Friday, July 13, 2012

ஆளுமை சக்திக்கு ஆசைப்படாதோர் யார் !

ஆளுமைசக்தி பெற ஆசைபடுவதில் தவறில்லை அதன் மீது ஆசை இருபாலார்க்கும்  இருப்து  இயற்க்கை, அதிலும் இப்பொழுது பெண்களுக்கு அதிகமாகவே இருக்கின்றது. பல்லாண்டு காலமாக அடக்கிவைக்கப்பட்ட பெண் மகள் புரட்சி மனப்பான்மையோடு வெகுண்டு வந்து தங்கள் ஆளுமையை வெளிபடுத்த முன்வந்துள்ளார்கள். அதில் ஒன்றும் தவறில்லை. அந்த ஆளுமை சக்தி எவ்வாறு  இருக்க வேண்டும் எந்த அளவுக்கு அது கையாளப்பட வேண்டும் மற்றும் அந்த சக்தியைப் பெறுவதற்கு அவர்கள் கையாண்ட முறை நல்வழியின்  உந்துதளால்  வந்த விளைவா! என்பதனை சிறிது சிந்திக்க வேண்டிய அவசியமாகின்றது.ஆளுமை உள்ளத்தின் வெளிப்பாடாகும் . அது உற்சாகத்தின் ஆணி வேர்.  சிந்தனையின் பிறப்பிடம் .உழைப்பினை உந்தும்  சக்தி.அறிவின் அடித்தளம்.  இத்தனையும்  சேர  முயற்சி என்ற உந்தும் சக்தி  தேவை.ஆளுமை சக்தி அடைய பல்வேறு முயற்சிகளை கையாண்டு வெற்றி பெற வேண்டிய நிலை. அது தவறான முறையில் வந்தால் முடிவும் தவறாகவே முடியும்.   


   நான் மிகவும் தகுதியுடைய ஆண் அல்லது பெண் அதனால் நான் அடந்கிப்போக வேண்டிய அவசியமில்லை என்ற ஆணவம் தன்னைத்தானே அழித்துக்கொள்ள வழிவகுக்கின்றது. ஹிட்லர் பெறாத ஆளுமையா! அவனது கொடுங்கோல் ஆட்சியின்  முடிவு  அவனோடு  பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தி விட்டது. சரித்திரத்தில் ஹிட்லர் ஒரு அத்தாட்சி. அந்த மகாபலம் பொருந்திய ஆளுமை சக்தியை  வைத்து  இந்த உலகத்தையே அடிபணிய வைக்க முடியுமென்பது ஹிட்லரின் எண்ணம்.அவனிடம் இருந்த ஆளுமை சக்தியினால் உலகப் போர் உருவாகி  மடிந்தவர் பலர் .


அணைத்து சக்திகளும் பிழை செய்யக் கூடியதுதான் ஆனால் முழுமையான கிடைக்கப்பெற்ற சக்தி,ஆதிக்கம் முமையாக தவறு செய்ய முயலும்.( Power tends to corrupt, and absolute power corrupts absolutely.)அதிகாரமும் ஆளுமை சக்தியும் ஒரு வரம்பிற்கு உட்பட்டதாகவும்  முறையாக வந்ததாகவும் இருக்க வேண்டும். அந்த சக்தி கிடைத்தபின் தவறு செய்ய முனைவோர் மீது   தட்டிக் கேட்கக் கூடிய திடமான,உறுதியான உள்ளம் உடையதாய் இருக்க வேண்டும் . நாம் மிகவும் விரும்பி Indian Administrative Service  படித்து தேர்வு எழுதி வெற்றிப்பெற்று கலெக்டராக வர மிகவும் பாடு பட்டேன்.ஆனால் என்னை என் மேல் அதிகாரிகள் முறையாக சேவை செய்ய  விடுவதில்லை அத்துடன் நான் முறையாக செயல்பட்டால் எனக்கு கீழ வேலை செய்யும்  அதிகாரிகளும் எனக்கு  ஒத்துழைப்பு   கொடுப்பதில்லை. நான் மீறி நற்செயல்களில் செயல்பட்டால் என் வேலைக்கே ஆபத்து வரக் கூடி ய வழியினை செய்கின்றனர். நான் நேமையாக வேலை செய்தால் அரசியல் தலைவர்களால் 'பந்தாடப்படுகின்றேன் என்று புலம்பிய அதிகாரிகள் தன மனசாட்சியை  குழி தோண்டி புதைத்து  விட்டு ஏதோ கடமைக்கு வேலை செய்பவர்களாக மாறிவிடுகின்றனர். இதுதான் இன்றைய நிலை .

 ஒரே வழி நம் வாழும் இந்த வாழ்வு  ஒரு இளைப்பாற வந்த  இடம். நமக்கு மேல் அணைத்தும்  அறிந்த ஆண்டவன் இருக்கின்றான் அவனிடமே நாம் பதில் சொல்லியாக வேண்டும் அதற்கு இங்கு நம் வாழ்வை அந்த நோக்கில் தான் செயல்பட வேண்டும்  இந்த திடமான  மன வைராக்கியம்தான் உண்மையான ஆளுமை சக்தியாகும் . இறைவனால் தரப்பட்ட ஒரு சக்தியை வீண் செய்ய  முயலவேண்டாம் முடிந்தவரை உங்களால் ஆற்ற வேண்டிய கடமையை செய்து விடுங்கள் அந்தக் கடமையைய ஆற்ற வழி இல்லையென்றால் உங்கள் சக்தியை வேறு நன்மையான  வழியிலாவது பயன்படுத்தி மக்களுக்கு தொண்டாற்றுங்கள்

No comments: