வாழ்வு முற்றுப் பெறுவதற்கு முன் நாம் ஏதாவது நற்காரியங்களை செய்தாக வேண்டும் . அதற்கு பல வழிகள் இருப்பினும் நாம் பெற்ற அறிவினை, அனுபவத்தை மற்றவர்க்கு கொடுத்துச் செல்வது சிறப்பானதாகும். உங்களுக்குக் கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்த தற்காலத்தில் ஒரு சிறந்த வழி இணைவழியாக (கம்யூட்டர்) தற்பொழுது உள்ளது.
அதிலும் முதியோர்கள் மிகவும் பயன் பெறலாம் . வயது வந்த பின் கல்வி கற்றோர் தம் காலத்தினை தமக்கும் மற்றோருக்கும் பயன் பெறும் வகையில் இதனை பயன்படுத்தி மன நிறைவு அடையலாம்.
அதற்கு உங்களுக்கென்று ஒரு வலைப்பூவினை உருவாக்கிக் கொள்ளுங்கள், இது உங்களுக்கு உற்சாகத்தினைத் தரும். பின்பு உங்களுக்கு காலம் போகாமல் தவித்த எண்ணம் போய் காலம் மகிழ்வாகக் கழியும்.உள்ளம் மகிழ்வடையும்.நாம் நல்ல காரியத்தில் செயல் படுகின்றோம் என்ற ஆத்ம திருப்தியடையும்.
இணையதளம் தொடங்க பணம் செலவு செய்ய தேவையில்லை. ப்ளாக்கர்
Blogger: Create your free Blog
www.blogger.com மற்றும் வோர்ட்பிரஸ் இவைகள் உங்களுக்கு உதவும். செயல்பட சில வீ டியோ பாருங்கள் , மற்றும் இதற்கு உதவியாக பல வலைப்பூக்கள் இருகின்றன. அதில் ஒன்று ப்ளாக்கர் நண்பன்
பாஸித்தின் "ப்ளாக்கர் நண்பன்" வலைப்பூ பூத்த விதம் ...
1 comment:
என்னை அறிமுகப்படுத்தியதற்கு நன்றி!
Post a Comment