Tuesday, July 31, 2012

கையூட்டை கலைவது கைக்கூடுமா!



 மனைவி கணவனை கடையில் சென்று பெரிய வெங்காயம் வாங்கிவரச் சொல்லி ஆணையிடுகின்றாள் ( இப்பொழுதெல்லாம வேண்டுவதில்லை) கணவன் கண்களில் நீர் சுரக்கின்ன்றது. 'வெங்காயம் உரிக்கும்போது எனககுத்தான் கண்களில் நீர் வழியும்  நீங்கள் ஏன் கடைக்கு போகச் சொன்னால்  அழுது மாய்கின்றீர்கள். பின் நான் எப்படி உங்களுக்கு வெங்காய சட்டினி வைப்பது '  என கனத்த குரல் கொடுக்க கணவன் அதற்கு ' வெங்காயம் விலையை நினைத்தாலே பயத்தில் கண்களில் நீர் வழிகின்றது'   என தன்னிலை விளக்கம் தருகிறார். இதுதான் இன்றைய விலை ஏற்றத்தின் நிலை இந்த நிலை வருவதற்கு  கையூட்டு முறை ஒரு முக்கிய காரணமாக அமைந்து விட்டது.

கையூட்டு அல்லது இலஞ்சம் என்பது, ஊழலின் ஒரு வடிவம்
நினைத்ததை சாதிக்க பல வழிகள் கையாளப்படுகின்றன . ஆரம்பம் பற்றி கவலை இல்லை . வந்த வழியைப் பற்றி யார் பேசுவார். எப்படியோ  வந்துவிட்டது அதற்கு பாராட்டும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கின்றது. கோயாபல்சின் தத்துவம் கையாளப்படுகின்றது. திரும்ப திரும்ப சொல்லப்படும்  பொய் உண்மையாக காட்சியாக மாறுவது  போன்ற  நிலை.
சிறு குழந்தை  அழுகை நிறுத்த  சாக்லேட் கொடுத்த பக்கம் குழந்தை வளர்ந்த பின் கையூட்டு கேட்கிறது . சாக்லேட் கொடுத்தவர் கையூட்டு கொடுக்கிறார். இது தொடரும் பக்கமாக மாறிவிட்டது.  ஒருகாலத்தில் இது மறைவாக நடைபெற்றது . சந்தையில் மாடு வாங்கும் போது கையில் துணி போட்டு விரலை வைத்து விலை பேசுவதுபோல் .இப்பொழுது அச்சம் நீங்கி நேராகவும் மறைமுகமாகவும் நடைபெறுகின்றது. ஊடகங்கள் படம் எடுத்து போட்டு அதனை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தாலும் அச்சமும், கூச்சமும், வெட்கமும்    கிடையாது.
 

யாசகம் கேட்பதைவிட  கையூட்டு கேட்பது கேவலமானது. இதன் மறுபெயர்  லஞ்சம். தான் நினைத்ததை சாதிக்கும் நோக்குடன்  ஏதாவது ஒன்றை  கொடுத்தல், வாங்குதல் போன்றவை கையூட்டு முறையாகும்.  கையூட்டு கேட்பது அல்லது லஞ்சம் கொடுப்பது தெற்காசியாவில் அதிகமாக காணப்படுகின்றது என்கின்றனர். நம்நாடும் அதில் முன்னேற்றம் அடைந்துள்ளது. அதனை தடுக்க பல போராட்டங்கள் நிகழ்கின்றன .அதற்காக பல சட்டங்கள் போடப்படுகின்றன. அதற்காக போடப்படும் சட்டத்திலும் ஒரு ஓட்டை(no rule without exception)அந்த ஓட்டையை வைத்து தப்பிக்க பாதுகாப்புக்கு அரசியல் தலைவர்கள் , அதற்காகவே  புகழ்வாய்ந்த வக்கீல்கள் மற்றும் ஆடிட்டர்கள் இருக்கிறார்கள்
ஒரு காலமும் சட்டத்தின் வழியே இந்த
கையூட்டு  அல்லது லஞ்சம் கொடுப்பதனை தடுக்க முடியாது.
சம்பளத்தினை அரசு ஊழியர்கள் போராடி பெற்றுக் கொள்கின்றார்கள் . அவர்களுக்கு வாங்கும் திறன் கிடைத்து விடுகின்றது . மற்ற உழியர் நிலையும் நடுத்தர மற்றும் கீழ தர மக்கள் நிலையும் திண்டாட்டம்தான்
 அதற்கு ஒரே வழி வேலை வாய்ப்பை உருவாக்குவதுதான்.

(இனாம் கொடுப்பதல்ல)
உண்மையான இறை பக்தியும் இதற்கு ஆணிவேராக இருந்து உதவும்

1 comment:

HOTLINKSIN.COM திரட்டி said...

லஞ்சமும் ஊழலும் மிகவும் மலிந்து போய்விட்டன... அதிலிருந்து மீள்வது மிகவும் கடினமான காரியம்தான்...