Saturday, May 24, 2014

'என் தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் நான் ஏதும் செய்ததில்லை.'- பதிவரின் ஆற்றாமை


 காலை சாப்பாடு முடிந்தால் மதிய சாப்பாட்டிற்குதான் வீட்டிற்கு போவேன். மதிய சாப்பாடு முடிந்து வெளியானால், மாலை டீ குடிக்கத்தான் மீண்டும் வீடு. டீ சாப்பிட்டு கிளம்பினால் இரவு சாப்பாட்டுக்குத்தான் வீடு. அதன் பின்னாவது வீட்டில் இருப்பேனா என்றால் அதுவும் கிடையாது. மறுபடியும் வெளியாகி இரவு 11 மணிக்குத்தான் படுக்க செல்வேன். இதுதான் என் அன்றாட வாடிக்கை.
என்றாவது ஒரு நாள் வீட்டில் படுத்திருந்தால் ஒன்று உடம்பு சரியில்லை என்று அர்த்தம். அல்லது கையில் காசில்லை என்று அர்த்தம்.
அப்படித்தான் அன்றும் வீட்டில் படுத்திருந்தேன். என் தந்தை வீட்டில் நுழைந்ததும் ஏன்டா இப்படி படுத்திருக்கே என்றார். நான் சும்மாதான் என்றேன்.
ஏன் உடம்பு சரியில்லையா என்றார் அக்கறையுடன்.
இல்லத்தா என்றேன்.
அப்படின்னா காசு இல்லையா என்றார் கனிவுடன். நான் பதிலேதும் சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
உடனே என் அம்மாவை அழைத்தவர் ஏப்பா பய வீட்டிலேயே தங்க மாட்டானே. ஏன் இப்படி படுத்திருக்கான். பாவம் கையில் காசு இல்லே போல. இந்தா இதை அவனிடம் கொடுத்துடு என்று நூறு ரூபாயை எடுத்து நீட்டுவார். உடனே என் அம்மா...
இப்படி காசு கொடுத்தே அவனை கெடுத்து வைங்க என்பார்.
விடுப்பா. அவனுக்கு நம்மதானே கொடுக்கனும் என்பார்.

எனக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து ஒரு தடவை கூட நான் கேட்ட எதையும் என் தந்தை மறுத்ததில்லை. எது கேட்டாலும் உடனே கிடைக்கும்.

வெளியூர் சென்று இரவில் திரும்புவார். கையில் ஏதாவது தின்பண்டம் இருக்கும். ஒருவேளை நான் தூங்கிவிட்டால் எழுப்பி அதை கொடுத்து சாப்பிட சொல்லி ஒரு குழந்தையை போல் ரசிப்பார்.

நான் சம்பாதிக்காத காலத்தில் எனக்கென்று எல்லாமுமாய் இருந்தவர், நான் சம்பாதிக்கும் காலத்தில் இல்லாமலே போய்விட்டார்.

என் தந்தையின் அன்பிற்கு பிரதியுபகாரமாய் நான் ஏதும் செய்ததில்லை. அவர் பெயரான ரஹீம் என்ற பெயரை என் பெயரோடு இணைத்து வைத்துள்ளதை தவிர.



                                                          ரஹீம் கஸாலி       

My blogs

 

 


2 comments:

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பாக தந்தையை நினைவுகூர்ந்த நண்பர் ரஹிம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!

”தளிர் சுரேஷ்” said...

மிகச்சிறப்பாக தந்தையை நினைவுகூர்ந்த நண்பர் ரஹிம் கஸாலி அவர்களுக்கு வாழ்த்துக்கள்! நன்றி!