Saturday, July 17, 2010

நதிகள் இணைப்பு - தமிழகம் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட கலாம் யோசனை!

நீர் ஆதாரங்களைப் பெருக்குவது தொடர்பாகவும் நதிகளை இணைப்பது தொடர்பாகவும் இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்துடனும் கோவை சிறுதுளி அமைப்புடனும் இணைந்து தமிழக அரசு செயல்படலாம் என இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் யோசனை தெரிவித்துள்ளார்.

கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிறுதுளி அமைப்பின் "சிறுதுளி பெருவெள்ளம்... அன்றும் இன்றும்" என்ற பெயரில் மழை நீர் சேகரிப்பு தொடர்பாக நடைபெற்ற கண்காட்சியைத் துவக்கி வைத்துப் பேசும்போது கலாம் இவ்வாறு கூறினார். நீர் ஆதாரங்கள் குறித்த தகவல்களை இஸ்ரோவின் தொழில் நுட்பத்தின் மூலம் பெற்றுக் கொள்ள முடியும். நதீகளை இணைப்பது குறித்த வரைவை சிறுதுளி அமைப்பு தயாரித்தளிக்க முடியும் என்றும் கலாம் கூறினார்.

மழை நீர் சேகரிப்பு குறித்த பழங்கால மற்றும் நவீன முறைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றன. கோவையில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருமளவில் பார்வையிட்டனர்.

தமிழக அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர் உமாநாத் மற்றும் சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

No comments: