லண்டன்: கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா என்ற குழப்பமான கேள்வி பல ஆண்டுகளாக யாராலுமே பதில் அளிக்க முடியாத ஒரு கேள்வியாக இருந்தது. ஆனால், தற்போது இந்தக் கேள்விக்கு விடை கிடைத்துள்ளது.
இந்த கேள்வி குறித்து, இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள் தீவிரமான ஆய்வு ஒன்றை மேற்கொண்டு அதற்கான விடையினை கண்டுபிடித்துள்ளனர். அவர்கள் ஆய்வின் முடிவாக, கோழிலிருந்துதான் முட்டை வந்தது என்று உறுதி செய்துள்ளனர். இங்கிலாந்தில் உள்ள ஷெப்பீல்டு, வார்விக் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் இது பற்றி ஆய்வு நடத்தினார்கள்.
இந்த குழுவாக செயல்பட்ட விஞ்ஞானிகள், முட்டையின் செல்களை சூப்பர் கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அதில் முட்டையின் செல்கள் வோக்லெடின்-17 என்ற புரோட்டின் மூலம் உருவாகி இருந்தது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வோக்லெடின்-17 செல் கோழியின் உடலில் இருப்பதாகும். அதுதான் முட்டையாக உருமாறி இருக்கிறது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்த வோக்லெடின்-17 புரோட்டின், கிறிஸ்டல், நியூகிளீயசாக மாறி தானாக வளர்ச்சி பெற்று முட்டை செல்களாக மாறுவது இதன் மூலம் கண்டு பிடிக்கப்பட்டது. எனவே, கோழியில் இருந்துதான் முட்டை வந்துள்ளது என்று விஞ்ஞானிகளின் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

No comments:
Post a Comment