Sunday, June 7, 2020

உலகத்தில் சிறந்த ஒன்று! / காயம்பட்ட முல்லா.


Samsul Hameed Saleem Mohamed 

உலகத்தில் சிறந்த ஒன்று!
முல்லா மன்னரிடம் சில காலம் அமைச்சராக இருந்தார். அவர் மீது மன்னருக்கு அதிக அபிமானம் இருந்தது. அதனால் மன்னர் உணவருந்தும் போதெல்லாம் தன்னுடன் முல்லாவையும் அமர வைத்துக் கொண்டு இருவரும் உரையாடி மகிழ்ந்த படியே உணவருந்துவார்கள்!
ஒருநாள் இருவரும் வழக்கம்போல அருகருகே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர்.
அன்று பீன்ஸ் கறி சமைக்கப்பட்டிருந்தது.
மன்னருக்கு அன்று அதிகமான பசியாக இருந்ததால் பீன்ஸ் கறியை மிகவும் விரும்பிச் சாப்பிட்டார்.

சாப்பாட்டின் இடையே மன்னர் முல்லாவை நோக்கி, ”முல்லா உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது நீர் என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.
”சந்தேகமே வேண்டாம். பீன்ஸ் காய்க்கு நிகராக வேறு காயைச் சொல்லவே முடியாது” என்று முல்லா ஆமாம் போட்டார்.
மன்னர் உடனே சமையற்காரனை அழைத்து ”இனி சமையலில் பீன்ஸ் கறிக்குத் தான் முதலிடம் தர வேண்டும். அன்றாடம் ஏதாவது ஒரு உருவத்தில் பீன்ஸை உணவுடன் சேர்ந்து விடு”  என்று உத்திரவிட்டார்.
நாள் தவறாமல் உணவில் பீன்ஸை சேர்த்துக் கொண்டதால் மன்னருக்கு அந்த காயின் மீது சலிப்பும் வெறுப்பும் ஏற்பட்டது.
அன்று சாப்பாட்டின் போது பீன்ஸ் பரிமாறப்பட்டபோது மன்னர் முல்லாவை நோக்கி ”உலகத்திலேயே மிகவும் மோசமான காய் பீன்ஸ் என்றுதான் நினைக்கிறேன்.... நீர்... என்ன நினைக்கிறீர்?” என்று கேட்டார்.
”ஆமாம் மன்னர் அவர்களே, எனக்கும் அப்படித்தான் தோன்றுகிறது. நான் அறிந்த மட்டில் இவ்வளவு மோசமான சுவையே இல்லாத பீன்ஸைப் போன்ற காயைக் கண்டதே இல்லை”  என்றார் முல்லா
”என்ன முல்லா..? பத்து நாட்களுக்கு முன்னால் நான் கேட்டபோது உலகத்திலேயே மிகவும் சிறந்த காய் பீன்ஸ் என்று சொன்னீர். இப்பொழுது தலை கீழாக மாற்றிப் பேசுகிறீரே” என்று மன்னர் கேட்டார்.
முல்லா சிரித்துக் கொண்டே...
 ”மன்னர் அவர்களே...! என்ன செய்வது..? நான் தங்களிடம் அல்லவா வேலை பார்க்கிறேன், பீன்ஸிடமல்லவே” என்றார் 😔
~பீன்ஸ் கறிக்கு பதில் அங்கே 'ஊரடங்கு' என்பதை கோர்த்துக் கொள்ளவும் 🙄~
------------------------------------------------------------
காயம்பட்ட முல்லா..🤒🤕
ஒரு தடவை முல்லா தெரு வழியே நடந்து சென்று கொண்டிருந்தார்.
அச்சமயம் வீட்டின் கூரையில் நின்று கொண்டு வீட்டைப் பழுதுபார்த்துக் கொண்டிருந்த ஒருவன் கால் தவறிக் கீழே விழுந்தான்.
அந்த நேரமாகப் பார்த்து அங்கே நம் முல்லா செல்ல.. விழுந்தவன் அவர் மீது வந்து விழ... விழுந்தவனுக்கு எந்தவித அடியோ காயமோ ஏற்படவில்லை. ஆனால் முல்லா பயங்கரமான அடிபட்டுப் படுகாயமடைந்தார்.
அவரை சிலர் அருகிலிருந்த மருத்தவனைக்கு எடுத்துச் சென்று சிகிக்சைக்கு ஏற்பாடு செய்தார்கள்.
இச்செய்தியறிந்து நண்பர்களும் பொதுமக்களும் திரளாகச் சென்று முல்லாவைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
”என்ன நடந்தது?” என்று கூட்டத்திலிருந்த ஒருவர் கவலையோடு கேட்டார்.
”எல்லாம் உலக நியதிப்படிதான் நடந்தது. உலகத்தில் யாரோ ஒருவன் பாவமோ குற்றமோ செய்ய அவன் தப்பித்து கொள்கிறான். ஆனால் நிரபாரதி பாவத்தின் பலனை அல்லது குற்றத்திற்கான தண்டணையை அனுபவிக்கிறான். அது மாதிரி தான் இதுவும் நான் கூரை மேலிருந்து விழவில்லை ஆனால் விழுந்தவனுக்குக் காயம் இல்லை விழாத எனக்கு காயம் ஏற்பட்டது” என்று சிரித்துக் கொண்டே முல்லா பதிலளித்தார். 😔
~இப்டித்தான் நம்ம இந்தியாவோட பொருளாதாரம் கொரோனாவால அடி பட்டு, ஒத பட்டு பெட்ல கெடக்குன்னு நான்ஞ் சொன்னா....
யாரும் நம்பவா போறீங்க..~ 😏


Samsul Hameed Saleem Mohamed 

No comments: