பாரமிருக்காது என்று நினைத்துத்தான்
ஒவ்வொரு சுமைகளையும் தூக்குகின்றேன்
வாழ்க்கையில் எதுவும் நிரந்தரமில்லை !
வாழ்க்கையின் தத்துவம் படிப்பினையாகமாறிப் போகின்றது .
தூசுகள் பறக்கின்ற புழுதி மண்ணில் நின்று
தலைக்கணத்தின் -
பெருமைகள் புகழ் பாடுகின்றன .
மனித நேயத்தை புதைத்து விட்டு
பொறாமை உணர்வுகள்
தங்கள் கண்களை தாமே மறைத்துக் கொண்டு விழிகளை தடவுகின்றன
Showing posts with label புகழ். Show all posts
Showing posts with label புகழ். Show all posts
Wednesday, May 7, 2014
Sunday, April 28, 2013
எந்தத் தாயும் பெற முடியாத அழகானக் குழந்தை நீங்கள் !
எந்தத் தாயும் பெற முடியாத
அழகானக் குழந்தை நீங்கள் !
*******************
தங்கள் கண்களை விட
கருமையான
அழகானக் கண்கள் இல்லை !
எந்தத் தாயும்
தங்களை விட
அழகானக் குழந்தையை
பெற்றதில்லை !
***
தாங்கள்
குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள் ....
தாங்கள் எப்படிப் படைக்கப்பட
விரும்புவீர்களோ
அப்படி !
***
தங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது ...
கஸ்தூரியை விட அதிக மணத்தோடு !
தங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது !
தங்கள் கரம் பெரிய கடலை விட தாராளமானது !
தங்கள் தர்மம் ஓடும் நதியைப் போன்றது !
தங்களைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள்
பொறாமைத் தீயிலேயே வெந்து கொண்டிருப்பவர்கள்
ஆகியோரிடமிருந்து
அல்லாஹ்
தங்களை பாதுகாக்க வேண்டும் !
***
அழகானக் குழந்தை நீங்கள் !
*******************
தங்கள் கண்களை விட
கருமையான
அழகானக் கண்கள் இல்லை !
எந்தத் தாயும்
தங்களை விட
அழகானக் குழந்தையை
பெற்றதில்லை !
***
தாங்கள்
குறையில்லாமல் படைக்கப்பட்டீர்கள் ....
தாங்கள் எப்படிப் படைக்கப்பட
விரும்புவீர்களோ
அப்படி !
***
தங்கள் புகழ் இவ்வுலகில் பரவுகிறது ...
கஸ்தூரியை விட அதிக மணத்தோடு !
தங்கள் அதிர்ஷ்டம் நிறைவானது !
தங்கள் கரம் பெரிய கடலை விட தாராளமானது !
தங்கள் தர்மம் ஓடும் நதியைப் போன்றது !
தங்களைப் பார்த்துப் பொறாமைப் படுபவர்கள்
பொறாமைத் தீயிலேயே வெந்து கொண்டிருப்பவர்கள்
ஆகியோரிடமிருந்து
அல்லாஹ்
தங்களை பாதுகாக்க வேண்டும் !
***
Monday, September 24, 2012
வேண்டாததை வேண்டி வினையில் மாட்டினேன்
கவிதை வேண்டுமென்று கவிஞர் வைரமுத்துவுடன் போனேன்
வைரமும் முத்துவும் இருந்தால் வா! ' தருகிறேன் என்றார்
பணம் சேர்க்க வழி சொல்லுங்கள்' என கனிமொழியைக் கேட்டேன்
கனிவாக பதில் சொல்லாமல் நகர்ந்து போனார்
கல் வெட்டி பணம் சேர்த்த செல்வந்தரிடம் 'பணம் பண்ண வழி' கேட்டேன்
'பணம் சேர்த்த பின் கடுஞ்சிறையில் போக விருப்பமானால் சொல்கின்றேன்' என்றார்
'புகழ் வேண்டுமென்று' கலைஞரிடன் ஆலோசனை கேட்டேன்
அதற்கு மக்கட்பேறு வேண்டுமென்று கலையாகச் சொன்னார்
வேலை வேண்டுமென்று' முதல்வரைக் கேட்டேன்
எனக்கு ஓய்வில்லை உனக்கு பதில் சொல்ல. வேண்டுமென்றால் இனாம் தருகிறேன் வாங்கிப் போ' என்றார்
கல்வி நாடி கல்லூரி நாடினேன்
'காசைப் போட்டால் கல்வி கிடைக்குமென்றார்'
Subscribe to:
Posts (Atom)


