Wednesday, June 10, 2020

இறைசிந்தனை அங்கம் ஓர் அழகிய அற்புத ப்ரபஞ்சமே!


Noor Saffiya


அல்லாஹ் அங்கத்தினை
அழகாக்கியே தந்தான்!
அது,தலை,முகம்,கை,
நெஞ்சு,வயிறு,கால்! என
அன்றி, இன்னுமிருக்கு! என
அது நம் யாவருமறிந்ததே!

மண்டையின் கவசமென
தந்தானே!
மூளையின் வேலையை
மறைக்கவே!
முன்னோன் கைவைத்தே
முழுமையாய்!
முழுமனதோடு உலகில் அனுப்பினானே!

அங்கத்தின் செயல்பாடு
யாவற்றையுமே!
அதன் தன்மையின்
அடிபணிய வைத்தானே!
அதிலே சிந்திக்கும்
சிந்தை பொதித்தானே!
சுபுஹானல்லாஹ்!


முடியை தந்தான் நம்மிலே
மறுமையில் மானம் காக்கவே!
மறைவானவற்றிலும் தந்தானே!
முடி விழுவதும் முளைப்பதும்!
முடிவிலா நிலமையே!

மூச்சுவிடும் நேரம் வரை!
முழு அங்கம் செய்த பாவம்!
முழுமையாய் அறிந்த,அறியாத!
முன்னோன் தடுத்தும்
தெரிந்து செய்த பாவம்!

முடியை எண்ண முடியாதது போல! யா அல்லாஹ்!
முடிவிலா பாவம் முழுதுமே!
மன்னித்திடுவாய்! ரஹீமே!

முடியினை கலைவது போல,
முழுபாவமும் நீக்கிடுவாய். ரப்பே! முடியினை சீவி அலங்கரிப்பது போலவே!

முன்னோன் வகுத்ததை
முழுமனதாய் ஏற்று,
சிகையலங்காரபோல,
சீரிய இஹ்லாஸோடு
சிறந்த அமல் செய்து,
முடிவுற நிவாரணம்
முச்சுடர் முஹம்மதாலும்!
மன்னானருளாலும்!

முடி கருத்திருப்பதும்
அவனின் நிஃமத்தே!
முடி வெளுத்திருப்பதும்
.அவனின் அருளே!
முடியிருந்தும்
இலாமலுமிருப்பது
அவனின் ரஹ்மத்தே!
முடியிலா நிலைமையும்
அவனின் பரக்கத்தே!

முன்னோர் சொற்கள்
முழுதுமாய் நம்
மடியிலே,மனதிலே!
மனையிலே!
_மாஷா அல்லாஹ்!_

நெற்றியும் தந்தானே!
நிமிடம் தவறாது நீ என்னில்
நிலைத்து நின்று என்னில்
நேரத்திற்கு தொழுது
நிலைத்து கொள் என்றே!

யா ஹைய்யு, யா கைய்யூம்!
யா ரப்பு நான் இருக்கேன் உன்னுள்
நித்தியமாய் நிலையாய்!
நீ கேளு நான் தருகிறேன்!
நிம்மதியும் அளிக்கிறேன்! என்றே,

ஐவேளை நீ ஸஜதா செய்திடு!
நீ பெறுவாய் நிஃமத்!
ஐயமிலா வாழ்வாய் உலகிலே!
ஐம்புலனும் தூய்மையாகியே!
ஐம்பூதமும் அடங்கிடுமே!
உன்னுள்ளே!

சிராஜொலியின் தலமாய்
சிராதுல் முஸ்தகீமின்
எளிய வழியாய்!
சிராஜுஸ்ஸாலிஹீனின்
செயல்பாட்டாய்!
சிகரம் தொட சிரசை
சங்கமிக்க வைத்தானே!

தலையில் வலித்தாலும்!
தந்த அங்கத்தில்
வலித்தாலும்!
சரண் சரண் என்றே சிரம்பணிந்திடு!
தந்த வலி தகடுபோல்
தூளாகி பரந்திடுமே!

தரஜா உயர வேண்டுமா
துதிக்கும் கல்புடனே
துய்யோனின் துதித்திடு!
தூதரோடு,மலக்குகளும்
தூய்மைபடுத்துவதோடு!
தூக்கிய கரம் தூதாகிடுமே!

சிரசு பணிய பணிய
சிகரம் காணலாம்!
சரண் அடைய அடைய
சகலமும் பெறலாம்!
ஸுஜுதின் திவ்வியமோ
சூட்சுமம் அறியலாம்!

நெற்றியை நீ பதித்தால்!
நாடியது உன்னுள் பதிக்கும்!
தஞ்சமென தலைகுணி!
தருவான் அர்ஷின்அதிபதி!
சுபிட்ச வாழ்க்கையே!

அல்ஹம்துலில்லாஹ்!
அஸ்ஸுக்ரன்லில்லாஹ்!

அழகிய ஹக் திக்ரும்
அஹ்மதரின் ஸலவாத்
துதித்து நாவினில்
நனைவோம்.!

ஆமீன் !!
யா ரப்பே !!
என் ஹுப்பே !!

ஸல்லல்லாஹு
அலா முஹம்மத்
ஸல்லல்லாஹு
அலைஹிவ
வஸல்லம்💞

🖋நூர்ஷஃபியா காதிரியா

No comments: