Showing posts with label ஹஜ். Show all posts
Showing posts with label ஹஜ். Show all posts

Friday, September 4, 2015

புனிதம் மணக்கும் ஹஜ் ..! / சிறப்புக் கவிதை - கலைமகள் ஹிதாயா ரிஸ்வி

உலகில் வாழும் முஸ்லிம் மக்கள் பலர் ஹஜ்ஜுக் கடமையினை நிறை வேறற புனித மக்கா நகர் சென்று இருக்கம் இந்த இனிமையான மாதத்தின் சிறப்புக் கவிதை

புனிதம் மணக்கும் ஹஜ் ..!
மண்ணுலக வாழ்வில் முஸ்லிம் ,
மாந்தரைப் புனிதம் பண்ணும்
புண்ணியம் ஹஜ்ஜுக்கு குண்டு
புரிந்தவர் கின்பம் உண்டு ..!

பாவத்தை யகற்றி நெஞ்சை
பாலென மாற்றும் ஹஜ்ஜை !
தாபமாய் தரிசித் தோர்கள்
தரனியில் ஹாஜி யாவர் !

இஸ்மாயில் நபி செய்த
இணையிலா தியாகந் தன்னை
புஸ்பமாய் மணக்கக் கண்டு
பூரிப்பார் ஹஜ்ஜில் தானே !

Monday, October 14, 2013

இஹ்ராம் என்றோர் இலக்கணம்

முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!
கஅபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள்  ஓர் ஆவல்
கனன்றுகொண்டேயிருக்கிறது.


அருள் நிரம்பிய உன்
அழைப்புக்குச் செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம் நீரால் கழுவி
மூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்

கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

ஹஜ்ஜுக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லாச் சுமைகளையும்  நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

Thursday, September 6, 2012

ஹஜ் பயணத்தால் ஏற்பட்ட மற்ற நன்மைகள் .

ஹஜ்  செய்வது  உடல் தெம்பு மற்றும் வசதி படைத்த ஒவ்வொரு முஸ்லிமுக்கும் கடமையாகின்றது . இஸ்லாம் பல நாடுகளில் பரவிய காலங்களில் முன்பெல்லாம் இப்பொழுதுள்ள வசதிகள் கிடையாது . அதனால் பல நாடுகளிலிருந்து  ஹஜ் செய்ய வரும் மக்கள்   ஹஜ் செய்வதற்குரிய போக்கு வரத்து பற்றிய வழிகளை பற்றி ஆய்வு செய்ய முற்படுவார்கள் . அது முஸ்லிம் மக்களிடையே நிலவியல் ஆராய்ச்சிக்கு வழி வகுத்தது.முஸ்லிம்கள் நிலவியல் சம்பந்தமான நூல்களை அப்பொழுதே எழுதி உள்ளனர். பல இடங்களை கடந்து வரும்போது பலதிறப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பினையும் உருவாகியது . அது வியாபார நுட்பங்களையும் மற்றும் ஒருவருக்கொருவர் உறவாடிக் கொள்வதில் அன்பினைப் பரிமாறிக் கொள்வதோடு ,ஏற்றத் தாழ்வின்றி ,நிற வேறுபாடின்றி ஒருவருக்கொருவருவர் உதவி செய்துக்  கொள்வதிலும் மனித பண்பினை மேன்மை படுத்தியது . முஸ்லிம்களுக்குள் ஓர் ஒற்றுமையை உண்டாக்கியதில் ஹஜ் ஓர் பெரிய பங்கினைத் தருகின்றது
கிப்லாவினை நோக்கி தொழுவதற்கு திசை கண்டுபிடிக்கும் கருவியினை முஸ்லிம்கள் கண்டுபிடித்தனர் 


வாஸ்கோ டி காமா இந்தியாவை நோக்கி பயணம் செய்வதற்கு 'கடலின் சிங்கம்' என்று அழைக்கப்பட்ட ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் உதவி மிகவும்  முக்கியமானதாகும். ஷிஹாப் அல் டின் அகமது இபின் மஜித் அவர்கள் கடலியல் வழிசெலுத்தல் சம்பந்தமாக பல கையேடுகளின் ஆசிரியராவார்.

Sunday, November 6, 2011

விளம்பரத்தினால் ஹஜ் பயணத்தின் புனிதத் தன்மை கெட்டு விடக் கூடாது!

   இப்ராஹீம் இப்னு அத்ஹம் அவர்ஹல் ஹஜ் செல்லும் வழியில் ஒவ்வோர் அடிக்கும் தொழுகை நடத்தி விட்டு கஹ்பாவை காணச் சென்றும் அவர்கள் பார்வைக்கு இறையில்லம் காண முடியாமல் கதறி கண்ணீர் வடித்தார்கள்.அசரீதியாக 'பெண் இனத்தின் தாய் பஸரியாவை வரவேற்க கஅபத்துல்லா சென்றிருக்கிறது' என்று காதில் விழுந்தது.
  
   இதை கேட்டு அதிசயமடைந்தவராக ராபியத்துல் பஸரியா  அவர்களிடம் சென்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் " நான் ஹஜ்ஜுக்கு வருவதாக விளம்பரம் செய்து கொள்ளவில்லை. அதனால் கஅபாவினை பார்க்கும் பாக்கியத்தினை அல்லாஹ்(இறைவன் ) அருளினான். நீங்களே  ஹஜ்ஜுக்கு செல்வதை விளம்பரம் செய்துக் கொண்டு எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடிக்கும் தொழுவதைத் தெரிவித்துக் கொண்டு சென்றீர்கள் அதனால் உங்கள் பார்வைக்கு கஅபா புலப்படவில்லை"  என்றார்கள்.

 (நபியே) நீர் கூறும் மெய்யாக என் தொழுகையும் என் குர்பானியும் (ஹஜ்ஜோடு சம்பந்தப்பட்ட அமல்) என் வாழ்வும் என் மரணமும் அகிலங்களில் இறைவனான அல்லாஹ்வுக்கே சொந்தமாகும். அவனுக்கு யாதொரு இணையுமில்லை. இப்படித்தான் நான் ஏவப்பட்டுள்ளேன். (அல் குர்ஆன் 162, 163)

  ‘இப்படித்தான் ஏவப்பட்டுள்ளேன்’ என்ற ஏவலின் பிரகாரமே நபி(ஸல்) வாழ்ந்துக் காட்டினார்கள். அவர்களோ – அவர்களை சார்ந்த நபித்தோழர்களோ இந்த விளம்பரங்களை கண்டு அஞ்சினார்கள். இதனால் நாளை இறைவனிடம் கூலி கிடைக்காமல் போய்விடுமோ என்று பயந்து அதை வெறுத்து ஒதுக்கினார்கள். இந்த மன நிலை இறைவனுக்காக செயல்படும் ஒவ்வொரு முஸ்லிமிடமும் வர வேண்டும்.

Saturday, October 8, 2011

ஹஜ் மற்றும் உம்ரா செயல்வது எப்படி! மக்கா, மதீனாவிலுள்ள சரித்திரம் முக்கியம் வாய்ந்த இடங்கள்! படங்களுடன் விளக்கம்.

---------------------------------------------------------------------------------------------------------------

ஹஜ் மற்றும் உம்ரா செயல்முறை விளக்கம்

எழுதியவர்/பதிந்தவர்/உரை
வழங்குபவர்:
மௌலவி முஹம்மத் அஸ்ஹர் ஸீலானி
வெளியீடு:
அல்ஜுபைல் அழைப்பு மையம் (சவுதி அரேபியா)ஹஜ் செயல்முறை விளக்கம் from islamkalvi on Vimeo.
Download video – Size: 199 MB
Download CD:
Download VCD Quality files Size: 625 MB
 Source : http://www.islamkalvi.com/portal
 --------------------------------------------------------------------------------

ஹஜ் செயல்முறை விளக்கம் from islamkalvi on Vimeo.
ஹஜ் உம்ரா வழிகாட்டி (ebook)

எழுதியவர்/பதிந்தவர்/உரை
Donwload PDF BookSource : http://www.islamkalvi.com/portal/?p=1145

Thursday, November 11, 2010

அண்ணல் நபி ஸல் அவர்களின் இறுதி பேருரை!

இதற்கு முன் என்றுமே இருந்திராத அளவிற்கு மாபெரும் கூட்டத்தால் அன்று சங்கைமிகு மக்காவின் புனித பள்ளிவாசல் நிரம்பி வழிந்தது, அங்கு கூடியிருந்தோரின் உள்ளச்சமும் வணக்க வழிபாடுகளும் அவர்களின் ஆன்மிக உணர்வுகள் முழுமை அடைந்திருந்ததை வெளிப்படுத்திக் கொண்டிருந்தன.
அதுதான் ஹிஜ்ரி 10ஆம் ஆண்டு ஹஜ் கடமையை நிறைவேற்ற கூடியிருந்த மாபெரும் கூட்டத்தின் எதார்த்த நிலையாகும். அரபுலகம் முழுவதிலுமிருந்து சுமார் ஒரு இலட்சத்து இருபதாயிரத்திற்கும் அதிகமானவர்கள் அங்கே குழுமியிருந்தார்கள். அதுவும் ஒரு மகத்தான வணக்கத்தை, மகத்தான இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்களுடன் சேர்ந்து நிறைவேற்றுகிற மன மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்கள். இறைத்தூதர் முஹம்மது ஸல் அவர்கள் அங்கு வந்திருந்த அனைவரையும் துல் ஹஜ் பிறை எட்டின் நடுப்பகலுக்குப் பிறகு மக்காவிலிருந்து "மினா'விற்கு அழைத்துச் சென்றார்கள். அங்கு ளுஹர், அஸ்ர், மக்ரிப், இஷா, ஸுப்ஹு ஆகிய தொழுகைகளை முடித்துவிட்டு சூரிய உதயத்திற்குப் பின், தோழர்களுடன் அரஃபா நோக்கிப் புறப்பட்டார்கள். அங்கு நமிரா பள்ளத்தாக்கில் நபியவர்களுக்காக கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதில் சூரியன் உச்சி பொழுதைக் கடக்கும் வரை தங்கி இருந்தார்கள். அதன் பிறகு தமது "கஸ்வா' ஒட்டகத்தைத் தயார் படுத்தக் கூறி, அதில் பயணித்து, "பத்னுல்வாதி' எனும் பகுதிக்கு வந்தார்கள். அமைதி காத்த நிலையில் அந்த மக்கள் நபி ஸல் அவர்களைப் பார்த்தபடி நிற்க, அதே இடத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி நபியவர்கள் ஒரு சொற்பொழிவு ஆற்றினார்கள். நபி அவர்கள் அப்போது ஆற்றிய அந்த உரையே "நபியவர்களின் இறுதிப் பேருரை" என்பதாக இன்று அறியப்படுகிறது. கூட்டம் பிரமாண்டமாக இருந்ததால், நபி அவர்களின் சொற்பொழிவு அனைவரின் செவிகளுக்கும் சென்றடைவது சாத்தியமில்லை என்ற நிலை உருவானது. எனவே, அங்கிருந்தோரிலேயே மிக உரத்த குரல் கொண்டிருந்த ரபீ இப்னு உமய்யா இப்னு கலஃபை அழைத்து, தமது பேச்சை எல்லோரும் செவியுறும் விதமாக ஒவ்வொரு வாக்கியமாய் திரும்பச் சொல்லுமாறு பணித்தார்கள். (அல் பிதாயா இப்னு கஸீர் 5/189)

" நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: "அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.' மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: "நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.' ஸுனன் இப்னு மாஜா 1892,1893)
" ஒ... மக்களே! என் பேச்சை கவனமாகக் கேளுங்கள்! இந்த ஆண்டிற்குப் பிறகு மீண்டும் இந்த இடத்தில் சந்திப்பேனா என்பது எனக்குத் தெரியாது (தாரீக் இப்னு கல்தூன் 2/58, இப்னு ஹிஷாம் 2/603, அர்ரஹீக் அல்மக்தூம் 461)
"பிறப்பால் உயர்வு தாழ்வு காட்டாதீர்! மக்களே! உங்களது இறைவன் ஒருவனே; (உங்களது தந்தையும் ஒருவரே!) அறிந்து கொள்ளுங்கள்: எந்த ஒர் அரபிக்கும் ஒர் அரபி அல்லாதவரை விடவோ, எந்த ஒர் அரபி அல்லாதவருக்கும் ஒர் அரபியை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. எந்த ஒரு வெள்ளையருக்கும் ஒரு கருப்பரை விடவோ, எந்த கருப்பருக்கும் ஒரு வெள்ளையரை விடவோ எந்த மேன்மையும் சிறப்பும் இல்லை. இறையச்சம் மட்டுமே ஒருவரின் மேன்மையை நிர்ணயிக்கும். நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உங்களில் மிகச் சிறந்தவர் உங்களில் அதிகம் இறை அச்சம் உள்ளவர்தான். (அஸ்ஸில்ஸலதுல் ஸஹீஹா2700, அத்தர்கீப் வத்தர்ஹீப், அல்பைஹகீ, தஹாவி)
"ஒ... மக்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள் கருப்பு நிற (அபிசீனிய) அடிமை ஒருவர் உங்களுக்குத் தலைவராக ஆக்கப்பட்டாலும் அவர் அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு உங்களை வழி நடத்தி அதை உங்களுக்கிடையில் நிலைநிறுத்தும் காலமெல்லாம் (அவரது சொல்லைக்) கேட்டு நடங்கள்; (அவருக்குக்) கீழ்ப்படியுங்கள்! (ஸுனன் நஸாயி 4192, ஜாமிவுத் திர்மிதி1706)