Thursday, May 31, 2012

அரபுதேசப் பிரவேசம்

பசி வந்தால்
பத்தும் பறந்துபோகும்
அப்படி ஒரு பசி
அவனுக்கும்
வந்தது

அஃறிணைத் தோட்டத்தில்
ஆகாரம் கிடைப்பதாய்க்
கேள்வி

மனக்குரல் பாதங்களில்
கிழிந்து கூக்குரலிட
அவமதித்தி
அவசரமாய் நடந்தான்

எதிரே நரிவர
நரியானான்

நாய்வர
குரைத்தான்

ஆந்தைவர
இமைகளைத் தொலைத்தான்

இன்று அவனிடம்
பசியும் இல்லை
Source : http://anbudanbuhari.blogspot.in/


சிரிப்பு வருது சிரிப்பு இதன் சிறப்பை
சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு
கருப்பா வெளூப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத்தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும் விந்தை
புரிவது சிரிப்பு -- இதைத் துணையாய்க் கொள்ளும்
மக்கள் மனதில் துலங்கிடும் தனி செழிப்பு

பாதையில் போகும் பெண்ணைப் பாத்துப் பல் இளிப்பதும் ஒருவகை சிரிப்பு -
அதன் பலனாய் உடனே பரிசாய்க் கிடைப்பது
காதறுந்த பழஞ்செருப்பு
காதறுந்த பழஞ்செருப்பு

சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே
சொந்தமான கையிருப்பு
வேறு ஜீவராசிகள் செய்ய முடியாத
செயலாகும் இந்த சிரிப்பு

இது அதிகாரிகளின் ஆணவச் சிரிப்பு
இது அடங்கி நடப்பவரின் அசட்டுச் சிரிப்பு
இது சதிகாரர்களின் சாகஸச் சிரிப்பு
இது சங்கீதச் சிரிப்பு....


படம் :ராஜாராணி
இசை :TR :பாப்பா
இயற்றியவர் : மருதகாசி
பாடியவர் : N.S.கிருஷ்ணன்

No comments: