வரலாறு
தொடக்க காலத்தில் கொடுக்கல்-வாங்கல் தொழிலானது(வணிபமானது) பண்டமாற்று முறையில் நடைபெற்றது. இம்முறையின் கீழ் தாம் கொள்வனவு செய்யும் பொருளின் பெருமதிக்கேற்ற இன்னொரு பொருளை விற்பனையாளரிடம் கொடுத்தாக வேண்டும். மேலும் இம்முறையின் கீழ் சேவைகளை வழங்குபவர்களுக்கு ஊதியமாக அரிசி, தானியம் முதலான பொருட்களே கொடுக்கப்பட்டன. எடுத்துக்காட்டுக்கு, வயல் வேலையாட்களின் ஊதியமாக விளைச்சலின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டது. (இம்முறை இன்றும் தமிழ்நாட்டில் நடப்பில் உள்ளது.)தொடக்கத்தில் பொருட்களையோ சேவைகளையோ பெறும் போது அனைத்துவித பொருட்களும் பரிமாற்றப்பட்டாலும் பின்னர், உப்பு, சிப்பி போன்ற சில குறிப்பிட்ட பொருட்கள் மட்டுமே பரிமாற்ற அலகுப் பொருட்களாக பயன்படுத்தப்பட்டன. இவற்றின் மூலம் சேமிப்புப் பெருமதி ஒன்று பணத்துக்கு வந்தது. இது வணிகத்தின் வளர்ச்சிக்கும் வணிகர்கள் என்ற புது சமுதாய வகுப்பையும் உருவாக்கியது.
பணத்தின் வகைகள்
முதலில், பணத்தின் மதிப்பை அந்த நாணயம் செய்யப்பட்ட தங்கம், வெள்ளி போன்ற மாழையின் (உலோகத்தின்) மதிப்பைக் கொண்டு மதிப்பிடப்பட்டது. தங்கதங்கம், வெள்ளி, பித்தளை பின்னர் வெண்கலம், இரும்பு ஆகியவைகளால் செய்யப்பட்ட நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. நாணயத்துக்கு அதில் உள்ள தங்கத்தின் எடையின் பெருமதி வழங்கப்பட்டது. இதனை பண்டமாற்று முறையின் ஒரு நீட்சியாகக் கொள்ளலாம்.இதற்கடுத்த முறை கடன் பணம் எனப்படுவதாகும். இதன் கீழ், தங்கத்தை அல்லது ஏனைய பெருமதியான உலோகங்களை உருக்கி, அவற்றை நாணயமாக பயன்படுத்துவதற்கு மாற்றாக, அரசு தங்கத்தை தன் இருப்பில் வைத்துக் கொண்டு அதன் மதிப்பிற்கு ஒரு தாளில் உத்தரவாதம் அளித்து (அதாவது, இந்த தாளைக் கொண்டு வருபவர்களுக்கு இந்த மதிப்பிற்கு உரிய தங்கம் அளிக்கப்படும் என அறிவித்துத்) தாள்களை வெளியிட்டது.
தாளை வாங்கிக் கொண்டு மாழையைத் (உலோகத்தைத்) தரும் உறுதிமொழி எதுவும் இல்லாமல் இந்த நாணயத்தாளின் மதிப்பைக் குறித்து, அரசின் ஆணையால் ஒரு நாட்டில் பணமாகப் பயன்படுத்தும் முறைக்கு பணம் எனப்படும். தற்போது பயன்பாட்டிலிருக்கும் நாணயங்களும் இந்த வகையைச் சேர்ந்தது தான். ஏனென்றால் இந்த நாணயங்களிலுள்ள மாழையின் (உலோகத்தின்) மதிப்பு அந்த நாணய மதிப்பை விட குறைவாகவே இருக்கும்.
தங்கம்
தங்கம் அல்லது பொன் (Gold) என்பது ஒரு உலோகமாகும். இது Au என்ற குறியீட்டினால் குறிக்கப் படுகிறது. இதன் அணு எண் 79. இது மென்மையான, மஞ்சள் நிறமுள்ள வார்ப்பதற்கு எளிதான ஒரு உலோகமாகும். இது ஆபரணங்கள் செய்வதற்கும் முற்காலத்தில் நாணயமாகவும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது வெப்பத்தை நன்கு கடத்த வல்லது. தங்கத்தில் அதிகமாக ஆபரணங்கள், நகைகள் போன்றவற்றைச் செய்வர். உலகிலேயே அதிகமான தங்கம் கையிருப்பு வைத்திருக்கும் நாடு அமெரிக்கா. . தமிழர்கள் தங்களின் குழந்தைகளுக்கு தங்கம் என்று பெயர் சூட்டுவது வழக்கம்.வெள்ளி (உலோகம்)
வெள்ளி என்பது உலோக வகையைச் சேர்ந்த ஒரு தனிமமாகும். இதன் வேதியல் குறி . வெள்ளியின் அணு எண் 47. இது அதிக மின் கடத்தல் திறன் கொண்டது. வெள்ளி உலோகம், தாமிரத்தை விட சிறந்த மின் கடத்தி. ஆனால் அதன் விலை மிக அதிகம். இது தங்கத்தினை விடச்சற்று கடினமான உலோகமாகும். இது ஆபரணங்களிலும் நாணயங்களிலும் நிழற்படங்களிலும் பயன்படுத்தப்படுகிறது.
பித்தளை
பித்தளை என்பது செப்பு, துத்தநாகம் ஆகிய உலோகங்கள் சேர்ந்த ஒரு கலப்புலோகம். வேலை செய்வதற்கு எளிதாகவும், கடுமையானதாகவும் இருப்பதால் பித்தளை ஒரு சிறந்த உற்பத்திக்குரிய பொருளாக இருக்கிறது. அல்பா பித்தளை எனப்படும் 40% க்குக் குறைவான துத்தநாகத்தைக் கொண்டுள்ள பித்தளை இளக்கத்தன்மை (malleable) காரணமாகக் குளிர் நிலையிலேயே வேலை செய்யக்கூடியதாக உள்ளது. கூடுதலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட பீட்டா பித்தளையைச் சூடாக்கி மட்டுமே வேலை செய்ய முடியும் எனினும் அது கடுமையானதும், உறுதியானதும் ஆகும். 45% க்கும் மேலான அளவு துத்தநாகத்தைக் கொண்ட வெண்பித்தளை இலகுவில் நொருங்கக் கூடியது என்பதால் பொதுவான பயன்பாட்டுக்கு உதவாது. அவற்றின் இயல்புகளை மேம்படுத்துவதற்காக சிலவகைப் பித்தளைகளில் வேறு உலோகங்களும் சேர்க்கப்படுவது உண்டு.பித்தளை ஓரளவுக்குத் தங்கத்தை ஒத்த மஞ்சள் நிறம் உடையது. இதன் காரணமாகப் பல்வேறு அலங்காரத் தேவைகளுக்கு இவ்வுலோகத்தைப் பயன்படுத்துகிறார்கள். இளக்கத்தன்மை மற்றும் அதன் ஒலியியல் இயல்புகள் காரணமாகப் பித்தளை பல்வேறு இசைக்கருவிகள் செய்வதற்கும் பயன் படுகின்றது. இந்தியாவிலும் பாத்திரங்கள், விளக்குகள், மற்றும் பல வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்கள் உட்பட ஏராளமான பொருட்கள் பித்தளையில் செய்யப்படுகின்றன.
வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலேயே பித்தளையை மனிதன் அறிந்திருந்தான். உண்மையில் துத்தநாகம் பற்றி அறிவதற்கு முன்னமே பித்தளை பற்றிய அறிவு மனிதனுக்கு இருந்தது. செப்பையும், கலமைன் எனப்படும் துத்தநாகத்தின் தாதுப்பொருளையும் சேர்த்து உருக்கிப் பித்தளை செய்யப்பட்டது.
வெண்கலம்
வெண்கலம் என்பது ஒரு செப்பு மாழைக் கலவை (உலோகக் கலவை). செப்புடன் சேர்ந்த பொருள் பெரும்பாலும் வெள்ளீயம் ஆகும், ஆனால் சில நேரங்களில் பாஸ்பரஸ், மாங்கனீசு, அலுமினியம், சிலிக்கான் போன்ற தனிமங்களும் கலந்திருப்பதுண்டு (கீழே பார்க்கவும்). இம் மாழைக் கலவை மிகவும் கெட்டியான பொருள். இதனால் இது பழங்காலத்தில் இருந்து பல பணிகளுக்குப் பயன்படுகின்றது. வெண்கலம், இரும்பைவிடவும் செப்பை விடவும், பல கல் கருவிகளைவிடவும் கெட்டியானது. இதனால் வெண்கலத்தைப் பல ஆயுதங்களிலும் போர்க்கவசம் போன்றவற்றிலும் பயன்படுத்தினர். பழங்காலத்தில் இதன் பயன்பாட்டை விரும்பி பெருக்கியதால், மாந்தர்களின் நாகரீக வளர்ச்சி நிலைகளை கற்காலம், இரும்புக் காலம் என்று அழைப்பது போல வெண்கலக் காலம் என்றும் அழைப்பதுண்டு. செப்பு என்பதற்கு பாரசீகச்`பிறான்ஸ் (Bronze) என்னும் சொல் உருவாகியது.வெண்கலத்தின் வரலாறு
மாந்தர்களின் வரலாற்றில், நாகரீகப் பண்பாட்டில், வெண்கலம் ஒரு சிறப்பான மாழைக் கலவையாகும். பல வகையான கருவிகளும், ஆயுதங்களும், அழகுப் பொருட்களும் செய்யப்பட்டன. வெண்கலம் கண்டு பிடிப்பதற்கு முன்னர் பயன்பட்ட செப்பு, கல் முதலாலவற்றைவிட உறுதிமிக்கது. முன் காலத்தில் செய்த வென்கலத்தில் சில நேரங்களில் சிறிதளவு ஆர்சனிக் கலந்திருந்தது, இதனால் அவை உறுதி மிக்கதாக இருந்தது. இது ஆர்சனிக் வெண்கலம் எனப்பட்டது.ஈரான் நாட்டில் உள்ள சுசா என்னும் இடத்திலும் இன்றைய ஈராக் நாட்டிலும் (மெசுப்பொடாமியாவிலும்) கி.மு நான்காம் ஆயிரத்தாண்டிலேயே வெள்ளீயம் கலந்த வென்கலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரும்பு
இரும்பு ஒரு தனிமம் மற்றும் உலோகம் ஆகும். இது உலகில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகங்களுள் ஒன்றாகும். இதன் அணு எண் 26 ஆகும்.இரும்பே புவியில் ஏராளமாகக் கிடைக்கும் உலோகம் ஆகும். மேலும் இதுவே அண்டத்தில் பத்தாவது அதிகம் கிடைக்கும் தனிமம் ஆகும். பெரும்பாலான இயந்திரங்களை உருவாக்க இரும்பே பயன்படுத்தப்படுகிறது.
இயந்திரவியல் பண்புகள்
Material | TS (MPa) | BH (Brinell) |
---|---|---|
Iron whiskers | 11000 | |
Ausformed (hardened) steel | 2930 | 850–1200 |
Martensitic steel | 2070 | 600 |
Bainitic steel | 1380 | 400 |
Pearlitic steel | 1200 | 350 |
Cold-worked iron | 690 | 200 |
Small-grain iron | 340 | 100 |
Iron containing dissolved carbon | 140 | 40 |
Single crystal of pure iron | 10 | 3 |
உடல்நலத்தில் இரும்பின் பங்கு
குழந்தைகள், விடலைகள் (Teenagers) , குழந்தை பெறும் வயதடைந்த பெண்கள் ஆகியோருக்கு இரும்புசத்து குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. அதே சமயம் ஆரோக்கியமான ஆண்களுக்கும், 'மெனோபாஸ்' கடந்த பெண்களுக்கும் இந்த குறைபாடு பொதுவாக ஏற்படுவதில்லை. அளவு மிஞ்சினால் மூச்சடைப்பு, கழிச்சல், அடிவயிற்றில் வலி போன்றவை ஏற்படும். அந்தச் சமயத்தில் உடல் மற்ற தாதுப்பொருட்களை பெறுவதையும் தடுத்துவிடும்.Source : http://nettrikan.blogspot.com/2010/05/blog-post_216.html
No comments:
Post a Comment