Wednesday, July 18, 2012

மரியாதை செய்யும் விதம் எப்படி இருக்க வேண்டும்!


 மரியாதை என்ற பெயரில்  ஒருவரை தன்வசம் ஆக்கிக்கொள்ளும் நோக்கம்தான் முதன்மையாக இருக்கும் காலமாக இருப்பதனை இப்பொழுது நாம் பார்க்கின்றோம். தலைவர் என்று ஒருவரை நாம்  தேர்ந்தெடுப்பதே சுயநலப் போக்காகவே உள்ளது. அது அந்த தலைவனின் காலில் விழும் நிலைக்கு நம்மை கொண்டு செல்வது ஒரு வேடிக்கையான நிகழ்வாக நடந்து வருகின்றது. இறைவன் ஒருவனுக்கு  மட்டும்தாம் நாம் சிரம் தாழ்த்தி வழிபட வேண்டும். ஒரு தனிப்பட்ட தனி மனிதனுக்கு அளவுக்கு அதிகமாக அதிகாரமும், மரியாதையையும் கொடுக்கும்  என்ற  எண்ணத்தில் தன்னை தாழ்த்திக்கொள்ள ஈடுபடும்போது அவர் சர்வாதிகாரியாக  மாறும் நிலை ஏற்பட்டு நாம் நமது சுய மரியாதையை இழந்து  விடுகின்றோம். வேண்டாம் இந்த அவல நிலை. நாம் நமது கவுரவத்துடன்   இருந்து மற்றவருக்கும் கொடுக்க வேண்டிய மரியாதையை முறையாக கொடுப்போம்.

No comments: