Saturday, July 14, 2012

யாருக்கும் வராத குழப்பம்! இமாமுக்கும் வராதா!

  ஒரு பெண் என்னை திருமணம் செய்துக்கொள்ள விரும்பினாள். எனது சம்மதத்தைக் கேட்டாள்.உடனேயே ஒப்புதல் கொடுத்தேன் .ஆனால் திருமண செலவுக்கு வசதி கிடையாது என்றும் தெரிவித்தேன், நீங்கள் ஒரு செலவும் செய்ய  வேண்டாம் நாங்கள் பார்த்துக்கொள்கின்றோம் என்று அன்போடு அப்பெண் கூறினாள். அவள் படித்த நல்ல ஒழுக்கமுள்ள அழகான பெண்தான். அவள் விருப்பப்பட்டபடி திருமணம் அவர்கள் செலவிலேயே பலரை அழைத்து விருந்துக் கொடுக்கப்பட்டது,

  திருமண மேடையில் திருமணம் செய்து வைக்கும் இமாம் மணப்பெண்ணுக்கு  மகர் தொகை  ( மணமகளுக்கு மணமகன் கொடுக்கும் மகர் தொகை அப்பெண்ணுக்கு வாழ்நாள் காப்புத்தொகையாக திருமணத்தின் போதே அளிக்க வேண்டும் )  'எவ்வளவு கொடுக்கிறீர்கள்' என்று கேட்டார். நான் உடனே 'அது எனக்குத் தெரியாது. பெண்ணிடமே கேளுங்கள் என்றேன்'. உடனே அந்த இமாம் 'இஸ்லாமிய சட்டப்படி மாப்பிள்ளைதான்  மகர் தொகை கொடுக்க வேண்டுமென்றார்'. நான் சொன்னேன் 'நான் வாக்கு மாற  மாட்டேன். பெண்ணே சொல்லிவிட்டாள்  'நீங்கள் ஒரு செலவும் செய்ய  வேண்டாம்' என்று அந்த வாக்குறிதியை நான் மாறினால் அது நான் அந்த பெண்ணை இப்பொழுதே அவமதிப்பதாகிவிடும்' என்றேன். இமாமுக்கே குழப்பம் உண்டாகிவிட்டது  .

 திருமண் வாக்குறுதியை  , ஒப்பந்தத்தை எனக்கு சொல்லிக் கொடுக்க ஆறம்பிதார்  'அப்துல் கரீமுடைய மகள் நிசாவை ஹலீல் அண்ணன் சாட்சியாக மற்றும் ரஹீம் அண்ணன் சாட்சியாக நான் திருமணம் செய்துக் கொள்கின்றேன்' என்றார்.   'நிறுத்துங்கள் . நான் திருமண  செய்ய இருக்கின்றேன் நான் என்று யாரைக் குறிப்பிடுகிறீர்கள். என்னையா அல்லது உங்களையா?  ஹலீல்  மற்றும்  ரஹீம் அவர்கள் தானே சாட்சிகள் அவர்கள் அண்ணனை சாட்சியாக அழைக்கிறீர்களே ஏன்'  என்றேன் . உடனே அந்த இமாமுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நானே மைக்கை  பிடித்து திருமண ஒப்பந்தத்தை ' பெண் கொடுத்த  தொகையை பெண்ணுக்கே மகராக கொடுப்பதாகவும்    ஹலீல்  மற்றும்  ரஹீம் ஆகியவர்கள் சாட்சியாக திறுமணம் செய்துக் கொள்கின்றேன்' என்று  சொல்லிவிட்டேன்.அதற்கு கையழுத்தும் திருமண ஒப்பந்த ஓலையில் போட்டுவிட்டேன் . பெண்ணிடம் முன்பே கையெழுத்து வாங்கி விட்டார்கள். அப்புறம்மென்ன விருந்து சாப்பிட வேண்டியதுதான்.

( பின்புதான் தெரிய வந்தது மரியாதைக்கு சாட்சிகளின் பெயரோடு அண்ணன் என்று  இமாம் சேர்த்துக் கொண்டாராம் .இருப்பினும் அப்படி  சொல்வது சரியல்லதான்) 

1 comment:

okyes said...

திருமணத்திற்கு இமாமே தேவையில்லையென அந்த மணமகனுக்குத் தெரியாமல்போய்விட்டதே! அதுசரி..வலி(பொருப்பாளர்) எங்கே மணமகனே!