Friday, July 30, 2010

அறிவியலும் தொழில்நுட்பமும் !

உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப்
  
 

சிலி நாட்டில் உள்ள அடகாமா பாலை வனத்தில் இருக்கும் மலை உச்சியில் உலகின் மிகப்பெரிய டெலஸ்கோப் அமைய உள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 3060 மீட்டர் உயரத்தில் இந்த டெலஸ்கோப் அமைகிறது. பூமி போன்ற பெரிய கோள்கள் முதல் சிறிய கோள்கள் வரை ஆராயும் சக்தி கொண்டதாக இந்த டெலஸ்கோப் இருக்கும். கருந்துளைகள் மற்றும் விண்வெளியில் நிலவும் பாதிப்பு களையும் இந்த டெலஸ்கோப் மூலம் விஞ் ஞானிகள் ஆராய முடியும். 

                   மாரடைப்பை குணப்படுத்தும் ஸ்டெம் செல்கள் 
 

மாரடைப்பை ஸ்டெம் செல்கள் மூலம் குணப்படுத்த முடியும் என்று ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியில் இருந்து எடுக்கப்படும் ரத்தத்தில் இருந்து ஸ்டெம் செல்கள் சேகரிக்கப்படுகின்றன. இந்த ஸ்டெம் செல்கள் மூலம் மாரடைப்பு உள்ளிட்ட இருதய நோய்களையும் குணப் படுத்த முடியும் என்பது இப்போது கண்டு பிடிக்கப்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் உள்ள பிரிஸ்டல் பல்கலைக் கழக நிபுணர்கள் இந்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர்.

                                       நிலவுக்கு ரோபோ


 

ஸ்பெயின் நாட்டு மாணவர்கள் குழு நிலவுக்கு ரோபோவை அனுப்ப திட்ட மிட்டுள்ளது. பிக்கோ ரோவர் என்ற பெயருடைய இந்த ரோபோ 250 கிராம் எடை கொண்டது. பந்து போன்ற வடிவம் உடையது. நவீன கேமரா, கம்ப்யூட்டர், சிறிய மோட்டார், பேட்டரி ஆகியவை இவற்றில் இருக்கும். நிலவில் உள்ள பாறைகள், மணல் ஆகியவற்றை இந்த ரோபோ ஆய்வு செய்து படங்களை அனுப்பிவைக்கும்.

                          உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டர்


 

உலகின் மிகச்சிறிய டிரான்சிஸ்டரை சர்வதேச விஞ்ஞானிகள் குழுவினர் உரு வாக்கியுள்ளனர். இதன் உதவியுடன் இப்போது இருப்பதைவிட மிகச்சிறிய அளவிலும், அதி வேகமாகவும் செயல்படும் சூப்பர் பாஸ்ட் கம்ப்யூட்டர்களை உரு வாக்குவது சாத்தியமாகும். இந்த புதிய டிரான் சிஸ்டர், ஒரு மீட்டரில் 400 கோடி ஒரு பங்கு நீளமுடையது. மிகமிகச் சிறியதாக இருந் தாலும் இது சாதாரண டிரான் சிஸ்டர்கள் போலவே செயல்படும். இதனை மைக்ரோஸ் கோப் கொண்டே சரியாகப் பார்க்க முடியும். விஞ்ஞான வளர்ச்சியில் இது ஒரு மைல்கல்லாகும். சிலிக்கானைப் பயன்படுத்தி இது உருவாக்கப்பட்டுள்ளது. 

Source : http://abulbazar.blogspot.com/2010/06/blog-post_16.html 

மோன லிசா மற்ற நாட்டில் பிறந்து இருந்தால் ...

 மோன லிசா  

 

மோன லிசா  படம் லியனர் டா வின்சியால் வரைந்த படங்கள். அவர் வரைந்த படங்கள் அழியா உலகப் புகழ் பெற்றவை .

மோன  லிசா மற்ற  நாட்டில் பிறந்து இருந்தால் எப்படி வரையப்பட்டிருக்கலாம்... 

 

மொரோக்கோ


சிரியா

அமெரிக்கா

 

ஈராக்

 இந்தியா

 

குவைத் 

Source : http://www.smashinglists.com/if-mona-lisa-was-born-in-different-countries-pics/

7 Mona Lisas from Around the World

தங்கத் தமிழ்நாடு, இனி பிளாட்டின நாடு!


‘பொன்னு கிடைச்சாலும் புதன் கிடைக்காது!’, ‘பொன்னா விளையுற பூமி’, ‘பொற்கால ஆட்சி’ – பொன் எனப்படும் தங்கம் நம் மொழியின் சொலவடைகளில் உயர்ந்த இடத்தை எப்போதுமே பிடித்திருக்கிறது. தங்கத்தைவிட உயர்ந்த விஷயம் ஏதுமுண்டா என்ற கேள்வியை கேட்டுவிட்டு பதிலை நாம் எதிர்ப்பார்ப்பதில்லை. ஏனெனில் இந்தியர்கள் தங்கத்தின் காதலர்கள். தங்கம்தான் நமக்கு எல்லாவற்றிலும் உசத்தி. பெண்கள் அணியும் தாலியில் தொடங்கி, ஆண்கள் அணியும் மோதிரம் வரையிலும் எல்லாமே தங்கமயம்.

தங்கத்தைவிட விலையுயர்ந்த இன்னொரு உலோகம் இருக்கிறது என்று சொன்னால் நம்மால் உடனடியாக ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. அது பிளாட்டினம். உலகமே பிளாட்டின நகைகளை அணிய ஆவலோடு அலையும்போது, நாம் மட்டும் இன்னமும் தங்கமே தங்கம் என்று கொண்டாடிக் கொண்டிருக்கிறோம். உளவியல்ரீதியாகப் பார்க்கப் போனால் வெள்ளியை ஒத்த நிறம் கொண்ட பிளாட்டினத்தைவிட, செம்மஞ்சளாக ஜொலிஜொலிக்கும் தங்கத்தையே நாம் அதிகம் விரும்புகிறோம். ஆனால் இதற்காக பிளாட்டினத்தின் உயர்தன்மையை மறுத்துவிட முடியாது. ஏனெனில் தங்கத்தைவிட பிளாட்டினம் 30 மடங்கு அரிய உலோகம்.

கனிமவளங்களின் அடிப்படையிலேயே ஒருநாட்டின் மதிப்பு உயரும். எல்லா வளங்களும் பெருமளவு கொண்ட இந்தியாவில் பிளாட்டினம் மிகக்குறைந்த அளவில் – ஒரிஸ்ஸாவில் மட்டும் – இதுவரை கிடைத்துக் கொண்டிருந்தது. நம் பிளாட்டினத் தேவையை பூர்த்திச் செய்ய அயல்நாடுகளில் இருந்து கோடிக்கணக்காக செலவழித்து இறக்குமதி செய்துக் கொண்டிருந்தோம். இப்போது பிளாட்டினம் தமிழகத்திலும் பெருமளவில் கிடைக்கும் என்பதை இந்திய புவியியல் துறை உறுதி செய்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்பாக தங்கம் விளைந்து கொண்டிருந்த கோலார் தங்கவயல் மூடப்பட்ட சோகத்தை இனி நாம் மறந்து கொண்டாடலாம்.

சரி, பிளாட்டினம் என்பது என்ன?

Pt என்ற வேதியியல் குறியீடு கொண்ட ஒரு தனிமம். தங்கத்தைப் போலவே வளையக்கூடிய, நெளியக்கூடிய தன்மை கொண்டது என்பதால், எவ்வடிவத்திலும் வார்க்க முடியும். மின்கருவிகளில் உறுதியான மின்னிணைப்பை தரக்கூடிய மின்முனைகளாகவும் இதை பயன்படுத்தலாம். கார்களின் சைலன்ஸர்களில் இருந்து வெளிவரக்கூடிய கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு போன்றவற்றின் நச்சுத்தன்மையை குறைக்கவும் பிளாட்டினம் உதவும். வெளிர்சாம்பல் நிறம் கொண்ட பிளாட்டினம் எளிதில் அரிக்கப்படாத ஒரு உலோகம். நகைகள் தவிர்த்து, வெப்பநிலையை அளக்கப் பயன்படும் மின்தடை வெப்பமானிகளில் இதை பயன்படுத்தலாம். சில வேதியியல் ஆராய்ச்சிகளில் வினையூக்கியாக செயல்படுத்தலாம்.

பிளாட்டினத்தின் வரலாறு என்ன?

இரும்பு, தங்கம் போன்று பிளாட்டினத்துக்கு நீண்ட, நெடிய வரலாறு இருப்பதாக தெரியவில்லை. கொலம்பஸ் அமெரிக்காவை கண்டறிவதற்கு முன்பாகவே அங்கிருந்த பழங்குடியினர் பிளாட்டினத்தைப் பற்றி அறிந்திருப்பதாக தகவல் உண்டு. 1557ல்தான் பிளாட்டினம் என்ற உலோகத்தைப் பற்றி இத்தாலியரான ஜூலியஸ் சீஸர் ஸ்காலிகர் என்பவர் எழுதுகிறார். பனாமா, மெக்ஸிகோ ஆகிய இடங்களில் அப்போது பிளாட்டினம் கிடைத்தது என்பதையும், ஆனால் அதை உருக்கமுடியாத நிலை இருப்பதாகவும் அவர் எழுதியிருந்தார்.

இப்போது உலகளவில் பிளாட்டினத்தின் பெருமளவு தேவையைப் பூர்த்தி செய்யும் நாடாக தென்னாப்பிரிக்கா இருக்கிறது. கனடாவும், ரஷ்யாவும் அடுத்தடுத்த இடத்தைப் பெறுகின்றன.

தமிழகத்தில் எங்கே கிடைக்கிறது?

இந்திய புவியியல் துறை கடந்த சில ஆண்டுகளாக தென்னிந்தியாவில் இண்டு இடுக்கு விடாமல் தோண்டி, துருவி பிளாட்டினத்தை தேடிக் கொண்டிருந்தது. நீண்டதேடுதலுக்குப் பின் நாமக்கல் மாவட்டம் சித்தம்பூண்டி (கருங்கல்பட்டி, செட்டியாம்பாளையம், தாசமபாளையம் பகுதிகள் உட்பட), கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் (மல்லநாயக்கம்பாளையம், காரப்பாடி, சோலவனூர் பகுதிகள் உட்பட) ஆகிய பகுதிகளில் கணிசமான அளவில் பிளாட்டினம் இருப்பதற்கான அடிப்படை ஆதாரங்களை கண்டறிந்திருக்கிறார்கள்.

சுமார் 30 மீட்டர்கள் ஆழத்தில் நடத்தப்பட்ட சோதனைகளில் பிளாட்டினம் இருப்பதை உறுதி செய்திருந்தாலும், 200 முதல் 300 மீட்டர் அளவிலான ஆழத்தில் நடத்தப்படும் சோதனைகளில்தான் எந்தளவு தரம் மற்றும் அளவில் இங்கே சுரங்கம் தோண்டி பிளாட்டினம் எடுக்க முடியும் என்பதை துல்லியமாக அறியமுடியும். ஆயினும் இப்போதைய கண்டுபிடிப்பே கூட மிக முக்கியமானதாக இந்திய கனிமவள வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படுகிறது. முதற்கட்ட சோதனை முடிவுகளின் படி பார்க்கப்போனால் பிளாட்டினம் உற்பத்தியில் மற்ற நாடுகளை இந்தியா ஓரங்கட்டக்கூடிய வாய்ப்பு இருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் யூகிக்கிறார்கள்.

இவ்வளவு ஆண்டுகளாக கனிமம் என்றாலே அதிகபட்சமாக கிரானைட்தான் என்றளவில் இயங்கிக் கொண்டிருந்த தமிழ்நாடு கனிம நிறுவனம் (டாமின்) விஷயத்தைக் கேள்விப்பட்டு சுறுசுறுப்பு ஆகியிருக்கிறது. “தமிழ்நாட்டுக்கு இது ஒரு வரப்பிரசாதம்” என்று புளகாங்கிதப்படுகிறார் டாமின் தலைவரான மணிவாசன். முதல்வர் முன்னிலையில் டாமின் அதிகாரிகள், இந்திய புவியியல் துறையோடு ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் உடனடியாக கையெழுத்திட்டிருக்கிறார்கள். இதுவரை புவியியல் துறை வெளிநாட்டு நிறுவனங்களோடு மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருக்கிறது. முதல் தடவையாக ஒரு மாநில அரசின் கனிம நிறுவனத்தோடு ஒப்பந்தமிடுகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய புவியியல் துறை மேற்கொள்ள வேண்டிய மேலதிக ஆய்வுகளுக்கு டாமின் உதவும். பிளாட்டினம் எடுக்கப்படுவதின் மூலமாக கிடைக்கும் வருமானம் மொத்தமும் தமிழ்நாட்டையே சாரும். பாறைகளில் இருந்து பிளாட்டினம் பிரித்தெடுக்கப் படுவதற்கான ஒரு தொழிற்சாலை அமைக்க திட்டமிடப்படுகிறது. கனிமவளத் தொழிற்சாலை இரண்டு பகுதிகளுக்கு சேர்த்து ஒன்றாக நடக்குமா அல்லது தனித்தனி தொழிற்சாலைகள் அமைக்கப்படுமா என்பது பற்றியெல்லாம் இன்னமும் திட்டமிடப்படவில்லை.

புதியதாக தொழிற்சாலைகள் தொடங்கப்படும் என்பதால் அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பு தாராளமாக கிடைக்கும். எடுக்கப்படும் பிளாட்டினம் மற்றும் அதன் குடும்ப தனிமங்களின் வருவாய் ஒட்டுமொத்தமாக மாநில அரசுக்கு கிடைக்குமென்பதால் மாநிலமும் வளம்பெறும். சுரங்கம் தோண்டப்படும் நிலைக்கு முன்பாக இன்னமும் ஏராளமான ஆய்வுகள் பாக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

வெட்டியெடுக்கப்படும் பிளாட்டினத்தைக் காண மக்கள் மட்டுமல்ல, மாநிலமே ஆவலாக காத்திருக்கிறது!

(நன்றி : புதிய தலைமுறை) 

நன்றிhttp://www.luckylookonline.com/2010/07/blog-post_29.html

மனம் மகிழுங்கள்-8

நூருத்தீன் 
கிளி ஜோஸ்யம் தெரியுமா?
அதிர்ச்சியெல்லாம் வேண்டாம். இத்தொடரின் பேசுபொருளை மாற்றும் உத்தேசமெல்லாம் இல்லை. கிளி ஜோஸ்யம் பார்த்திருக்கிறீர்களோ இல்லையோ, அந்தக் கிளியை எல்லோருக்கும் தெரியும். தத்தித் தத்தி வெளியே வந்து, லொட லொடவென்று கஸ்டமரிடம் இஷ்டத்திற்கு அளந்து கொண்டிருக்கும் தன் எஜமானனின் பேச்சையெல்லாம் பொருட்படுத்திக் கொள்ளாமல், கடனே என்று ஒரு சீட்டை எடுத்துக் கொடுத்துவிட்டு, ஓரிரு நெல்மணிகளை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு சமர்த்தாய்க் கூண்டிற்குள் சென்றுவிடும். அடைபட்டுள்ள கூட்டிலிருந்து வெளியே வந்தால் கூட அந்தக் கிளிக்குத் தப்பிப் பிழைத்துப் பறந்துபோகத் தோன்றுவதேயில்லை. அட, இறக்கையை வெட்டியிருந்தாலும் தாவிக்குதித்தாவது தப்பியோட முயலவேண்டுமே! ம்ஹும்! கூண்டு, சீட்டு, நெல், கூண்டு, சுபம், சுகம் என்று வாழ்ந்து பழக்கப்பட்டுவிட்டது.
ஏன் இப்படி? அதன் மனது அப்படிப் பழக்கப்பட்டு, அதுதான் வாழ்க்கை என்று அதன் மனதிற்குள் முடிவாகிவிட்டது. அதுதான் விஷயம்!
அதைப் போல், நமது சுயபிம்பம் நமக்குள் நம்மைப் பற்றிய ஒரு மனக் கருத்தைக் கட்டமைக்கிறது. அந்த மனக் கருத்துக் கட்டமைப்பு நமது உள்ளுணர்வில் படர்ந்திருக்கிறது. அந்த உள்ளுணர்வு நமது நடத்தையை நிர்ணயிக்கிறது; அந்த உள்ளுணர்வே நமது செயல்பாடுகளுக்கான திட்டங்களை வகுத்துவிடுகிறது. ஆக இவையனைத்தும் நம்முடன் பின்னிப் பிணைந்து விடுகின்றன. புரியலையோ?
எல்லோருக்கும் புரிகிற மாதிரி பார்த்துவிடுவோம்.
நம்மைப் பற்றியே நாம் தப்பான அல்லது தாழ்வான மனக் கருத்தில் இருந்தால், அது அப்படியே நமக்குL உள்ளுணர்வாகப் படிந்துவிடுகிறது. நம் மேல் நமக்கே வெறுப்பு ஏற்படுகிறது. அதனால் நம்மை நாமே மேலும் வெறுக்க ஆரம்பித்து, சிகரெட், தண்ணி, என்று கெட்ட சமாச்சாரங்களுடன் நமக்கு உறவு ஏற்படுகிறது. அல்லது அதற்குப் பதிலாக ஓர் ஒழுங்கு முறையின்றிக் கண்டதையும் உண்பது, கண்ட நேரத்தில் உறங்குவது, வண்டி ஓட்டிக் கொண்டு போனால் ஏதாவது விபத்தை நிகழ்த்துவது, அல்லது அவ்வப்போது “எனக்கு உடம்புக்கு முடியலப்பா”” என்று படுத்துக் கொள்வது, இப்படியான நடத்தைகள்.
மனம் போன போக்கிலெல்லாம் ஒருவன் தட்டுக்கெட்டு அலைய முடியாது. அவ்விதம் கெட்டு அலைய அவன் உள்ளுணர்வு தான் திட்டமிட்டு அலைக்கழித்திருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். இதற்குமுன் மன வடிவமைப்புகளைப் பற்றி விளக்கியபோது அதைப் பார்த்தோம். அதன்படித் திரும்பத் திரும்ப ஒருவர் விபத்தில் ஈடுபடுவதெல்லாம் யதேச்சையில்லை; அவரது உள்ளுணர்வு அவருக்கு அளிக்கும் தண்டனையாம். அதற்காக அடுத்த முறை, ப்ளாட்பாரத்தில் நடந்து கொண்டிருப்பவர் மேல் பைக்கை ஏற்றிவிட்டு, “ப்ச்! என் உள்ளுணர்வு என்னைத் தண்டிக்குது பிரதர்”” என்றால் செல்லுபடியாகாது, ஜாக்கிரதை!
ஆக உளவியலாளர்கள் சொல்வது யாதெனில், “பிரதானமாய் நீங்கள் உங்களைப் பற்றி ஆக்கபூர்வமாகவே நினையுங்கள். நல்லன நினையுங்கள்! அதற்காக உங்களது அனைத்துச் சக்திகளையும் பிரயோகப்படுத்துங்கள்; மனம் மகிழ்வீர்கள்“ என்பதாகும்.
அதை விட்டு, ”நான் பூட்ட கேஸ்! எனக்கு நல்லா வேணும்’,” என்று நினைத்தால் உங்களது உள்ளுணர்வு உங்களுக்கு நாசவேலை நிகழ்த்த ஆரம்பித்துவிடும். மனதிலிருந்து மகிழ்ச்சி விடைபெறும். தப்பித்தவறி அப்படியே நல்ல விஷயம் ஏதாவது நடக்க நேர்ந்தாலும், “எனக்கு அதற்கு ஏது கொடுப்பினை?” என்று மனம் முணக, அந்த நல்ல காரியம் நடைபெறாது! நடைபெறாமல் உங்கள் உள்ளுணர்வு உங்களை உந்தி, நீங்கள் தன்னிச்சையாய்ச் செயல்பட்டு அதைத் தடுத்திருப்பீர்கள்.
எனவே நமது மனதை ஆக்கபூர்வமாக, எப்பொழுதுமே 'பாஸிட்டிவ்'வாக வைத்துக் கொள்ள முயலவேண்டும்.
மளிகைக் கடை லிஸ்ட்டெல்லாம் பார்த்திருப்பீர்களே! கொஞ்சம் அலுப்புப் பார்க்காமல் கீழ்க்கண்ட லிஸ்டைப் படித்துப் புரிந்து கொண்டால் நமது மனதிற்கு நல்லது. அதிலுள்ள ஒன்றோ அதற்கும் மேற்பட்ட சங்கதிகளோ நம்மிடம் இருந்தால், நிச்சயம் நாம் திருந்திக் கொள்ள வேண்டியிருக்கிறது.
பொறாமை
நம்மைப் பற்றியே நாம் தவறாய்ப் பேசிக் கொள்வது, எண்ணிக் கொள்வது
குற்ற உணர்ச்சியிலேயே இருப்பது
மற்றவர்களைப் பாராட்ட மறுப்பது
பிறர் அளிக்கும் பாராட்டை ஏற்க மறுப்பது
நம்முடைய சுய தேவைகளை உதாசீனப்படுத்துவது
அடிப்படைத் தேவைகளைக் கேட்டுப்பெறாமல் இருப்பது
அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறரிடம் வெளிப்படுத்த இயலாமற் போவது
அன்பு, பாசம் ஆகியனவற்றைப் பிறர் அளிக்கும் போது அதை உணர்ந்து மகிழாமலிருப்பது
மற்றவர்களிடம் குறை காண்பது
மற்றவர்களுடன் நம்மை ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பது
அடிக்கடி நோய்வாய்ப்படுவது
இதையெல்லாம் தாண்டி மீண்டுவர, "மாற்றம்" வேண்டும். ஆனால் அந்த மாற்றம் நமக்குள் நிகழ நாம் முயன்றால் எப்படித் தடை ஏற்பட்டுக் கஷ்டப்படுத்தும் என்று முன்னரே பார்த்தோம்.
தரமற்ற சுயபிம்பத்திற்கான குணம் ஒன்று உண்டு. அந்த மனிதனிடம் உருவாகியுள்ள ஆக்கபூர்வமற்ற குணத்தை (negative attitude) மாறவிடாமல் பொத்திப் பாதுகாக்கும். அதிலிருந்து மீண்டு வரவேண்டியது காலத்தின் கட்டாயம் ஆகும். முன்னெடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் மனமானது பழையதையே நினைத்து, புலம்பி, அரற்றிப் பின்னுக்கு இழுக்கப் பார்க்கும். கஷ்டம்தான், ஆனால் செய்யத்தான் வேண்டும்.
எனவே நமக்கு உதவச் சில வழிகளை உரைக்கிறார்கள் உளவியலாளர்கள்.
· பாராட்டை ஏற்றுக் கொள்ளுங்கள் - உங்களைப் பாராட்டுபவர்கள், வாழ்த்துபவர்களிடம் நன்றி பகர்ந்துவிட்டு அவற்றை ஏற்று மனதில் நிரப்பிக்கொள்ளுங்கள்.
· பாராட்டுங்கள் - பைசா செலவழிக்காமல் மனம் உற்சாகமடைய, மற்றவர்களிடம் தென்படும் நல்லவைகளைப் பார்த்து மகிழ்ந்து அவர்களைப் பாராட்டுங்கள், வாழ்த்துங்கள். அவர்களது முகம் மலரும்போது, உங்கள் மனதிற்குள் என்ன நிகழ்கிறதென்று உணருங்கள்.
· உங்களைப் பற்றி நீங்களே நல்லவிதமாகப் பேசுங்கள் - அப்படி ஒன்றுமே இல்லையென்று நினைக்கிறீர்களா; வாயைப் பொத்திக் கொள்ளுங்கள்.
· உங்களைப் புகழ்ந்து கொள்ளுங்கள் - ஏதேனும் ஒரு நற்காரியம் செய்துவிட்டீர்களானால் உங்களை நீங்களே முதுகில் தட்டிக் கொடுத்துக் கொள்ளுங்கள். பசியுடனிருக்கும் ஏழையொருவருக்கு நீங்கள் பன்னும் டீயும் வாங்கித் தந்திருக்கலாம்; பார்வையற்ற ஒருவர் சாலையைக் கடக்க உதவியிருக்கலாம்; மனைவி எழும் முன் குளித்து முடித்து, ஈரத்தலையுடன் நீங்கள் காப்பி போட்டு உங்கள் மனைவிக்குக் கொடுத்திருக்கலாம். எதுவாயிருந்தாலும் உங்களுக்கு நீங்களே சபாஷ் போட்டுக் கொள்ளுங்கள்.
· உங்களையும் உங்கள் செயல்களையும் வேறுபடுத்திக் கொள்ளுங்கள் - ஏதேனும் தவறாய்ச் செய்துவிட்டால், நிகழ்த்திவிட்டால், அந்தச் செயலை மட்டும் வெறுக்கக் கற்றுக் கொள்ளுங்கள். மறுமுறை அந்தத் தவறை எப்படித் தடுப்பது என்று மட்டும் சிந்தியுங்கள். அந்தத் தவறுக்காக உங்களை நீங்களே திட்டி, மாய்த்துக் கொள்ளாதீர்கள். அது உங்களது சுயபிம்பத்தைக் கெடுக்கும். திருத்தப்பட வேண்டியது உங்களது செயல் தான்.
· உங்களது உடலைப் பேணுங்கள் - புடவையா, சுடிதாரா அல்லது வேட்டியா, சட்டையா விதம் விதமாய் ஏகப்பட்டது இருக்க, அவற்றையெல்லாம் அணிவதற்கு உங்களிடம் இருப்பது ஒரே உடல். அதை ஆரோக்கியமாகவும், திடகாத்திரமாகவும் வைத்துக் கொள்ளுங்கள். உடல் நலமில்லாமல் போனால் எப்படி மனம் மகிழும்?
· நீங்கள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்று மக்களிடம் தெரிவித்துவிடுங்கள் - தெரிவித்து விடுங்கள் என்றால் “மச்சான் நீ கேளேன், “மாமா நீ கேளேன், என்று அலைந்து அலைந்து சொல்வதில்லை. மாறாக, நீங்கள் உங்களை எப்படி நடத்திக் கொள்கிறீர்களோ, அதைப் போல் மற்றவர்களையும் நடத்துங்கள். அது அவர்களுக்கு வேண்டிய தகவலை தெரிவித்துவிடும்.
· சான்றோருடன் சங்காத்தம் வைத்துக் கொள்ளுங்கள் – நீங்கள் விரும்பும் பெண்ணின் தம்பியை, அந்த வீட்டு வேலைக்காரியை , அவர்களுக்கு சவாரி வரும் ஆட்டோக்காரரை எல்லாம் இதில் சேர்க்கக்கூடாது. அவர்கள் நெசமாலுமே சான்றோராக இருப்பின் அது வேறு தரம்!
· புத்தகம் வாசியுங்கள் – அடாசு டிவி நிகழ்ச்சிகள், சீரியல்கள் இவற்றிலிருந்து விடுதலை பெற்று நல்ல புத்தகங்கள் வாசிக்க ஆரம்பிக்கலாம்.
· என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள் – எப்பொழுதுமே உங்கள் மனதில் நீங்கள் என்னவாக ஆக விரும்புகிறீர்களோ அதையே நினையுங்கள். தானாய் அதை நோக்கி நகர்வீர்கள். மனதிற்கு ஈர்ப்புச் சக்தி உண்டு என்பதை உணர்வீர்கள். ஆனால் கவனம் முக்கியம். எந்த ஊரில் சீட்டுக் கம்பெனி ஆரம்பிக்கலாம் என்றெல்லாம் நினைக்கக் கூடாது.

பின்குறிப்பாய் ஒன்று -- இந்நேரத்தில் வெளியாகும் இத்தொடரை வாசிப்பவர்கள், இது பிடித்துப்போய்ப் பிற தளங்களிலும் வலைப்பூக்களிலும்லும் மீள்பதிவு செய்வதைக் காண முடிகிறது. மிக்க மகிழ்ச்சி. கூடவே, மேலே பாடத்தில் கூறியுள்ளதைப் போல் இந்நேரத்திற்குக் குட்டியாய் நன்றியொன்று சொல்லிவிட்டுப் பதிந்தால் அந்த வாசகர்கள் வீடுகளில் தங்குதடையின்றி மின்சாரம் கிடைக்க இந்நேரம் சிறப்பு வாழ்த்து நல்கும்.

னம் மகிழ, தொடருவோம்...

கம்ப்யூட்டர் DESKTOP யில் உள்ள FILE களை ....

நம்ம கம்ப்யூட்டர்  Desktopல  நிறைய  FILES வைச்சுருப்போம்.அதுல தேவை உள்ளது தேவை இல்லாததுன்னு நிறைய இருக்கும்.நாளடைவுல நம்ம கம்ப்யூட்டர் Desktopபாதி வரைக்கும் வந்துறதும் உண்டு.My computer,Recycle bin,My documents எல்லாம் கலந்து இருக்கும்.அத அழகா ஒழுங்கு படுத்தி வைச்ச நல்லா இருக்கும்.ரொம்ப எளிதா தேவை உள்ள File கள் தேவை இல்லாத File கள் என்று அழகாக ஒழுங்கு படுத்தி வைக்கலாம்(கீழே படம் பார்க்கவும்). .எல்லா OPERATING SYSTEM லையும் செய்யலாம்.


கீழே இருக்குற மாதிரி

Step 1 :Right click செய்து  இந்த தளத்துக்கு போயிருங்க http://www.stardock.com/products/fences/


Step 2 : Free download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 3 : Free download கிளிக் செய்தால்  அடுத்த பேஜ் ஓபன் ஆகும்,அதில் Free கீழே இருக்கும் Download கிளிக் செய்து கொள்ளுங்கள்.
Step 4 : அந்த File யை உங்கள் கம்ப்யூட்டர் Desktop யில் save செய்தால் "Fence" icon வந்துருக்கும். அதை Install செய்து விடுங்கள் .(அதன் File size 9.0 MB).
Step 5 :பிறகு அதற்கு பக்கத்தில் "Customize fence icon" ஓபன் செய்யுங்கள்.
Step 6 : Open Fence settings கிளிக் செய்தால்,வாழை இலையில் அழகாக தெரியுற fence செய்து கொள்ளலாம்.
Step 7 : இப்பொழுது உங்கள் Desktop க்கு வந்து Mouse வைத்து RIGHT CLICK செய்து Drag பண்ணுங்கள் Fence வந்துவிடும்.அதில் கீழே Name a fence வந்துவிடும்.உங்களுக்கு தேவையான file களை,உங்களுக்கு தேவையானது போல் அழகாக வைத்து கொள்ளலாம்.Desktop யில் Double click செய்தால் எல்லா file களும் மறைந்து விடும்,திரும்பவும் Double click செய்தால் வந்து விடும்

From: Faizur Hadi Through Mail.

காலமாற்றமும், குழந்தையின்மையும்.

சேவியர்


( இந்த மாத பெண்ணே நீ இதழில் வெளியானது )
வாழ்வின் ஆனந்தம் என்பது மழலைகளின் சிரிப்பிலும், கூட்டுக் குடும்ப உணர்விலும் எனும் நிலையிலிருந்து உலகம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கையின் சுவாரஸ்யம் கேளிக்கைகளும், பொருளீட்டுதலும், மனம் போன போக்கில் வாழ்தலும் எனும் நிலை உருவாகிவிட்டது.
கணினித் துறையின் மறுமலர்ச்சி இளைஞர்களையும் இளம் பெண்களையும் குடும்பம் எனும் ஆனந்தமான சூழலை விட்டு தூரமாய் விரட்டிக் கொண்டிருக்கிறது என்று தான் சொல்லவேண்டும். ஏற்கனவே இயற்கையை விட்டு வெகுதூரம் வந்துவிட்ட மனிதன், இப்போது குடும்பத்தை விட்டும் வெகுதூரம் சென்று விட்டான்.
எனவே தான் எப்போதும் இல்லாத அளவுக்கு மென்பொறியாளர் தம்பதியினரிடையே மனக்கசப்பும், மணமுறிவும் அதிகரித்திருக்கிறது. இதைவிடப் பெரிய சிக்கல் என்னவெனில் கூடி வாழும் தம்பதியினருக்கும் கொஞ்சி மகிழ குழந்தையில்லை எனும் இன்னலும் உருவாகியிருக்கிறது.
திருமணமான தம்பதியினரில் ஐந்து பேருக்கு ஒருவருக்கு கருத்தரிப்பதில் தாமதமும், சிக்கலும் நிலவுகிறது. இதன் முதல் காரணம் மன அழுத்தம், இரண்டாவது காரணம் அலுவலகத்துக்கும், பணத்துக்கும் கொடுக்கும் முன்னுரிமை. இப்போது இதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது என பிரான்ஸ் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். அது ஆண்களின் வயது !
பெண்ணின் திருமண வயது 21 என்று ஆட்டோக்களின் பின்னால் எழுதப்பட்டிருப்பது இப்போது நகைச்சுவையாகி விட்டது. திருமணத்துக்கான வயது பல்வேறு காரணங்களால் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. சுமார் முப்பது வயதை நெருங்கும் நிலையில் பெண்களும், முப்பதைத் தாண்டிய பிறகே ஆண்களும் திருமணம் செய்ய விரும்புகின்றனர்.
இப்படி இளைஞர்கள் திருமணத்தைத் தள்ளிப்போட்டு, பின்னர் குழந்தைப் பிறப்பைச் சிலகாலம் தள்ளிப் போடுவதே குழந்தையின்மைக்கும், குழந்தைகளின் ஆரோக்கியக் குறைவுக்கும் முதன்மையான காரணமாகிறது என்கிறது இந்த ஆராய்ச்சி.
முப்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு குழந்தை பிறக்கும் வாய்ப்புகள் கணிசமான அளவுக்குக் குறைகின்றன எனவும்,  கருவுறும் பெண்களுக்குக் கருச்சிதைவு நேர்வதற்கும் ஆண்களின் வயது காரணமாகி விடுகிறது எனவும் இந்த ஆராய்ச்சி அதிர்ச்சித் தகவலை அறிவித்திருக்கிறது.
சரியான வயதில் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் தள்ளிப் போட்டு முப்பதுகளின் கடைசியில் குழந்தை பெற்றுக் கொண்டால் அந்தக் குழந்தைகளுக்கு இதயம் தொடர்பான சிக்கல்கள் உட்பட பல்வேறு நோய்கள் வரும் வாய்ப்பு அதிகரிக்கிறதாம்.  நாற்பது வயதுக்கு மேற்பட்ட ஆண்களுக்கு சிக்கலின்றி குழந்தை பிறக்கும் வாய்ப்பு பெருமளவில் குறைகிறதாம்.
பெண்களின் வயது மட்டுமே குழந்தைப் பிறப்புக்குத் தேவை, ஆண்களின் வயது ஒரு பொருட்டல்ல, 90 வயதிலும் ஆண்களால் குழந்தை பெற்றுக் கொள்ளமுடியும் என்றிருந்த ஆண்களின் மீசை முறுக்கலுக்கு இந்த ஆராய்ச்சி ஒரு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறது.
கூடவே குடும்ப உறவுகளைக் குறித்த ஆழமான உணர்வு இல்லாமல், மேனாட்டுக் கலாச்சாரத்தின் வால்பிடித்து, கேளிக்கைகளுக்கும், பணத்துக்கும் முன்னுரிமை கொடுத்து அலையும் இளம் வயதினருக்கு இந்த ஆராய்ச்சி ஓர் எச்சரிக்கை மணியாகவும் ஒலிக்கிறது.
Source : http://xavi.wordpress.com/2008/08/04/pennae_nee/

தமிழ் என் மொழி , இந்தியா என் தாய் நாடு , இஸ்லாம் என் வாழ்க்கை நெறி .



I Am A Indian Tamil Muslim




Love Tamil And Speek Tamil




Teach Tamil Language To Your Children, To Promote Tamil




Spread Tamil Language




Tamil
Tamil Saying

By Birth, All Humans Are Equal


அன்புடன் நன்றி sadaqathullah.com

நீடூர் சீசன்ஸ்-பிக்காசா படங்கள்

Thursday, July 29, 2010

சீசன்ஸ் அலி -பிக்காசா படங்கள்

சீசன்ஸ் நீடூர்-பிக்காசா படங்கள்

இருக்கும் இடஒதுக்கீட்டை இழக்க வேண்டாம்! ராமதாசுக்கு கருணாநிதி பதில்

சென்னை: தமிழகத்தில் சாதிவாரியாக கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு தனிப்பட்ட சாதியினருக்கும் இடஒதுக்கீடு குறித்து முடிவு செய்யப்படும் என்று ராமதாசுக்கு முதல்வர் கருணாநிதி பதில் அளித்துள்ளார். இதில் இருப்பதையும் இழக்காமல் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்றும் முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வன்னியர்களுக்கு 20 சதவீத தனி இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளதற்கு, முதல்வர் கருணாநிதி விளக்கம் அளித்துள்ளார். அதில், அருந்ததியருக்கு வழங்கப்பட்டிருக்கும் உள்ஒதுக்கீட்டையும், சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் தனி இடஒதுக்கீட்டையும், வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டுடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது.
தமிழகத்தில் 69 சதவிகித இடஒதுக்கீட்டுக்கு என நிறைவேற்றப்பட்ட சட்டம் செல்லாது என, உச்சநீதிமன்றத்தில் 1994ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இடைக்காலத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு மாநிலம் 50 சதவிகித இடஒதுக்கீட்டு அளவை கடக்க வேண்டும் எனில், தேவையான புள்ளி விவரங்களை பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அளித்து, அதை ஆணையம் ஆராய்ந்து இடஒதுக்கீட்டை முடிவு செய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புள்ளிவிபரங்களைச் சேகரிப்பதற்கு சாதிவாரிக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அதற்குத் தேவைப்படும் 400 கோடி ரூபாயை மத்திய அரசிடம் கேட்டுப் பெறலாம் என, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. எனவே, உச்சநீதிமன்ற இடைக்காலத் தீர்ப்பின்படி தமிழகத்தில் சாதிவாரிக்கணக்கெடுப்பு எடுத்தால்தான், வன்னியர்கள் உள்ளிட்ட ஒவ்வொரு சாதியினருக்கும் எவ்வளவு இடஒதுக்கீடு அளிக்கலாம் என்பதை முடிவு செய்ய இயலும்.
வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு பிரச்சனையில் அவசர முடிவு எதையும் மேற்கொள்வதற்கு, உச்சநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பு இடம் தரவில்லை இதில் அவசரம் காட்டினால், பிரச்சனை திசை திரும்பி இருப்பதையும் இழந்துவிடக் கூடாது எனவே அனைவரும், இடஒதுக்கீட்டுப் பிரச்சனையில் ஒத்துழைப்பு வழங்கி இணைந்து செயல்படுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
Source : http://www.inneram.com/201007299636/reservation-tamilnadu-lose-ramadass-karunanithi

அம்மா உன்னை நேசிக்கிறேன்....


இந்த பூவுலகில் எத்தனையோ உறவுகள் பேனப்பட்டாலும், நேசிக்கப்பட்டாலும் அதில் ஏதோ ஒரு ஆதாயம் நேசிப்பவருக்கும், நேசிக்கப்படுபவருக்கும் இயற்க்கையாகவே இருக்கத்தான் செய்கிறது. ஆனால் இந்த உலகில் எந்த எதிப்பார்ப்பும் இல்லாமல், உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடாய் இருப்பது ஒரு தாய் தன் சேய் மீது காட்டும் அன்பு..
இன்று இந்த அன்பிற்க்காக ஏங்கும் பலரைப் பார்க்க முடிகின்ற இவ்வேளையில், இந்த அன்பு கிடைக்கப்பெற்றும் நம்மில் எத்தனைப்பேர் நமது தாயை நேசித்து இருக்கிறோம்..? ஆங்கிலத்தில் ஒரு தத்துவமுண்டு ( Father is a Faith but Mother is a Fact ) அதாவது தந்தை என்பது ஒரு நம்பிக்கை அடிப்படையிலான விடயம்.
நமது தாய் சொன்னால்தான் தந்தை யார்ரென்பது நமக்கே தெரியும். ஆனால் தாய் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. தாய்க்கும், சேய்க்கும் இயற்க்கையாகவே ஒரு பினைப்பு இருக்கிறது. இந்த வேளையிலே நான் என் தாயை நினைத்துப் பார்கிறேன். அவள் எனக்காகப் பட்ட துன்பங்களையும், ஏற்றுக் கொண்ட தியாகங்களையும் என் விழியில் நிழலாடுகின்றது..
எத்தனை முறையோ நான் பள்ளிக்கு போக ஆரம்பித்த நாட்களில் கேள்விக் கனைகளால் துளைத்து எடுத்திருக்கிறேன். அப்போதெல்லாம் ஒவ்வொரு முறையும் சலிப்படையாமல் என் உச்சி முகர்ந்து முத்தமிட்ட்டு எனக்கு விடையளிப்பாள், அப்போது அவளிம் ஸ்பரிசம் எனக்கு விளங்கவில்லை.
கடையில் பார்க்கும் பொருட்கள் அனைத்தும் வேண்டும் என்று அங்கேயே கதறி அடம் பிடிப்பேன், தன்க்கென்று எதுவும் சேர்க்காத தாய் என் தந்தையனுப்பும் சிறு தொகையில் எங்கள் குடுப்பத்தையும் கவனித்து அதில் சேமிக்கும் சிறு தொகையை நான் கேட்டு அடம்பிடிக்கும் பொருளுக்காக செலவளிப்பாள் எங்கள் வீட்டின் பொருளாதார மேதை. அப்போதும் கூட கேட்ட பொருல் கிடைத்த மகிழ்ச்சித்தான் என்னை சுற்றிக்கொண்டதே தவிற என் தாயின் உள்ளார்ந்த அன்பு விளங்கவில்லை..
தென்மேற்க்கு பருவ மழையும், தென்கிழக்கு பருவமழையும் கோரத்தாண்டவமாடும் மழைக்காலங்களில் என் தாயோடு பயனித்திருக்கிறேன். அந்த மழையின் கடுமையில் மாட்டிக் கொள்ளும் தருவாயில் நான் நனைத்துவிடக் கூடாது என்பதற்காக அவள் போர்த்தியிருக்கும் முக்காட்டை எனக்குப் போர்தி, தனது குஞ்சுகளை அடைகாக்கும் கோழியைப் போல என்னை காத்து நின்று எனக்கு வரவேண்டிய ஜீரத்தையும், ஜலதோஷத்தையும் அவள் ஏற்றுக் கொண்டு அவதிப்படுவாள். அப்போது கூட மழையில். தப்பித்த ஆனந்தம்தான் மேலோங்கியதே தவிர எனக்காக துன்பத்தை ஏற்ற அந்த கருணையின் வடிவம் தெரியவில்லை.. .
ஆண்டுகள் கழிந்தன நானும் பெரியவனானேன். நண்பர்கள் வட்டாரமும் அதிகரித்தது. நாடோடிப்போல ஊர் சுற்றுவது. இரவில் ஊர் சுற்றிவிட்டு இரவு நடுநிசியில் தந்தையின் ஏசலுக்கு பயந்து பயந்து கதவைத் தட்டும்போது எனக்காக கண்னுறங்காமல் காத்திருந்து கதவைத் திறப்பாள். அப்போது கூட தந்தையின் ஏசலிலிருந்து தப்பித்த பெருமூச்சுத்தான் வந்தததே தவிர என்னை ஒரு போர் வீரன்போல் காத்த என் அன்னையின் வீரம் விளங்கவில்லை..
வந்தது என் கல்லூரி நாட்கள் ஊரைவிட்டு, என் குடும்பத்தை பிரிய நேறும் வேளை. இதுவரை என்னை நிமிடம் கூட பிரியாமல் என்னையே சுற்றிக் கொண்டிருந்த என் அன்னையின் கண்கள் குழமாகியது அதைக்கூட புரிந்துக் கொள்ள முடியா வண்ணம் கல்லூரிக் கனவுகள் என் கண்னை மறைத்துவிட்டது.
கல்லூரியில் படிக்கும் நாட்களில் என் அம்மா தினந்தோறும் போன் போட்டு பேசுவாள்... " தங்கம், ராஜா, என் கண்மனி எப்படிப்பா இருக்கே.... சாப்டியா..? உடம்பு நல்லா இருக்காமா...? ரோட்ல நறையா வண்டிகள் வரும் பாத்துப் போடி ராஜா.... சிலவுக்கு பணம் இருக்கா...??? " இப்படி கணிவின் முகவரியாய் என் தாய்.. நானோ.. " இருக்கேம்மா..... எரிச்சல் பட்டுக் கொண்டு..... சரி.. சரி.. பணம் மட்டும் பேங்க்ல போட்டு விடுங்க... அப்புறம் பேசுறேன்..." என்று வெடுகெண்டு போனை கட் செய்யும்போது, பணத்தின் வருகைக்காகத்தான் மனம் காத்திருந்ததே தவிர என் அன்னையின் உள்ளார்ந்த அன்பு தெரியவில்லை.. .
ஆண்டுகள் கடந்தது... கல்லூரியையும் முடித்தேன்... எல்லோருக்கும் இடமலித்த வளைகுடா.. என்னையும் ஆரத்தழுவி அனைத்தது.... அப்போதுதான் நான் மனிதனாக ஆனேன்.. இந்த பாலைவனப் பிரதேசம் என்னுள் தேங்கிக் கிடந்த பாச ஊற்றுகளை வெளிக்கொனர்ந்தது.. நல்ல சோற்றுக்கு அலைந்து திரியும் போது தான் என் அன்னை பாசத்துடன் ஊட்டிவிட்ட உணவின் சுவைத் தெரிந்தது.. .
கடும் குளிரில் இங்கு நடுநடுங்கி படுக்கும்போதுதான் என்னை போர்த்தி விட்டு என்னைத் தாலாட்டிய என் அன்னையின் ஸ்பரிசம் தெரிந்தது. நோய்வாய் பட்டு கவனிக்க நாதியில்லாமல் இங்கு கிடக்கும் போதுதான் என் அன்னையின் அரவனைப்பின் ஆழம் தெரிந்தது... இப்படி பல பல நிகழ்வுகளில் என் அன்னையின் அரவனைப்பை இந்த வெந்த மணலில் நினைத்து நினைத்து ஏங்கியிருக்கிறேன்....
என்னுள் பல மாற்றங்களை ஏற்படுத்திய என் இன்றும் கிஞ்சிற்றுக்கூட மாறாமல் அதே அன்போடு என்னை ஆரத் தழுவுகிறாள் தன்னுடைய பேச்சுக்களால். அதே விசாரிப்புகளோடு என் அன்னையின் தொலைப்பேசி அழைப்பு.. அதே நேசிப்பின் வார்த்தைகள் அவளிடத்தில்... நெஞ்சை அடைக்கும் அழுகையில் கண்கள் கண்ணீரைத் வெளிக்கொணற " அம்மா உன்னை நேசிக்கிறேன் " என்று சொல்ல வார்த்தை வராமல்... கண்ணீர் தோய்ந்த கண்களோடு இறுக்கி கட்டி அனைக்கிறேன் தொலைப்பேசியை....
லால் தமிழன்source: தமிழ்சாரல்.காம்
http://nidur.info/

ஜன்னலோரத்தில் காகம்.......!

மாலை நேரம்...ஆதவன் தன் வான் ஆதிக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க நிலவைத் தேடிக்கொண்டிருந்தான். பள்ளியிலிருந்து தன் பேரன், பேத்தியின் வருகைக்காக கடிகாரத்தை பார்த்துக்கொண்டிருந்த பெரியவரின் முகத்தில் காலம் தன் கோடுகளை அழகாக வரைந்திருந்தது.  70 வயதின் முதிர்ச்சியை வெளிக்காட்டும் தனது வெளுத்த வெண் தாடியை வருடிக்கொண்டிருந்த அவரின் முகத்தை, ஜன்னல் அருகே வந்தமர்ந்த காகம் தன் தலையை சாய்த்துப் பார்த்தது. ஏதோ மனதில் பளிச்சென்று ஞாபகம் வர, புன்னகை பூத்தார் பெரியவர்.

Tuesday, July 27, 2010

1. குடும்பச் சண்டைகள் குறைந்திட!

S.A. மன்சூர் லி M.A.,B.Ed.,

ஸஹீஹுல் புகாரி எனும் நபி மொழி நூலிலிருந்து ஒரே ஒரு ஹதீஸை எடுத்து ஆய்வோம் - இங்கே: 
ஆயிஷா(ரலி) அவர்கள் கூறியதாவது; அல்லாஹ்வின் தூதருடைய மனைவிமார்களான நாங்கள் இரு குழுக்களாக இருந்தோம். ஒரு குழுவில் நானும் ஹஃப்ஸா, ஸஃபிய்யா, மற்றும் சவ்தா ஆகியோரும் இருந்தோம். மற்றெhரு குழுவில் உம்மு சலமா அவர்களும் அல்லாஹ்வின் தூதருடைய மற்ற மனைவிமார்களும் இருந்தனர்.
அல்லாஹ்வின் தூதர் என்னை எவ்வளவு (ஆழமாக) நேசித்து வந்தார்கள் என்பதை முஸ்லிம்கள் அறிந்திருந்தார்கள். ஆகவே, அன்பளிப்பு செய்பவர் தம்மிடம் பரிசுப் பொருள் ஏதும் இருந்தால், அதை அல்லாஹ்வின் தூதருக்கு அன்பளிப்புச் செய்ய அவர் விரும்பினால், அதை தள்ளிப் போட்டு, என் வீட்டில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தங்கும் நாள்) வரும்போது என் வீட்டிற்கு அன்பளிப்பு கொடுத்தனுப்புவார்.
ஆகவே, (இது தொடர்பாக) உம்மு சலமா குழுவினர் (தங்களிடையே கலந்து) பேசினர். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிடம் பேசி, எவர் எனக்கு ஓர் அன்பளிப்பைத் தர விரும்புகிறாரோ அவர், நான் என் மனைவிமார்களின் வீடுகளில் எங்கிருந்தாலும் அங்கு அந்த அன்பளிப்பை அனுப்பி வைக்கட்டும் என்று கூறும்படி (அல்லாஹ்வின் தூதரை) கேட்டுக் கொள் என்று உம்மு சலமா அவர்களிடம் அவர்களின் குழுவினர் கூறினர்.

அவ்வாறே உம்மு சலமா அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் தம் குழுவினர் கூறியதை எடுத்துச் சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் ஏதும் கூறவில்லை. பிறகு, உம்மு சலமா அவர்களின் குழுவிலிருந்த மற்ற மனைவிமார்கள் உம்மு சலமா அவர்களிடம், (நமது கோரிக்கையை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக் கொண்டார்களா? என்று) கேட்டனர். உம்மு சலமா அவர்கள், எனக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை என்று சொன்னார்கள்.
அவர்கள், மீண்டும் நபி (ஸல்) அவர்களிடம் (இது பற்றிப்) பேசு என்று கூறினர். உம்மு சலமா அவர்களும் அடுத்து தமது முறை வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் அது குறித்துப் பேசினார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதில் எதுவும் கூறவில்லை. மீண்டும் உம்மு சலமா (ரலி) அவர்களின் குழுவினர், அவர்களிடம் (நபி (ஸல்) அவர்கள் என்ன பதில் சொன்னர்கள் என்று) கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் எனக்கு பதில் எதுவும் கூறவில்லை என்று உம்மு சலமா அவர்கள் கூறினார்கள்.
அதற்கு அவர்கள், அவர்கள் உனக்கு பதில் தரும்வரை நீ அவர்களிடம் (இது குறித்துப்) பேசிக் கொண்டேயிரு என்று கூறினார்கள். மீண்டும் உம்மு சலமா (அவர்களின் முறை வந்தபோது) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். உம்மு சலமா அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மீண்டும் (இது குறித்துப்) பேசினார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவின் விஷயத்தில் எனக்குத் துன்பம் (மன வேதனை) தராதே. ஏனெனில், ஆயிஷாவின் படுக்கையில் (நான் இருக்கும் போதே தவிர) வேறெந்த மனைவியின் படுக்கையிலும் வஹீ (வேத வெளிப்பாடு) எனக்கு வருவதில்லை என்று கூறினார்கள்.
உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்கள்.
பிறகு, அந்த மனைவியர் அல்லாஹ்வின் தூதருடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அணுகி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், உங்கள் மனைவிமார்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மக(ளான ஆயிஷா(ரலி) அவர்க)ளின் விஷயத்தில் (தாங்கள் நடந்து கொள்வது போன்றே பிற மனைவியரிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறார்கள் எள்று கூறுமாறு (சொல்லி) அனுப்பினார்கள். (அவ்வாறே) ஃபாத்திமாவும் நபி (ஸல்) அவர்களிடம் பேசினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் அன்பு மகளே! நான் நேசிப்பதை நீயும் நேசிக்கவில்லையா? என்று கேட்டார்கள். அதற்க அவர்கள், ஆம் (தாங்கள் நேசிப்பதை நானும் நேசிக்கிறேன்) என்று கூறிவிட்டு திரும்பிச் சென்று அவர்களிடம் (தன் சின்னம்மாக்களிடம்) செய்தியைத் தெரிவித்து விட்டார்கள். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் மறுபடியும் போ(ய்ச் சொல்) என்று கூறினார்கள். மீண்டும் (இது தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம்) செல்ல ஃபாத்திமா அவர்கள் மறுத்து விட்டார்கள்.
ஆகவே, அவர்கள் (தம் சார்பாக) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் அவர்களை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, (சற்று) கடுமையாகப் பேசி, உங்கள் மனைவிமார்கள் அபூ குஹாஃபாவின் மகனுடைய (அபூபக்ருடைய) மகளின் (ஆயிஷா(ரலி)வின்) விஷயத்தில் (நடந்து கொள்வது போன்றே பிற மனைவிமார்களிடமும்) நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள் என்று கூறினார்கள்.
நான் (ஆயிஷா) அமர்ந்து கொண்டிருக்க, அவரது குரல் உயர்ந்தது. அவர் என்னைக குறை கூறித் திட்டினார். எந்த அளவுக்கென்றால், அல்லாஹ்வின் தூதர் நான் பதில் பேசுவேனா என்று எதிர்பார்ப்பது போல் என்னையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். உடனே, நான் ஸைனபுக்கு பதில் சொல்லி, இறுதியில் அவரை வாயடைக்கச் செய்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, இவள் (உண்மையிலேயே) அபூபக்ருடைய மகள் தான் என்று கூறினார்கள். மற்றோர் அறிவிப்பில், நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது, ஃபாத்திமா அனுமதி கேட்டு உள்ளே வந்தார் என்று ஆயிஷா(ரலி) கூறியுள்ளார்கள். (ஸஹீஹுல் புகாரி - மூன்றாம் பாகம் - ஹதீஸ் எண்: 2581)
என்ன அற்புதமான காட்சிகள் - நபியவர்களின் குடும்பத்தில்!
பெண்களின் இயல்புகளைப் புரிந்துகொள்ளவும், அதற்கொப்ப அவர்களிடம் நடந்து கொள்வது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவும் - இந்த ஒரு நபி மொழியில் இருந்தே நாம் நிறைய பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்.
பாடங்களுக்குச் செல்வோமா?
1. குழுவாக செயல்படுவது பெண்களின் இயல்பு! (தனி ஆவர்த்தனம் வாசிப்பது எல்லாம் ஆண்கள் தாம்!) குடும்பத்தில் பிரச்னை ஏதும் ஏற்பட்டால் - அதன் பின்னணியில் "பெண்கள் குழு" ஒன்று இருந்திட அதிக வாய்ப்பு உள்ளது.
அதைக் கேள், இதைக் கேட்டு வாங்கு - என்று மாமியாரைச் சுற்றி - மகள், அக்கா, தங்கை - போன்ற உறவினர் கூட்டம் ஒன்று போட்டுக் கொடுத்துக் கொண்டே இருப்பதனால் தான் வரதட்சனைப் பிரச்னைகள்.
2. பெண்கள் நம்மிடம் என்ன செய்தி கொண்டு வந்தாலும் - ஆண்கள் - அதனை சீர்தூக்கிப் பார்த்தே முடிவு செய்திட வேண்டும். கொண்டு வரப் படும் செய்தியில் நேர்மை இல்லை எனில் - ஆண்கள் உறுதியாக மறுத்து விட வேண்டும். நபியவர்களைப் போல! "நீதியுடன் நடந்து கொள்ளும்படி அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கின்றார்கள்" என்ற குற்றச்சாட்டில் என்ன நியாயம் உள்ளது? ஒவ்வொரு மனைவிக்கும் ஒவ்வொரு நாளை ஒதுக்கியது நபியவர்களின் நீதியை உணர்த்திடவில்லையா? அதில் ஏதும் குறை வைத்தார்களா நபியவர்கள்?   
3. உம்மு சலமா அவர்களிடம் நபியவர்களின் மனைவியர் "அவர்கள் உனக்கு பதில் தரும் வரை நீ அவர்களிடம் இது குறித்துப் பேசிக் கொண்டே இரு" என்று கூறினார்கள் என்பதைக் கவனியுங்கள். உம்மு சலமாவைத் தொடர்ந்து அன்னை ஃபாத்திமா அவர்களை அணுகுகின்றார்கள். தொடர்ந்து ஸைனபையும் அனுப்பி வைக்கிறார்கள்! தங்களுக்குச் சாதகம் ஏற்படும் வரை - தொடர்ந்து - முயற்சி செய்து கொண்டே இருப்பது - பெண்களின் கை வந்த கலை.   
4. பெண்களிடம் - மறுத்துப் பேசுவதை விட மவுனத்துக்கு வலிமை அதிகம். இரண்டு தடவை மவுனம் காக்கிறார்கள் நபியவர்கள். இதுவும் சுன்னத் ஆகி விடுகிறது நமக்கு.
5. பெண்களிடம் பேசும்போது நமது பேச்சோ அல்லது மறுப்போ - சுருக்கமாக நறுக்கென்று அமைந்திட வேண்டும். வள வள என்று பேசி - அது ஒரு விவாதமாக மாறிட நாம் அனுமதிக்கக்கூடாது.  
6. பெண்களை - இது போன்ற "நச்சரிப்பு" வேலைகளில் இருந்து காக்கக் கூடியது - இறையச்சம் ஒன்று மட்டுமே. உம்மு சலமா அவர்கள் இதற்கு நல்லதொரு எடுத்துக் காட்டு. உம்மு சலமா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்குத் துன்பம் தந்ததற்காக அல்லாஹ்விடம் நான் பாவ மன்னிப்புக் கோருகிறேன் என்று கூறினார்களே- அது தான் பாராட்டப் பட வேண்டும்.
7. முகத்தில் தெரிகின்ற உணர்ச்சிகளைப் புரிந்து கொள்வதிலும், அந்த உணர்ச்சிகளை சொற்களால் விவரித்துக் காட்டுவதிலும் பெண்களே ஆண்களை விட சிறந்தவர்கள். எவ்வளவு அழகாக ஹதீஸை விவரிக்கிறார்கள் அன்னை ஆயிஷா அவர்கள்! நபியவர்களின் முகக் குறிப்பை எவ்வளவு துல்லியமாகவும் விரைவாகவும் புரிந்து கொண்டு விடுகிறார்கள்.
8. ஒன்றை கவனித்தீர்களா? எல்லாவற்றையும் விலா வாரியாக விவரித்த அன்னையவர்கள் - ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்கள் நபியவர்களைக் கடுமையாக என்ன பேசினார்கள் என்பதையோ, தம்மைத் திட்டியதையோ, இறுதியில் அவர்களை எப்படி வாயடைக்கச் செய்தார்கள் என்பதையோ - விவரிக்காமல் விட்டு விட்டார்கள் - பார்த்தீர்களா? இப்படித் தான் பெண்கள் "வடிகட்டிப் பேசிடத்" பழகிக் கொள்ள வேண்டும்! வடிகட்டிப் பேசினாலே பல பிரச்னைகளைத் தவிர்த்து விடலாம். 
9. இந்த ஹதீஸிலே வருகின்ற சம்பவம் போன்று நம் வாழ்வில் நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆண்களாகிய நாம் எப்படி நடந்து கொண்டிருப்போம்? வீட்டில் ரகளை ஒன்றை நடத்தி முடித்து விடுவோம். இதற்குக் காரணம் ஆண்களின் ஈகோ தான்! இந்த ஒட்டு மொத்த சம்பவத்திலும் - நபியவர்களின் மவுனத்தையும் ஒரே ஒரு கருத்தையும் மட்டுமே இங்கே நாம் காண்கிறோம். தம்மிடம் கடுமையாகப் பேசும் மனைவிக்கு எதிராகக் கூட அவர்கள் வாயைத் திறக்கவேயில்லை!
10. பெண்களின் தன்மைகளை ஆண்கள் தெளிவாகப் புரிந்து வைத்திருந்தால் - கணவன் - மனைவி சண்டைகள் வெகுவாகக் குறைந்து விடும் குடும்பங்களில்.
11. ஒரு உணர்ச்சிகரமான சூழலில் நமது குடும்பம். கடுமையான வாக்குவாதம். ஆளுக்கு ஆள் பேசுகின்றார்கள். சப்தம் உயர்ந்து கொண்டே போகிறது. இந்தச் சூழ்நிலையை உங்களால் மாற்றிட முடியுமா? உணர்ச்சிகள் தணிந்து - குடும்பத்தை மீண்டும் இயல்பு நிலைக்கு எப்படிக் கொண்டு வருவீர்கள்? நபியவர்களிடமே கற்றுக் கொள்வோம். என்ன செய்கிறார்கள்? 
அன்னை ஆயிஷா அவர்கள் ஸைனப் அவர்களை வாயடைக்கச் செய்தவுடன் நபியவர்கள் "இவர் உண்மையிலேயே அபூ பக்ரின் மகள் தான்" என்று நகைச் சுவையாக ஒரு போடு போடுகின்றார்கள். அவ்வளவு தான். சூழ்நிலை மாறி விடுகிறது! உணர்ச்சித் திறன் (Emotional Wisdom) உள்ளவர்களால் தான் இது சாத்தியப் படும். 
12. இறுதியாக - இன்னொரு பாடமும் இங்கே நாம் படித்துக் கொள்வோம். கணவனும் மனைவியும் ஒரே போர்வையில் தூங்குவது தான் அது! அதாவது இதுவும் ஒரு சுன்னத் எனபதை மறந்து விட வேண்டாம்.
(அல்லாஹு தஆலா - நபியவர்களின் மனைவியர் - நமது அன்னையர் - அனைவரையும் பொருந்திக் கொள்வானாக! அவர்களைக் குறித்த நமது எழுத்துக்களில் ஏதேனும் தவறுகள் இருப்பின் அல்லாஹ் நம்மை மன்னிப்பானாக!)
நன்றி ;http://counselormansoor.com/index.php?option=com_content&view=article&id=92:1---&catid=15:home&Itemid=20

பணம்




பெரும்பாலும் பயன்பாட்டில் இருக்கும் நாணயம், தாள் வடிவில் பணம்.


இந்திய 1000-உரூபாய் பணத்தாள்
பணம் என்பது, மக்கள் தங்களுக்கு இடையே பொருட்கள், சேவைகள் முதலியவற்றைப் எளிதாகப் பரிமாறிக்கொள்ள, ஈடான மதிப்புடையதாக ஓர் அரசால் உறுதியளிக்கப்பட்ட அடையாள அலகு. சேமிப்புக்கும் இது பயன்படும் அலகு. சில வரைவிலக்கணங்களின்படி பணம் என்பது பெருமதியை தீர்மானிக்கும் அலகாகும். பொதுப் பயன்பாட்டில், பணம் என்பது பெரும்பாலும் நாணயத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

தொடக்க காலத்தில் கொடுக்கல்-வாங்கல் தொழிலானது(வணிபமானது) பண்டமாற்று முறையில் நடைபெற்றது. இம்முறையின் கீழ் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெருமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் ஊதியமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)
தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது.

பணத்தின் வகைகள்

முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்கதங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெருமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம்.
இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெருமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.
தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.

தங்கம்

தங்கம் அல்லது பொன் (Gold) என்பது ஒரு உலோகமாகும். இது Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இது மென்மையான, மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். இது ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றைச் செய்வர். உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. . தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவது வழக்கம்.

வெள்ளி (உலோகம்)


வெள்ளி
என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியல் குறி . வெள்ளியின் அணு எண் 47. இது அதிக மின் கடத்தல் திறன் கொண்டது. வெள்ளி உலோகம், தாமிரத்தை விட சிறந்த மின் கடத்தி. ஆனால் அதன் விலை மிக அதிகம். இது தங்கத்தினை விடச்சற்று கடினமான உலோகமாகும். இது ஆபரணங்களிலும் நாணயங்களிலும் நிழற்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.

பித்தளை

பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.
பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.

வெண்கலம்

வெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச்`பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது.

வெண்கலத்தின் வரலாறு

மாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.
ஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரும்பு

இரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இது உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்றாகும். இதன் அணு எண் 26 ஆகும்.
இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது.

இயந்திரவியல் பண்புகள்

Characteristic values of tensile strength (TS) and Brinell hardness (BH) of different forms of iron.[1][2]
Material TS (MPa) BH (Brinell)
Iron whiskers 11000
Ausformed (hardened) steel 2930 850–1200
Martensitic steel 2070 600
Bainitic steel 1380 400
Pearlitic steel 1200 350
Cold-worked iron 690 200
Small-grain iron 340 100
Iron containing dissolved carbon 140 40
Single crystal of pure iron 10 3

உடல்நலத்தில் இரும்பின் பங்கு

குழந்தைகள், விடலைகள் (Teenagers) , குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.
Source : http://nettrikan.blogspot.com/2010/05/blog-post_216.html