1943 -ல் மாயூர நகரில் சுமார் எண்ணாயிரம் ரூபாய் சொந்தச் செலவில் அவர்கள் கட்டிய மணிக்கூண்டினாலடையும் பயனை எழுதிக் காட்டத் தேவையிலை.

Sunday, July 8, 2012
ஒவ்வொரு லைக்கும், ஒவ்வொரு கிளிக்கும் எதில் முடியுமோ!
நீங்கள் கொடுத்த ஒவ்வொரு லைக்கும், எழுதிய ஒவ்வொரு வார்த்தையும் ஒவ்வொரு கிளிக்கும்
ஒவ்வொரு புகைப்படங்களும் , கருத்தும் மற்றும் அனைத்தும்
கண்காணிக்கப்படுகின்றது.இது ஒவ்வொரு நிமிடங்களிலும் நடைபெறுகின்றது.
மனிதனால் உருவாக்கப்பட்ட கணினியில் நாம் செயல்படும் கூகுள் ,பேஸ்புக்
போன்றவைகளில். அமெரிக்கா ஆகாய உயரத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட உளவு
சாதனங்கள் நம்மை கண்காணிக்கின்றது. இவைகள் செய்வதனை நாம் அறியாமல் நமக்கு
நினைத்ததை எழுதுகின்றோம் பின்பு பல அவதிக்கு உள்ளாவதையும் அறிகின்றோம்.
ஆனால் ஒன்றை மட்டும் நாம் நம்ப மறுக்கின்றோம். அனைத்துக்கும் மேலாக இறைவன்
நம்மை கவணிக்கின்றான் என்பதை. இறைவன் இரக்கமுள்ளவன், மிகக் கிருபையுடையவன் அவன் உடனே நமக்கு
தண்டனை தருவதில்லை. நாம் திருந்துவோம் என அவன் நினைக்கின்றான்.
மனிதன் போடும் கணக்கு தவறாக இருக்கலாம் ஆனால் இறைவன் போடும் கணக்கு ஒருகாலமும் தவறாக இருக்க முடியாது. உன் நோக்கத்தைப் பார்பவன் மற்றும் உன் செயலைப் பார்பவன் இறைவன். கணினிக்கு உன் நோக்கம் தெரியாது. உன் செயல்தான் அது பார்க்கும். அதனைக் கொண்டு உனக்கு அது தண்டனை கொடுத்துவிடும். திருந்துவதற்கு வாய்பே தராது. இந்நிலை இருக்க நாம் போனபோக்கில் ஒரு லைக்கும் கிளிக்கும் செய்து விடுகின்றோம் பேஸ்புக்கில். அதற்கு முகம் அதனுடைய புத்தகம்தான். அதில் ஏன் உங்கள் விளையாட்டு. கவனம் தேவை. கண்டதெற்கெல்லாம் ஒரு லைக் மற்றும் நினைத்ததெல்லாம் எழுதுவது தேவையா! மற்றவர் மனதை புண்படுத்துவத்தின் வழியே நாம் மகிழ வேண்டுமா! அன்பால் திருத்து அதற்கு முன் நீயே திருந்திக் கொள்.
மனிதன் போடும் கணக்கு தவறாக இருக்கலாம் ஆனால் இறைவன் போடும் கணக்கு ஒருகாலமும் தவறாக இருக்க முடியாது. உன் நோக்கத்தைப் பார்பவன் மற்றும் உன் செயலைப் பார்பவன் இறைவன். கணினிக்கு உன் நோக்கம் தெரியாது. உன் செயல்தான் அது பார்க்கும். அதனைக் கொண்டு உனக்கு அது தண்டனை கொடுத்துவிடும். திருந்துவதற்கு வாய்பே தராது. இந்நிலை இருக்க நாம் போனபோக்கில் ஒரு லைக்கும் கிளிக்கும் செய்து விடுகின்றோம் பேஸ்புக்கில். அதற்கு முகம் அதனுடைய புத்தகம்தான். அதில் ஏன் உங்கள் விளையாட்டு. கவனம் தேவை. கண்டதெற்கெல்லாம் ஒரு லைக் மற்றும் நினைத்ததெல்லாம் எழுதுவது தேவையா! மற்றவர் மனதை புண்படுத்துவத்தின் வழியே நாம் மகிழ வேண்டுமா! அன்பால் திருத்து அதற்கு முன் நீயே திருந்திக் கொள்.
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி)
அரசியல் வாழ்க்கை
(இக்கட்டுரையில் அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்) ஹாஜியார் அவர்களின் அரசியல் ஈடுபாடும் அதன் வாயிலாக ஆற்றிய பணியும் சிறப்பு வாய்ந்தன. .முஸ்லிம்களுக்கிடையே அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தியும், ஒற்றுமையை உண்டாக்கவும் நாடெங்கும் முஸ்லிம் மாநாடுகள் நடைப்பெற்றன. ஹாஜியார் அவர்கள் மாயூரம் வட்டத்திற்கு தலைமையேற்றார்கள், அவர்களின் தலமையின் கீழ் அனைத்து ஊர் மக்களும் அணி வகுத்தனர். 1938-ம் ஆண்டு மாயூரம் தாலுக்கா மாநாட்டைக் கூட்டினார்கள். மிகுந்த கோலாகலத்துடன் பேறு வெற்றியுடன் நடந்தது அம்மாநாடு. பெருந் தலைவர்கள் பலர் பங்கு பெற்றனர். இதுகாறும் இந்த பகுதியிலே அம்மாதிரியொரு மாநாடு நடைபெற்றதில்லை என்று சொல்லுமளவுக்கு இருந்தது. மாநாட்டையொட்டி ரூபாய் ஆயிரத்திற்கு மேல் சொந்த பணத்தை செலவு செய்தார்கள்.
பிறகு 1942-ம் ஆண்டு சென்னையில் மாநில முஸ்லிம்லீக் மாநாடு பெருமளவில் நடந்தது. பட்டி தொட்டிகளிலிருந்தும் மக்கள் மாநகரை நோக்கி திரண்டனர். அலைகடளென ஆர்ந்தெழுந்த மக்களை ஒழுங்குடனும் கட்டுப்பாட்டுடனும் அழைத்து செல்லும் பொறுப்பு ஹாஜியார் அவர்கள் மீதே சார்ந்திருந்தது. அவர்கள் அயரவில்லை. பிறைகொடி பிடித்த அப்பெருங் கூட்டதிற்கு தனி இரயில் வண்டி ஒன்றை ஏற்பாடு செய்து ஒரு சரித்திரத்தையே சமைத்தார்கள். ஒழுங்கோடும் உவகையோடும் அனைவரும் இரயில் ஏறி மாநாடு கண்டு வெற்றிகரமாக ஊர் திரும்பினர். தனி இரயில் ஏற்படுத்தியதின் மூலமாக சொந்த பணம் வெகுவாக செலவழிந்ததையும் அவர்கள் ஒரு பொருட்டாக எண்ணவில்லை. சமுதாயப் பணியே அவர்களது இதய மூச்சாக இருந்தது.

Saturday, July 7, 2012
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
தென்னகங்கண்ட அரபிக் கல்லூரிகளில் தலைசிறந்த ஒன்றாகத் திகழும் மதரஸா மிஸ்பாஹுல்,ஹுதாவை இன்றைய சிறப்பிற்கு உயர்த்தி வைத்தவர்கள்
Friday, July 6, 2012
சரித்திரம் படைத்த சுவர்கள்
சரித்திரம் படைத்த சுவர்கள்
மனிதனின் நாகரீகம் இதயத்தை சுருக்குகின்றது . பரந்த மனம் நம்மை விட்டு பறக்கின்றது. வீட்டுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு சுவர் அமைத்துக் கொள்கின்றோம். சகோதர பாசம் போய் ஒரே வீட்டில் தன பங்குக்குள் சுவர் எழுப்பப் படுகின்றது.அது ஒற்றுமையாயும் நடக்கலாம் அல்லது ஊர் நாட்டாண்மை அறிவுரையோடு அல்லது பல ஆண்டுகள் வழக்காடி நீதிபதியின்ஆணையின் படி நடக்கலாம் .நம் மூதாதையர் காலத்தில் ஒரு அறை இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தது நமக்கு இப்பொழுது அது அதிசியமாகத் தெரியலாம்.
பண்டைய காலத்தில் நாட்டுக்கு நாடு அந்நிய படைகள் வந்து தாக்காமலும் தன நாட்டை பாதுகாக்கவும் நீண்ட சுவர்கள் எழுப்பி இருந்தார்கள் .அந்த சுவர்கள் இப்பொழுதும் அறிய சுவர்களாக காட்சி அளிக்கின்றது.அந்த சுவர்கள் சிமன்டால் கட்டப்பட்டதல்ல . நாம் இப்பொழுது எழுப்பும் சுவர்கள் நம் காலத்திலேயே பல விரிசல்களை உண்டாக்கி(குடும்பத்தில் விரிசல் வருவதுபோல்) நமக்கு செலவுக்கு மேல் செலவை உண்டாக்குகின்றது. பொறியியல் வல்லுனர்கள் உதவியுடன் கட்டப்பட்ட சுவருக்கும் இதே நிலை
சரித்திரம் படைத்த சுவர்கள் கட்டப்பட்ட பல இன்றும் கட்டிய நிலையிலேயே காட்சி அளிக்கின்றது.
அவற்றில் சிலவற்றை இங்கு கண்டு மகிழ்வோம்
2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டசீன பெருஞ் சுவர் சின் ஷி ஹோங்க்டி பேரரசரால் உருவாக்கப்பட்டது சின் (Ch'in) பாரம்பரியம் (- 206 கி.மு. 221 கி.மு.) போது சீனா முதல் பேரரசரால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
The Great Wall of China was built over 2,000 years ago, by Qin Shi Huangdi, the first emperor of China during the Qin (Ch'in) Dynasty (221 B.C - 206 B.C.). In Chinese the wall is called "Wan-Li Qang-Qeng" which means 10,000-Li

நான் 0.4mm ஈ...
நான் 0.4mm ஈ...
உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி (fly) தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் காணப்படும் ஈயை ஒத்திருக்கும் இதன் அளவு 0.4 mm மட்டுமே. அதாவது, ஒரு உப்பு துகள் அல்லது மிளகு துகளை விட சிறிய சைஸ். கண்ணால் பார்ப்பதற்கு கடினமான இந்த உயிரினம், இறக்கைகள் மற்றும் சிக்கலான உடலமைப்பை கொண்டதாக திகழ்வதால் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உயிரினங்கள் சிறிய அளவு எறும்புகள் மீது முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் வளர வளர எறும்பின் தலைப்பகுதிக்கு சென்று விடுகின்றன. பிற்பாடு, எறும்பின் தலைப்பகுதியையும் உடல்பகுதியையும் இணைக்கும் மெல்லிய தோலை செயல் இழக்க செய்துவிடுகின்றன. இதன் விளைவாக, எறும்பின் தலை தனியே கழண்டு விழுந்து விட, அதனை தங்கள் இருப்பிடமாக பயன்படுத்திகொள்கின்றன, சுப்ஹானல்லாஹ். மேலே கூறிய இவற்றின் இயங்குமுறை சோதிக்கப்படவில்லை. இருப்பினும் இம்மாதிரியான பூச்சிககள் சிலவற்றின் இயக்கமுறை இதுப்போன்றே இருப்பதால் இந்த யூகத்தை கொண்டுள்ளனர் ஆய்வாளர்கள். அதே நேரத்தில், இந்த பூச்சியின் உடல் வடிமவைப்பு மற்ற பூச்சிகளை விட வேறுபட்டும் இருக்கின்றது.
0.4 mm அளவில் ஒரு முழுமையான பறக்கும் உயிரினம். ம்ம்ம்...பரிணாமம் எவ்வளவு அற்புதமா வேலை செய்திருக்கின்றது பாருங்கள் !!!! வழக்கம் போல இவை எந்த உயிரினதிளிருந்து வந்தது என்பதற்கு ஆதாரமில்லை...இருப்பினும் இவை பரிணாமம் தான் அடைந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.... :) :)
இது குறித்த செய்தியை வாசிக்க.....http://www.foxnews. com/scitech/2012/07/02/world- tiniest-fly-may-decapitate- ants-live-in-their-heads/
பரிணாம கோட்பாட்டின் முட்டாள்தனமான வாதங்களுக்கான பதில்களை/ஆய்வுகளை/அலசல்களை துறைவாரியாக இங்கே படிக்கலாம் http://www.ethirkkural.com/p/ blog-page_19.html
வஸ்ஸலாம்,
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
உலகின் மிகச்சிறிய பறக்கும் பூச்சி (fly) தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வீட்டில் காணப்படும் ஈயை ஒத்திருக்கும் இதன் அளவு 0.4 mm மட்டுமே. அதாவது, ஒரு உப்பு துகள் அல்லது மிளகு துகளை விட சிறிய சைஸ். கண்ணால் பார்ப்பதற்கு கடினமான இந்த உயிரினம், இறக்கைகள் மற்றும் சிக்கலான உடலமைப்பை கொண்டதாக திகழ்வதால் ஆய்வாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த உயிரினங்கள் சிறிய அளவு எறும்புகள் மீது முட்டைகள் இடுகின்றன. இந்த முட்டைகள் வளர வளர எறும்பின் தலைப்பகுதிக்கு சென்று விடுகின்றன. பிற்பாடு, எறும்பின் தலைப்பகுதியையும் உடல்பகுதியையும் இணைக்கும் மெல்லிய தோலை செயல் இழக்க செய்துவிடுகின்றன. இதன் விளைவாக, எறும்பின் தலை தனியே கழண்டு விழுந்து விட, அதனை தங்கள் இருப்பிடமாக பயன்படுத்திகொள்கின்றன, சுப்ஹானல்லாஹ். மேலே கூறிய இவற்றின் இயங்குமுறை சோதிக்கப்படவில்லை. இருப்பினும் இம்மாதிரியான பூச்சிககள் சிலவற்றின் இயக்கமுறை இதுப்போன்றே இருப்பதால் இந்த யூகத்தை கொண்டுள்ளனர் ஆய்வாளர்கள். அதே நேரத்தில், இந்த பூச்சியின் உடல் வடிமவைப்பு மற்ற பூச்சிகளை விட வேறுபட்டும் இருக்கின்றது.
0.4 mm அளவில் ஒரு முழுமையான பறக்கும் உயிரினம். ம்ம்ம்...பரிணாமம் எவ்வளவு அற்புதமா வேலை செய்திருக்கின்றது பாருங்கள் !!!! வழக்கம் போல இவை எந்த உயிரினதிளிருந்து வந்தது என்பதற்கு ஆதாரமில்லை...இருப்பினும் இவை பரிணாமம் தான் அடைந்திருக்க வேண்டும் என்பது மட்டும் உண்மை.... :) :)
இது குறித்த செய்தியை வாசிக்க.....http://www.foxnews.
பரிணாம கோட்பாட்டின் முட்டாள்தனமான வாதங்களுக்கான பதில்களை/ஆய்வுகளை/அலசல்களை துறைவாரியாக இங்கே படிக்கலாம் http://www.ethirkkural.com/p/
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹமத் அ
Subscribe to:
Posts (Atom)