சுய விமர்சனம் நமக்குள் செய்துக் கொள்ளவேண்டும். அது நம்மை நாமே பாராட்டி அடுத்தவரிடம் விமர்சனம் செய்துக் கொள்வதல்ல.
சுய விமர்சனம்.
ஒவ்வொரு நாளும் நாம் படுக்கைக்கு செல்லுமுன்பு இன்று நாம் ஈடுபட்ட செயல் என்ன! அது நமக்கோ அல்லது மற்றவருக்கோ நன்மையானதாக அமைந்ததா! அல்லது அது தீமையாக இருந்து நம்மையோ அல்லது நமது குடும்பத்தினரையோ அல்லது மற்றவரையோ பாதிக்கும்படி ஆக்கிவிட்டதா என்று சிறிது சிந்திக்க வேண்டும் . நாம் நல்ல காரியங்கள் செய்திருந்தால் அதனை தொடர்ந்து செயல்பட முனைவதுடன் மற்றவர்களயும் தூண்ட வேண்டும் . நாம் பாதகமான செயலில் ஈடுபட்டிருந்தால் முதலில் இறைவனிடம் மன்னிப்பு நாடுவதொடு யாருக்கு நாம் பாதகம் செய்தோமோ அவர்களிடமும் மன்னிப்பு கேட்பதோடு அதற்கு மாற்று வேலையாக பாதிக்கப் பட்டவர்களுக்கு நல்ல காரியங்கள் செய்து கொடுக்க வேண்டும்,
நாளை செய்ய வேண்டிய வேலைகளை ஒரு திட்டம் போட வேண்டும் . முடிந்தால் அதனை எழுதி வைத்துக் கொள்ள வேண்டும்
நாம் யாரையும் குறைவாக மதிப்பிடாமல் இருந்து மற்றவர்களை மதிப்பதுடன் அவர்களின் உணர்வுகளையும் மதிக்க வேண்டும்.
(விஜய் டீவீயில் நடிகர் அமீர்கான் நடத்தும் மாற்றுத்திறன் உள்ளவர்களுக்காக நடத்தும் நிகழ்ச்சி நமக்குள் ஒரு நல்ல மாற்றத்தினை உண்டாக்கும்.. அத்துடன் நடிகர் சூர்யா நடத்தும் ஒரு கோடி நிகழ்ச்சி நமக்கு அறிவை வளர்ப்பதற்கும் வழி வைக்கும்)
தன்னை ஒரு போதும் குறைவாக மதிப்பிடக் கூடாது