by அ.மு.செய்யது
பொய்யாக சண்டை போட்டு
தற்காலிகமாக பிரிந்திருந்து
அடுத்த நாள்
பொழிய விருக்கும்
அடைமழைக்காக காத்திருப்போம்.
விடியலோடு சேர்ந்து
நம் கோபமும் வெளுத்து விடும்.
இது சிலந்தி வலையென்று
தெரிந்தும் தெரியாதது போல
மழையே பிடிக்காத பெண் போல
குடையோடு வந்திருப்பாய்.
தொடக்கூடாது என்ற கர்வத்தில் நானும்
தொடமாட்டேனோ என்ற ஏக்கத்தில் நீயும்
கொட்டும் மழையில் நனையாது
தவமிருப்போம்.
வெறுமையின் சருகில்
விரக்தி பொறிபட்டு
கனவுகள் தீப்பிடிக்குமுன்
மெல்லிய சாரல் அதை அணைத்து விடும்
மேகங்கள் திரட்டுவது நீ என்பதால்.
உன் விரல்களுக்குள்
மெளனமாக என் தோல்வியை அறிவிக்க,
வெடுக்கென உதறிவிட்டு
கண்ணீருடன் என் தோளில் சரிவாய்.
இன்னுமொரு பிரபஞ்சத்தில்
மீண்டும் என்னை பெற்றெடுப்பாய்.
வார்த்தைகளின்றி மன்னிப்பாய்.
கனிவான பார்வையில் மீண்டும்
என்னை காதலிப்பாய்.
வாழ்வின் நிதர்சனங்களைத் தாண்டி
ஆழப் புதைந்திருந்தது நம் காதல்.
Labels: கவிதை
நன்றி http://amsyed.blogspot.com/
Monday, November 30, 2009
நட்பு காதல் கல்யாணம் பிள்ளைகள்
ஆணுக்கும் பெண்ணுக்கும் நட்பு மிக முக்கியமானதுதான்.
இருவரும் ஒன்றாகவே நட்பு பாராட்டுகிறார்கள்
ஆனால் காதல் என்று வந்துவிட்டால்
நட்பு ஒருபடியாவது கீழே இறங்கிவிடுகிறது
ஏனெனில் காதலின் நெருக்கம் மனம் + உடல்
இரண்டையும் ஆட்சி செய்கிறது
தனக்கே என்பதில் அதிக சுயநலமானது
கல்யாணம் என்று வந்துவிட்டால்
காதல் சில படிகள் கீழே இறங்கிவிடுகிறது
என்பது நடைமுறை உண்மை
உரிமைகளும் பொறுப்புகளும் வந்ததும்
காதல் வெளிக்காட்ட நேரமின்றி தடுமாறுகிறது
உடல்கள் பழகியபின் ஈர்ப்பில் அலட்சியம் புகுந்து
அதிகாரங்கள் உயர்ந்து காதல் காயப்படுகிறது
ஆனாலும் உண்மையான வேர்க்காதல்
உள்ளே ஒளிந்துகொண்டுதான் இருக்கும்
குழந்தைகள் என்று வந்துவிட்டால்
ஆண்களின் காதல் மனைவியிடம் அப்படியே இருக்கும்
ஆனால் பெண்ணின் காதல் பிள்ளைகளுக்கு மாறிவிடும்
அதுதான் பெண்ணின் படைப்பு
பெண் அப்படிப் படைக்கப்படவில்லை என்றால்
இனவிருத்தி உயிரின பெருக்கும் எல்லாம்
இல்லாமல் அழிந்துபோகும்
நட்பு முதலாக
ஆண் பெண் நட்பு
24-7 திறந்துகிடக்கும் சொர்க்க வாசல்
நட்பு நாடும் ஈர்ப்பில்
இருவருமே இமயங்கள்
காதலென மாறின் நட்பு
ஒருபடியேனும் கீழிறங்கும்
மனம் + உடல் என்ற
இரு பெரும் வாழ்வுச் சக்திகளை
தனதாட்சிக்குள் கவர்ந்து
தனக்கே தனக்கென்பதில்
சுயநலம் மிகுத்து
பேருறுதிகொள்வது காதல்
கல்யாணம் என்றாகிவிட்டாலோ
சன்னமாய்ச் சில படிகள்
கீழிறகிப் போய்விடுவதே
காதல்
உரிமைகள் பொறுப்புகள்
பழகியபின் வரும்
உடல் ஈர்ப்பு அலட்சியங்கள்
தொடரும் மனவெளி வெறுமைகள்
அதிகார உயர்வால் காதல் காயங்கள்
என்று துரிதகதியில் நீர்த்துப்போனாலும்
உண்மை வேர்க்காதல்
உள்ளின் உள்ளே ஒளிந்தே கிடக்கும்
குழந்தைகளென்று
உறவுவான் விரிந்துவிட்டால்
ஆண் காதல் பெண்ணிடம்
அப்படியே அப்பிக்கிடந்தும்
பெண் காதல் பிள்ளைகளுக்கென்று
புலம்பெயர்வதைத் தடுப்பதற்கில்லை
அவ்வண்ணமாய்ப் பெண்
படைக்கப்படவில்லையெனில்
இனவிருத்தி உயிர்ப்பெருக்கம்
என்பவையாவும் கழிந்து
பிரபஞ்சம் உடைந்தழியும்
Source : : http://anbudanbuhari.blogspot.com தொகுப்பு::குடும்பம்

Sunday, November 29, 2009
ஈழத்து பிரதேசங்களின் தனித்துவங்கள்
ஈழத்தின் ஒவ்வொரு ஊருக்கும் விசேடமான அம்சங்கள் அவை உணவுப் பதார்த்தமாகட்டும் அல்லது இயற்கையோடு மையப்படுத்தியதாகட்டும், அல்லது கைத்தொழில் சார்ந்த விடயங்கள் ஆகட்டும் இவற்றை ஒரு பதிவில் அடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு எனக்குத் தெரிந்த தகவல்களோடு வருகின்றேன்.
உங்கள் பின்னூட்டங்கள் மூலம் விடுபட்டவையை அறியத் தந்தால் அவற்றை பிற்சேர்க்கையாக இணைத்துக் கொள்வேன்.
இணுவில் - மரவள்ளிக் கிழங்கு (எங்களை எல்லாம் கிழங்கு என்ற அடைமொழியோடு தான் மற்ற ஊர்க்காரர் அழைப்பார்கள்)
தாவடி - புகையிலை
மட்டுவில் - கத்தரிக்காய்
ஆனைக்கோட்டை - நல்லெண்ணை
நிலாவரை - வற்றாத கிணறு
பருத்தித்துறை - பருத்தித்துறை வடை (தட்டையாக மொறு மொறு என்று இருக்கும் பதத்தில் செய்தது)
பளை - தேங்காய் ( நிறைய தென்னை மரங்கள் வளர்க்கப்பட்டு தேங்காய் விளைவிக்கப்படும் ஊர்)
கீரிமலை - யாழ்ப்பாணத்தவர் பிதிர்க்கடன் தீர்க்கப் போகும் கடல், கூடவே விடுமுறை நாட்களில் நீச்சலடிக்கும் இடம்
கசூர்னா பீச் - கசூர்னா என்ற பெயரோடு அழைக்கப்படும் கடற்கரை
யாழ்ப்பாணப் பிரதேசம் - பனங்காய் பணியாரம், ஒடியற்கூழ், புழுக்கொடியல்
பரந்தன் - இரசாயனத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
ஆனையிறவு - உப்புத் தொழிற்சாலை (ஒருகாலத்தில் இருந்தது)
காங்கேசன் துறை - சீமெந்து தொழிற்சாலை (ஒருகாலத்தில் இயங்கியது)
வாழைச்சேனை - காகிதத் தொழிற்சாலை
மண்டைதீவு - சுருட்டு (வந்தியத்தேவன் பகிர்ந்தது)
மட்டக்களப்பு - தயிர் (மழை ஷ்ரேயா பகிர்ந்தது)
திக்கம் - சாராய வடிசாலை (சயந்தன் பகிர்ந்தது)

Posted by கானா பிரபா
நன்றி http://www.blogger.comநினைத்துப் பார்க்கிறேன்
அன்புடன் புகாரி
அவன் காசுதேடி வளைகுடா வந்தவன். காசு மட்டுமே வாழ்க்கை இல்லைதான். ஆனால் காசே இல்லாமல் வாழ்க்கை என்ற வார்த்தையைத் கூட எவராலும் உச்சரிக்க முடியாதே வளைகுடா கடலில் உப்பு அதிகம். இவன் போன்றவர்களின் கண்ணீரே காரணமாய் இருக்குமோ என்னவோ
ஒருமாத விடுமுறை என்பதுதான், ஒரு முழு வருடத்திற்கும் இவன் கொள்ளும் ஒரே நிஜமான உறக்கம். அந்த உறக்கத்தின் கனவுகளாய் வந்த எத்தனையோ இனிப்பான விஷயங்கள் பிறகெல்லாம் இவன் உயிரையே ஆக்கிரமிக்கும்.
தன் விடுமுறையை இரட்டிப்பாய் நீட்டித்து இம்முறை மணமுடித்த இவனுக்கு மோகம் முப்பது நாள் என்பது ஒரு தப்பான தகவல். பிரிவை நினைத்தே பிரியம் பீறிட்ட இவன், மோகம் முந்நூறு வருஷம் என்று சத்தியம் செய்கிறான்.
பிரிந்துவந்த அன்றே தன் புது மனைவிக்கு இவன் எழுதிய முதல் கடிதமாய் இக் கவிதை விரிகிறது
நெத்தியெங்கும் பூப்பூக்க
நெஞ்சமெங்கும் தேன்வடிய
முத்துமுத்துக் கண்மயங்க
முந்தானை தான்விலக
புத்தம்புதுச் சுகங்கோடி
பொங்கித்தினம் நீவடிக்க
அத்தனையும் என்னுயிரை
அதிசயமாய்த் தொட்டதடி
கொஞ்சல்மொழித் தேன்குடமே
கொத்துமல்லிப் பூச்சரமே
மிஞ்சியிட்ட முதல்நாளே
மிச்சமின்றித் தந்தவளே
கொஞ்சநஞ்சம் இருந்தாலும்
கொஞ்சிமெல்ல நானெடுக்க
பஞ்சணைக்கோ நொந்திருக்கும்
படுக்கையறைச் சிவந்திருக்கும்
மச்சான் என் மனம்போல
மல்லிகைப்பூக் கூந்தலுடன்
அச்சாக மயிலைப்போல்
அழகாகக் காலெடுத்து
உச்சிநிலா முகக்கனியில்
உதடுகளோ துடிதுடிக்க
பச்சைவனத் தென்றலெனப்
பக்கத்தில் வந்தாயே
என்னருகில் நீவந்தால்
என்னென்ன செய்வதென்று
எண்ணியவென் எண்ணங்களை
எப்போதோ மறந்துவிட்டு
எண்ணாத எதையோநான்
எப்படியோ துவக்கிவைக்க
என்னினிய பூங்கொடியே
எல்லாமும் நீ ரசித்தாய்
மன்மதனோ நானாக
மானேநீ ரதியாக
என்னென்ன சுகமுண்டோ
எல்லாமும் நாம்கண்டு
பொன்னாகப் பூவாகப்
பூத்தோமே சிரித்தோமே
இன்றுன்னைப் பிரிந்தவனாய்
இருக்கின்றேன் உயிரில்லை
மண்மீது பொழியாத
மழைமேகம் மேகமல்ல
தென்னையினைத் தழுவாத
தென்றலுமோர் தென்றலல்ல
கண்ணுக்குள் விரியாத
கனவும் ஓர் கனவல்ல
உன்னருகில் இல்லாவென்
உயிரும் ஓர் உயிரல்ல
கனவுகளில் வரச்சொல்லி
கடிதம் நான் எழுதுகின்றேன்
நினைவுகளில் உனையேந்தி
நெடுந்தூரம் நடக்கின்றேன்
இனிக்காத இவைபோன்ற
எத்தனையோ ஆறுதலால்
மனத்தீயைத் தணித்த வண்ணம்
மரணத்தைத் தவிர்க்கின்றேன்
இருஆறு மாதங்கள்
எப்படியோ ஓடிவிடும்
மறுகணமே பறந்துவந்து
மனைவியேயுன் கைகோர்த்து
சிறுகன்றைப் போல்துள்ளிச்
செவ்வானாய்ச் சிவந்திடுவேன்
கருவான நம்முயிரைக்
கைகளிலே ஏந்திநிற்பாய்
நன்றி http://anbudanbuhari.blogspot.com

Friday, November 27, 2009
அ.மு.சயீத் அவர்களின் உருக்கமான இறுதி மடல் -முஹம்மது இஸ்மாயில் பாகவி பேச்சு
1933ஆம் ஆண்டு அக்டோபர் 9ந் தேதி (ஹிஜிரி 1352 ஜமாதுல் ஆஹிர் பிறை 18) நீடூரில் சயீது பிறந்தார்.
இவருடைய தந்தை அல்ஹாஜ் சி.அ. அப்துல்காதர் தாயார் அல்ஹஜா உம்மு சல்மா பீவி.
சயீதின் உடன் பிறப்புகள் : ஹாஜி சபீர் அகமது, அப்துல் லத்தீப், அப்துல் ஹக்கீம், முகம்மது அலி ஜின்னா
உடன் பிறந்த சகோதரிகள் ரஹமத்துன்னிஷா , பாத்திமாஜின்னா.
"சிந்தனைக் களஞ்சியம்" என்ற தனது முதல் நூலை, தந்தை ஹாஜி அப்துல் காதர் சாஹிப் , தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் சயீது சமர்ப்பணம் செய்தார்.
"எனது பிறப்புக்குக் காரணமான என் பெற்றோருக்கு நான் மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்ற, மாவீரன் அலெக்சாண்டரின் வாக்கு சயீதுக்கு மிகவும் பிடிக்கும்.
"தாய் தந்தையருக்கு நன்றி செய்யுங்கள்" என்று திருக்குரான் கூறுகிறது.
நீடூரில் தான் வசித்த வீட்டுக்கு "சல்மா இல்லம் என்று பெயர் சூட்டியும், தன் 2வது மகளுக்கு சல்மா என்று பெயர் வைத்தும் தாய்க்கு நன்றி செலுத்தினார், .

Thursday, November 26, 2009
இனி தூயதமிழில் தமிழ் பாடத்தை நடத்தவேண்டும்! பள்ளி கல்வித்துறை
சென்னை: தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளி மற்றும் மேல்நிலை பள்ளி வகுப்புகளில் தமிழ் பாடத்தை தூய தமிழில் பிற மொழி கலப்பு இல்லாமல் நடத்த வேண்டும்' என்று பள்ளிக் கல்வித்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை) பணிபுரியும் ஆசிரியர்கள் இதைக் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள், வார்த்தைகள் மாணவர்களுக்கு தெரியாமல் போய்விடுகிறது என்றும் தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில் பள்ளிக் கல்வித்துறை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் 5,000-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி வைத்துள்ளது. அதில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ் பாடத்தின்போது ஆங்கிலம் மற்றும் பிற மொழி கலப்பு இல்லாமல் தூய தமிழில் வகுப்புகளை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இதை தமிழ் ஆசிரியர்கள் கட்டாயமாகக் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தூய தமிழ் சொற்களை கற்பதற்கு வழி செய்ய வேண்டும். இதன்மூலம் மாணவர்கள் புதிய தூய தமிழ் சொற்களை தெரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்படும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வி இயக்குநர் பெருமாள்சாமி உத்தரவின்பேரில், இந்தச் சுற்றறிக்கை வியாழக்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Source : http://www.inneram.com
கிரந்த எழுத்துக்களை எடுத்தெறிய வேண்டுமா?
1. 1400 வருடங்களுக்கும் மேலாக தமிழன் இந்த கிரந்த எழுத்துக்களைப் பயன்படுத்துகிறான்.
2. தொல்காப்பியத்தில் இல்லை என்ற வாதம் சரியாகாது. அது சுமார் 2000 வருடம் பழமையானது.
3. அதுமட்டுமல்ல, தொல்காப்பியத்தில் ஃ ஆய்தத்தை முதல் எழுத்தாகக் கொண்டு எழுதவேண்டும் என்று சொல்லப்படவில்லை. இங்கே இவர்கள் வசதிக்காக இலக்கணத்தை மாற்றுவார்களாம். கிரந்தம் என்றால் மட்டும் மிகப்பழைய இலக்கணம் வந்துவிடுமாம். வேடிக்கை இல்லையா?
4. அதுமட்டுமல்ல, இந்த குறிகள் இட்டு எழுதுவது எந்த இலக்கண நூலில் இருக்கிறது என்று கேளுங்கள். அதை மட்டும் புதுசா கொண்டுவரேன்னுவாங்க. 1400 வருடம் மக்களால் புழங்கப்படுவதை நீக்கவேண்டுமாம். இவங்க புதுசா குறிகள் இட்டுத் தருவதை தமிழர்கள் அப்படியே ஏற்க வேண்டுமாம்.
5. க்ரியா தற்காலத் தமிழ் அகராதி, கிரந்த எழுத்துக்களைத் தன் அகராதியில் ஏற்றுக்கொண்டு அர்த்தம் எழுதியுள்ளது. க்ரியா என்று தன் அகராதிக்குப் பெயரிட்டு தொல்காப்பியத்தை உடைத்துவிட்டது. அது சாதாரணமாகவர்களால் உருவான அகராதி அல்ல. மொழி அறிஞர்களாய் உயர் பதவி வகிப்பவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது.
6. தமிழில் ஏராளமான வடசொற்கள் புழக்கத்தில் உள்ளன. அவற்றை எந்த அளவுக்குத் தமிழ்ப் படுத்த முடியுமோ அந்த அளவுக்குத் தமிழன் தமிழ்ப்படுத்திவிட்டான். வெறும் அயலக பெயர்களிலும், அறிவியல் சொற்கள் சிலவற்றிக்கும்தான் கிரந்தம் பயன்படுகிறது.
7. இந்த நான்கு எழுத்தைத் தவிர F க்கு ஒரு எழுத்துவேண்டும் என்று சிலர் போராடியபோது. ஃ ஆய்தம் பயன்படுத்தி ஃபாரின் என்று எழுதலாம் என்று புதிய எழுத்துக்களைத் தடுத்து நிறித்திவிட்டோம்.
8. இன்றைய பத்திரிகைகள் முழுவதிலும் கிரந்தத்தின் பயன்பாட்டைப் பாருங்கள். 1% கூட இருக்க்காது. பிறகு ஏன் அலறவேண்டும். புதுசா தான் முனைந்து குறிகளைக் கொண்டுவந்தேன் என்ற பெயருக்காகப் பேசுவதுபோல எனக்குப் படுகிறது.
9. இன்னும் ஆயிரம் மடல்கள் இட்டாலும் கிரந்த எழுத்துக்களை அழிக்க முடியாது. இன்றைய கவிஞர்கள் அப்துல் ரகுமான், மு.மேத்தா, வைரமுத்து, சிற்பி எல்லாம் கிரந்தம் பயன்படுத்துகிறார்கள். கவிஞர்களே பயன்படுத்துகிறார்கள் எனால் அதுவே ஒரு பெரிய அங்கீகாரம்.
10. பாரதி கிரந்தம் கொண்டு நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளான். வடச்சொல் கொண்டு கவிதை எழுதி இருக்கிறான். கிரந்த எழுத்துக்களைப் பல்லவி சரணம் என்று ஓசைகளில் பயன்படுத்தி இருக்கிறான்.
11. இந்த 1400 வருடங்களில் ஏகப்பட்ட நூல்கள், கிரந்த எழுத்துக்களைக் கொண்டு அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல்வரை கிரந்தம் பயன்படுத்தப்படுகிறது. இன்று வாழும் தமிழரிஞர்களுள் தொல்காப்பிய உரை எழுதியவர் கலைஞர் தன் மகன் பெயரை ஸ்டாலின் என்றுதான் எழுதுகிறார்.
12. பெரியார் புது எழுத்துக்களை அறிமுகம் செய்த போது அது எந்த இலக்கண நூலிலும் இல்லை. ஆனால் உலகமே ஏற்றுக்கொண்டது.
13. அந்தக் காலம் என்றாலாவது கிரந்தம் தவிர்த்து எழுத முயற்சிக்கலாம். இதுவோ உலகமே சுண்டைக்காயாய்ச் சுருங்கிய காலம். தமிழன் சர்வதேச சபையில் நிற்கிறான். அவனைப் போய் ”சார்ச் புழ்சு” என்று எழுதச் சொன்னால் சிரிக்க மாட்டான். சார்ச் புழ்சு என்றால் என்ன வென்று கேட்காதீர்கள். ஜார்ஜ் புஷ். இப்படி விடுகதை போட்டுக்கொண்டிருந்தால் தமிழில் நவீன நூல்கள் வளர்வதெப்படி?
14. இந்த கிரந்தம் என்ற நாலு எழுத்துக்களையே சுமையாகக் கருதும் இவர்கள், க வில் நாலு, சா வில் நாலு, ப வில் நாலு என்று ஒவ்வொரு எழுத்துக்கும் நான்கு குறிகளைக் கொண்டுவந்து, அல்ஜிப்ரா சூத்திரமாக தமிழ் எழுத்துக்களை ஆக்க முயல்கிறார்கள். ஏற்கனவே தமிழ் எழுத்துக்களைக் கஷ்டப்பட்டு படித்துவரும் தமிழன் இந்தக் குறிகளுக்குள் சிக்கிச் சீரழியவா?
15. எல்லாவற்றுக்கும்மேலாக குறிகள் இடுவதற்கான எந்தத் தேவையும் இல்லாமல் பல நூற்றாண்டுகளாக தமிழன் அழகாக தமிழில் தான் நினைத்ததை எழுதி மகிழ்ச்சியாகத்தானே இருக்கிறான்?
16. அதே சமயம் அகராதியில் மட்டும் உச்சரிப்பு வித்தியாசம் காட்டுவதற்காக, குறிகளை உருவாக்கட்டும். ஆங்கில உச்சரிப்புக்குப் பயன்படுத்துவதைப் போல பயன்படுத்தட்டும். அதில் பிரச்சினை இல்லை

தொகுப்பு: வாழ்வனத்தில் வழியும் துளிகள்
நன்றி, http://anbudanbuhari.blogspot.com/
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு--- தமிழ்99 விசைப்பலகை இணையத்தளம்
கணினியில் தமிழ் எழுத பலவிதமான தட்டச்சு முறைகள் பயன்படுத்தப் படுகின்றன. அவற்றில் அஞ்சல் அல்லது ரோமன் எனப்படும் தமிங்கில தட்டச்சுமுறை, இந்தியாவில் தட்டச்சுப் பயிற்சி மையங்களில் பயிற்றுவிக்கப் படும் தட்டெழுத்து முறை, இலங்கை முதலிய நாடுகளில் பயிற்றுவிக்கப் படும் பாமினி, ஆகியவற்றோடு தமிழ் இணைய மாநாட்டில் அறிமுகம் செய்யப் பட்டு தமிழக அரசால் தரப் படுத்தப் பட்ட விசைப்பலகையாக அங்கீகரிக்கப் பட்டு இலங்கை, சிங்கப்பூர், அரசுகளாலும் அங்கீகரிக்கப் பட்ட தமிழ்99 விசைப்பலகை முறை போன்றவை அதிகம் புழக்கத்தில் உள்ளவை. இவற்றை எழுத கணினிக்கு பலவிதமான தட்டச்சு செயலிகளும் கிடைக்கின்றன.
அவற்றில் முரசு அஞ்சல், அழகி, குறள் தமிழ்ச்செயலி போன்றவை குறிப்பிடத் தக்கவை. இந்தச் செயலிகளில் மேற்கண்ட எல்லா முறைகளும் இணைந்தே இருக்கின்றன. தேவையான தட்டச்சு முறையில் தட்டச்சு செய்ய இயலும். தமிழா குழுவினரால் உருவாக்கப் பட்ட எகலப்பை என்னும் திறமூல விசைப்பலகை இயக்கி தமிழ்99, அஞ்சல், பாமினி தட்டச்சு முறைகளுக்கு தனித்தனியாக கிடைக்கிறது. இதைப்பயன்படுத்தி விண்டோஸ் இயங்குதளத்தில் அனைத்துச் செயலிகளிலும் தமிழில் உள்ளீடு செய்ய இயலும்.
தமிழ் தட்டச்சு முறைகள் ஒப்பீடு
அஞ்சல் முறையில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ,ஔ போன்ற உயிர்நெடில்களை எழுத இருவிசைகள், கா,கீ,கூ,கே,கை,கோ,கௌ போன்ற உயிர்மெய் நெடில்களை எழுத 3 அல்லது 4 விசைகள் அவசியம். ங,ஞ, த, ண,ள போன்ற குறில் எழுத்துக்களைக்கூட 3 விசைகள் பயன்படுத்தியே எழுத வேண்டியுள்ளது.
பாமினியில் ஆ,ஈ,ஊ,ஐ,ஏ,ஓ போன்ற உயிர் நெடில் எழுத்துக்களை எழுத shift உடன் 2 எழுத்து அவசியம். கீ,ஙீ,சீ….வரிசை, கே,ஙே,சே,ஞே…வரிசை போன்ற எழுத்துக்களை எழுத 3 விசைகள் அழுத்த வேண்டும். கோ,ஙோ,சோ,ஞோ….வரிசை எழுத்துக்களுக்கு 4 விசைககள் அழுத்த வேண்டியதாக உள்ளது.
தமிழ் தட்டெழுத்து முறையிலும் பாமினியைப் போலவே அதே விசைகள் அவசியம். கூடவே ழ வரிசை எழுத்துக்களை எழுத ழ=2, ழொ,ழோ,ழௌ=4, பிற ழ வரிசை எழுத்துக்கள்=3 என அதிகமான விசைகளைப் பயன்படுத்த வேண்டியதாக இருக்கிறது.
தமிழ்99 அனைத்து உயிர் எழுத்துக்கள் 1 விசை, க,ங,ச,ஞ வரிசை 1விசை, என 31 எழுத்துக்களை ஒரு விசையிலும், மீதமுள்ள 216 எழுத்துக்களையும் இருவிசையில் எழுதலாம். தமிழ் எழுத்துக்கள் 247 ல் எந்த தமிழ் எழுத்தை எழுதவும் இரண்டுக்கு மேற்பட்ட விசைகள் அவசியமில்லை. shift அல்லது வேறு துணைவிசைகளும் அவற்றுக்கு அவசியமில்லை. கிரந்த எழுத்துக்களான ஸ,ஷ,ஜ,ஹ போன்றவற்றை மட்டுமே shift உபயோகித்து எழுத வேண்டும்.
விஞ்ஞானப் பூர்வமான இந்த தமிழ்99 தட்டச்சு முறையால் குறைந்த விசையழுத்த முறைகளில் விரல்களுக்கு எளிமையான வரிசையமைப்பில் அதிக பக்கங்களை அதிக வேகத்தில் அதிக நேரம் கைகளுக்கு களைப்பின்றி தொடர்ச்சியாக தட்டச்சு செய்ய முடியும்…
இம்முறையை கற்றுக் கொள்வதும் எளிமையானது. விசைகளை நினைவில் வைப்பதும் மிகவும் எளிது. விளக்கமான ஒப்பீடு மற்றும் பயிற்சி முறைகளை கணிச்சுவடி மின்னூலில் காணலாம்.
Wednesday, November 25, 2009
புகைத்தல் , (வெண்சுருட்டு)
எழுத்து: சி. கருணாகரசு
விரலிடுக்கில் ...
அது கசியும்போது
காலத்தின் இடுக்கில்
நீ ...
நழுவிக்கொண்டிருக்கிறாய் !
அந்த நாற்றம்
உன்னை ...
நெருங்கும் தூரத்தை
அதிகரிக்கிறது !
அது,
கரைத்துக்கொண்டே இருக்கிறது
உன் ...
காலத்தையும்
காசையும் !
உன் ,
அழகு
ஆற்றல்
இரண்டிற்குமே
எமனகிறது அது !
அது ... நோய்களை
உனக்குள்ளும் நிரப்பும்
உன் வாரிசுக்கும் பரப்பும் !
புத்துணர்ச்சி என்று
புகைத்தால் ...
புற்று உணர்ச்சியாய் வந்து
புதைக்கும் !
ஆயிரம் கேடுகள்
அதற்குள் இருக்கு
அந்த அரக்கன்
அவசியமா உனக்கு ?
புகைத்தலை நிறுத்த ...
1. நிறுத்த முடியும் என்ற நம்பிக்கையும் நிறுத்த வேண்டும் என்ற ஆசையும் இருந்தால் போதும் .
2. குறிப்பிட்ட நாள் , நேரம் வகுக்காமல் ... உடனடியாக செயல் படுத்துவது .
3. புகைக்கு மாற்றாக எதையும் எண்ணாதிருத்தல் ... நாடாதிருத்தல் .
4. அரைநாள் ... ஒருநாள் ...இரண்டுநாள் என புகைத்தலிலிருந்து விடுபட்ட உணர்வை நிறைவாக உணர்தல் . அந்த நாள் எண்ணிக்கையை
உயர்த்துதல் .
5. மருந்துக் கடையில் "நிக்கோட்டின் ஒட்டு வில்லை " உள்ளது. அதை உடலில் ஒட்டிக்கொண்டால் ... அது புகைக்கும் உணர்வை எற்படுத்தாது உதவும் . புகைப்பவர்கள் முயற்சி செய்யுங்கள் ... முடியும் உங்களால் !!!
பின் குறிப்பு :
10 ஆண்டுகளுக்கு முன் புகைக்க பழகி ... ஒரே நாளில் 20 முதல் 25 வரை புகைத்த நான் கடந்த 2007 இல் (13-11-2007) புகைப்பதை கைவிட்டு ... எதோ சாதித்த உணர்வோடு மகிழ்வுடன் இருக்கிறேன் . (வலியுறுத்திய இல்லறத் தோழிக்கு நன்றி )
நன்றி : http://anbudannaan.blogspot.com

ஆசையே முன்னேற்றத்துக்கு அறிகுறி
ஆன்மீகம் சொல்கிறது “ஆசையே அழிவுக்கு காரணம்”. ஆசை இல்லையென்றால் வாழ்க்கையில் முன்னேற்றம் எப்படி ஏற்படும்.ஆசை இல்லாத மனிதன் பிணமல்லவா?
மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?
”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.
மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.
ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.
மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.
ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.
விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...
by தங்கவேல் மாணிக்கம்மீண்டும் ஆன்மீகம் சொல்கிறது "போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து“. போதுமென்றால் வாழ்க்கையில் சுவாரசியமே இன்றிப் போகும் ஆபத்து இருக்கிறது அல்லவா?
”உன்னை விட தாழ்ந்தவர்களை எண்ணிப் பார். நீ இப்போது இருக்குமிடம் தெரியும்.ஆகையால் பேராசைப்படாதே” என்கிறது ஆன்மீகம்.
மேற்கண்ட ஆன்மீக மேற்கோள்கள் மனிதர்களையும், அவர்களின் வளர்ச்சியையும் தடை செய்ய ஒரு காரணமாயிருக்கின்றன என்பது என் எண்ணம். இன்றைய கால கட்டத்தில் இந்தப் பழம் குப்பைகள் உதவாது. தூக்கி தூர எறிந்து விட வேண்டும். நவீன காலம் இது.
ஆசையே வாழ்கைக்கு அச்சாணி. போதவே போதாது என்பது மனிதனுக்கு பொன் தரும் மருந்து. உன்னை விட உயர்ந்து இருப்போரைப் பார் அப்போது தான் நீ இருக்கும் தாழ்ந்த இடம் தெரியும் என்பன போன்ற வாக்கியங்கள் தான் மனிதனின் முன்னேற்றத்துக்கு உறுதுணையாக இருக்கும்.
ஆயிரம் கோடி ரூபாயைக் குவித்து வைத்திருக்கும் தொழிலதிபரிடம் திருப்தி அடைந்து விட்டீர்களா என்று கேட்டால் கேட்பவரைப் பார்த்து சிரிப்பார்.
மனிதர்களின் மீது அன்புவைத்திருக்கும் தொழிலதிபர் என்ன சொல்லுவார் தெரியுமா ? என்னால் இன்னும் ஆயிரமாயிரம் குடும்பங்கள் வாழ வேண்டும். மீண்டும் அடுத்த இலக்கு. அடுத்த சாதனை என்றுச் சொல்லுவார்.
ஆகையால் நண்பர்களே, ஆசைப்பட வேண்டும். அத்தனைக்கும் ஆசைப்பட வேண்டும். உலகத்தையே கைக்குள் கொண்டு வர ஆசைப்பட வேண்டும். பண மழையில் குளிக்க வேண்டும். உன்னால் உலகம் உய்விக்க வேண்டும். உன் பெயரைச் சொல்லியே உலகம் விழிக்க வேண்டும். போதாது போதாது இன்னும் இன்னும் என்றே உன் இதயம் சத்தமிட வேண்டும். உன்னை விட பணத்திலும் செல்வாக்கிலும் உயர்ந்தோரின் மீது கண் பதிக்க வேண்டும். அதோ அவர்கள் உட்கார்ந்திருக்கும் சிம்மாசனத்திற்கிடையே உனக்கும் ஒரு சிம்மாசனமிருக்கிறது பார். உலகை வழி நடத்த உன் அறிவை வளர்த்துக் கொள். உனக்கான இடம் உன்னைத் தேடி வரும். வந்தே தீரும்.
விடாதே... இலைக்கை அடையும் வரை விடாதே...
நன்றி :http://thangavelmanickadevar.blogspot.com
சென்னையின் சப்தம்
by ..:: Mãstän
Thanks to : http://mastanoli.blogspot.com/
உஸ்ஸ்ஸ்ஸ்.... யப்பா.... தினமும் யராவது ஒரு ஆட்டோக்காரரிடம் திட்டு வாங்குவது அல்லது அவரை திட்டுவது என்பது சென்னை வாசிகளுக்கு பழக்கமான ஒன்றுதான். நான் ஆட்டோக்காரரை திட்டுறேன்னா, அதுக்கு முதல் காரணம், என்ன கருமாந்திரமான எஞ்சின்தான் வைய்த்துருப்பார்களோ, கடவுளே, அது ஓசோன் படலத்துல ஓட்டை போடுறது ஒரு பக்கம். சில ஆட்டோ விடும் பாருங்க ஒரு சப்த்ம், உலகத்துல யாருமே கேட்டே இருக்க முடியாது; அப்படி ஒரு சவுண்டு.... டுர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ன்ன்னூ மிகக்கொடுமையான சப்தம், நான் பைக்ல போகும் போது ஆட்டோ வந்தா ஒதுங்கி வழிவிட்டுறது, ஆட்டோ முன்னாடி மாட்டிக்கிடா டிரைவரோட வாய் சத்தம்; ஆட்டோ பின்னாடி மாட்டிக்கிடா இஞ்சின் சத்தம்.
அப்புறம், பைக்... சில பேர் பன்னுற அழும்பு தாங்கவே முடியலை... பைக்ல ஹாரனுங்குற பேருல வச்சுருப்பங்க ஒரு வித்தியாசமா சவுண்டு. ஏதாவது மிருகம் பக்கதுல போய் அடுச்சா அடுத்த நொடி அது செத்துரும், நாம எல்லாம் இதை எல்லாம் கேட்டுகிட்டு எப்படித்தான் உயிர் வாழ்றோமே???
ஏதாவது தலைவர் பிறந்த நாள், இறந்த நாள் வந்தா போதும்... உசிரோட இருக்கும் போது கண்டுக்கதவன், மைக் செட்டு வச்சு போடுவான் பாட்டை... கொஞ்சம் நோயால இருக்குறவங்க எல்லாம் பெரிய சீக்காளி ஆய்டுவங்க. அந்த பாட்டு எழவுதான் ஒழியுதுன்னா, அவரு மைக் புடுச்சு பேச ஆரம்பிப்பார்... கொண்டாடப்படும் தலைவரே மறுபடியும் செத்துடலாமான்னு நினைப்பார்... அவரு பேசிறதா சென்னைல இருக்குற எல்லா ஏரியாவுக்கும் கேக்கனும்னு தெடர்ச்சியா மைக் செட் கட்டி நம்ம காத புண்னு ஆக்கிடுவாங்க.
நான் சென்னை விட்டு போகலைனா, விரைவில் நான் செவிடு ஆயிடுவேன் :(
எது எதுக்கோ கேசு போடுற புண்ணியன்களே சென்னையின் சப்தம் குறைக்க ஒரு வழி செய்ய கூடாதா???
டிஸ்கி: இது ஒரு மீள் பதிவு

குறிப்பாகப் பெண்கள் கவனத்திற்கு...!
by எம்.ரிஷான் ஷெரீப்
கையடக்க கேமராக்கள்,மொபைல் வீடியோ கேமராக்கள்,மறைமுகமாக பொருத்திபதிவு செய்யும் மிகச் சிறிய கேமராக்கள் என்பதுஇன்றைய நவீன உலகில் மிகப் பிரபலமாக மிகச்சாதாரணமானவர்களின் கைளில் கூட உலா வரக்கூடிய ஒன்றாகஇருக்கிறது.
அறிவியல் புதிய கண்டுபிடிப்புகளை எல்லாம் நல்லபயன்பாடுகள் கருதி நமக்கு வழங்கினாலும் அதைஎத்தனை பேர் நன்மையாக பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் கேள்விக்குறி.
மொபைல் கேமராக்கள்,கையடக்க வீடியோ கேமராக்கள் இன்றைக்கு பெண்களுக்கு எதிராக எவ்வாறெல்லாம் பயன்படுத்தப்படுகிறது என்பதை இக்கட்டுரையில் காண்போம்.
பொது இடங்களில் கேமராக்கள் :
பொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரயில்நிலையங்கள்,மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமராக்கள் மூலம் படமெடுத்து இன்டர்நெட்டில்
வைத்து மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகி வருகிறது. ஆடை விலகிய
நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள்,வீடியோக்களை இன்டர்நெட்டில் வெளியிட்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்கள்.பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு பெற்றுக் கொண்டு
தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்று கவனம் வைத்துக் கொள்வது நல்லது.
பள்ளி,கல்லூரி,விடுதிகளில் :
பள்ளி,கல்லூரி,விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில்,மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதில் கவனம் செலுத்தவும். சகமாணவர்கள் தங்களை கேமராக்களால் படமெடுத்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வதும் இன்று
சகஜமாக நடந்துவருகிறது. இதிலும் கவனமாக எப்பொழுதும் விழிப்புணர்வுடன் இருக்கவும்.
பொதுக்கழிப்பிடங்கள்,குளியலறைகள்,ஹோட்டல் அறைகள் :
பொதுக் கழிப்பிடங்களுக்குச் செல்லும் பெண்கள்,பொதுக் குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்குச் செல்லும்போது வேலைநிமித்தமாக அங்கு ஹோட்டல்கள்,லொட்ஜ்களில் தங்கநேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும்போதும், கழிப்பறை,குளியலறைகளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப்பார்க்கவும்.தங்களுக்குத் தெரியாமல் தங்களை,தங்கள் செயல்களை படமெடுக்கும்
கேமராக்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம்.கவனம் தேவை.
மருத்துவமனைகள்(ஆஸ்பத்திரிகளில்)கவனம் தேவை :
மருத்துவமனைகளுக்குச் செல்லும் பெண்கள் தனியாக செல்லாதீர்கள்.தக்கதுணையுடன் செல்வது
நல்லது.மருத்துவமனைகளிலும் தங்கள் ஆடைகளை நெகிழ்த்தும்போதும், ஆடைகளை மருத்துவ
காரணங்களுக்காக ஆடைகளை விலக்கும்போதும் கவனமாக இருங்கள்.
கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்பதைக் கவனித்து உறுதி செய்துகொள்ளுங்கள்.
மருத்துவமனைகளில் டெஸ்ட்டுக்கு என்று ஏதாவது மருந்துகளை உட்கொள்ளச் சொல்லும்போதும் கவனம் தேவை.உடனிருப்பவர்கள் அவர்களை கவனித்துக்கொள்ள வேண்டும்.
துணிக்கடைகளின் உடை டெஸ்ட் செய்யும் அறைகளும் அங்கு பொருத்தப்பட்டிருக்கும் கண்ணாடிகளும் :
நாம் துணிக்கடைகளுக்குச் செல்வது இயல்பானது.
அங்கு உடைகளைப்போட்டுப் பார்த்துச் சரிபார்க்க சிறியஅறை பெண்களுக்காகப் பெரிய கடைகளில்ஒதுக்கப்பட்டிருக்கும்.அந்தத் துணிக்கடைகளின் உடைகளைப் போட்டு சரிபார்க்கும் அறைகளைப் பயன்படுத்தும்பெண்கள் மிக மிகக் கவனமாக இருக்கவேண்டும். ஏனென்றால்
அங்கு கண்டிப்பாகக் கேமராக்கள் தங்களைக் கண்காணிக்கப் பொறுத்தப்பட்டிருக்கும். வேறு நோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா,துணிகளை மறைக்கிறார்களா
என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதைக் கவனத்தில்
கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும். கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும்.இந்தக் கண்ணாடிகளிலும் இரண்டு வகைக் கண்ணாடிகள் உண்டு.இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது.கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒருவகை. இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மைப் பிரதிபலிக்கும்.ஆனால் மறுபக்கத்திலிருந்து அதாவது கண்ணாடிக்கு
அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு, மறைவு இல்லாமல் நம்மைக்காட்டும். இந்த
இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றித்தான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்க வேண்டும்.
இந்த உடை மாற்றும் அறைகளில் இந்தக் கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம்.இவைகளைக் கவனத்தில்
கொண்டு செயல்படவும்.
இறுதியாக :
நம்மையறியாமலேயே நம்மைப் படமெடுத்து,வீடியோ எடுத்து மற்றவர்களுடன் இன்டர்நெட்டில்
பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் தற்போது மிகச் சாதாரணமாகப் பரவிவருகிறது. இதற்குக்காரணம் கேமராக்கள்தான் என்றாலும் நாமும் கவனமாக இருந்து இது போன்றவைகளில்
சிக்காமல்,தக்க விழிப்புணர்வை நம் பெண்களுக்கும் சொல்லி நம் எல்லோரிடமும் ஒரு எச்சரிக்கை உணர்வை ஏற்படுத்தவேண்டும்.
தகவல் உதவி : திரு.சாதிக்

நன்றி :- http://www.rishanshareefarticles.tk/
11-11-2009 சுட்டது...
வணக்கம் நண்பர்களே!
இந்த கண்டதும் சுட்டதும் வலைப்பகுதில் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி... இந்த பகுதியில் புகைப்படங்கள் வரிசைப்படுத்தி கொடுக்க வேண்டும் என்ற எண்ணங்கள் " சொல்லாத வார்த்தைக்கு விலையேதும் இல்லை" என்பது கவிஞர் கண்ணதாசனின் வரிகள். அது போல புகைப்படமும் பேசாமல் சொல்லும் அர்த்தங்கள் ஆயிரம். பேசாமல் சொல்லும் தத்துவங்கள் கோடி. பல வரலாற்று புகைப்படங்கள் இன்னும் எப்பொழுதுமே பேசிக்கொண்டே இருக்கின்றது. உதாரணமாக இரண்டாம் உலப்போரில் எடுக்கப்பட்ட புகைப்படம்... இன்னும் பல.
பெரிய வரலாற்றை சொல்லாவிட்டாலும் இங்கு கொடுக்கப்படும் படங்கள் ஏதோ ஒரு செய்தியை சொல்லும் என்ற நம்பிக்கையில் உங்களோடு பகிர்வதில் ஒரு மகிழ்ச்சி. அதே போல புகைப்பட கலையாகவும் இருக்கட்டுமே என்ற நட்ற்பாசை..
கீழேயுள்ள புகைப்படம் சிங்கப்பூரில் உள்ள ராபில்ஸ் பிளேஸ்(Raffles Place) என்ற பகுதியில் எடுக்கப்பட்டது. எல்லாப்படங்களும் அலைப்பேசியில் எடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
வானவில்
சீனத்தோட்டத்தில் எடுத்தது
சிங்கப்பூர் புக்கித் பாத்தோவில் உள்ள இயற்கை பூங்காவில் எடுத்தது..

- கண்டதும் சுட்டதும்ஆ.ஞானசேகரன்
இது தான் Gulf
இது தான் Gulf
லோக்கல் Calls Free
பெட்ரோல் தண்ணீரைக் காட்டிலும் விலை குறைவு
கட்டிடங்கள் குறைந்தபட்சம் 6 மாதத்தில் கட்டி முடிக்கப்படும்
திறமையற்றவர்கள் திறமையுள்ளவர்களைக் காட்டிலும் கூடுதல் சம்பளம்
கீழ்நிலைத் தொழிலாளர்களின் சம்பளம் சொந்த நாட்டில் கிடைப்பதைவிட குறைவு
கம்பெனி எந்த நேரத்திலும் வேலையை விட்டு தூக்கலாம் எந்த காரணமும் இல்லாமல்
Office Boys & Drivers மற்றவர்களை விட மேலாளர்களுக்கு நெருக்கமாக இருப்பார்கள்
பாலைவனம் என்றாலும் எங்கும் பச்சை நிறம் பார்க்கலாம்
ஒவ்வொரு bachelor-ஸும் கல்யாணம் மற்றும் வீடு கட்டும் கனவோடு இருப்பார்கள்
நேரில் இருப்பதை விட தாய், தந்தை, மனைவி மக்கள் மேல் மிகுந்த அன்புடன் இருப்பார்கள்
வீட்டில் இருப்பது வேளையில் இருப்பதைவிட கொடுமையானது
ஒவ்வொரு 5 அடிக்கும் ஒரு பெண்களுக்கான அழகு நிலையம்
License வாங்குவது கார் வாங்குவடதி விட கடினம்
Traffic Signals
Green: இந்தியர்கள் செல்ல
Yellow: எதிப்தியர்களும், பாகிஸ்தானியர்களும், அமெரிக்கர்களும், ஐரோப்பியர்களும் செல்ல
Red: சௌதிகளும், குவைதிகளும், மற்ற அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் செல்ல
by S.A. நவாஸுதீன்
நன்றி http://syednavas.blogspot.com

Tuesday, November 24, 2009
ஹதீஸ் புகாரி > நம்பிக்கை
| ||||
ஹதீஸ் தொகுப்பு | : | ஸஹீஹுல் புகாரி/ ஆசிரியர்- | ||
பாகம் | : | 1 | ||
அத்தியாயம் | : | 2 - இறை நம்பிக்கை (ஈமான்) | ||
துணை அத்தியாயம் | : | ,y;iy | ||
பாடம் | : | 3 - இறைநம்பிக்கைக்குரிய செயல்கள். | ||
ஹதீஸ் எண் | : | 0009 | ||
|
குனிந்து நிமிர்ந்து…
வணங்கவேண்டும்
யாரை வணங்குவது.?
வணக்கத்தை.!
வணக்கம் என்ன இறைவனா.?
இறைவனைத் தான்
வணங்குகிறோமா.?
கடமைக்கா
வணங்குகிறோம்
உடைமைக்காக
வணங்குகின்றோமா.?
நேரம் தவறாமல்
வணங்குகிறோம்
நேர்மையை
வணங்குகிறோமா.?
பசிக்காகவேண்டி
பயணிக்கிறோம்
பசித்தவர்களுக்கு
உணவாகின்றோமா.?
நான் என்று
நிமிர்கின்றோமே தவிர
நான் என்று விளங்குகிறோமா.?
படைப்பு
படைத்தவனை வணங்கலாம்
படைத்தவன்
படைப்புக்குள்தானே.!
வணக்கமும்
வணங்கப்படுவதும்
நம்மில்.!
குனிவதெல்லாம்
வணக்கமல்ல
குப்பைகளாய்
வீசப்படும்.
ஏற்றமரம்
குனிந்து நிமிர்கிறது
பயிர்களுக்கு அது
பாசனம்.
பயிர்கள்
நிமிர்ந்து குனிகிறது
நமக்கு தானியங்கள்
நாம்
குனிந்து நிமிர்வது
வணக்கவாழி என்ற
அடையாளத்திற்குதானே
பலர்
குனிவதெல்லாம்
அவர்களின்
வயிற்று ஆகாரத்திற்காக
மட்டுமே
சிந்தனை கிளியனூர் இஸ்மத்
லேபிள்கள்: கவிதை, குனிந்து நிமிர்ந்து
Thanks to : http://www.klr-ismath.blogspot.com/
அம்பலம்
'பித்தன்' 'பித்தன்' என்ற
கூச்சல்களையும்
கற்களையும்
அவன் மீது
எறிந்துகொண்டிருந்தார்கள்.
அவன் சிரித்துக்கொண்டிருந்தான்.
அவன் காயங்களும்
சிரித்துக்கொண்டிருந்தன.
அப்படித்தான் அவனை
முதன் முதலாகப் பார்த்தேன்.
நீ பித்தனா? என்று கேட்டேன்.
நீ கல்லா? என்றான்.
நான் காயப்பட்டேன்.
நீ எப்படிப்
பித்தன் ஆனாய்? என்றேன்.
ஒருமுறை தற்செயலாய்
உண்மையைப்
பின் பக்கமாய்ப்
பார்த்துவிட்டேன்.
அப்போது
சகல இரவுகளுக்குமான
சூரியோதயம் நடந்தது.
திரைகள் விலகின.
எதிர்ப்பதங்கள்
கைகோத்து
நடனமாடக்கண்டேன்.
முரண்கள்
முகமூடியைக் கழற்றிவிட்டு
முத்தமிடக் கண்டேன்.
காலமும் இடமும் மறைய
எல்லாம்
ஒன்றாவதைக் கண்டேன்.
உண்டும் இல்லையும்
அர்த்தம் இழந்தன.
அந்தத் தருணத்தில்
அறிவுச் சிறையிலிருந்து
நான் விடுதலை ஆனேன்.
என்றான்.
அவர்கள் ஏன் உன்மீது
கல்லெறிகிறார்கள்? என்றேன்.
நான் அவர்களுடைய
அந்தரங்கத்தின் கண்ணாடி.
அதனால்தான் என்னை
உடைக்கப் பார்க்கிறார்கள் என்றான்.
ஏன்?என்றேன்.
அவர்கள்
வெளிப்படுவதற்கு
பயப்படுகிறார்கள்.
அவர்கள்
வேடங்களில்
வசிக்கிறார்கள்.
அது அவர்களுக்கு
வசதியாக இருக்கிறது.
வேடம் கலைந்தால்
மேடை போய்விடும்.
நான் அவர்களுடைய
அம்பலம்.
கவனி!
அம்பலம்
என் மேடையல்ல.
நடனம்.
அதனால்தான் என்னைப்
பித்தன் என்கிறார்கள் என்றான்.
நான் உடைந்தேன்.
காலம் காலமாய்த்
திரண்டிருந்த சீழ்
வடிந்தது.
நன்றி….கவிக்கோ அப்துல் ரகுமானின் “பித்தன்” கவிதைத் தொகுப்பிலிருந்து…
பொதுவில் குடும்பம் என்பது நான்கு வகை
1.தாத்தா பாட்டி அப்பா அம்மா சித்தப்பா பெரியப்பா பேரன் பேத்தி மாமா மச்சான் என்று ஒருவர் பாக்கியில்லாமல் ஒரே வீட்டில் ஒன்றாக வாழும் கூட்டுக் குடும்பம். இது இப்போதும் சில இந்தியக் குடும்பங்களில் உண்டு. சண்டைகள் குறைவில்லாமல் நடக்கும். எவரும் தனித்துவம் கொண்டு வாழ்வது மிகக்கடினம்.
2. அப்பா, அம்மா, கணவன், மனைவி, பிள்ளைகள் என்ற கூட்டுக் குடும்பம். தம்பிகளும் அக்கா தங்கைகளும் தனிக்குடித்தனம் சென்றுவிடுவார்கள். இது இந்தியாவில் பரவாலாக உள்ள கூட்டுக் குடும்ப நிலை இப்போது. இதில் சேமிப்பு அதிகம். அன்பு பாசம் அதிகம். உறவு நலம் அதிகம்.
3. கணவன், மனைவி, திருமணமாகாத பிள்ளைகளைக் கொண்ட குடும்பம். இது உலக அளவில் பிரசித்தம். எங்கும் காணக்கிடைக்கும் அமெரிக்காவையும் சேர்த்து. பெற்றோர் முதியோர் இல்லத்துக்குச் சென்றுவிடவேண்டும். பெற்றோரை தனித்துவிடும் அவலம் தவிர மற்றதெல்லாம் நலம்தான்.
4. ஆணும் பெண்ணும் தனியானவர்கள். Singles. ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வார்கள் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். பிள்ளைகள் தொல்லைகள் என்று தவிர்ப்பார்கள். பந்தம் இல்லை சொந்தம் இல்லை. ஒவ்வொருவரும் தனித்தனியானவர்கள். எந்தப் பொறுப்பும் இல்லை எந்த இழப்பும் இல்லை.
தொகுப்பு: வாழ்வனத்தில் வழியும் துளிகள்
சுகைல் குட்டித் தம்பிக்கு
என் மகனுக்கு இரண்டு வயதிருக்கும்போது மகள் ஆரம்பப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தது, இரண்டும் சேர்ந்து ஒரே விளையாட்டு. மகனுக்குத் துப்பாக்கிகள் என்றால் கொள்ளைப் பிரியம். அவனைக் காணவருவோர் வரும்போதெல்லாம் ஒரு துப்பாக்கியைப் பரிசளிப்பார்கள். அந்த அளவுக்குப் பிரபல்யம். அர்னால்டு சுவாஜினெக்கர் படங்களை திரும்பத் திரும்ப திரும்பத் திரும்ப கண்ணசையாமல் பார்ப்பான்.
அக்கா தம்பியைப் பார்த்துக் கேலியாய்ப் பாடுவதுபோலவும் தம்பி அக்காவுக்குப் பதிலடி கொடுப்பதுபோலவும் தமிழில் பாடி விளையாட வேண்டும் என்பதற்காக இந்தப் பாடலை சவுதியில் இருக்கும்போது எழுதினேன்.
வலைப்பூவில் எல்லா கவிதைகளையும் என் விடுப்பு நாட்களான இப்போது ஏற்றிக்கொண்டிருக்கும்போது, இதுவும் வந்து நின்றது. நீயென்ன பாவம் செய்தாய் நீயும் என் வலைப்பூவில் ஏறு என்று ஏற்றிவிட்டேன் :)
சுட்டிச் சுட்டித் தம்பிக்கு
சுகைல் குட்டித் தம்பிக்கு
சின்னச் சின்னப் பாட்டுப் பாடவா
அப்ப இப்ப எப்பவும்
தப்புச் செய்யும் தம்பிக்கு
துப்பாக்கித் தேவை இல்லடா
வாப்பா இங்கப்பா
வந்து என்னைப் பாரப்பா
ஏம்பா உனக்கும் வீராப்பா
குட்டி குட்டி அக்காக்கு
பள்ளிக்குப் போவும் அக்காக்கு
விளையாட நேரம் இருக்கா
துப்பாக்கி எனக்கு
வீட்டுப் பாடம் உனக்கு
உக்காந்து பாடம் படிக்கா
வாக்கா எங்கக்கா
வந்து என்னைப் பாரக்கா
ஏங்கா உனக்கும் வீராப்பா
தொகுப்பு மகள் மகன்
மறந்துவிட்டதாய் மறந்துகூட நினைத்துவிடாதே
மறந்துவிட்டதாய் கருதாதே?
இரவில் சுவரொட்டி ஒட்ட
தெருவில் இறங்கி நடக்கும்
பொழுதுகூட என் மேல் விழும்
ஒவ்வொரு பனித்துளியும்
உன் அணைப்பின் கதகதப்பை
நினைவுப்படுத்திக் கொண்டேயிருக்கிறது
ஊருக்குத்தான் நான் சமூகப்போராளி
ஆனால், என் காதலி நீதானடி
என் உள்ளத்தை உளவு பார்க்கும்
உளவாளி…
~ by மகிழ்நன் நன்றி உங்களுக்கு http://kayalmakizhnan.wordpress.com கவிதை,சீர்குலையாத பகுத்தறிவுக் கொள்கை! :
அபூ அப்திர்ரஹ்மான்
இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.
சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.
இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.
"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)
நன்றி ; http://adhikaalai.com
அனஸ் இப்னு மாலிக் (ரழி) அறிவிக்கின்றார்கள் : (நபி (ஸல்) அவர்களை நோக்கி) ஒரு மனிதர் "முஹம்மதே! எங்களின் தலைவரே! எங்கள் தலைவரின் மகனே! எங்களில் சிறந்தவரே! எங்களில் சிறந்தவரின் மகனே! என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மக்களே அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள், மேலும் ஷைத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம். அல்லாஹ்வின் மீது ஆணை! எனக்கு அல்லாஹ் வழங்கிய தகுதியை விட என்னை உயர்த்துவதை நான் விரும்ப மாட்டேன்" (அஹ்மது : ஹதீஸ் எண்: 12141)
இஸ்லாம் நடுநிலையையும் நீதியையும் பேணும் மார்க்கமாகும். ஆன்மீகத்தின் பெயரால் வரம்பு மீறுதலை ஒருபோதும் இஸ்லாம் அங்கீகரிப்பதில்லை. இதனால் தெளிவான ஏகத்துவக் கொள்கையில் சிறிதும் பிறழாமல் மேலோங்கி நிற்கிறது. அதன் இறைக் கொள்கைக்குக் களங்கம் விளைவிக்கும் சிறு செயலைக் குறித்தும் அது எச்சரிக்காமல் விட்டதில்லை.இஸ்லாமிலிருந்து வழிதவறிச் சென்ற மதங்கள் மகான்கள் மற்றும் புண்ணிய புருஷர்கள் மீது கொண்ட வரம்பு மீறிய பக்தியால் அவர்களை இறைவனின் தன்மைக்கு உயர்த்தின. இதனால் இறைவனின் தன்மைக்குக் களங்கம் கற்பித்து இணைவைப்புக் கொள்கையில் சென்றுவிட்டன. மனிதர்களை இறை அவதாரங்களாகவும் இறைவனின் புதல்வர்கள் எனவும் நம்பிக்கை கொண்டு அவர்களை வணக்கத்துக்குரியவர்களாகவும் ஆக்கிக்கொண்டனர். உண்மையில் இத்தகைய நம்பிக்கை இறைவனின் மேன்மைக்கும் மகத்துவத்திற்கும் களங்கம் கற்பிக்கும் நம்பிக்கையாகும்.
சிலைவணக்கத்தை எதிர்த்த பகுத்தறிவுத் தலைவர்களுக்குக் கூட அவர்களின் தொண்டர்கள் சிலைகளை ஏற்படுத்தி அதற்கு மாலை மரியாதை செய்து கொள்வதை நவீன உலகில் கூட நாம் கண்டு வருகிறோம். கல்லுக்கு மரியாதை கூடாது என்றவர்களே கல்லுக்கு மாலை இட்டு மரியாதை வழங்கும் அவலம்!
தெளிவான ஏகத்துவக் கொள்கையை உலகுக்கு போதித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமக்குப் பின்னால் தன் சமுதாயம் சிஞ்சிற்றும் வழிதவறாத வண்ணம் சீரிய வழிகாட்டுதலை விட்டுச் சென்றார்கள். ஏகத்துவக் கொள்கைக்கு களங்கம் ஏற்படும் சிறிய காரியங்களைக் கூட அவர்கள் சமூகத்துக்கு எச்சரிக்காமல் விட்டதில்லை. மக்கள் தம்மை வரம்பு மீறிப் புகழ்வதால் இறைவனின் தன்மைக்கு தம்மை உயர்த்தி அதனால் இறைவனின் மகத்துவத்துக்குக் களங்கம் கற்பிக்கும் படுபாதகச் செயலில் அது அவர்களைக் கொண்டு சேர்த்து விடும் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். அதனால் தான் இத்தகைய வரம்பு மீறிய புகழ்ச்சிகளை மக்கள் செய்யும் போது அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள், சாத்தான் உங்களைக் கெடுத்துவிட வேண்டாம் என்று கூறி எச்சரித்தார்கள்.
இதனால் தான் இன்றளவும் மதத் தலைவர்களும் ஏன் அரசியல் தலைவர்களுக்குக் கூட சித்திரங்களும் சிலைகளும் செய்யப்பட்டு மாலை மரியாதைகளுடன் வணங்கப்படும் போது ஒரு கற்பனை உருவம் கூட முஹம்மத் (ஸல்) அவர்களுக்கு கொடுக்காமல் அதன் ஏகத்துவக் கொள்கையில் இஸ்லாம் சிறந்து விளங்குகிறது. இதனால் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் கற்பனையாக வரையப்படுவதைக்கூட முஸ்லிம் சமுதாயம் ஏற்றுக்கொள்வதில்லை.
"நிச்சயமாக நான் உங்களைப் போன்ற மனிதனே! திண்ணமாக உங்கள் இறைவன் ஒரே இறைவன் என எனக்கு (இறைவனிடமிருந்து) வெளிப்பாடு வருகின்றது, யார் தன் இறைவனின் சந்திப்பை ஆதரவு வைக்கிறாரோ அவர் அறச்செயல்களைச் செய்து தன் இறைவனை வணங்குவதில் எவரையும் இணையாக்காமல் இருக்கட்டும் என்று (நபியே!) நீர் கூறும்!" (திருக்குர்ஆன் 18: 110)
- அபூ அப்திர்ரஹ்மான்
Published in : ஆன்மீகம், இஸ்லாம்நன்றி ; http://adhikaalai.com
Monday, November 23, 2009
நாளைய மனிதன் எப்படி இருப்பான்?
1 - கண்கள் கிட்டத்தில் உள்ளதையே பார்க்கும். தூரத்தில் உள்ள எதுவும் தெரியாமல் போய்விடும். உபயம்: கணினி
2 - கால்குலேட்டர் இல்லாமல் 2 ம் 3 ம் எத்தனை என்று கேட்டால் தெரியாது
3- முதுகு வளைந்து மீண்டும் குரங்காகிவிடுவான் - உபயம்: கணினியேதான்
4 - காகித எழுத்துக்களை வாசிக்க முடியாது - கணித்திரையில் ஒளியோடு கூடிய எழுத்துக்களே வாசிக்க் முடியும்
5- மனிதன் பேச்சைத் தொலைத்துவிடுவான். எல்லாம் எழுத்துதான். ஆமாம் இப்படியே தட்டிக்கொண்டே உக்காந்திருந்தால் வேறென்ன ஆகும் :)

தொகுப்பு: வாழ்க்கை நன்றி உங்களுக்கு http://www.blogger.com/
Subscribe to:
Posts (Atom)