ஓவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் புதைந்து கிடக்கின்ற அனைத்துத் திறமைகளையும்….. கண்டுணர்ந்து, அவைகளை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பெரிதும் உதவி செய்திடும் துறை தான் – மனித வள மேம்பாடு ஆகும். தனி மனித வாழ்விலும், குடும்ப வாழ்விலும், தொழில் துறைகளிலும், பணியிடங்களிலும் ஒரு மனிதன் முழு வெற்றி அடைவதற்கு இந்தத் துறை பெரிதும் உதவி செய்கிறது.
“மனிதர்கள் சுரங்கங்கள்! – தங்கத்தைப் போல! வெள்ளியைப் போல!” – என்றார்கள் முஹம்மது நபி (ஸல்) அவர்கள்.
சுரங்கங்களில் மறைந்து கிடக்கின்ற விலை மதிக்க முடியாத கனிமங்களைப் போலவே, ஒவ்வொரு தனி மனிதனுக்குள்ளும் “உள்ளாற்றல்கள் – மனித வளங்கள் – மறைந்து கிடக்கின்றன!
சுரங்கங்களின் தாதுப் பொருட்களிலிருந்து “தங்கத்தை” வெளிக் கொணர்வது போன்று தான் மனித வளங்களும் கண்டுபிடிக்கப் பட்டு மெருகேற்றப் பட வேண்டும்.
அப்படிச் செய்திடும் போது தான் – மனிதன் – தான் யார் என்பதை உணர்ந்து கொள்கிறான். அப்போது தான் அவனுக்கு தன்னம்பிக்கை (Self Confidence) ஏற்படுகின்றது. அவனே வாழ்க்கையில் வெற்றி பெறுகின்றான்.
நீடூர் மன்சூர் அலி M.A., B.Ed., அவர்கள் சென்னை வண்டலூர் கிரஸன்ட் மேல் நிலைப்பள்ளியில் இஸ்லாமிய பாடவியல் (Islamic Studies) ஆசிரியராகவும், மாணவர் நல ஆலோசகராகவும், மனித வள மேம்பாட்டுப் பயிற்சியாளராகவும் பணியாற்றியவர்.
மன்சூர் அலி அவர்கள் தி கார்டன் அகாடமி (The Garden Academy)( Please visit :http://www.thegardenacademy.in/) எனும் மனித வள மேம்பாட்டுக் கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். மேலும் கல்வி நிறுவனங்களின் அழைப்புகளை ஏற்று, பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மனித வள மேம்பாட்டுப் (Human Resource Development) பயிற்சி அளித்து வருகிறார்.
S.E.A. முஹம்மது அலி ஜின்னா
No comments:
Post a Comment