Friday, June 26, 2020

அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்
=========================

ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த இளைஞர்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்


ஆட்டுப்பால் தரமுடியுமா என்று
அபூபக்கர் கேட்டார்

அவை அமானிதம் என்று மறுத்துவிட்டார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

கன்னி ஆட்டின் மடியில் நான்
கறந்துகொள்ளவா என்று கேட்டனர்

அற்புதங்கள் செய்யவல்ல
அண்ணல் நபிகளார்

ஆர்வத்தில் சரியென்றார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

மந்திரக்கரத்தால் மடுவைத் தொட்டு
மந்திரம் சொன்னார்கள் மாநபிகளார்

மடு சுரந்து கனத்தது
மூவரும் அருந்தி மகிழ்ந்தனர்

அம்மந்திரச் சொற்களை கற்றுத்தருவீர்களா என்றார்
அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்


நீரும் கற்று உலகுக்கும் கற்பிப்பீர் என்றார்கள்
நேர்மை நபி

ஆறாவதாக இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட
அருமைத்தோழராம் அப்துல்லாஹ் இப்னு மஸ்’ஊத்

அவர் கற்றுக்கொண்ட மந்திரம்தான் திருமறை
அதை அவர் ஓதிக்காட்டியதோ பலமுறை

அல்லாஹ் அருளியிருந்தான் அவர் குரலுக்கு அபார இனிமை
அருள்மறையை ஓதுவதில் சிறந்தது அவர் பெருமை

======

அபூஹுரைரா

இவர் அறிவித்த நபிமொழிகள் அனேகம்
அபார நினைவாற்றல் இவரது சினேகம்
-நாகூ ர் ரூமி  


No comments: