Monday, July 9, 2012

அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)

 அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
(by K.M. ஜக்கரியா, B.Com.,எலந்தங்குடி
                                                                                
அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப்
மாயூரம்  மணிக்கூண்டு  


   (இக்கட்டுரையில்  அல்ஹாஜ்  சி . ஈ. அப்துல் காதர் சாஹிப் அவர்களை ஹாஜியார் என்றே குறிப்பிடுவோம்)மாயூர நகருக்கு தனி அழகைக் கொடுத்துக் கொண்டு உயர்ந்து நிற்கும் மணிக்கூண்டு  ஹாஜியார் அவர்களின் அரச்செயலை,தொண்டுள்ளத்தை இன்னும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப்போரில் நேசநாட்டு அணிகள், உலகையே கிடுகிடுக்க வாய்த்த எதிரிகளை, டுனிஷ்யாவில் புறமுதுகிடச் செய்த பெரு வெற்றியைக் கொண்டாட நினைத்த ஹாஜியார் அவர்களின் உள்ளத்தில் பாமர மக்களின் நலனும் பளிச்சிட்டது. அதன் விளைவுதான் 1943 -ல்  மாயூர நகரில் சுமார் எண்ணாயிரம் ரூபாய் சொந்தச் செலவில் அவர்கள் கட்டிய மணிக்கூண்டினாலடையும் பயனை எழுதிக் காட்டத் தேவையிலை.




 மாயூரம்  டவுன் பள்ளிவாசல்.



      மாயூர நகரம் வாணிபத்திலும், பிற துறைகளிலும் நாளொரு மேனியும் விரிவடைதுக் கொண்டே வருவது கண்கூடு. இதில் முஸ்லீம்களின் பங்கு அனைத்துத் துறைகளிளேயும் கணிசமானது. வணிகத்திலாகட்டும், வழக்கு மன்றங்களிலாகட்டும், கற்கவரும் மானவர்களாகட்டும் கடைகளில் வந்து சாமான்கள் வாங்குபவர்களாகட்டும் தினமும் முஸ்லீம்கள் பெருமளவில் நகருக்கு வந்து போய்கொண்டிருக்கின்றனர். பகல் முழுதும் மாயூரத்திலேயே தங்கி வியாபாரம் செய்பவர்களும் நூற்றுக்கு மேல் பெருகியிருந்தனர். வல்லோனை வணங்குவதற்கு நகர மத்தியில் ஒரு  பள்ளிவாசல் இல்லாமலிருந்தது. செல்வம் மிகுந்தவர் பலர் இருந்தனர். தொழுவதற்கு ஒரு பள்ளியில்லையே என்று  சிந்தனை செய்பவர்களுக்கும் குறைவில்லை. ஆனால் அதைச் செயலில் காட்டியவர் நம் ஹாஜியார் அவர்களே. தூர நோக்கும் தொண்டு உள்ளமும், வள்ளற்றன்மையும்  கொண்ட ஹாஜியார் அவர்கள் இதனை முழுதும் உணர்ந்தார்கள். 1945 - ல் அழகியதொரு இறைவன் இல்லத்தை சொந்தத்தில் எண்ணயிரம்  ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டி முடித்த அதே ஆண்டு வக்பு செய்தார்கள். மாயூர மத்திய பேருந்து நிலையத்திற்கருகில் நகர விரிவுப்பகுதியில் இன்று அமைந்திருக்கும் பள்ளிவாசலே அது. இந்த தெய்வீகச் செயலுக்குக் கூடச் சில பகுதியிலிருந்து எதிர்ப்பு கிளப்பியது. ஹாஜியார் அவர்கள் தைரியத்தினாலும் செல்வாக்காலும் இறையருளாலும் சமாளித்தார்கள். பள்ளிவாசலைச் சுற்றி தங்குவதற்குக் குடியிருப்பு அறைகளும் கடைகளும் கட்டி பள்ளிவாசலுக்கு நிலையான வருமானத்திற்கு வழி வகுத்தார்கள். இன்று அந்தப் பள்ளியில் நின்று இறைவனை நோக்கி கையேந்தும் அத்துணை உள்ளங்களின் இறைஞ்சுதலிலேயும், பள்ளியை நிர்மாணித்த அப்பெருமானுக்கு பங்குண்டு.


நீடூர்  அரபிக்கல்லூரிக்கான  சேவை.

 மதரஸா மிஸ்பாஹுல்  ஹுதாவின் தலைவராக அமைதியுடனும்    அழகுடனும் பணி சித்து வந்த அல்ஹாஜ் அ.யாகூப் சாஹிப் அவர்கள் 1945 -ம் ஆண்டு மே திங்கள் இறுதியில் இறைவனடி சேர்ந்தார்கள். அவர்கள் மதரஸாவின் நிர்வாக்கியல்ஹாஜ் மௌலானா மௌலவி அப்துல் கரீம் ஹஜ்ரத் கிப்லா அவர்களின் மூத்த சகோதரரும்  ஹாஜியார்  அவர்களின் அன்பு மச்சானும்  ஆவார்கள். அல்ஹாஜ் யாகூப் சாஹிப்அவர்கள், தாம் நலக்குறைவுற்ற நிலையிலே  ஹாஜியார் அவர்களைக் கூப்பிட்டு,மதரஸாவின் பொறுப்பை ஒப்படைத்தார்கள். தமக்குப் பிறகு மதரஸாவைப் பேணிப் பாதுகாப்பதற்கு,  ஹாஜியார் அவர்கள் முற்றிலும் பொருத்தமானவர்,தகுதிப் பெற்றவர் என்று  உணர்ந்தார்கள். மேலும் அக்கல்விக் கூடத்தை  ஆல்போல் வளரச் செய்து பயன் சொரியச் செய்வார்கள் என்று உளமார நம்பினார்கள். அவர்களின் கணிப்பு எவ்வளவு உண்மையானது! நிதர்சனமானது! இதனிக் கேள்வியுற்ற அணைத்து மக்களும் மதரஸாவின் அங்கத்தினர்களும், அறிரும், ஆன்றோரும் வரவேற்றனர். ஏகமனதாக ஒரே குரலில் ஹாஜியார் அவர்களை  மிஸ்பாஹுல்  ஹுதாவின் தலைவராக தேர்ந்தெடுத்தார்கள்.

  ஹாஜியார் அவர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்ற நிலையிலேயே மதரஸாவின் சரித்திரம் திருப்பு முனை கண்டது. அதுவரை அடக்கத்துடன் அமைதியுடனும்  பணியாற்றிய மிஸ்பாஹுல் ஹுதா ஏற்றம் பல பெற்று நிமிரத் தொடங்கியது.  பணி செய்வதில் பெருகத் தலைப்பட்டது. கடல் கடந்தும் கல்வி மணம் பரப்பத் தொடங்கியது.

ஜில்லா போர்டு அங்கத்தினர்:

அதே ஆண்டு ஹாஜியார் அவர்கள் தஞ்சைஜில்லா போர்டு அங்கத்தினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். சமூகத்தில் அவர்கள் பெற்றிருந்து நன் மதிப்பையும் கண்ணியமான தலைமைப் பொறுப்பையும் இதிலிருந்தே நன்குணரலாம். அதை கௌரவப் பதவியாகவும் அலங்கார உதியோகமாகவும் எண்ணி வாளாவிருந்து விடவில்லை. ஜில்லா போர்டு மூலமாக அரும் பெரும் பணிகளைச் சமுதாயத்திற்கும் மக்களுக்கும் செத்தார்கள்.
அரபிக்கல்லூரி வளம் பெறுதல்:
இறைவன் நாடினால் (இன்ஷா அல்லாஹ்)அடுத்த பகுதியில் தொடரும் .....         
Jazaaka Allah khair! :ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா நுற்றாண்டுப் பெருவிழா  வரலாற்று மலர்  
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)

No comments: