நீடூர் - நெய்வாசல்
நீடூர்
முகவரி: நீடூர் அஞ்சல்மயிலாடுதுறை வட்டம்
நாகப்பட்டினம் மாவட்டம், 609203
எப்பொழுதும் அழிவில்லாது நீடியிருத்தலின் நீடூர் எனப் பெயர் பெற்றது என்பர்.
இந்நீடூர் இராஜாதி ராஜவள நாட்டைச் சேர்ந்ததாகும்.
நீடூர் தொடர்வண்டி நிலையம்
ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா புதிய பள்ளிவாசல்
நீடூர் நெய்வாசல் புகழ் வாய்ந்த பழைய ஜும்மா பள்ளிவாசல் ஜாமியா மிஸ்பாஹுல் ஹுதா - பட்டமளிப்பு விழா
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -1)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -2)
அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப். (பகுதி -3)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி -4 அரபிக் கல்லூரி வளம் பெறுதல்)
அல்ஹாஜ் சி.ஈ.அப்துல் காதர் சாஹிப்.(பகுதி-5)
நீடூர் நெய்வாசல் ஜாமியா மஸ்ஜித்
அல்லாஹ்வின் அருளால், நீடூர் நெய்வாசல் புதிய ஜாமியா மஸ்ஜித் திறப்புவிழா, ஊர் முதவல்லி அல்ஹாஜ் எஸ்.கலீல் ரஹ்மான் அவர்கள் தலைமையில், ஜமாஅத்தார்கள் முன்னிலையில், பெங்கéர் ஷபீலுர்ரஷாத் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி முஃப்தி, ஷைகுல் ஹதீஸ், முஹம்மது அஷ்ரஃப் அலீ ஹஜ்ரத் அவர்களால் ஜூலை 25, 2008 அன்று திறந்து வைக்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
ஜின்னா தெரு பள்ளிவாசல் மஸ்ஜித் தக்வா புதுப்பொலிவுடன்
இந்த லிங்கை கிளிக் செய்யுகள <http://www.google.com/maps? ll=11.127508,79.642969&spn=0. 001274,0.001725&t=h&z=19&lci= com.panoramio.all,org. wikipedia.en>
இந்த லிங்கை கிளிக் செய்யுகள http://www.masjids.in/masjid/nidur-masjid/
ரைஸ் மில் தெரு பள்ளிவாசல்
நீடூர் ஊராட்சியை சேர்ந்தவர்கள் ரேஷன் கடையில் உள்ள இருப்பை தெரிந்துக்கொள்ள,
PDS 20 DP031
என்று டைப் செய்து 9789006492 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பவும். மேலும் விவரங்களுக்கு இங்கு கிளிக் செய்யவும்.
நீடூர் இணையம்
இன்றைய நவீன உலகில் இணையம் என்பது நம் வாழ்வில் ஒன்றிணைந்துவிட்டது. மின்னஞ்சல் வைத்திருப்பது எப்படி சாதாரணமாக ஆகிவிட்டதோ அது போல் வலைப்பூ(blog) வைத்திருப்பதும், இணையதளம்(website) வைத்திருப்பதும் சாதரணமாக ஆகிவிட்டது. நம்முடைய கருத்துக்களை பகிர்வதற்கு இவை சரியானதொரு கருவியாகும். கீழே கொடுக்கப்பட்டவை நமதூர் சகோதரர்களின் வலைப்பூக்கள்/வலைத்தளங்களின் பட்டியலாகும். பட்டியலில் இல்லாத நீடூர் சகோதரர்களின் வலைப்பூக்கள்/வலைத்தளங்கள் தங்களுக்கு தெரிந்தால் தெரியப்படுத்தவும். இறைவன் நாடினால் இணைத்துக் கொள்கிறேன்.
மின்னஞ்சல் அனுப்ப: basith27@gmail.com
பட்டியல்:
S.E.A. முஹம்மது அலி ஜின்னாஹ்
1. http://nidurseasons.blogspot.com2. http://seasonsali.blogspot.com
3. http://seasonsnidur.wordpress.com
4. http://seasonsali.wordpress.com
5. http://nidurseasons.com
Blogroll
- NIDUR SEASONS நீடூர் சீசன்ஸ்
- Nidurali
- nidurseasons.com
- nidurseasons.ucoz.com
- Seasons Ali Video
- seasonsali
- Seasonsali Blogger
- seasonsnidur – சீசன்ஸ் நீடூர்
- SEASONSNIDUR.wordpress.com/category/english-article/
- seasonsnidursite
முஹம்மது அலி
1. http://nidur.info
A.M.B. ஃபைஜூர் ஹாதி
1. http://nnassociation.blogspot.comS.A. ம ன்சூர் அலி.M.A.,B.Ed.,
1கவுன்சிலர்மன்சூர்.காம்.
http://counselormansoor.com/
A. நிஜாமுதீன்
1. http://nizampakkam.blogspot.com/A. நிஜாமுதீன்
நீடூர் ஆன்லைன்
1. http://niduronline.com/
அபூ நதீம்
1. http://niduronline.blogspot.com/
N.H. அப்துல் பாஸித்
1. http://valikaatti.blogspot.com2. http://thesubmission.wordpress.com
நீர்மை கொண்ட நீடுர் பதிவர் - சந்திப்பு
விடுமுறையை விழுங்கிவிட்டு மீண்டும் பணிக்கு திரும்பியாச்சு...முப்பது தினங்களில் கிடைத்த அனுபவங்கள் நிறையவே இருக்கு. தென்மாநில சுற்றுலாவைப்பற்றி தொடர்எழுதவேண்டும் மனம்தொட்டதை மனதில் பட்டதை எழுதவேண்டும்.
தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு விழா,
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.
நூல்: திர்மிதீ 4977, பைஹகீ
மேலும் படிக்க... தீன் கலை அறிவியல் கல்லூரி திறப்பு--நீடூர்- கடுவங்க...
நீடூர்- கடுவங்குடி
-நாள் 18.07.2010நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
”ஒரு தந்தை தனது பிள்ளைகளுக்கு கொடுப்பதில் எல்லாம் சிறந்தது கல்வியைத் தவிர வேறில்லை”.
நூல்: திர்மிதீ 4977, பைஹகீ
குறள் 399:
தாமின் புறுவது உலகின் புறக்கண்டு
காமுறுவர் கற்றறிந் தார்.
காமுறுவர் கற்றறிந் தார்.
கலைஞர் உரை:
தமக்கு இன்பம் தருகின்ற கல்வியறிவு உலகத்தாருக்கும் இன்பம் தருவதைக் கண்டு, அறிஞர்கள் மேலும் மேலும் பலவற்றைக் கற்றிட விரும்புவார்கள்
என் இனிய வெளிநாடுகளில் வாழ் நீடூர்-நெய்வாசல் சகோதரர்கள் இணையதளம் ஆரம்பித்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும். நமதூர் மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நன்றி : http://niduronline.com/?p=24
தாயகத்தில் வாழ்கின்றபோது இன்ப,துன்ப நிகழ்வுகளை அவ்வப்போது அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. திரைகடலோடி திரவியம் தேடவும், சீனா போன்ற வெளிநாடுகளுக்கு சென்று கல்வி தேடவும் மண்ணின் மைந்தர்கள் அயல்நாடுகளில் வாழ்கின்றபோது சொந்த ஊரில் என்ன நடைபெறுகிறது என்று அறியாமல் தவிக்கின்றனர்.
எட்டு திசைகளிலும் வாழ்கின்ற எங்களூர் மக்கள் எல்லாச் செய்திகளையும் அவ்வப்போது உடனுக்குடன் தெரிந்து கொள்ள ஒரு களம் அமைக்க வேண்டும் என்ற உந்துதலே இந்த இணையதளம் ஆரம்பிப்பதற்கான இலக்கு.
மனித உரிமை, மனித நேயம் பாதுகாக்கபட வேண்டும். இருளை சபிப்பதைவிட மெழகுவர்த்தியையாவது கொளுத்தி ஒளி உண்டாக்க வேண்டும்.
காலந்தவறாமையை கடைபிடிக்க வேண்டும். உடல் நலக்கேடு தரும் உணவைத் தவிர்க்க வேண்டும். சமுதாயம் செழுமையுற நாடு நலமுற உழைக்க வேண்டும். மார்க்க அறிஞர்களை மதித்து மனித நேயம் பேண வேண்டும். சிக்கனம், சுறுசுறுப்பு செயல்திறன் வளர்க்க வேண்டும். வேதனைகள், சோதனைகளை வென்று சாதனைப் புரிய வேண்டும். உழைப்பதன் மூலம் பசியை விரட்ட வேண்டும். நபிவழிதான் நம் வழி என்ற உணர்வு எப்போதும் இருக்க வேண்டும். ஆத்மீகம் இல்லா கல்வியும், உடல் திறனும் ஆபத்தை விளைவிக்கும் என்பதை அறிய வேண்டும்.
கொலைகளும், தற்கொலைகளும், விபத்துகளும், வன்முறைகளும் அன்றாட நிகழ்ச்சிகளாகிவிட்ட இக்கால கட்டத்தில் இறையச்சத்தோடு தற்காப்புடன், பாதுகாப்புடன் இருக்க பயிற்சிபெற வேண்டும்.
சண்டைகள் ஓய்ந்து எல்லோரும் சகோதரராக வாழ வேண்டும். பண்டங்கள் விலை மலிந்து பயிர் செழிக்க பாடுபட வேண்டும். நமதூர் மக்கள் மருத்துவமனைக்கோ, மேற்கல்வி பெறுவதற்கோ அனைத்து விளையாட்டுகளுக்கோ உள்ளூரிலேயே அவ்வசதிகள் கிடைக்க அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும்.
சைவ, அசைவ உணவு விடுதிகள், பெண்களுக்கான பல்பொருள் அங்காடிகள் குழந்தைகளுக்கான பொழுதுபோக்குகளுடைய, பெண்கள் குழந்தைகள் மட்டுமே பயன்படுத்தும் பூங்காக்கள், நவீன வசதிகளோடு அமைத்துத் தர வேண்டும்.
இளைஞர்களின் தகுதி, திறமை, கல்விக்கேற்ப உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் பெற திட்டங்கள் அமைத்து செயல்பட வேண்டும். மனத்தூய்மையோடு, பொதுநல நோக்கோடு செயல்பட்டால் நம் கனவுகள் நிறைவேறும்.
நன்றி : http://niduronline.com/?p=24
ஊருக்குப் பெருமை
மணிக்கூண்டுமயிலாடுதுறை கடை வீதியில் நடு நாயகமாக விளங்கும் மணிக்கூண்டு இன்று அப்துல் காதரின் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.
இந்த மணிக்கூண்டு அவர் நிறுவியது. இதன் திறப்பு விழா 1943 நவம்பர் 23ந் தேதி நடந்தது. அப்போதைய சென்னை மாநில (தமிழ்நாடு) ஆளுநர் ஹோப் என்ற வெள்ளைக்காரர் வந்து, மணிக்கூண்டை திறந்து வைத்தார்.
இந்த விழாவில் ஆளுநரை வரவேற்று மாலை சூட அப்துல் காதர் ஒருவருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
1943லேயே இந்த மணிக்கூண்டு கட்ட ரூ. 8 ஆயிரம் செலவு ஆயிற்று “நீடூர் மாயவரம் பாத்திரக் கடை ஹாஜி சி.ஈ. அப்துல்காதர் சாகிப் அவர்களால் டூனிஷ்யா வெற்றிக்காகக் கட்டிய மணிக்கூண்டு” என்று மணிக்கூண்டில் பொறிக்கப்பட்ட வாசகம் இன்றும் இருக்கிறது.
அது என்ன டுனீசிய வெற்றி? ஆப்துல் மஜீது அவர்களிடம் கேட்டேன். “உலகப் போரில் இங்கிலாந்து தொடரந்து தோல்வி அடைந்தது. போர் நடந்த எல்ல இடங்களிலும் ஜெர்மனி வெற்றி பெற்றது ; இங்கிலாந்துக்குத் தோல்வி முதன் முறையாக டுநீசியாவில் நடந்த போரில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் நினைவுச் சின்னமாக இந்த மணிக்கூண்டை அப்துல் காதர் கட்டினார் என்று அவர் தெரிவித்;தார். (வட ஆப்பிரிக்காவில் டுனீசியா இருக்கிறது).
நீடூர் மக்கள் ரெயில் ஏற 3 கி.மீ. தொலைவிலுள்ள மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்குப் போக Nவுண்டியிருந்தது இறங்குகிறவர்களும் அங்கு இறங்கித்தான் நீடூருக்கு வரவேண்டும்.
நீடூர் மக்களின் வசதிக்காக நீடூரில் ஒரு ரெயில் நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்துல் காதர் அரசுக்கு மனு அனுப்பினார். நீடூரில் ரெயில் நிலையம் கட்ட ரெயில்வேயிடம் நிலமில்லை என்று பதில் வந்தது. உடனே, “எனது நிலத்தைத் தருகிறேன்” என்று அப்துல் காதர் அரசுக்கு எழுதினார். அரசு அதை ஏற்றுக் கொண்டது.
ரெயில் பாதையை ஒட்டியிருந்த தனது நிலத்தை அப்துல் காதர் அரசுக்கு இனமாகக் கொடுத்தார். அந்த இடத்தில் ரெயில் நிலையம் கட்டப்பட்டது. அங்கு ரெயில்கள் நின்று சென்றன. நீடூரிலேயே ரெயில் ஏற, இறங்க மக்களுக்கு வசதி கிடைத்தது.
நீடூர் பெயருக்கு ஏற்ப நீண்டு விரிந்து கொண்டே போயிற்று. புதிய வீடுகள் கட்ட நிலமில்லை. அப்துல் காதர் தனக்குச் சொந்தமான நிலத்தில் வீட்டு மனைகள் போட்டு மக்களுக்குக் குறைந்த விலையில் கொடுத்தார்.
நீடூரை அடுத்த திருவாளப்புதூரில் வீடு இல்லாமல் மரத்தடிகளில் பல குடும்பத்தினர் வசித்தார்கள். அப்துல் காதர் மாவட்டக் கழகம் (ஜில்லா போர்டு) மூலமாக அவர்களுக்கு 24 வீடுகள் கட்டிக்கொடுத்தார். அப்போது அவர் மாவட்டக்கழக உறுப்பினராக இருந்தார்.
தஞ்சை மாவட்டக் கழக உறுப்பினராக இருமுறை அப்துல் காதர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். மக்களிடம் அவருக்கு இருந்த செல்வாக்கை இது காட்டுகிறது.
பள்ளிவாசல்
கொள்ளிடத்தை அடுத்து துளசேந்திரபுரத்தில் முஸ்லிம் மக்கள் பெருவாரியாக வசிக்கிறார்கள். அவர்கள் தங்களுக்கு வீடு கட்டிக் கொடுக்கும்படி அப்துல் காதரிடம் முறையிட்டார்கள். அவர் அவர்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததுடன், அவர்கள் தொழுகை நடத்த ஒரு பள்ளி வாசலும் கட்டிக் கொடுத்தார். அவர்களின் பிள்ளைகள் படிக்க ஒரு ‘மதரசா’வும் (அரபிப் பள்ளிக்கூடம்) நிறுவினார்.
மயிலாடுதுறைக் கடை வீதியில் ஏராளமான முஸ்லிம்கள் கடை வைத்திருந்தார்கள். அவர்கள் தொழுவதற்கு அருகில் ஒரு பள்ளிவாசல் இல்லை. அப்துல் காதர் கடை வீதியை அடுத்து ஒரு பள்ளிவாசல் கட்டிக் கொடுத்தார்.
(ஒரு கொசுறு செய்தி : இந்தப் பள்ளி வாசலின் வாசல் குறுகியதாக இருந்தது. இப்போது கூட்டமோ அதிகமாகி விட்டது. தொழுது விட்டுக் கூட்டமாக வெளியில் வர சிரமப்பட்டார்கள். முனைவர் அ. அய்ய+ப் சமீபத்தில் வாசலை அகலப்படுத்திக் கட்டிக் கொடுத்தார்.)
அரபிக் கல்லூரி
நீடூரில் உள்ள அரபிப் பள்ளிக் கூடத்தின் நிர்வாகத் தலைவராகவும் அப்துல் காதர் இருந்தார். அப்போது 5 அறைகள் புதிதாகக் கட்டிக் கொடுத்து, அதைக் கல்லூரியகாவும் ஆக்கினார். 1948இல் கல்லூரியின் முதல் பட்டமளிப்பு விழாவையும் சிறப்பாக நடத்தினார். 1953இல் நடத்த பட்டமளிப்பு விழாவுக்கு அவர் தலைமை தாங்கவும் செய்தார்.
நீடூரில் பெண்களுக்கான தொடக்கப் பள்ளி ஒன்றையும், மாணவர்களுக்கு உயர் தொடக்கப்பள்ளி ஒன்றையும் தொடங்கினார்.
நீடூரில் இஸ்லாமிய நூல் நிலையம் (அஞ்சுமன்) ஒன்றையும் அமைத்தார். அது இன்றும் இயங்கிக் கொண்டிருக்கிறது.
“நீங்கள் சம்பாதித்த பணத்திலிருந்து நற்செலவு செய்யுங்கள்” என்று திருக்குரான் சொல்லுகிறது. குரான் வழியில் வாழ்ந்த அப்துல் காதர் தான் சம்பாதித்த பணத்திலிருந்து ஊர்ப்பணிகள் செய்தார். அதன் காரணமாக வாழும் போதே வரலாற்றில் இடம் பெற்றார். ஏம்.ஆர்.எம். அப்துல் ரகீமின் அரிய படைப்பான “இஸ்லாமியக் கலைக்களஞ்சிய”த்தில் அப்துல் காதரின் பெயர் இடம் பெற்றிருக்கிறது. அவரது வாழ்வும் பணியும் சொல்லப்பட்டுள்ளன.
மேலும் படிக்க ஊருக்குப் பெருமை
நம்ம ஊரு செய்தி
நம்ம ஊரு செய்தி பத்திரிக்கை நடத்துபவர்
நீடூர் அய்யூப் அவர்கள்
http://seasonsnidur.blogspot.com/2010/07/2010.htmlSource :http://niduronline.comநீடூர்-நெய்வாசல் தெருக்கள் & முக்கிய பகுதிகள்
9 comments:
மாஷா அல்லாஹ்..எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே !
ஆகா நம்ம ஊரை இப்படி பார்க்கும் போது எத்தனை ஒரு சந்தோஷமாக இருக்கின்றது. நம்ம ஊருக்கே பெருமை அந்த நீடூர் அரபிக் கல்லூரி என்பதை இன்னும் கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம். அது போல அங்கு வெளியூரில் இருந்து வந்து படித்து பெரிய அரபிக் அறிஞர்கள் சிலரையாவது குறிப்பிட்டு இருக்கலாம். அடுத்து மணிக்கூண்டு படம் போட்டிருக்கலாம். அதே போல மணிகூண்டு முதல் ரயில்வே ஜங்ஷன் வரை அப்போது போடப்பட்ட கான்கிரீட் சாலை (கடந்த இரண்டு வருடம் முன்பு வரை துளியும் சேதம் ஆகாமல் அப்படியே இருந்தது) பற்றியும் எழுதியிருக்கலாம்.
அதே போல ஹாங்காங், பேங்காங் நாடுகள் நம் நீடூர் அன்பர்கள் வசம் (வைரகற்கள் வியாபாரத்தில்) இருப்பதை பெருமையாக குறிப்பிட்டு இருக்கலாம்.
அருமையோ அருமை நண்பரே!
தொடர்ந்து "நம்ம ஊர் செய்தி" பத்திரிக்கை பற்றியும் பெருமையாக சொல்லியிருக்கலாம்.
தொடர்ந்து நம் ஊர் பெருமைகளை இந்த தளத்தில் வெளியிட வேண்டுகின்றேன். நன்றி!
WONDERFUL .
JUST WONDERFUL.
ALL THE DETAILED INFORMATIONS ARE JUST WONDERFUL.
THE PEOPLE MENTIONED IN THIS ARTICLE ஹாஜி சி.ஈ.அப்துல்காதர் சாகிப் , ஹாஜி சி.ஈ.அப்துல் ரஹ்மான், S.E.A முஹம்மது அலி ஜின்னாஹ் ARE ALL JUST WONDERFUL.
THE INFORMATIONS IN THIS ARTICLE ARE JUST WODERFUL.
VAANJAIYUDAN VANJOOR
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீடூர் பற்றிய தொகுப்பை ஒரே பக்கத்தில் காண்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தங்கள் பகிர்வுக்கு நன்றி..
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...
தங்கள் 'பிளாக்'கில் பதிந்துள்ள
இடுகை நீடூர் நெய்வாசல் பற்றிய
அருமையான மற்றும் முழுமையான
தொகுப்பாகவும் அமைந்து எனக்கு
பெரு மிகிழ்ச்சியைத் தந்தது.
ஜாமிஆவின் பட்டமளிப்பு விழா அழைப்பிதழையும்
லின்க் கொடுத்தது வெகு சிறப்பு.
அத்துடன் எனது வலைப்பூவையும்
அறிமுகப்படுத்தி மகா பிரம்மாண்ட
மகிழ்ச்சிக் கடலில் தள்ளிவிட்டீர்கள்.
தங்களைப் போன்ற பெரியோர்கள்,
ஆன்றோர்கள் வழிகாட்ட...
அதைப் பின் தொடர்ந்து வருவதற்கு,
தாங்கள் நீடூ(ர்)ழி வாழ்ந்திட,
வல்லோனிடம் துஆ செய்கிறேன்.
அன்புடன்,
அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
நீடூர் ஒரு டூர் - வெகு அழகு. ஒவ்வொருவரும் தன் ஊரைப்பற்றி எழுதவேண்டும். அதுவும் இப்படி தன் மண்மீது அக்கறையும் பிரியமும் நிறைந்ததாய் அண்ணன் நீடூரலி அவர்களைப்போல எழுதவேண்டும். இது தொடக்கமே இன்னும் நீடூர் பற்றி நிறைய தகவல்கள் வரும் என்று கருத்துப்பகுதியினைக் கண்டு புரிந்துகொண்டேன். வளரட்டும் வளரட்டும் மகிழ்ச்சி
அன்புடன் புகாரி
வாழ்த்துக்கள்..
நிடூர் என்கின்ற ஊரை பற்றி கேள்விபட்டு இருந்தாலும். நான் நீடூர் வந்ததில்லை.
ரொம்ப அருமையாக நீடுரை சுற்றி காட்டி உள்ளீர்கள். நண்பர் நிஜாம் உங்கள்
பக்கங்களை அறிமுகபடுத்தி வைத்தார். உங்கள் பனி தொடர வாழ்த்துக்கள்.
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நீடூர் பற்றி அறிய பல தகவல்களை தந்துள்ளீர்கள். இவைகளை படிக்கும் பொழுது நெகிழ்ச்சியாக உள்ளது. நானும் நீடுரை சேர்ந்தவன் என்பதில் பெருமையாக உள்ளது.
Post a Comment