Wednesday, October 23, 2013

வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் !

பிறந்தநாள் கொண்டாடும் வழக்கம் கொண்டவன் அல்ல நான்.

என் பிறந்ததினம் என்பது ஆவணங்களில் புழங்கப்படும் எண்கள் மட்டுமே.

வறுமை நெரித்த பால்யத்தில்
ஏன்தான் பிறந்தோமோ என்று வருந்தியதுணடு.

பின்பு 90களில் எழுத ஆரம்பித்தபோது பேனா நண்பர்கள் பலரும்
பிறந்ததேதி பகிர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொண்டதுண்டு

இடையில் வாழ்வின் மேடுபள்ளங்களில் எல்லாம் மறைந்துபோயின

குடும்பம் குழந்தைகள் என்றானபின் சில புன்னகைகளுடனும் மெல்லிய
வாழ்த்துக்களும் வருடிப்போயின

குழந்தைகள் பள்ளி சென்றபின் பிறந்தநாள் வாழ்த்துக்களுக்கான தயாரிப்புகள் அறிமுகமாயின

உங்கள் பிறந்தநாள் எப்போது என்று குழந்தைகள் ஆர்வமாய் கேட்டு நச்சரித்தபின்புதான்
குழந்தைகளோடு சேர்ந்து வாழ்த்துக்களைப் பரிமாறிக்கொள்வது வருட நிகழ்வாய் மனதை லேசாக்கியது

மற்றபடி கொண்டாட்டம் கும்மாளம் கேக்வெட்டுதல் எல்லாம் எப்போதும் இருந்ததில்லை

கடந்த வருடம் முகநூல் நண்பர்கள் பலரும் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்தனர்

இந்த வருடமோ முகப்பிலும் தனிச்செய்திகளிலும் நூற்றுக்கணக்கான நண்பர்கள் வாழ்த்துக்கள் பிரார்த்தனைகள் என்று திக்குமுக்காட வைத்துவிட்டார்கள்

அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்

என்னைப்பொருத்தவரை நாற்பது வயதைத் தொட்டுவிட்டோம் என்கிற எச்சரிக்கை மணியாகத்தான் இதைப் பார்க்கிறேன்

இன்னும் ஆற்றவேண்டிய கடமைகள் உள்ளன,
செல்ல வேண்டிய தூரம் உள்ளது,
பிறந்தோம் வாழ்ந்தோம் மறைந்தோம் என்றில்லாமல்
வாழ்வின் பெரும் கல்வெட்டுகளில் சில வரிகளையாவது ஆழப்பதிக்க வேண்டும் என்கிற பேரவா
பற்றி எரிகிறது கனன்று.

காலம்தான் பதில் சொல்ல வேண்டும்......
பார்ப்போம்....!!

#படத்தில் என் இரு குழந்தைகளுடன் சகோதரிகளின் குழந்தைகள் மூவர்.
Nisha Mansur
by நிஸா  மன்சூர் 
------------------------------------------------------------------------------

உனை நினைத்து எனை மறப்பேன்

Friends are like flowers நண்பர்கள் - நட்பு

2 comments:

நிஷா மன்சூர் said...

பகிர்ந்தமைக்கு மனமார்ந்த நன்றிகள்
அண்ணன்

திண்டுக்கல் தனபாலன் said...

கண்டேன்... மிகவும் மகிழ்தேன்... வாழ்த்துக்கள் பல...