Tuesday, July 20, 2010

பின்லேடன் இருப்பிடம் பாக். அரசுக்குத் தெரியும் : கிளின்டன்!

அல் கொய்தா இயக்கத் தலைவர் பின்லேடன் பாகிஸ்தானில்தான் இருக்கிறார் என்றும் பாக்கிஸ்தான் அரசில் இருப்பவர்களில் சிலருக்கு பின்லேடன் தங்கியிருக்கும் இடம் தெரியும் என்றும் அமெரிக்க வெளியுறுவத்துறைச் செயலர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் நடைபெறம் சர்வதேச கலந்தாய்வு ஒன்றில் கலந்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தான் சென்றுள்ள கிளின்டன் ஃபாக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த நேர்காணலின் போது இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்காவின் மீது தொடுக்கப்பட்ட தீவிரவாதத் தாக்குதல்களில் பெரும்பாலானவை பாகிஸ்தானில் திட்டம் தீட்டப்பட்டவை என்பதைச் சுட்டிக் காட்டிய கிளின்டன், பாகிஸ்தான் தீவிரவாதிகளின் சொர்க்கமாகத் திகழ்வதாகவும் அதனை தாலிபான்களும் அல்கொய்தாவும் பயன்படுத்திக் கொள்வதாகவும் குறிப்பிட்டார்.

காபூல் செல்வதற்கு முன்னதாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிளின்டன், அமெரிக்காவுக்கு வரும் தீவிரவாத அச்சுறுத்தல்களின் தலைமையிடமாக இது திகழ்கிறது என்று கூறியிருந்தார்.

தீவிரவாதத்திற்கு எதிராக பாகிஸ்தான் அரசு தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளித்து வருவதால் அல்கொய்தா மற்றும் தாலிபான் தலைவர்களில் முக்கியமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அமெரிக்காவும் அதன் கூட்டு நாடுகளும் பின்லேடனையோ அல்லது அவரது நெருங்கிய தலைவர்களையோ இதுவரை பிடிக்காதிருக்கலாம். ஆனால் நாங்கள் நிறைய முன்னேற்றம் அடைந்துள்ளோம் என்றும் கிளின்டன் கூறினார்.
Source : http://www.inneram.com/201007209396/qelementsq-in-pak-govt-aware-about-bin-ladens-whereabouts-clinton

No comments: