Saturday, May 24, 2014

வாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற வெற்றிக்கு

வாழ்த்துக்கள் நீங்கள் பெற்ற வெற்றிக்கு

வெற்றி கிடைத்து உள்ளது உங்கள் உழைப்பிற்கு

மருத்துவராய் வருவதா ???

பொறியாளராய் வருவதா ????

என்று பட்டி மன்றம் போடுவதை விட

மனதில் மனித நேயம் துளிர் விட

யோசிக்க கற்று கொள்ளுங்கள் குழந்தைகளே !!!!

நம்பி இருக்கும் நாளைய உலகம் உங்கள் கைகளிலே

பொறியாளர்களைவிட நெறியாளர்கள் தான் அவசரதேவை

மருத்துவரை விட நல்ல கருத்துடையவர் தேவை

எனவே அதனை படிப்பில் கொண்டு வாருங்கள்

அணைத்து துறைகளிலும் நல்லவரை தாருங்கள்

இப்போது தேவை நல்லவர்கள்

அதுதான் இங்கு பற்றா குறைகள்

பணமொரு பொருட்டு அல்ல

பொறியாளரை மருத்துவரை விட

அதிகம் சம்பரிக்கும்துறை சாமியார் துறை

ஆசாரம் பாபு சாமியாரிடம் 1000 கோடி இருக்கு

பாபா ராம்தேவ் விடம் பல 1000 கோடி கொட்டி கிடக்கு

நோக்கம் அதுவல்ல

மனித நேயதுத்டன் துவக்கம் கொள்ள

உதவட்டும் உங்கள் படிப்பு

உங்கள் காலத்திலையாவது நிற்கட்டும் இந்த அணு வெடிப்பு

உலக அமைதிக்கு உதவட்டும் உங்கள் மேல் படிப்பு

பஷீர்
Bassheer Ahamed

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails