Wednesday, October 30, 2013

அலறும் அமெரிக்கா !

ஒரே ஒரு நிகழ்வு அமெரிக்காவின் அஸ்திவாரத்தில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கிவிட்டது. நான் 9/11 நிகழ்வைத் தான் சொல்கிறேன். அதற்குப் பிறகு அமெரிக்காவுக்கு எதைக் கண்டாலும் பயம். காமாலைக்காரன் கண்ணுக்கு கண்டதெல்லாம் மஞ்சள்னு சொல்லுவாங்க இல்லையா, அதே நிலமையில் தான் இன்றைய அமெரிக்கா இருக்கிறது. இருட்டைப் பாத்தாலே பூதம் என்றும், சத்தத்தைக் கேட்டாலே வெடிகுண்டு என்றும் கதிகலங்கிப் போய் போதாக்குறைக்கு தொடந்து ஆங்காங்கே நடக்கும் துப்பாக்கிச் சூடுகள், குழந்தைகளின் மீதான தீவிரத் தாக்குதல்கள் இவையெல்லாம் அவர்களுடைய பயத்தை அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.

அந்த பயத்தின் வெளிப்பாடு தான் அமெரிக்காவின் உளவு வேலைகளையும் தீவிரப்படுத்தியிருக்கிறது. இணையத்தில் உலவும் எந்தச் செய்தியையும் திருட்டுத்தனமாக அமெரிக்காவால் படித்து விட முடியும் என சமீபத்தில் அதிர்ச்சிச் செய்தி வெளியானது. எதை வேண்டுமானாலும் ஒட்டுக் கேட்கும் வகையில் அமெரிக்காவின் காதுகள் எல்லா இடங்களிலும் ஒட்டப்பட்டும் இருக்கின்றன.

Monday, October 28, 2013

யுத்தங்கள் அனைத்தினதும் பிரதிபலனை நாங்கள் இன்றும் அனுபவிக்கிறோம் !


குறிப்பு - ஆப்கானிஸ்தானில் பிறந்து, அமெரிக்க நாவலாசிரியராக சர்வதேச அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் காலித் ஹுஸைனி, தனது 15 ஆவது வயதில் ஒரு ஆப்கானிஸ்தான் அகதிச் சிறுவனாக அமெரிக்காவுக்குள் நுழைந்தார். அப்பொழுது அவருக்கு ஆங்கிலத்தில் ஒரு சில சொற்கள் மாத்திரமே தெரிந்திருந்தது. இன்று அவர் ஒரு வைத்தியர், அமெரிக்க சமூக நல அமைப்பின் தூதுவர் மற்றும் சர்வதேச அளவில் வரவேற்பைப் பெற்ற The Kite Runner, A Thousand Splendid Suns ஆகிய நாவல்களை எழுதிய எழுத்தாளராகவும் அறியப்பட்டிருக்கிறார். இவரது புதிய தொகுப்பான And the Mountains Echoed எனும் நாவல் கடந்த மே மாதம் 21 ஆம் திகதி வெளிவந்தது.  அவரது புதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு இடம்பெற்ற நேர்காணலின் தமிழாக்கம் இது.

எதிர்பார்ப்பு

கருவும் உருவாகிக் காண எதிர்பார்ப்பு

கருமை முகில்கூடும் காட்சி எதிர்பார்ப்பு

பெருகும் விலைவாசி பேரம் எதிர்பார்ப்பு

உருகும் நிலைபோக உண்மை எதிர்பார்ப்பு

படிக்கும் பருவத்தில் பண்பின் எதிர்பார்ப்பு

அடிக்கும் தருவாயில் அன்பின் எதிர்பார்ப்பு

துடிக்கும் உடலும்தோள் தொங்க எதிர்பார்ப்பு

வடிக்கும் கவிதைக்கு வார்த்தை எதிர்பார்ப்பு

நகைக்கும் சிரிப்புக்கு நாடே எதிர்பார்ப்பு

பகைக்கும் குணத்திற்குப் பாவம் எதிர்பார்ப்பு

மிகைக்கும் கருணைக்கு மேன்மை எதிர்பார்ப்பு

புகைக்கும் பழக்கத்தால் புற்றே எதிர்பார்ப்பு


< கவியன்பன்” கலாம்,Kalam Kader

 From: Abulkalam bin Shaick Abdul Kader
<kalaamkathir7@gmail.com>

Saturday, October 26, 2013

உலகில் பல இனங்கள் !

உலகில் பல இனங்கள் உள்ளன . 
 ஆப்பிரிக்காவில் மனித இனம் தொடங்கியது அல்லது கடலில்  மூழ்கிய  அட்லாண்டிஸ் அல்லது லெமுரியா  கண்டங்களில் தொடங்கியதாக ஆய்வு  சொல்கின்றது

 சில ஆய்வுகளின் படி  அட்லாண்டிஸ் மக்கள் சிகப்பு நிறம் மற்றும் லெமுரியா மக்கள் கருப்பு நிறம் கொண்ட மக்கள் என்பதாகும். உடல் உருவத்தில் மாற்றம் இல்லை ஆனால் அறிவுத் திறனில் மாற்றம் இருந்தது

 உயர்வு தாழ்வு மனம் கொண்டு ஒரு இனத்தோடு மற்றொரு இனத்துடம் மோதல் வருவதற்கு வாய்ப்பானது.  முதன் மோதல் தொடங்கியது .

Wednesday, October 23, 2013

வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் !

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.

என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும் எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில் எல்லாம் மறைந்துபோயின

உமர் (ரழி)

இனிக்கும்
இஸ்லாத்தை ஏற்று;
வெடிக்கும் எரிமலையாகக்
கயவருக்கு மட்டும்!

வரலாற்றைப் படிக்கும்
போதே மினுமினுக்கும்
விழிகள்;
படித்தப் பின்னேப்
புடைக்கும் நரம்புகள்!

மாற்றுப் பாதைக்குத்
தோற்று ஓடுவான்
ஷைத்தானும்;
உங்கள் பாதைக் கண்டால்!

Monday, October 21, 2013

உலகில் உள்ள பல மார்க்கங்ககள் பற்றி அறிய...

இறைவன் மக்களை வழி நடத்த மக்கள் முறையான வாழ்வு வாழ காலத்திற்கு, இடத்திற்கு தகுந்ததுபோல் பல நபிகளை, தீர்க்கதரிசிகளை அனுப்பி வைத்தான். இஸ்லாம் மார்க்கத்தின்படி இறுதி நபியாக வந்தவர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் ஆவார்.
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வழியே தரப்பட்ட வேதம் குர்ஆன் ஆக உள்ளது .

" உங்களுக்கு உங்களுடைய மார்க்கம்; எனக்கு என்னுடைய மார்க்கம்.”- குர்ஆன் :109:6.


உலகில் உள்ள மார்கங்கள் பல. அவற்றைப் பற்றி ஆங்கிலத்தில் அறிய
இங்கு சொடுக்கிப் பாருங்கள்

Sunday, October 20, 2013

நமது கோளாறு


அல்லாஹ்வின் மார்க்கத்தை பிறரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்கிற ஆவல் அல்ஹம்து லில்லாஹ் இன்று எல்லோரிடமும் பரவலாக காணப்படுகிறது. தனி நபர்களாகவும், பல குழுக்களாகவும் நாம் இந்த இஸ்லாமிய அழைப்புப்பணியை செய்து வருகிறோம். ஆனால், அன்று சஹாபாக்கள் காலத்தில் இஸ்லாம் பரவியது போல இன்று பரவுவதில்லை. அன்று மக்களை இஸ்லாம் ஈர்த்தது போல் இன்று ஈர்க்கவில்லை. இஸ்லாம் ஏனைய மார்க்கங்களைப் போல இடைச் செருகல்களுக்கும், மாற்றத்திற்கும் ஆட்பட்டுவிட்டதா என்றால் அதுவும் இல்லை. பிறகு இதற்கு காரணம் என்ன?

இஸ்லாம் ஹிஜ்ரி நாற்பதாம் ஆண்டிலேயே அன்றைய நிலப்பரப்பில் மூன்றில் இருபங்கை தன்வயப்படுத்தியது. கொள்கையிலும், வணக்க வழிபாடுகளிலும் எவ்வித மாறுதல்களுக்கும் உட்படாத அதே இஸ்லாம் தான் இன்றும் இருக்கிறது. இத்தனைக்கும் அன்றைய காலத்தில், டிவி, ரேடியோ, பத்திரிக்கை, இன்டர்நெட் போன்ற எவ்வித தகவல் தொடர்பு சாதனங்களும் இல்லை. அப்படியென்றால் வேறெங்கோ எங்கோ கோளாறு இருக்கிறது. ஆமாம் நாம் இஸ்லாமை அறிமுகப்படுத்துவதில் தான் கோளாறு செய்கிறோம். நாம் எதை இஸ்லாம் என்று மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்துகிறோம். எதனை மையப்படுத்தி இஸ்லாமை மக்களிடம் கொண்டு போகிறோம் என்பதை கவனமாக ஆராய வேண்டும்.

தமிழில் வெளியானது "தி மெசேஜ்" திரைப்படம்!

தமிழர்கள் வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த, இறைத்தூதர் முஹம்மத் நபி (ஸல்) அவர்களின்  வாழ்க்கை வரலாறு தொடர்புடைய, கடந்த 1977 ஆம் வருடம் வெளியான, தி மெசேஜ் (The Message) எனும் ஆங்கிலத் திரைப்படம்  தற்போது தமிழில் வெளியாகியிருக்கிறது.

Star Communications நிறுவனரும், தயாரிப்பாளருமான காயல்பட்டினத்தை சேர்ந்த K.M. முஹம்மது தம்பி அவர்களின் முயற்சியில் மொழி பெயர்ப்பாளர் திரு. ராஜேஷ் மற்றும் மவ்லவி காஞ்சி அப்துர் ரவூப் பாக்கவி அவர்களின் மொழி நேர்த்தியுடன் இத்திரைப்படம் வெளியாகியுள்ளது.


இத் திரைப்படம் தியேட்டரில் வெளியாகாது. தனித் திரையிடல் மூலமோ DVD வாங்கியோ பார்க்கலாம்.

இதற்கான DVD வெளியீட்டு விழா, சென்னை Four Frames Preview தியேட்டரில் நடந்தது. விழாவில் ஏ.ஆர்.ரகுமானின் சகோதரி ஏ.ஆர்.ரெஹானா, முகம்மது தம்பி, எல்.கே.எஸ். இம்தியாஸ், அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் பி.மன்னர் ஜவஹர், இயக்குனர்கள் கரு.பழனியப்பன், ஜனநாதன், பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., கவிஞர் அப்துல் ரகுமான், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 தகவல்: அபூ ஸாலிஹா

Friday, October 18, 2013

புரோட்டா

நீ இல்லாத
விருந்துகளும் குறைவு;
உனை ரசித்து
தொடர்ந்து உண்டுவந்தால்
ஆயுளும் குறைவு!

குடல்வலிமையை நீ
புரட்டி எடுக்க;
புரட்டி எடுத்த உனை
நாங்கள் மென்று ரசித்துப்
பழித்தீர்க்க;
கோபித்துக்கொண்ட நீயோ
செரிமாணம் கொள்ளாமல்;

எங்களைக்
கொல்லாமல் கொல்ல;
புதுப் புது வியாதிகளை
நாங்கள் அள்ள!

புரியாத பாஷையில்
உனக்கு யார் வைத்தாரோ
பெயர் புரோட்டா;
கடை எழுத்துக்கள் மட்டும்
கண் முன்னே;
தின்றுக்கொழுத்தால்
நீ காட்டப்போவது எங்கள்
வாழ்விற்கு டா டா என்று!

Wednesday, October 16, 2013

EID-UL-ADA in Dubai 2013 துபாயில் தியாக திருநாள்-2013 (+playlist)

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள்
Nidur-Neivasal Eid-Ul-Ada

நீடூர்-நெய்வாசல் ஈத் பெருநாள் தருணங்கள்

Assalamu Allikkum

Warmest Eid Greetings with wishes for you, friends and family
May this Eid is full of blessings to all of us, Eid-ul-ada across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly! All praise be to Allah the Exalted.

Ya Allah, I seek forgiveness from you for all of my every wrong doings with you in the past with and without my knowledge. i humbly thank you for your precious support that u gave to me as a friend and well-wisher. forgive me on this eid-ul-ada and set me free from my sins that harmed you. May Allah s,w,t bless you with his mercy and love In shaa allah
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Monday, October 14, 2013

ஹஜ் பெருநாள்

நரபலி மறுத்து மனிதத்தைக் காத்தத் திருநாள்தான் ஹஜ் பெருநாள்

பெற்ற பிள்ளையையே கனவில் வந்து கேட்டதாகக் கூறி இறைவனுக்குத் தியாகம் செய்ய முற்படுகிறார் பக்தர்

ஆனால் கூர் வாளும் வெட்ட மறுக்கிறது.

சாத்தான் கூட தடுக்கிறான்.

பின் பலியிட ஆடு போதும் என்று இறைக் கட்டளை வந்ததாக காட்சி மாறுகிறது.

கருணை நிறைகிறது.

மனித உயிரைப் பலியிடுவது தியாகம் அல்ல என்று மறுத்த இறைவனின் கட்டளை வந்த நாளைத்தான் தியாகத் திருநாள் என்று அழைக்கிறார்கள் சிலர்.
நன்றி  http://anbudanbuhari.blogspot.in/

இஹ்ராம் என்றோர் இலக்கணம்

முதல் ஆலயம் நீ!
முதல்வனின் ஆலயம் நீ!
கஅபாவே - உன்னைக்காண
கண்ணுக்குள்  ஓர் ஆவல்
கனன்றுகொண்டேயிருக்கிறது.


அருள் நிரம்பிய உன்
அழைப்புக்குச் செவியேற்போர்
அதிருஷ்ட சாலிகள்
ஆன்ம தேகத்தில் திரண்ட
பாவ அழுக்குகளை
'ஜம் ஜம் நீரால் கழுவி
மூமின் என்று முத்திரை பெறுகிறார்கள்

கழுவப்பட்ட அழுக்குகளுக்கு
கதிரொளியே பகரமாகிறது!

ஹஜ்ஜுக்கடமையே....!
இறக்கிவைக்க, இறக்கி வைக்க
எல்லாச் சுமைகளையும்  நீ
ஏற்றுக்கொள்வதால் தானோ
இந்த மனிதர்கள்
உலகின் எல்லா இடங்களிலும்
பாவங்களைப் பொறுக்குகிறார்கள்?

Perform Hajj & Umra ஹஜ் மற்றும் உம்ரா செய்வது



Assalamu Alaikkum
How to Perform Hajj & Umra-step by Step pictures! + HISTORICAL PLACES OF MAKKAH & MADINA
May this EID-UL-ADHA Day is full of blessings for you, your family and friends.
To all of my readers and friends, EID MUBARAK across the miles. May Allah accept all your good deeds and bless you and your families abundantly!

S.E.A.Mohamed Ali Jinnah, ("nidurali")
S.E.A. Mohamed Ali Jinnah,Nidur.
S.E.A.முகம்மது அலி ஜின்னா,
நீடூர்.
JazakAllah Khayr : جزاك اللهُ خيراً‎
"Allah will reward you [with] goodness."

Friday, October 11, 2013

அம்மா


ஒத்தச் சொல்லில்
உனை அழைத்தாலும்;
மொத்தச் சொல்லும்
பத்தாதம்மா;
பொத்தி வைத்து
அடைக்காத்து;
எனை உன்
பத்துவிரலுக்குள்
கட்டி வைத்தாயம்மா!

பைக் கொடுத்த லைஃப்

கடைசியாக ராகுலனிடம் இருந்தது பெட்ரோல் நிரப்பிய ஒரு பைக். நிறைய தன்னம்பிக்கை. சிறுவயதிலேயே தந்தையின் பணி காரணமாக மும்பைக்கு இடம் பெயர்ந்திருந்தார். தந்தையின் மரணம் காரணமாக மீண்டும் சொந்த ஊருக்கு வந்திருந்தார். வாழ்க்கையை நகர்த்த எடுத்த சில முயற்சிகள் எதிர்ப்பார்த்த வெற்றியை எட்டவில்லை. கையில் எதுவுமே மிஞ்சவில்லை. அடுத்தது என்ன?

 பைக்கை ஓட்ட ஆரம்பித்தார். பெட்ரோல் தீர்ந்து வண்டி எங்கே நிற்கிறதோ, அங்கே வாழ்க்கையை தொடங்கலாம் என்பது திட்டம். வண்டி நின்ற இடம் கரூர். அந்நகரில் அப்போது ஏற்றுமதித் தொழில் கொடிகட்டிப் பறந்துக் கொண்டிருந்ததை கண்டார். சில நிறுவனங்களில் சிலகாலம் பணியாற்றிவிட்டு, சொந்தமாகவே ஓர் ஏற்றுமதி நிறுவனத்தைத் தொடங்கினார். இம்முறை அதிர்ஷ்டத் தேவதை ராகுலன் பக்கம் இருந்தாள். ஹாலந்து நாட்டிலிருந்து நிறைய ‘ஆர்டர்கள்’ இவரது நிறுவனத்துக்கு கிடைத்தது.

 ஒருகட்டத்தில் வணிகத்தைப் பெருக்க ஹாலந்துக்கே குடிபெயர வேண்டிய அவசியமும் ஏற்பட்டது. மனைவி, மகன், மகளோடு குடும்பமாக புலம் பெயர்ந்தார். அந்நாட்டின் குடியுரிமையும் அவருக்குக் கிடைத்தது.

 இப்போது நாற்பத்தியோரு வயதாகும் ராகுலனின் பின்புலம் இதுதான். ஹாலந்தில் அவரது வாழ்க்கை நிலைபெற்று விட்டாலும், தாய்மண்ணான கும்பகோணம் அவரை ஈர்த்துக்கொண்டே இருந்தது. கும்பகோணத்துக்கு அருகில் திருப்பனந்தாள் என்கிற கிராமம். விடுமுறைக்காக ஆண்டுக்கு ஒரு முறை குடும்பத்தோடு இங்கே வந்து தங்கிச் செல்வது வழக்கம்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை இம்மாதிரி வந்தபோதுதான் சுற்றுப்புற ஊர்களையும், மக்களையும் கவனித்தார். குறிப்பாக கிராமப்புற பெண்களின் வாழ்க்கைத்தரம் குறைந்துவருவதாக நினைத்தார். விவசாயத்தை நம்பி மக்கள் வாழ்ந்திருந்த காலக்கட்டம் மாறியிருந்தது. விவசாய நிலங்களில் பணிக்குச் சென்றதால் பணம் சம்பாதித்து, குடும்பத்தை கவுரவமாக நடத்திக் கொண்டிருந்த பெண்கள் அப்போது மிகச்சிரமமான நிலையில் இருந்ததை உணர்ந்தார்.

 விளைநிலங்கள் பெருமளவில் ரியல் எஸ்டேட் கபளீகரங்களுக்கு விலைபோன பின்னர், விவசாயக்கூலித் தொழிலாளர்கள் பலரும் வேறு வேறு பணிகளுக்கு தங்களை மாற்றிக்கொண்டனர். ஆனால் பெண் தொழிலாளர்கள் உடனடியாக தங்களை மாற்றிக்கொள்ள முடியவில்லை. எனவே வேலையிழந்து கொடுமையான வறுமைக்கு ஆளானார்கள். அடிப்படைச் செலவுகளுக்கும் மீண்டும் குடும்பத்து ஆண்களையே நாடவேண்டிய கட்டாயத்துக்கு உள்ளானார்கள். தன் சொந்த மண்ணின் மிகப்பெரிய சமூகப் பிரச்சினையாக இதை கருதினார் ராகுலன்.

 ஹாலந்து திரும்பிய பிறகும் இதே நினைவுகள் அவரை வருத்திக்கொண்டே இருந்தன. பகுத்தறிவுச் சிந்தனைகள் நிரம்பியவரான ராகுலனுக்கு பெண்கள் வெறுமனே அடுப்பூதி வாழ்க்கையை கட்டாயத்தின் பேரில் வாழ்ந்து முடிப்பதில் ஒப்புதல் இல்லை. என்ன செய்வது என்று தீவிரமாக யோசித்தவர் தன்னுடைய துறை தொடர்பான பணிகளை, தமது ஊர் பெண்கள் பயன்பெறும் வகையில் மாற்றியமைக்க ஒரு திட்டம் தீட்டினார்.
இப்படித்தான் ‘க்ரீன் இன்னோவேஷன்ஸ்’ நிறுவனம் தொடங்கியது.
மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு உலகை குப்பைக்கூடை ஆக்கிக் கொண்டிருக்கிறோம் என்று குற்றவுணர்ச்சி உண்டு. எனவே சுற்றுச்சூழலுக்கு ஏதுவான பொருட்களையே கூடுதல் விலையாக இருந்தாலும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஹாலந்தில் வசிக்கும்போது இந்நிலையை உணர்ந்தார் ராகுலன். அவருக்கும் சுற்றுச்சூழல் தொடர்பான அக்கறை தோன்றியது.


    நம்மூரில் உரமூட்டை, டீத்தூள் சாக்கு, ஃபயர் சர்வீஸில் பயன்படுத்தி காலாவதியான ஓஸ் பைப் போன்றவற்றை குப்பையில்தான் எறிகிறார்கள். இவற்றை காயலான் கடைகள் மற்றும் குப்பைப் பொறுக்கும் தொழிலாளர்களிடமிருந்து விலை கொடுத்து வாங்கி ‘உயர்சுழற்சி’ (upcycling) முறையில் லேப்டாப் பேக், டிராவல் பேக், ஸ்கூல் பேக் போன்றவற்றை உருவாக்குகிறது க்ரீன் இன்னோவேஷன்ஸ்.

 உயர்சுழற்சி என்பது வீணான பொருட்களையும், உபயோகமில்லாத தயாரிப்புகளையும் கொண்டு புதிய பொருட்களை தரமான முறையில் உருவாக்குவது. மறுசுழற்சி (recyling) என்பதற்கும், இதற்கும் பெரியளவில் வேறுபாடு உண்டு. உயர்சுழற்சி முறையில் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கு ஐரோப்பிய சந்தையில் நல்ல மவுசு. அதிலும் சமூகநல நோக்கோடு, மகளிர் மேம்பாட்டை முன்னிறுத்தி நடைபெறும் தொழில் என்பதால் ராகுலனின் தயாரிப்புகள் சக்கைப்போடு போடுகிறது. நம்மூரில் ஒரு பொருளை வாங்கும் முன்பாக நுகர்வோர் இதுபோன்ற அம்சங்களை கணக்கில் எடுப்பதில்லை. பெரிய நிறுவனங்களாவது சுற்றுச்சூழலுக்கு ஏதுவான உயர்சுழற்சி, சமூகநலம் ஆகிய காரணிகளை பரிசீலித்து இதுபோன்ற தயாரிப்புகளுக்கு ஆதரவளிக்கலாம்.

 இந்நிறுவனத்தில் வேலை பார்க்கும் மகாலட்சுமிக்கு வயது முப்பத்தியேழு. அவரது கணவர் கட்டிடவேலை செய்கிறார். மகள் கல்லூரியில் படிக்கிறாள். “என் மகளின் கல்விச்செலவு, குடும்பத்துக்கு ஆகும் கூடுதல் செலவுகள் போன்றவற்றுக்கு, கணவரின் கையை மட்டுமே எதிர்ப்பார்க்காமல் இப்போது என்னாலேயே சமாளித்துக்கொள்ள முடிகிறது. கவுரவமான வேலை என்பதால் சுற்றத்திலும் நல்ல மரியாதை கிடைக்கிறது” என்கிறார் இவர்.


 க்ரீன் இன்னோவேஷன் நிறுவனத்தில் இப்போது இருபத்தைந்து பெண்கள் பணிபுரிகிறார்கள். விவசாயப் பணிகளிலேயே ஊறிப்போன இப்பெண்களுக்கு ஆரம்பத்தில் புதிய வேலையில் ஈடுபடுவது சிரமமாக இருந்தது. ஆனாலும் காலப்போக்கில் கற்றுக்கொண்டு இப்போது சிறப்பாக செயல்படுகிறார்கள். சிறிய அளவில் தொடங்கி செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்நிறுவனத்துக்கு நிறைய ஏற்றுமதி ஆர்டர்கள் கிடைத்து, தொழில் பெருகும் பட்சத்தில் தஞ்சை மாவட்டத்தில் மட்டுமே மகாலட்சுமியைப் போன்ற சில நூறு மகளிருக்காவது வேலைவாய்ப்பினை உருவாக்கித்தர முடியும் என நம்புகிறார் ராகுலன். இவரது நிறுவனத்தில் தொழிலாளர் உரிமை, சம்பளம், நிர்வாக விஷயங்கள் ஐரோப்பிய தர அளவீட்டிலேயே அமைந்திருக்கிறது.
“இதை சமூகச்சேவை என்றெல்லாம் நான் சொல்லப் போவதில்லை. என்னுடைய தொழிலை நான் செய்கிறேன். எனக்கு இதில் நல்ல லாபமும் கிடைக்கிறது. இதில் என் ஊரைச் சேர்ந்த பெண்களுக்கும் நல்லது நடக்கிறது என்பதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி. செய்யும் எதிலும் மறைமுகமான சமூகநோக்கு இருக்க வேண்டுமென்பது எனக்கு ஐரோப்பா கற்றுத்தந்த பாடம்” என்கிறார் இவர்.
ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் என்பது இதுதானோ?

(நன்றி : புதிய தலைமுறை)

எழுதியவர் யுவகிருஷ்ணா

நன்றி : http://www.luckylookonline.com/
-----------------------------------------------------------
யுவகிருஷ்ணா: பைக் கொடுத்த லைஃப்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தில் கரடியின் கையாளாக காட்டிக் கொடுக்கும் போலிஸாக நடித்த பிச்சையின் ஒரிஜினல் முகம் இதுதான்.

படத்தில் பெய்ட் கில்லர் யுவாவின் அடியாட்களாக வரும் இரண்டு பைக்கர்கள் எப்போதும் ஒரு பையை மாட்டிக் கொண்டிருப்பார்கள் இல்லையா (அதில் ஒருவர் பையில் பைபிள் வைத்திருப்பார்). அந்த பையை தயாரிக்கும் நிறுவனத்தின் முதலாளி இவர்தான்.
<ஒரிஜினல் பெயர் ராகுலன்.

படம் ரிலீஸ் ஆன அன்று சொந்த ஊரான கும்பகோணத்தில் இருந்தவர், அங்கிருக்கும் தியேட்டர் ஒன்றுக்கு குடும்பத்தோடு படம் பார்க்கச் சென்றிருக்கிறார். பார்க்கிங்கில் தொடங்கி, டிக்கெட் கவுண்டர், கேண்டீன் வரைக்கும் யாருமே இவரிடம் காசு வாங்க மறுத்திருக்கிறார்கள்.

“படம் பார்த்துட்டு வீட்டுலே என்ன சொன்னாங்க தலைவா? எல்லாரும் ஹேப்பியா?” என்றேன்.

“நீங்க வேற லக்கி. உனக்கு எதுக்கு இந்த தேவையில்லாத வேலைன்னு கேட்கிறாங்க” என்றார்.

Yuva Krishna


Thursday, October 10, 2013

காலத்தின் கொலைகாரன்

வினைகளின் சருகுகளைத் தீண்டிடவென
புதிதாக விழுந்திருக்கிறது
ஐங்கூர் பழுத்த இலை
சிவப்புக் கலந்த நிறமதற்கு
உடைசல்களின் சிதிலங்களுக்கிடையில்
சிக்கியிருக்கிறது புதுத் தளிரொன்றும்

எப்படிப் பூத்ததுவோ
பசுமையெரிந்த செடிகளுக்கிடையில்
எதற்கும் வாடிடா மலரொன்று
அன்றியும்
எந்தக் கனிக்குள் இருக்கின்றது
அடுத்த மரத்துக்கான விதை

எல்லா வாசனைகளும் பூக்களாகி
நாசிக்குள் நுழையும் கணமொன்றில்
செழித்த ஏரியின்
கரைகளைக் காக்கின்றன ஓர மரங்கள்

வசந்தத்தின் முகில் கூட்டங்களலையும்
சுவரோவியங்களில் தோப்புக்கள்
எவ்வளவு ரம்யமானதாயிருக்கின்றன

இங்கு நீர் தேங்கிய குட்டைகளில்
தலைகீழாக வளருகின்றன
அருகாமை சடப்பொருட்கள்

விம்பங்கள் மட்டுமே காட்டுகின்றன
வாழ்வின் நிறங்களை
கனவுக் கண்ணாடிகளில்

தேய்ந்திடும் காலமொன்றை நோக்கியே
நகரும் எண்ணங்களுக்குக் கூடமைத்து
வர்ணங்களைத் தீட்டலாமினி

ஆமாம்
காத்திருப்பு
காலத்தின் கொலைகாரன்தான்

- எம்.ரிஷான் ஷெரீப்

நன்றி
# அம்ருதா
# மகுடம் - கலை,இலக்கிய இதழ் 03
# நவீன விருட்சம்
# பதிவுகள்
# திண்ணை

                                                     by எம்.ரிஷான் ஷெரீப்
நன்றி : http://mrishanshareef.blogspot.in

Wednesday, October 9, 2013

ராவுத்தர் : ஒரு பார்வை

தமிழ் முஸ்லிம்களில் ஒரு பிரிவினர் ராவுத்தர் என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்து கலாச்சாரத்தை ஒட்டியே ராவுத்தர்கள் கலாச்சாரம் அமைந்துள்ளது. இதன் மூலம் இந்து-முஸ்லிம்களின் சமய ஒற்றுமை காணப்படுகிறது.

ராவுத்தர் என்பதற்கான ஆவணம் (கல்வெட்டுக்கள்) :


திருப்பெருந்துறை சிவன்கோவில் மண்டபத்தில் ஒரு தூணில் குதிரை வீரன் சிலை உள்ளது. அச்சிலை 'குதிரை ராவுத்தர்' என்றும், அம்மண்டபம் 'குதிரை ராவுத்தர் மண்டபம்' என்றும் அழைக்கப்படுகிறது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியில் உள்ள திரௌபதியம்மன் கோவில் வாசலில் தலைப்பாகை தாடியுடன் கூடிய ஒரு காவல் வீரன் சிலை உள்ளது. அச்சிலைக்கு 'முத்தியாலு ராவுத்தர்' என்று பெயர் வைத்துள்ளனர். இன்றளவும் அப்பகுதியில் வாழும் இந்துக்கள் முத்தியாலு ராவுத்தரை வழிபடுகின்றனர். மேலும் ஒரு முஸ்லிமுடைய சமாதியும் சிறியதாக அக்கோயிலினுள்; உள்ளது. (பார்க்க: களஆய்வு புகைப்படம்)

புனித மக்கா - நேரலை. The Holy Makkah Live Telecast.

மக்கா நேரலை - வலைத்தளங்களுக்காக
அன்பானவர்களே, புனித மக்காவை இணையத்தளம் மூலம் 24 மணிநேரம் நேரலை மூலம் நாம் கண்டு மகிழலாம்.                      

மக்கா நேரலை
மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.

மக்கா நேரலை உங்கள் வலைப்பூவில் இணைக்க கீழே உள்ள html script யை உங்கள் வலைத்தளங்களில் சேர்த்து மற்றவர்களுக்கும் அனுப்பி வையுங்கள்.
<embed
  pluginspage="http://www.microsoft.com/windows/windowsmedia/download/"
 showcontrols="1" width="600" src="mms://38.96.148.74/Quran2"
autostart="1" height="329" type="application/x-mplayer2">

உங்கள் வலைத்தளங்களுக்கு தகுந்தது போல் விடியோ அளவை சரிசெய்துக்கொள்ளுங்கள்.

 பாவங்களை அள்ளித்தரும் பொழுதுப்போக்கு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு இந்த புனித மக்கா, மதீனா நேரலையை கண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற்று நல்லடியார்களாக நம்மை மாற்றிக்கொள்ள முயற்சி செய்யலாமே.

யார் யார் எத்தனை சதவிகிதம்?

ஒரு மார்க்கத்தில் (மதத்தில்)

1. மார்க்கத்தின் அடிப்படையோடு இயைந்து எவருக்கும் தீங்கின்றி அமைதியாக வாழ்பவர்கள்.

2. மார்க்கத்தின் பெயரால் அறியாமையில் உள்ளவர்களை பயன்படுத்தி புகழ், பொருள், அதிகாரம் பெற்று ஊரை நாட்டை உலகை நாசம் செய்பவர்கள்

3. அறிந்துகொள்ளும் எண்ணமே இல்லாமல் அறியாமையில் இருக்கும் மக்கள். பயம் காரணமாக எதையும் நம்புவார்கள்.

4. மதத்தைக் கண்மூடித்தனமாகக் கண்டு தவறான அழிவுத் திசையில் வெறிபிடித்து அலையும் அடிப்படைவாதிகள்

5. எனக்கு மார்க்கம் பிறப்பால் வந்தது. மற்றபடி எனக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று நாட்டின் சட்ட ஒழுங்கினைக் கடைப்பிடித்து வாழ்பவர்கள்.

இவர்களுள் யார் யார் எத்தனை சதவிகிதம் என்று எவராவது கூறமுடியுமா?

by  அன்புடன்புகாரி
நன்றி http://anbudanbuhari.blogspot.in

வறுமை அலையை எதிர்த்து நில்லு


காலத்தின் கோலமென
காலமதை குறை கூறி
காரிரினுள் வாழ்ந்து வரும்
சோம்பேறி மனிதர்கள் வைத்த
சாம்ராஜ்யம் அழிக்கும் பெயராம்
வறுமை

இறைதந்த கரம் இருக்க
இயங்கி நடக்க கால் இருக்க
உழைப்பெனும் ஏணியை
உயரப்பிடிக்காதது ஏனோ
நீ உதிர்ந்திருப்பது
உன் குற்றம் தானோ

இயலாமை மனப்பான்மை
ஒருபோதும் கொள்ளாதே
முயலாமை உன் வாழ்வை
முடக்கிடுமே எந்நாளும்

மதிநிறைய மடமை சுமந்து
விதியென்று வேசமிட்டு
கெதியென்று முடங்கிக்கிடந்து
நீயும் மடிந்திடலாகுமோ
மனம் தனிலே
சோர்வு கொள்ளலாகுமோ

துணிவாய் துடிப்பாய் எழுந்து நில்லு
துன்பமதனை கடந்து செல்லு
கனிவாய் மலர உரைத்திட்டு
காற்றாய் நீயும் பறந்திடுவாய்
வனப்பாய் நீயும் வாழ்ந்திடவே
வறுமை நோயை ஒழித்து விடு

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே

ஒழுக்கமும் பேணுதல் ஒருவகை வேலியே
....உணர்ந்துதான் செயல்படுநீ - என்றும்
விழுப்பமே தந்திடும் பலன்களைப் பார்த்ததும்
...மேன்மையாய் உயர்ந்திடுநீ!


கண்களின் பார்வையைத் தாழ்த்தியே நடப்பதும்
.....கண்களின் வேலியாகும் - இஃதே
பெண்களின் உள்ளமும் உன்னிடம் மதிப்பினைப்
...பெற்றிடும் வேலையாகும்!

நாணமும் வேலியாம் மானமே காத்திட
…..நம்பினோர் நலம்பெறுவர் --அதனால்
காணலாம் நற்பயன் உள்ளமும் உடலுமே
….களிப்பினால் பலம்பெறுவர் !

 வறுமையும் வதைத்திடும் போதினில் இறையவன்
....வழிதனைப் பேணுவாய்நீ - அதற்குப்
பொறுமையாம் வேலியைப் பூட்டியே காத்திடு
....புலம்புதல் நாணுவாய்நீ!

உண்மையை வேலியாய்ப் பூட்டிட மவுனமாய்
....உதடுகள் காத்ததனால்-- என்றும்
திண்மையாய் உரம்பெறும் மனத்தினில் ஏற்படும்
...தெளிவிலா வார்த்தைகளும்!

மரபெனும் யாப்ப்பினை எழுதிட இலக்கண
.......வரம்புகள் முழுமையாகும்-- வேலியாய்
வரப்புகள் கட்டிய பாத்திகள் இடுவதால்
........வயல்களும் செழுமையாகும்!

மக்களைக் காத்திடும் வேலியாய் அரசியல்
......வளம்பெறல் மெய்தானா? -அந்த
மக்களை மறந்திட நினைப்பதும் மனத்தினில்
....மண்டிய பொய்தானா?

வேலியே பயிரையும் காப்பதாய் நினைப்பது
.. வேகமாய்ச் சுருட்டுகின்ற  - இவர்கள்
போலிகள் என்பதை உணர்ந்திடும் போதினில்
.. புரிந்திடும் திருட்டுகளும்!


அபுல்கலாம் பின் ஷைக் அப்துல்காதிர்

“கவித்தீபம்”, “கவியன்பன்” கலாம்,
அதிராம்பட்டினம் ( பாடசாலை),
வலைப்பூந் தோட்டம்:
http://www.kalaamkathir.blogspot.com/ (கவிதைச்சோலை)
மின்னஞ்சல்: kalaamkathir7@gmail.com ,

வேப்பம்பூக்களுக்காகக் காத்திருக்குமொருத்தி


 மழையுமற்ற கோடையுமற்ற மயானப் பொழுது
இலைகளை உதிர்த்துப் பரிகசிக்கிறது
வேனிற்காலத்தைப் பின்னிக் கிடக்குமொரு
மலட்டு வேப்ப மரத்திடம்

நீவியழித்திடவியலா
நினைவுச் சுருக்கங்கள் படர்ந்திருக்கும்
நீயொரு மண்பொம்மை

உனது கண் பூச்சி
செவி நத்தை
கொல்லை வேலியொட்டிப் புறக்கணிக்கப்பட்டிருக்கும்
உன்னிடமும் வேம்பிடமும்
இவையிரண்டும் என்ன உரையாடுகின்றன

திசைகளின் காற்று
விருட்சத்துக்குள் சுழல்கிறது

விவாதங்களால் - காலத்தை வீணாக்காமல் நற்செயல்களில் ஈடுபடுங்கள்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு நான் சிங்கப்பூரிலிருந்து சென்னை சென்று அங்கிருந்து பர்வீன் பஸ் மூலம் சித்தார்கோட்டைக்குச் சென்றேன்.எஸ்.ஆர்.எம். காலேஜ் ஸ்டாப்பில் ஒரு 18 அல்லது 19 வயதுடைய ஒரு முஸ்லிம் இளைஞர் பஸ்ஸில் ஏறினார்.பஸ் புறப்பட்டதிலிருந்து அந்த இளைஞர் பரபரப்புடன் பல பேருக்கு போன் செய்துகொண்டு வந்தார். அவரது உரையாடலிலிருந்து அவர் யாருக்கோ, இரத்தம் கொடுப்பதற்காக பல இடங்களுக்கும் போன் செய்து கொண்டிருக்கிறார். என்று புரிந்தது. இரவு 1 மணிவரை முயன்றதில் ஒரு பாட்டல் கிடைத்த தகவல்...காலை 3 மணிக்கு மேலும் இரு பாட்டல்கள் கிடைத்த செய்தி.... உடனே அவர்கள் அனைவரையும் மதுரை மீனாட்சி மருத்துவமனைக்கு விரைந்து போகச் செய்துவிட்டுத்தான் அவர் கண்ணயர்ந்தார். என்னை விட என் இளைய தலைமுறை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதில் எனக்குப் பெருமை.... தம்பிகளே,கருத்து வேறுபாடுகளால் - கட்சி வேறுபாடுகளால் -அதன் வழி விவாதங்களால் - காலத்தை வீணாக்காமல் நற்செயல்களில் ஈடுபடுங்கள். கூலி கொடுப்பவர்கள் மனிதர்கள் அல்ல.... நம்மைப் படைத்த அல்லாஹ்தான்.



டாக்ட‌ர் ஹிமானா சைய‌த் Himana Syed

பிரான்ஸ் நாட்டு ரயிலில் திருக்குறள்

 பிரான்ஸ் நாட்டில் ரயிலில் பிரயாணம் செய்யும் போது திருக்குறள் பிரன்சு  மொழியில்  எழுதப் பட்டிருப்பதைப் பார்க்கலாம் . தமிழுக்கு அவர்கள் கொடுக்கும் மரியாதை.

Friday, October 4, 2013

எஸ் எம் ப்ளேயர்


எஸ் எம் மல்டிமீடியா ப்ளேயர்

இணையத்தில் எத்தனையோ மீடியா ப்ளேயர்கள் உள்ளன. அதில் சில மிகவும் சக்கை போடுகிறது. அதில் விஎல்சி, விண்டோஸ் மீடியா ப்ளேயர், கோம் ப்ளேயர், அந்த  வரிசையில் ஒரு புதிய மீடியா பிளேயர்  எஸ் எம் பிளேயர்


இந்த மென்பொருள் மிகவும் வேகமாக வீடியோ படங்களை திறந்து படிக்க கூடியது.

உங்களால் சப்டைட்டில் சேர்த்து படம் பார்க்க முடியும்.

படத்திற்கும் ஆடியோவிற்கும் சம்பந்தம் இல்லாமல் தாமதமாக ஆடியோ வந்தால்  அதனை நமக்கு தேவையானவை போல் மாற்ற முடியும்.

எஸ் எம் மீடியா ப்ளேயரில் இருந்து கொண்டு நேரடியாக http://www.opensubtitles.org/ வலைத்தளத்தில் தேடி சப்டைட்டிலை சேர்க்க முடியும். இது போன்று நிறைய வசதிகள்.


இது ஒரு திறந்த நிலை மென்பொருள் Open Source என்பதால் இன்னும் அதிகமாக மேம்படுத்தப்படும் என கட்டாயம் நம்பலாம்.

எஸ் எம் ப்ளேயர் தரவிறக்க download
Source : http://almighty-arrahim.blogspot.com/

Thursday, October 3, 2013

மயக்கம்.....!

தாங்கிய தாய் வயிற்றில் ஒரு மயக்கம்!
தரணி மண் மீது விழுந்தபின் ஒரு மயக்கம்!

விழுந்த வேதனையில் விடியும்வரை ஒரு மயக்கம்!
விடிந்தபின் பசி கொடுக்கும் ஒரு மயக்கம்!

பசி நீங்க பருகும் தாய்ப்பால் ஒரு மயக்கம்!
தாய்ப்பால் நின்றவுடன் தானாக வரும் ஒரு மயக்கம்!

தகுதிகாண் பருவம்வரை தாங்காத ஒரு மயக்கம்!
தக்கதொரு காலத்தில் கல்வியே ஒரு மயக்கம்!

வளர்ந்த பின் பருவ காலத்தில் ஒரு மயக்கம்!
வடிவழகு மனைவி மீது ஆசை ஒரு மயக்கம்!

Tuesday, October 1, 2013

நாயகம் ஒரு காவியம்


மனிதர்களில்
இவர் ஒரு
மாதிரி..
அழகிய முன் மாதிரி!

*

உலக அதிசயங்களில்
இது ஓர்
ஒப்பற்ற அதிசயம்-

காலடியில் மகுடங்கள்
காத்துக் கிடந்தன...
இவரோ ஓர்
ஏழையாகவே
இறுதிவரை வாழ்ந்தார்!

உலக அதிசயங்களில்
இது ஓர் ஒப்பற்ற அதிசயம்!