Monday, July 2, 2012

மனிதன் மாற்றத்திற்கு உட்பட்டவன்.

  சிலர் நம்மை நாடி வருவது மகிழ்வு .சிலர் நம்மை விட்டு பிரியும் பொது துயரம் .மற்ற சிலர் நம்மைவிட்டு விலகும்போது ஆனந்தம். ஒருவரது செயல்பாடுகள் இத்தனை மாற்றங்களை  ஏற்படுத்துகின்றன.
சிலதை பார்க்கிறோம். சிலவற்றை கவனிக்கிறோம் மற்ற சிலவற்றை காணாமல் தவிர்க்கின்றோம்.

 சிலவற்றை படிக்கிறோம் சிலவற்றை படிப்பதை வெறுக்கிறோம் மற்ற சிலவற்றை படித்து மனதில் நிறுத்திக் கொள்கிறோம்.
சில உணவு ஒருவருக்கு உடலுக்கு ஊட்டம் தருகின்றது மற்ற சில உணவுகள் அவருக்கு ஒவ்வாமையை தந்து அவதிக்குள்ளாகின்றது. சில உணவுப் பண்டங்கள் மீது ஒருவருக்கு   மிகவும் நாட்டம் அவருக்கே மற்ற உணவைக் கண்டால் பிடிப்பதில்லை  . ஒருவருக்கு ஒருவர் சுவைப்பதிலும் ரசிப்பதிலும்  மாற்றம். ஒரே மாதிரியாக சுவைப்பதிலும் ரசிப்பதிலும் அனைவருக்கும் இருந்தால் அது திண்டாட்டதில் வந்து முடியும். பற்றாக்குறை வராமல் இருக்க இந்த மாற்று நிலை உதவுகின்றது. அனைவரும் சிகப்பு பெண்தான் வேண்டுமென்றால் இது இயந்திரத்தால் செய்யக் கூடிய காரியமல்ல. அப்படி அனைத்தும் சிகப்பாக இருந்தாலும் அது வெறுத்து விடும்.மனிதன் மாற்றதினையே விரும்புபவன். மனிதன் மாற்றத்திற்கு (குழந்தையாய் இருந்து முதியோர் வரை) உட்பட்டவன்.


  இறைவன் படைப்பில் எத்தனை வினோதங்கள். அவைகள் அனைத்தும் நம் நன்மைக்காகவே படைத்துள்ளான். ஆனால் அந்த இறைவனை மனிதன் போற்றி தொழுவத்தில் அசட்டை செய்கின்றான். வெற்றி பெற்றால் தனது முயற்சியால் மட்டும் வந்தது என்று பெருமையடைகின்றான் ஆனால்  தோல்வியுற்றால் 'நேரம் சரியில்லை' என்று காலத்தை காரணமாக்கி  இறைவன் மீது பழி போடுகின்றான்.
    (பயபக்தியுடைய) அவர்கள், (புலன்களுக்கு எட்டா) மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்; தொழுகையையும் (உறுதியாக முறைப்படிக்) கடைப்பிடித்து ஒழுகுவார்கள்; இன்னும் நாம் அவர்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழியில்) செலவும் செய்வார்கள். (குர்ஆன-2:3.) \
ஒரு காரியம் ஆவதற்கு அணைத்து  வேலையும் செய்வான்.இறைவனை மிகவும் வேண்டி தொடர்ந்து தொழுவான் காரியம் முடித்தபின் ஏறி வருவதற்கு உதவிய ஏணியை மறப்பான்.

   'என்னிடம் ஒரு பெண் அமர்ந்திருக்குகிபோது நபி(ஸல்) அவர்கள் அங்கே வந்தார்கள். 'யார் இந்தப் பெண்மணி?' என்று கூறிவிட்டு அவள் (அதிகமாக) தொழுவது பற்றிப் புகழ்ந்து கூறினேன். அப்போது நபி(ஸல்) 'போதும் நிறுத்து! நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்து வாருங்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக நீங்கள் சலிப்படையும் வரை அல்லாஹ் சலிப்படைவதில்லை! மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள் தாம்' என்று கூறினார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்-
( ஸஹீஹுல் புகாரி ஹதீஸ்-43 )  

No comments: