Friday, June 5, 2020

நாம் எப்படியோ அமைவதும் அப்படியே...

Saif Saif
நாம் எப்படியோ அமைவதும் அப்படியே...
யாரையும்
குற்றம் காணும்
அவசியம் ஏற்படவில்லை..
வயதான பெத்தவங்களை "பேசாமல் கிடங்களேன்" என்று பிள்ளைகளால் சாதாரணமாக சொல்லி விட முடிவதில்லை..
பெத்தவங்க மனம்
பண்படும் நிலையில் இல்லை..
புண்பட்டு விடுகிறது..
குழந்தைகளை பெத்தவங்க "லேய் சொன்னா கேளுலேன்னு" சொல்ல முடியவில்லை..
பிள்ளைகள் பதிலுக்கு
"ஏன் லேய் சொல்ல வேண்டும்.. பெத்தவங்களுக்கு அன்பே இல்லையோ" என்று புண்பட்டு விடுகிறது.
புரிந்து கொள்ளும்
தன்மை இங்கு எதனால் மழுங்கி விட்டது..!?

தவறு தவறு மழுங்கி விட்டது என்று சொல்லக் கூடாது..?!
குறைந்து விட்டது என்று சொல்லலாம்.. அதை விட உள்வாங்கி ஜீரணிக்கும் தன்மை வெகுவாக குறைந்து விட்டது
என்று சொல்வது
தான் சரியானதாக இருக்கும்..
காரணம் நேசிப்பு. நம்பிக்கை..நேசம் மிகுதியாகும் போது எதிர்பார்ப்பும் அதிகமாகும்..
அந்த எதிர்பார்ப்பில்
வரும் வார்த்தைகள் பண்படுத்துவதற்காக இருந்தால் கூட பிறர் மனம் புண்படுவதை தவிர்க்க இயலாது...
பிறரை புண்படுத்த  வார்த்தைகள் எப்போதும் ரெடியாகவே இருக்கிறது..
ஆனால் பண்படுவதற்கான வார்த்தைகளை தேடி எடுப்பது தான் கடினமாக இருக்கிறது..
ஆனால் நாம் இலகுவானதை தேடி  எடுக்கிறோம்..
நல்லதை தேடி எடுக்க நமக்கு பொறுமையில்லை..
உதாரணமாக "பேசாமல் கிடங்கள்" என்று பெத்தவங்களிடம் சொல்வதை விட "நீங்கள் அமைதியாக இருப்பது உங்கள் உடம்பிற்கு ஆரோக்கியம்" என்று சொல்வது எவ்வளவு சிறந்தது..
பிள்ளைகளை "லேய் சொன்னா கேளுலே" என்று சொல்வதை விட  "அன்பான பிள்ளைங்க பெத்தவங்க பேச்சை கேட்பாங்க" என்று சொல்வது சிறப்பானது அல்லவா..
மிகச் சாதாரண விஷயங்கள் தான்..
ஆனால் அதுவே பிரச்சினையான விஷயங்களாக
உருமாறிக் கொள்வதும் இப்படித்தான்...
பெருந்தன்மை
யானவர்கள்-
புரிந்தவர்கள்
புரிந்து கொள்வதில் சிக்கலில்லை..
புரியாதவர்களை புரிந்து கொள்ள வைப்பதில்
தான் சிக்கல் வருகிறது..
இந்த சிக்கல் தான் பெரும்பாலும் வெறுப்பை கொண்டு வருகிறது..
இதில் தப்பியவர்களுக்கு விரோதிகளை பற்றிய கவலையில்லை..
அதனால் நிம்மதி..
அதனால் அவர்களுக்கு யார் மீதும் வெறுப்பும் வருவதில்லை..
எந்த மெனக்கெடுகளும்  யாருக்குள்ளும் எந்த மாற்றத்தையும் பெரிதாக ஏற்படுத்தி விடப் போவதில்லை..
எல்லோரையும் திருப்தி செய்து வாழ்வது கடினமான ஒன்று தான்..
கடினங்களை கடந்து செல்வது தானே வாழ்க்கை..
அதற்கு விட்டு கொடுத்தலும் பொறுமையும்
காலமும் ரெம்ப ரெம்ப அவசியமாகிறது.
ஆக இந்த புண் - பண் என்பதில் ரெம்ப
கண்- ணாகவே கடந்து செல்பவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்..!!
#என்னங்க_ஞான்
#சொல்றது.

Saif Saif

No comments: