Friday, July 6, 2012

சரித்திரம் படைத்த சுவர்கள்

சரித்திரம் படைத்த சுவர்கள்
மனிதனின் நாகரீகம் இதயத்தை சுருக்குகின்றது . பரந்த மனம் நம்மை விட்டு பறக்கின்றது. வீட்டுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு சுவர் அமைத்துக் கொள்கின்றோம். சகோதர பாசம் போய்  ஒரே வீட்டில்  தன பங்குக்குள் சுவர் எழுப்பப் படுகின்றது.அது ஒற்றுமையாயும் நடக்கலாம் அல்லது ஊர் நாட்டாண்மை அறிவுரையோடு அல்லது பல ஆண்டுகள் வழக்காடி நீதிபதியின்ஆணையின் படி நடக்கலாம் .நம் மூதாதையர் காலத்தில் ஒரு அறை இருந்தாலும் கூட்டுக் குடும்பத்தில் ஒற்றுமையாக வாழ்ந்தது நமக்கு இப்பொழுது அது அதிசியமாகத் தெரியலாம்.

 பண்டைய காலத்தில் நாட்டுக்கு நாடு அந்நிய படைகள் வந்து தாக்காமலும் தன நாட்டை பாதுகாக்கவும் நீண்ட சுவர்கள் எழுப்பி இருந்தார்கள் .அந்த சுவர்கள் இப்பொழுதும் அறிய சுவர்களாக காட்சி அளிக்கின்றது.அந்த சுவர்கள் சிமன்டால் கட்டப்பட்டதல்ல .  நாம் இப்பொழுது எழுப்பும் சுவர்கள்   நம் காலத்திலேயே பல விரிசல்களை உண்டாக்கி(குடும்பத்தில் விரிசல் வருவதுபோல்) நமக்கு செலவுக்கு மேல் செலவை உண்டாக்குகின்றது. பொறியியல் வல்லுனர்கள் உதவியுடன் கட்டப்பட்ட சுவருக்கும் இதே நிலை

  சரித்திரம் படைத்த சுவர்கள் கட்டப்பட்ட பல இன்றும் கட்டிய நிலையிலேயே  காட்சி அளிக்கின்றது.
அவற்றில் சிலவற்றை இங்கு கண்டு மகிழ்வோம்

2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டசீன பெருஞ் சுவர் சின் ஷி ஹோங்க்டி பேரரசரால் உருவாக்கப்பட்டது சின் (Ch'in) பாரம்பரியம் (- 206 கி.மு. 221 கி.மு.) போது சீனா முதல் பேரரசரால், 2,000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

The Great Wall of China was built over 2,000 years ago, by Qin Shi Huangdi, the first emperor of China during the Qin (Ch'in) Dynasty (221 B.C - 206 B.C.). In Chinese the wall is called "Wan-Li Qang-Qeng" which means 10,000-Li
பாபிலோன் சுவர்
பாபிலோன் சுவரும் முக்கியம் வாய்ந்தது . 575 BCயில் கட்டப்பட்டது .இந்த சுவரை மீட்பதற்கு சதாம் ஹுசேன் பெரிய முயற்சி எடுத்தார்

 பெர்லின்  சுவர் 

வியநாம் வீரர்கள் நினைவுச் சுவர் 

புகழ்பெற்ற ஜிம்பாப்வே சுவர்


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

படங்களும், தகவல்களும் மிக அருமை... தொடர வாழ்த்துக்கள் ! மிக்க நன்றி சார் !