இனாமாக ஓர் இடம் அனைவருக்கும் உண்டு!
இனாமாக ஓர் இடமென்றால் அவசரம் ஏன்! இனாம் உறுதியாக இருக்கும் நிலையில் அவசரம் தேவையில்லை.
நான்
இனாமாக வாங்க மாட்டேன் என்று ஆணவத்துடன் இருந்தாலும் இருந்து விட்டுப்
போ! பணம் கொடுத்து வாங்கிய இடத்தில ஓர் கட்டிடம் கட்டி மற்றவர்களை
மடையர்களாக்கி உன்னை வந்து துதிபாட அதனுள் அடங்கிக் கொள்! உன்னை அரித்த
பின்பும் நீ அங்கே குடிகொண்டிருக்கிறாய் என்ற நினைப்போ! உனக்கு அத்தனை
சொத்து இருந்தாலும் உறுதியாக உனக்கு ஓர் இடம் கொடுப்பதற்கு யாரும்
மறுக்கமாட்டார்கள். நீ அந்த நிலையில் இருக்க உன்னை மற்றவர் வைத்துக்கொண்டு
அவதிப்படுவதா!
எட்டாத உயரத்தில் (ஈபில் டவரிலிருந்து) நின்றுக் கொண்டு கீழ் பார்த்தால்
கோபுரமும் கொசுவாகத்தான் தெரியும் .உண்மைநிலை அறிய ஒன்றிவிடு. வா! கீழ்
வந்துதானே ஆகவேண்டும். உனக்கு இனாமாக கிடைக்கும் ஆறடி (அல்லது உனக்கு
தேவையான இடம்) தரைக்குக் கீழ்தான். இது
உறுதி. உயர உயரப் போவதற்கு எத்தனை ஆசை. தடுக்கும் நிலை,தடுமாறும் நிலை
வரத்தான் போகின்றது. பார்த்த காட்சிகள் , களித்த கேளிக்கைகள் அனைத்தும் உன்
நினைவிலிருந்து மறைத்த பின்புதான் அந்த தரையும் உனக்கு இடம் தரும். ஆனால்
நீ வாழும் முறையால் செய்த சேவையால் உனக்கென்று ஓர் இடம் நீயே கற்பனையிலும்
காணாத இடம் உனக்கு நிலையாக கொடுக்கப்படும் அவன் (இறைவன்) நினைத்தால்.
விழித்துக் கொள். இத்தருணமே மாறு.இன்ஷா அல்லாஹ் ரமலான் மாதம் உனக்கு
உதவும்.
தூக்கம்
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
"அற்புதம் என்றாலும் ஆண்டவன் என்றாலும் " என்ற இந்த அர்த்தமுள்ள பாடல் வரிகளுக்குச் சொந்தக்காரர் எனது ஆசிரியத் தந்தை நீடூர் வக்கில் S.E.A. முஹம்மது சயீத் அவர்கள்.
- தேரிழந்தூர் தாஜுதீன்
No comments:
Post a Comment