திருவாரூரில் புதிதாக அமைக்கப்பட்ட மருத்துவக்கல்லூரி ஒன்றை திறந்து வைத்து பேசும் போது, "திருவாரூரிலுள்ள கிராமங்கள் லண்டனிலுள்ள கிராமங்களைப் போன்று உள்ளது" என தமிழக முதல்வர் கருணாநிதி புகழ்ந்துரைத்தார்.
திருவாரூரில் ரூபாய் 100 கோடியில் மருத்துவக்கல்லூரியொன்று புதிதாக கட்டப்பட்டுள்ளது. இதனை முதல்வர் கருணாநிதி இன்று திறந்து வைத்தார். பின்னர் விழாவில் பேசும் போது, "பொதுவாக, பாலம் கட்டவேண்டுமென்றால், வாய்க்கால் வெட்டவேண்டுமென்றால் அது பொதுவான விசயம். அதில் அரசியல் இருக்கக்கூடாது.
இப்படிப்பட நல்ல விசயங்களை அரசு செய்யும் போது அதில் அரசியல் கட்சிகள் தங்களது கொள்கைகளை தள்ளிவைத்துவிட்டு எல்லோரும் பங்கேற்கவேண்டும். அப்படி பங்கேற்றால் தமிழகத்தில் இன்னும் பல நல்ல காரியங்கள் நிறைவேறும்.
இன்றைக்கு திருவாரூர் ரொம்ப மாறிவிட்டது. இங்குள்ள கிராமத்தை பார்க்கும் போது லண்டனில் உள்ள கிராமத்தை பார்க்கிறேனா என்ற எண்ணம் வருகிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்களாக இருக்கின்றன.
இத்தகைய மாற்றங்கள் எல்லா மாவட்டங்களிலும் வரவேண்டும். அதையெல்லாம் நான் பார்க்கமுடியாவிட்டாலும் திராவிட முன்னேற்ற கழகத்தினர் காணவேண்டும் என்று விரும்புகிறேன்" என்று பேசினார்.
No comments:
Post a Comment