Friday, May 16, 2014

மனிதநேயம் வேண்டும்

மனிதநேயம் வேண்டும்
மனிதநேயத்திற்கு என்று ஒரு கட்சியா வேண்டும் ?

இஸ்லாம் ஒரு வாழும் வழிதான்
இஸ்லாத்திற்குள் பல பிரிவுகளும் இல்லை
இஸ்லாத்தை வழி நடத்த பல கட்சிகளும் இல்லை

மனிதனால் உண்டாக்கிய பிரிவுகள்
மனிதனால் உண்டாக்கிய பல கட்சிகளாய் பிரிந்து நிற்கின்றன

கருத்துகள் மாறுபடலாம்
கொள்கைகள் மாறுபடலாம்
விளக்கங்கள் மாறுபடலாம்
அவைகள் பிரிவுகளை உண்டாக்கக் கூடாது

பிரிவுகள் பிரச்சனையாகி
முடிவுகள் வேதனையாகி விடும்

சிரமங்கள் நம்மால் உருவாக்கிக் கொண்டவைகள்
நன்மைகள் இறைவனது அருளால் கிடைப்பவைகள்

சிரமங்கள் வர அழுகிறாய்
செய்த தவறுகளைப் பற்றி சிந்திப்பதில்லை

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails